Tuesday, 26 March 2024

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

கன்னியாகுமரி
காங்கிரஸ்-விஜய் வசந்த்
பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்
அதிமுக-பசிலியான் நசரேத்
நாம் தமிழர்-மரிய ஜெனிபர்

திருநெல்வேலி
காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்
பாஜக-நயினார் நாகேந்திரன்
அதிமுக-ஜான்சி ராணி
நாம் தமிழர்-பா.சத்யா

தென்காசி
திமுக-ராணி ஸ்ரீகுமார்
தமமுக-ஜான் பாண்டியன்
புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி
நாம் தமிழர்-இசை மதிவாணன்

தூத்துக்குடி
திமுக-கனிமொழி
தமாகா-SDR.விஜயசீலன்
அதிமுக-சிவசாமி வேலுமணி
நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன்

இராமநாதபுரம்
ஐயுஎம்எல்-நவாஸ்கனி
ஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக-ஜெயபெருமாள்
நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்

விருதுநகர்
காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்
பாஜக-ராதிகா சரத்குமார்
தேமுதிக-விஜய பிரபாகர்
நாம் தமிழர்-கெளசிக்

தேனி
திமுக-தங்க தமிழ்செல்வன்
அமமுக-TTV.தினகரன்
அதிமுக-நாராயணசாமி
நாம் தமிழர்-மதன் ஜெயபால்

மதுரை
மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்
பாஜக-ராம சீனிவாசன்
அதிமுக-சரவணன்
நாம் தமிழர்-சத்யா தேவி

சிவகங்கை
காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்
இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்
அதிமுக-சேவியர் தாஸ்
நாம் தமிழர்-எழிலரசி

தஞ்சாவூர்
திமுக-முரசொலி
பாஜக-முருகானந்தம்
தேமுதிக-சிவநேசன்
நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்

நாகப்பட்டினம்
இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ்
பாஜக-ரமேஷ்
அதிமுக-சுர்ஜித் சங்கர்
நாம் தமிழர்-கார்த்திகா

மயிலாடுதுறை
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாமக-ஸ்டாலின்
அதிமுக-பாபு
நாம் தமிழர்-காளியம்மாள்

சிதம்பரம்
வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன்
பாஜக-கார்த்தியாயினி
அதிமுக-சந்திரஹாசன்
நாம் தமிழர்-ஜான்சிராணி

கடலூர்
காங்கிரஸ்-விஷ்னு பிரசாத்
பாமக-தங்கர் பச்சான்
தேமுதிக-சிவக்கொழுந்து
நாம் தமிழர்-மணி வாசகன்

பெரம்பலூர்
திமுக-அருண் நேரு
ஐ.ஜே.கே-பாரிவேந்தர்
அதிமுக-சந்திரமோகன்
நாம் தமிழர்-தேன்மொழி

திருச்சிராப்பள்ளி
மதிமுக-துரை வைகோ
அமமுக-செந்தில்நாதன்
அதிமுக-கருப்பையா
நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ்

கரூர்
காங்கிரஸ்-ஜோதிமணி
பாஜக-செந்தில்நாதன்
அதிமுக-தங்கவேல்
நாம் தமிழர்-கருப்பையா

திண்டுக்கல்
மா.கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம்
பாமக-திலகபாமா
எஸ்.டி.பி.ஐ-முபாரக்
நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன்

பொள்ளாச்சி
திமுக-ஈஸ்வரசாமி
பாஜக-வசந்தராஜன்
அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன்
நாம் தமிழர்-சுரேஷ்குமார்

கோயம்புத்தூர்
திமுக-கணபதி ராஜ்குமார்
பாஜக-K.அண்ணாமலை
அதிமுக-சிங்கை ராமச்சந்திரன்
நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன்

நீலகிரி
திமுக-ஆ.ராசா
பாஜக-எல்.முருகன்
அதிமுக-லோகேஷ்
நாம் தமிழர்-ஜெயக்குமார்

திருப்பூர்
இ.கம்யூனிஸ்ட்-சுப்பராயன்
பாஜக-முருகானந்தம்
அதிமுக-அருணாச்சலம்
நாம் தமிழர்-சீதாலட்சுமி

ஈரோடு
திமுக-பிரகாஷ்
தமாகா-விஜயகுமார்
அதிமுக-ஆற்றல் அசோக்குமார்
நாம் தமிழர்-கார்மேகன்

நாமக்கல்
கொமதேக-மாதேஷ்வரன்
பாஜக-கே.பி.ராமலிங்கம்
அதிமுக-தமிழ்மணி
நாம் தமிழர்-கனிமொழி

சேலம்
திமுக-செல்வகணபதி
பாமக-அண்ணாத்துரை
அதிமுக-விக்னேஷ்
நாம் தமிழர்-மனோஜ்குமார்

கள்ளக்குறிச்சி
திமுக-மலையரசன்
பாமக-தேவதாஸ் உடையார்
அதிமுக-குமரகுரு
நாம் தமிழர்-இயக்குனர் ஜெகதீசன்

விழுப்புரம்
வி.சிறுத்தைகள்-ரவிக்குமார்
பாமக-முரளி சங்கர்
அதிமுக-பாக்கியராஜ்
நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம்

ஆரணி
திமுக-தரணி வேந்தன்
பாமக-கணேஷ்குமார்
அதிமுக-கஜேந்திரன்
நாம் தமிழர்-பாக்கியலட்சுமி

திருவண்ணாமலை
திமுக-அண்ணாத்துரை
பாஜக-அஸ்வத்தாமன்
அதிமுக-கலியபெருமாள்
நாம் தமிழர்-ரமேஷ் பாபு

தருமபுரி
திமுக-ஆ.மணி
பாமக-செளமியா அன்புமணி
அதிமுக-அசோகன்
நாம் தமிழர்-அபிநயா

கிருஷ்ணகிரி
காங்கிரஸ்-கோபிநாத்
பாஜக-நரசிம்மன்
அதிமுக-ஜெயப்பிரகாஷ்
நாம் தமிழர்-வித்யா வீரப்பன்

வேலூர்
திமுக-கதிர் ஆனந்த்
புதியநீதிக் கட்சி-ஏ.சி.சண்முகம்
அதிமுக-பசுபதி
நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்

அரக்கோணம்
திமுக-ஜெகத்ரட்சகன்
பாமக-கே.பாலு
அதிமுக-விஜயன்
நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்

காஞ்சிபுரம்
திமுக-செல்வம்
பாமக-ஜோதி வெங்கடேஷ்
அதிமுக-ராஜசேகர்
நாம் தமிழர்-சந்தோஷ்குமார்

ஸ்ரீபெரும்புதூர்
திமுக-டி.ஆர்.பாலு
தமாகா-வேணு கோபால்
அதிமுக-பிரேம்குமார்
நாம் தமிழர்-ரவிச்சந்திரன்

மத்திய சென்னை
திமுக-தயாநிதி மாறன்
பாஜக-வினோஜ் செல்வம்
தேமுதிக-பார்த்தசாரதி
நாம் தமிழர்-கார்த்திகேயன்

தென் சென்னை
திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன்
பாஜக-தமிழிசை செளந்தரராஜன்
அதிமுக-ஜெயவர்தன்
நாம் தமிழர்-தமிழ்செல்வி

வட சென்னை
திமுக-கலாநிதி வீராச்சாமி
பாஜக-பால் கனகராஜ்
அதிமுக-இராயபுரம் மனோ
நாம் தமிழர்-அமுதினி

திருவள்ளூர்
காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில்
பாஜக-பாலகணபதி
தேமுதிக-நல்லதம்பி
நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர்

புதுச்சேரி
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாஜக-நமச்சிவாயம்
அதிமுக-தமிழ்வேந்தன்
நாம் தமிழர்-மேனகா.  

Monday, 25 March 2024

20 ரக்அத்தும் நபித்தோழர்களும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும், 25.03.2024 

20 ரக்அத்தும் நபித்தோழர்களும்

20 ரக்அத்களுக்கு நபிவழியில் ஒரு ஆதாரமும் இல்லை எனும் போது அதை விட்டொழிப்பதற்குப் பதிலாக எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழவில்லை என்பது உண்மையே! ஆனால் நபித்தோழர்கள் குறிப்பாக உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுதுள்ளனரே!’ என்று வாதிடுகின்றனர்.

உமர் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் 20 ரக்அத்களை உருவாக்கினார்களா? என்பதைப் பின்னர் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஒரு வாதத்துக்காக சில நபித்தோழர்கள் 20 ரக்அத்கள் தொழுததாகவே வைத்துக் கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் செய்துள்ளார்கள் என்று தெரிந்து, அதற்கு மாற்றமாக நபித் தோழர்கள் சிலர் செய்ததாகத் தெரியும் போது இரண்டில் எது சிறந்தது?

உமர் (ரலி) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் தேவையா?

நபியா? நபித்தோழரா? என்று கேள்வி வரும் போது நபியைப் புறக்கணித்து விட்டு நபித் தோழரைத் தூக்கிப் பிடிப்பது இஸ்லாத்தை விட்டும் நம்மை அப்புறப்படுத்தாதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தான் வஹீ வரும். நபித்தோழருக்கு வஹீ வராது என்பதைக் கூட அறிய வேண்டாமா?

நன்மை செய்வதில் நபித் தோழர்கள் நபிகள் நாயகத்தையும் மிஞ்சியவர்களா?

நபியவர்கள் மூலம் மார்க்கத்தை அல்லாஹ் முழுமையாக்கியிருக்கும் போது அவர்கள் கற்றுத் தராததை நபித் தோழர்கள் கண்டுபிடித்தார்கள் என்றால் மார்க்கத்தை நபிகள் நாயகம் முழுமையாக்கவில்லை என்ற கருத்து வருமே! இது சரி என்கிறார்களா?

அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில விஷயங்களை மறைத்து விட்டார்கள்; அதை நபித் தோழர்கள் அம்பலமாக்கி விட்டார்கள் என்பது இவர்களின் எண்ணமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்து தன் தூதராக நியமித்தான். முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் எதனையும் கூட்டாமல் குறைக்காமல் அவர்கள் மூலம் இறைவன் கற்றுத் தந்தான் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை நம்பக் கூடியவர்களுக்கு நபிவழியே போதுமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழி போதாது; அது சரியில்லை; அதற்கு முரணாக நபித் தோழர்கள் காட்டியது தான் சரியானது என்று நம்புவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

உமர் (ரலி) 20 ரக்அத் தொழுதார்களா?

நபித் தோழர்கள் 20 ரக்அத் தொழுதது நிரூபணமானால் கூட நபிவழி அதற்கு மாற்றமாக இருந்தால் நபிவழியைத் தான் ஏற்க வேண்டும்.

ஆனால் உண்மை என்னவென்றால், உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்களை உருவாக்கித் தந்தார்கள் என்ற இவர்களது வாதம் முற்றிலும் தவறானதாகும். உமர் (ரலி) அவர்கள் தொடர்பான செய்திகளை முழுமையான கவனத்துடன் ஆய்வு செய்யத் தவறியதால் இத்தகைய முடிவுக்குச் சிலர் வந்து விட்டனர். எனவே உமர் (ரலி) அவர்கள் தொடர்பான 20 ரக்அத்கள் பற்றிய அறிவிப்புக்களை ஆய்வு செய்வோம்.

அறிவிப்பு 1

மக்களுக்கு இருபது ரக்அத் தொழுகை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதருக்குக் கட்டளையிட்டார்கள்.

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7682 .

உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டதாக அறிவிப்பவர் யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரியாவார். இவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல!

உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு மரணித்தார்கள். யஹ்யா பின் ஸயீத் அன்ஸாரி அவர்கள் ஹிஜ்ரி 139 அல்லது 144வது ஆண்டு மரணித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மரணித்து 120 வருடங்களுக்குப் பின்னால் மரணித்தவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க முடியாது.

உமர் (ரலி) 20 ரக்அத் தொழுமாறு கட்டளையிட்டதை அவரது காலத்தில் வாழ்ந்தவர் தான் அறிய முடியும். எனவே இந்தச் செய்தி ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் உமர் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.

நூல்: மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார் – பைஹகீ, பைஹகீ, ஷரஹ் மஆனில் ஆஸார், முஅத்தா, அஸ்ஸுனனுல் குப்ரா – நஸாயீ

மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல்கள்: அஸ்ஸுனனுல் குப்ரா – நஸாயீ, முஅத்தா, ஷரஹ் மஆனில் ஆஸார், பைஹகீ, மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார்

உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டது ஆதாரப்பூர்வமானதாக இருப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.

அறிவிப்பு 2

உமர் (ரலி) அவர்களின் காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்கள் தொழுது வந்தோம் என்று ஸாயிப் பின் யஸீத் கூறுகிறார்.

நூல்: பைஹகீ ஸகீர்-821 .

இந்த அறிவிப்பில் அபூ உஸ்மான் அல் பஸரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் அம்ரு பின் அப்துல்லாஹ். இவரது நம்பகத் தன்மையைக் குறித்து ஹதீஸ் கலை வல்லுனர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. யாரென்று அறியப்படாதவர் என்ற நிலையில் இவர் இருக்கிறார். இதன் காரணமாக இச்செய்தி பலவீனமடைகிறது.

மேலும் இந்தச் செய்தியில் உமர் (ரலி) அவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களின் காலத்தில் மக்கள் இவ்வாறு செய்ததாக இந்த அறிவிப்பு கூறுகிறது ஆனால் மேலே நாம் எடுத்துக் காட்டிய அறிவிப்பில் உமர் (ரலி) நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஒருவர் எதைக் கட்டளையிடுகிறாரோ அதில் தான் அவருக்குச் சம்பந்தம் இருக்கும். அவரது காலத்தில் நடந்தவைகளில் அவருக்குச் சம்பந்தம் இருப்பது சந்தேகத்திற்கிடமானது.

மேலும் இதே ஸாயிப் பின் யஸீத் அவர்கள் உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதாக அறிவிக்கிறார்.

மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நூல்: முஅத்தா

ரக்அத்களின் எண்ணிக்கை குறித்து ஸாயிப் பின் யஸீத் முரண்பட்டு அறிவித்துள்ளதால் 20 ரக்அத் தொழுதோம் என்ற அறிவிப்பு மேலும் பலவீனப்படுகிறது.

அறிவிப்பு 3

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர் என்று யஸீத் பின் ரூமான் அறிவிக்கிறார்.

நூல்: முஅத்தா மாலிக்-303 ,பைஹகீ 

இதை அறிவிக்கும் யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) காலத்தவர் அல்ல! உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ல் மரணித்தார்கள். யஸீத் பின் ரூமான் ஹிஜ்ரி 130ல் மரணித்தார்கள். அதாவது உமர் (ரலி) அவர்கள் மரணித்து 107 ஆண்டுகளுக்குப் பின் இவர் மரணித்துள்ளார். இவர் நூறு வயதில் மரணித்திருந்தால் கூட உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க மாட்டார்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்ததை அறிவிப்பதால் இதை ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

உமர் (ரலி) அவர்களின் வழிமுறையைத் தான் ஏற்போம் என்று கூறுவதில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதினொரு ரக்அத் தான் தொழ வேண்டும்.

அலீ (ரலி) அவர்கள் பெயரால்…

உமர் (ரலி) அவர்கள் பெயரால் இருபது ரக்அத்களை நியாயப்படுத்துவதுடன் அலீ (ரலி) அவர்கள் பெயரைப் பயன்படுத்தியும் நியாயப்படுத்துகின்றனர்.

ஐந்து இடைவெளியுடன் இருபது ரக்அத்கள் தொழுவிக்குமாறு அலீ (ரலி) அவர்கள் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள் என்ற செய்தி அபுல் ஹஸனா என்பார் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல்கள்: குப்ரா பைஹகீ-4292 .

அபுல் ஹஸனா என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இப்னு ஹஜர், தஹபீ உள்ளிட்ட அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். இவரது நம்பகத் தன்மையை எந்த அறிஞரும் உறுதிப்படுத்தவில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது

ரமளான் மாதத்தில் அலீ (ரலி) அவர்கள் அறிஞர்களை அழைத்து, அவர்களில் ஒருவரை 20 ரக்அத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள். வித்ரு தொழுகையை அலீ (ரலி) அவர்கள் தாமே தொழுவிப்பார்கள். 

அறிவிப்பவர்: அபூ அப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமி, நூல்: குப்ரா பைஹகீ-4291 ,

இதன் அறிவிப்பாளரான அபூ அப்துர்ரஹ்மானிடமிருந்து அறிவிப்பவர் அதா பின் ஸாயிப் ஆவார்.

அதா பின் ஸாயிப் இவ்வாறு கூறியதாக அறிவிப்பவர் ஹம்மாத் பின் ஷுஐபு ஆவார்.

தஹபீ, இப்னு மயீன், புகாரி, நஸாயீ, இப்னு அதீ உள்ளிட்ட அறிஞர்கள் இவரை (ஹம்மாத் பின் ஷுஐபை) பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.

எனவே அலீ (ரலி) அவர்கள் 20 ரக்அத் என்ற நடைமுறையை உருவாக்கினார்கள் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.

Sunday, 24 March 2024

வட்டி ஷைத்தானின் பிடியாகும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வட்டி ஷைத்தானின் பிடியாகும் 

 அல்லாஹ்வின் பெயரால் 

மக்கள் கஷ்டத்தில், பண உதவி என்ற பெயரில் நாள் வட்டியாகவோ, வார வட்டியாகவோ, மாத வட்டியாகவோ இன்னும் பல முறையில்
உதவி செய்வதைப் போல செய்து, கொடுத்த தொகையை மொத்தமாக  திருப்பி வாங்கும் வரை,
 கடன் வாங்கியவருக்கு அபராதமாக, கடன் கொடுத்தவருக்கு  ஆதாயமாக ஒரு சிறு தொகையை வாங்கி வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஷைத்தானின் பிடியில் அகப்பட்டுக் கொண்டனர் .

ஆதாரம்: அல்குர்ஆன் இது இறைவாக்கு 2 : 275 

"வட்டி வாங்கி சாப்பிடுபவர்கள், 
வாழும் காலத்தில் ஷைத்தானின் பிடியில் அகப்பட்டுக் கொண்டவரைப் போலவே அல்லாமல் வாழவில்லை. ஏனென்றால் நிச்சயமாக வட்டி வாங்கி சாப்பிடுவதும், வியாபாரம் செய்து சாப்பிடுவதைப் போன்றதுதான் என்று இவர்கள் சொன்னார்கள்.

 அல்லாஹ் வியாபாரத்தின் மூலமாக சாப்பிடுவதைத் தான் ஹலாலாக ( ஏற்றுக் கொள்ளப்பட்டதாக) ஆக்கி விட்டான் ஆனால் வட்டி வாங்கி சாப்பிடுவதை ஹராமாக ( விலக்கப்பட்டதாக) ஆக்கி விட்டான்.
இது இறைவனிடமிருந்துள்ள உபதேசமாகும். இதை யார் ஏற்று வட்டித் தொழிலை விட்டு விட்டாரோ, அவர் கொடுத்த மொத்த தொகையை மட்டும், கொடுத்தவரிடமிருந்து வாங்கிக் கொள்ளவும் இவ்வாறாக இவருடைய விஷயம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் யார் மீண்டும் வட்டித் தொழிலை விடாது செய்வாரோ அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதிலேயே நிரந்தரமாக வாழப் போகிறவர்கள்".

 அல்லாஹ் நம் அனைவரையும் நரக நெருப்பிற்குள் வாழ்வதிலிருந்து பாதுகாப்பானாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன் .

 அல்லாஹ் 
நம் அனைவரையும் இன்று காற்றுக்குள் நிம்மதியாக வாழ வைப்பது போலவே சுவன வாழ்வில், பூஞ்சோலையில், நீர் வீழ்ச்சிக்கு அருகில் மகிழ்ச்சியாக  நிரந்தரமாக வாழ வைப்பானாக! ஆமீன்
 யா ரப்பல் ஆலமீன். 


இது இறைவாக்கு, மனித குலத்தின் வாழ்க்கைக்கான நிறைவாக்கு.

சிறுவர்கள் நோன்பு நோற்பது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறுவர்கள் நோன்பு நோற்பது

இஸ்லாத்தின் எல்லாக் கடமைகளும் பருவ வயதை அடைந்தவர்களுக்கு மட்டுமே உரியதாகும். சிறுவர்களுக்கு நோன்போ, தொழுகையோ கடமையில்லை என்றாலும் தொழுகைக்கு ஏழு வயது முதலே பயிற்சியளிக்க வேண்டும். பத்து வயதில் தொழாவிட்டால் அடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளன. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை இத்தகைய கட்டளை ஏதும் நபிகள் நாயகத்தினால் பிறப்பிக்கப்படவில்லை. பருவமடைந்தவர்களுக்கே பயணத்தில் இருப்பதாலும், நோயாளியாக இருப்பதாலும், கர்ப்பிணியாக இருப்பதாலும் நோன்பிலிருந்து மார்க்கம் சலுகையளித்துள்ளது. எனவே சிறுவர்களை தொழுகையைப் போல் கட்டாயப்படுத்தி நோன்பு நோற்குமாறு வற்புறுத்தக் கூடாது.

தொழுகைக்குப் பலவிதமான நடைமுறைகள், ஓத வேண்டியவை உள்ளன. அவற்றையெல்லாம் சிறுவயது முதலே கற்றுப் பயிற்சி எடுக்கும் அவசியம் உள்ளது. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை பருவமடைந்தால் அடுத்த நாளே நோன்பைக் கடைப்பிடிக்க முடியும்.

அதே நேரத்தில் சிறுவர்களுக்குச் சக்தியிருந்தால் அவர்களையும் நோன்பு நோற்கச் செய்ய அனுமதி உள்ளது. அனுமதி தானே தவிர அவசியமில்லை. ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு தான் கடமையான நோன்பாக இருந்தது. இந்த நோன்பு குறித்துப் பின்வரும் செய்தி புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

ஆஷுரா தினத்தில் நாங்களும் நோன்பு நோற்போம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். அவர்களுக்குத் துணியால் விளையாட்டுப் பொருளையும் தயார் செய்து வைத்துக் கொள்வோம். அவர்கள் உணவு கேட்கும் போது அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து நோன்பு துறக்கும் வரை கவனத்தைத் திருப்புவோம்.

அறிவிப்பவர்: ருபைய்யி பின்த் முஅவித் (ரலி)

நூல்கள்: புகாரி 1960, முஸ்லிம் 2092

இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள் என்பது தான் தெரிகிறது. அவர்கள் தொழுகைக்குக் கட்டளையிட்டது போல் கட்டளை இடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் ஆஷுரா நோன்பு என்பது ஒரு நாள் மட்டுமே நோற்கும் நோன்பாகும். ஒரு நாள் என்பதால் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காட்டலாம். ரமளான் நோன்பு ஒரு மாதம் முழுவதும் உள்ள நோன்பாகும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து சிறுவர்கள் நோற்றதாக எந்த ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் சிறுவர்கள் நோன்பு நோற்பதால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றால் அவர்களையும் நோன்புக்குப் பயிற்றுவிக்கலாம்.

2024 தேர்தல் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு........

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல் குறித்த ஒரு  முக்கிய அறிவிப்பு........

நமக்கு  தேவையான ஆட்சி இந்தியாவில்  வரவேண்டும். அதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டியது:

 🇮🇳 இந்திய தேசம்  மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது, இன்னும்  சுமார் 60 நாட்கள்...? இந்தியா  ஏன் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறது ? 

🙏தயவுசெய்து உங்கள் குழுக்கள், தெரிந்த மற்றும் தொடர்புடைய நபர்கள் அனைவருக்கும் அனுப்பவும். தயவு செய்து ஒவ்வொரு நபரும் குறைந்தது 100 பேரை இலக்காகக் கொண்டு பகிரவும்

🇮🇳ஒரு வாரத்தில் 1 கோடி பேரையும், மூன்று வாரங்களில் 10 கோடி மக்களையும், 60 நாட்களில் 100  கோடி  மக்களையும்  சென்றடையும் வகையில் அனுப்பி அதன் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

😥மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தியது, பல ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்தது, நூற்றுக்கணக்கான ஆலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டது,பல ஆயிரம்  வீடுகள் இடிக்கப்பட்டது மற்றும்...

🇮🇳உலக அளவில்  இந்தியாவை  தலை கூனிய வைத்த (BJP-RSS) மத-தீவிரவாதிகளை தேச நலனுக்காக, இந்த  தேர்தலில் தோற்பதை நாம்  உறுதி செய்ய வேண்டும். 

 🇮🇳 3வது முறையாக மோடி வெற்றி பெற்றால்  நிச்சயமாக இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் கலைக்கப்பட்டு  ஒரே நாடு...ஒரே தேர்தல்...ஒரே அதிபர் ஆட்சி வர வாய்ப்பிருப்பதாக இந்தியாவில் உள்ள அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். 

🇮🇳இலங்கையில்  ராஜபக்சே சர்வாதிகாரியாக ஆனது போல... பாகிஸ்தானில் முஷ்ரப் சர்வாதிகாரியாக  ஆனது போல மோடியும்   நிச்சயமாக  சர்வாதிகாரியாக மாறுவார் என்று  அரசியல் வல்லுனர்கள் பெரும்பாலானோர் கூறுகிறார்கள்

🇮🇳ஏன் ஏனென்றால்.... இன்றைய இந்தியாவின் நிலை, பொருளாதாரம் அதாள... பாதாளத்தில் உள்ளது, உதாரணம் :- 2014ல் 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா இந்த 9 வருடத்தில் 205 லட்சம் கோடி கடனில் உள்ளது. அதாவது, இந்தியா சுதந்திரடைந்து 67 வருடங்கள் (1947 to 2014 வரை) 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா, மோடி ஆட்சியில்  இந்த 9 வருடத்தில்  மட்டும் 151 லட்சம் கோடி கடனில் உள்ளது (2014 to 2023 வரை)

 🇮🇳உலக  அரங்கில் ஐநா அங்கீகரித்த 193-ல் நாடுகளில் இந்தியா தான் அதிகமான கடன் உலக வங்கியில் 205 லட்சம் கோடி அதிக கடன் வாங்கி உள்ளது  என்று  உலக ஆய்வு அறிக்கை கூறியுள்ளது

🇮🇳 உலகில் மதசார்பற்ற பெரிய ஜனநாயக நாடு இந்தியா மட்டுமே...

🇮🇳 இன்று பாஜக அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டது இதை மூடி மறைக்க  அப்பாவி மக்களை தூண்டி விட்டு, நாம் இந்து...ராமர் கோயில்....ஜெய் ஸ்ரீ ராம்...என்று  மதவாத அரசியல் செய்வது...

🇮🇳இந்தியாவின் செல்வத்தை அம்பானி, அதானி கையில் விற்றது  மற்றும்  குஜராத்தி பணக்கார முதலாளிகள்  கைகளில் மட்டுமே  குவித்தது...

🇮🇳நீதித்துறை,CBI, ED-அமலாக்கத்து றை மற்றும் தேர்தல் அதிகாரிகளை  விலைக்கு வாங்கியது,EVM மிஷின் கோல்மால்கள்...
 
🇮🇳  நேரு காலத்தில் காங்கிரஸ் அரசாங்கம்  உருவாக்கிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை   எல்லாம் தனியார்  நிறுவனங்களுக்கு  விற்றது...

🇮🇳வேலையில்லா  திண்டாட்டம், வருடத்திற்கு 2 கோடி பேர்களுக்கு  வேலை என்று இந்திய மக்களை ஏமாற்றியது...

🇮🇳பெட்ரோல் விலை உயர்வு(Rs.58 இருந்து Rs.103), கேஸ் விலை உயர்வு (Rs.400  இருந்து Rs.1130), எல்லா பொருட்களின் விலையும் இந்த 10 வருடங்களில் பல  மடங்கு உயர்ந்து இருக்கிறது

🇮🇳தமிழகத்திற்கு தர வேண்டிய  நிதியை தராமல்... நாம் செலுத்திய வரிப்பணத்தை  எடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் கொடுப்பது... தமிழர்களை வஞ்சிப்பது...

🇮🇳கறுப்புப் பணத்தை மீட்டு  எல்லா  குடும்பத்துக்கும் 15 லட்சம்,  கொடுப்பேன் என்று பொய் சொல்லி இந்திய மக்களை ஏமாற்றியது...

 🇮🇳இந்தியாவை நாசமாக்கிது....

 🇮🇳ஊடகத்தை  கைப்பற்றியது....

🇮🇳பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை பறிப்பு...

🇮🇳ஜனநாயகத்தை எதேச்சதிகாரமாக சீரழித்து,  ஹிட்லர்,சதாம், ராஜபக்சே போல் சர்வாதிகாரியாக செயல்படுவது... 

🇮🇳குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள் மற்றும் ஊழல்வாதிகளால் நிரப்பப்பட்ட அரசியல்... 

🇮🇳காவிமயமாக்கப்பட்ட வரலாறு... காவிமயமாக்கப்பட்ட கல்வி...

🇮🇳திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு அடுத்தடுத்த குழப்பங்கள் மற்றும் உயிர் இழப்புகள்... 

🇮🇳திட்டமிடப்படாத லாக் டெளன், குழப்பங்கள்,  அதனால் ஏற்பட்ட உயிர் பலிகள்....
 
 🇮🇳சிறுபான்மை மக்கள் வீடுகள்  மற்றும், வழிபாட்டு தலங்களை புல்டோசர் கொண்டு இடிப்பது, சிறுபான்மை மக்களை தாக்குவது, வெறுப்பு பேச்சுகள, மதக் கலவரங்கள், கொலைகள்....

🇮🇳மகாத்மா காந்தி படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வெளிப்படையாகப் புகழ்ந்து வணங்குதல்...

🇮🇳பெண் மல்யுத்த வீரர்களை  நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்து அவமானப்படுத்தப்பட்டது...

🇮🇳டெல்லியில் விவசாய மக்களை   போராட வைத்து... தற்கொலை செய்ய வைத்தது...  ஜிப் ஏற்றி  கொலை செய்தது...

 ஏனெனில்.... 

🇮🇳காந்தியவாதிகள்& அம்பேத்கர்வாதிகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳அரசியலமைப்பின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

 🇮🇳மதச்சார்பற்ற இந்தியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

🇮🇳தலித்துகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳பட்டியலினத்தோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳பழங்குடியினர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

 🇮🇳ஆதிவாசி மக்கள் பாஜக  தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

 🇮🇳பிற்படுத்தப்பட்டோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳சீக்கியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳கிறிஸ்தவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று  விரும்புகிறார்கள்

🇮🇳இஸ்லாமியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

🇮🇳பாஜக அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது... 

🇮🇳உங்களைச் சுற்றியுள்ள குறைந்தது 10 பேருக்கு புரிதலை ஏற்படுத்தி, தேசியவாத வாக்காளர்களை மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்யுங்கள் 

🤝அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை நம் குழந்தைகள் பார்க்க வேண்டும்

👍நமது கடமையை நாம் செய்ய வேண்டும்

👍பாதுகாப்பான சமூகம் பாதுகாப்பான வாழ்க்கை பாதுகாப்பான எதிர்காலம் போன்றவற்றை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்

👉இதைப் புரிந்துகொண்டு வெவ்வேறு வட்டாரக் குழுவில் பகிரவும்🙏

✋தயவுசெய்து நண்பர்களுடன் பகிர்ந்து, அவசியத்தை விளக்கவும்🙏

 நன்றி! நன்றி! நன்றி🙏
 
இந்திய நலனின் அக்கறையோடு...  ஒரு  இந்திய குடிமகனாக...

மகத்தான அர்ஷின் அதிபதியே !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புடையவனே !
மகத்தான அர்ஷின் அதிபதியே !
பரக்கத்தான ரமளான் மாத ஜுமுஆ நாளில் அதிகாலையில் 
உன்னை வணங்கித் துதிக்கிறோம்.
எங்கள் கரங்களை உன்மேல்  உள்ள நம்பிக்கையில் உன் பால் உயர்த்தி விட்டோம்.

நீ மிகவும் சங்கைக்குரியவன்.
எங்களுடைய பிரார்த்தனையை நிராகரிக்கமாட்டாய் என நம்புகிறோம்.
எங்கள்தேவைகளை நிறைவேற்றுவாயாக !

துன்பங்களைப் போக்குபவனே !
கவலைப்பட்டு கண்ணீர் சிந்துவோரின்
கவலைகளைப் போக்குவாயாக !
அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களின் மீது கருணை கொள்வாயாக !

திருமண வயதில் இருப்போருக்கு நல்ல சாலிஹான வாழ்க்கைத்துணையை அமைத்துக் கொடுப்பாயாக !
குழந்தைப் பேறுக்காக ஏங்குவோருக்கு
நல்ல வாரிசைத் தருவாயாக !
ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளைகளிடம் பாசத்தோடும் நேசத்தோடும் பரிவுடன் நடந்திடச் செய்வாயாக !

எங்களுக்கு ஆரோக்கியத்தை அளிப்பாயாக !
எங்களின் பாவங்களை பொருட்படுத்தாமல் மன்னித்து எங்களின் ஏட்டிலிருந்து அழித்து விடுவாயாக !

எங்களின் பிள்ளைகள் பெற்றோர்கள் மீது அன்பு செலுத்துபவர்களாக ஆக்கி வைப்பாயாக ! அவர்கள் சந்ததிகளும் எங்களின்மீது பாசம் நிறைந்தவர்களாக மாற்றி வைப்பாயாக !
எங்கள் உள்ளங்களை விரிவாக்குவாயாக ! எங்க நிலைமைகளை சிறந்த நிலைமைக்கு மாற்றுவாயாக ! எங்களின்எதிர்பார்ப்புகளை நிதர்சனமாக்குவாயக !
எங்களின் நோய்களை குணப்படுத்துவாயாக ! 
நோய் நொடிகளை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக !
பூரணசுகத்தை எங்களுக்கு வழங்குவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

மீண்டும் உயிர் கொடுத்து நோன்பை நோற்க வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மீண்டும் உயிர் கொடுத்து நோன்பை நோற்க  வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருளைப் பொழிவாயாக !

அல்லாஹ் ! உள்ளங்களை மாற்றுபவனே ! எங்கள்  உள்ளத்தை
உன்னுடைய ஈமானின்பால் உறுதியாக்கி வைப்பாயாக !

நாங்கள் எதன் பால் ஆர்வமாக இருக்கிறேமோ அதிலிருந்து எங்களை  மீட்டெடுப்பாயாக !
நீ எதனை செய்வதின் பால் ஆர்வப்படுவாயோ அதன் பால் எங்களை  ஆர்வமடையச் செய்திடுவாயாக !

யா அல்லாஹ் ! இப்பூமி விசாலமாக இருந்தாலும் எனக்கு நெருக்கடி யாக மாறினால் மீன் வயிற்றில் இருந்த யூனுஸ் நபிக்கு உதவியது போல் எனக்கு உதவுவாயாக !
 
எங்கள் இறைவனே ! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை அதிலிருந்து தவறுமாறு செய்து விடாதே ! 
நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு ரஹ்மத் என்னும் நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாக இருக்கிறாய்.

பித்னாவும் ஃபஸாதும் நிறைந்த இந்த காலகட்டத்தில் எங்களுக்கு சத்தியத்தை சத்தியம் எனவும் அசத்தியத்தை அசாத்தியம் எனவும் தெளிவுறக் காட்டுவாயாக !

அதில் குழப்பமடையச் செய்துவிடாதே ! நாங்கள் வழி தவறிவிடுவோம்.
நேர்வழியிலேயே எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மத் !

யா அல்லாஹ் ! 
எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக !
நீ விதித்த கடமைமைகளை நிறைவேற்றுபவர்களாக !
தொழுகைகளை பேணுபவர்களாக !
ஜகாத்தை கொடுப்பவர்களாக !
உன்னிடம் இருப்பவைகளைத்  தேடுபவர்களாக !
உன்னுடைய மன்னிப்பை ஆதரவு வைத்தவர்களாக !
நேர்வழியைப் பற்றிப்பிடித்தவர்களாக !
கேளிக்கைகளைப் புறக்கணித்தவர்களாக !
இவ்வுலகின் மீது பற்றற்றவர்களாக !
மறுமையின் மீது ஆர்வமுடையவர்களாக !
உன் விதியின் மீது திருப்தியுடையவர்களாக !

அருட்கொடைகளின் மீது நன்றி செலுத்துபவர்களாக !
துன்பங்களின் மீது பொருமையாளர்களாக !
மறுமை நாளில் உன்னுடைய நபியும், தூதரும்,
தூய்மையான நண்பரும், நேசத்துக்குறிய வருமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கொடியின் கீழ் வலம் வருபவர்களாக !
ஹவ்ளுல் கவ்ஸருக்கு நீர் அருந்த வருபவர்களாக !
மென்மையான மற்றும் கனமான பட்டாடைகளை அணிந்தவர்களாக !
சொர்கத்தின் உணவுகளை உண்பவர்களாக !
பாலையும், சுத்தமான தேனையும் அருந்துபவர்களாக,
உன் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்திக்கீன்கள் சத்தியவான்கள் ஷுஹதாக்கள் உயிர்த்தியாகிகள் ஸாலிஹீன்கள் நற்கருமங்கள் செய்தவர்கள் ஆகியோருடன் உடன் இருப்பவர்களாக ஆக்குவாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

எங்களுக்கு உயிர் தந்து தொழவும் ஸஹர் செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மீண்டும் எங்களுக்கு உயிர் தந்து தொழவும் ஸஹர் செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !

தன்னுடைய சொல்லாலும் செயலாலும் எங்களுக்கு வழிகாட்டிய ரஹ்மத்துல் ஆலமீன் அண்ணல் நபிமீது உன் ஸலவாத்தைப் பொழிவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லங்களை மகிழ்ச்சி, குதூகலம் அன்பு, மனநிறைவு, மனநிம்மதி, அமைதி,  பாதுகாப்பு, மற்றும் உன் அருட்கொடைகளால்
நிரப்புவாயாக !
பொருளாதாரம் குடும்பம் மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கையில் 
பரக்கத் செய்வாயாக !

அருளாளனே ! எங்கள் இதயங்களை அன்பால் ஒன்றிணைப்பாயாக !
எங்களுக்கிடையே சமரசம் நிலவச்செய்வாயாக ! அமைதியின் பாதையில் எங்களை வழி நடத்துவாயாக !
ரஹ்மானே ! எங்கள் தவறுகளை மறைத்து, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக !

எங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் மீது கருணை காட்டுவாயாக ! அவர்களின் பிழை பாவங்களை மன்னித்தருள்வாயாக !
எங்களில் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவாயாக !
நேர்வழியில் செல்லாமல் இருப்பவரை இன்னும் வழிதவறியவர்களை
நேர்வழியின் பால்
இழுத்து வருவாயாக !

தயாளனே ! நாங்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து எங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் ரிஜ்கை வழங்குவாயாக !
ரப்புல் ஆலமீனே ! நாங்கள் உன்னை சந்திக்கும் வரை, நீ எங்கள் மீது திருப்தி அடைந்தவனாக எங்களை ஆக்குவாயாக !ஆமீன் ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !

அமீரகத்தில் பல பகுதிகளிலிருந்து அய்மான் சங்கத்திற்கு கோரிக்கை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பதிவு நாள் : 23-03-2024.

அபுதாபி :

 கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக

அமீரகத்தில் பல பகுதிகளிலிருந்து  அய்மான் சங்கத்திற்கு  கோரிக்கைகள் வைத்தார்கள். .

 என்னவென்றால் அபுதாபி முஸ்ஸபா பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் உணவில்லாமல் தங்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார் அவரை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் 

 அதன் அடிப்படையில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்கள் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அந்த நபருக்கு  உடனடியாக  தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக்  கொண்டார்கள் 

 நான்கு நாட்களாக தேடுதல்  பணியில் இருந்த அய்மான் சங்கத்தின்  நிர்வாகிகளுக்கு இன்று காலை ஒரு தொலைபேசியின் மூலம் கடையநல்லூர் அருகே உள்ள சுரண்டை என்கின்ற ஊரைச் சேர்ந்த  சகோதரர் வின்சென்ட் அவர்கள் தொடர்பு கொண்டு  நீங்கள் தேடிக் கொண்டிருக்க கூடிய நபர்  இங்கு இருக்கிறார் என்று சொன்னதும் அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் இந்திய தூதரகத்தின் மூலமாக  தமிழகத்திற்கு அனுப்பி வைக்கலாம்  என்று சொன்னோம்.

 தற்காலிகமாக  சகோதரர் வின்சென்ட் அவர்களின்  பராமரிப்பில் அவரைத் தங்க வைத்துள்ளோம்.

அய்மான் சங்கத்தின் சார்பாக  நன்றிகளை  சகோதரர் வின்சென்ட். அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டோம் 

 விரைவில் இந்திய தூதரகத்தின் உதவியுடன் தமிழகம் திரும்ப அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் அனைத்து உதவிகளும் செய்து கொண்டு இருக்கின்றார்கள் இறைவனை பிரார்த்திப்போம்.

அய்மான் சங்கம்
அபுதாபி

 மேலும் விவரங்களுக்கு அய்மான் MAK - 00971553038066.