Tuesday, 19 March 2024

இது தமிழ்நாடா இல்லை உத்தர பிரதேசமா.?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது திராவிட ஆட்சியில்  குற்றமா.?

இது தமிழ்நாடா இல்லை உத்தர பிரதேசமா.?

திராவிட மாடல் ஆட்சியில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படும் அவல நிலை.!
**********

திருச்சி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தொகுதியில் உள்ள  கல்லணை ரோட்டில், வேங்கூர் பகுதியில் உள்ள இந்திரா நகர் 2 வது தெருவில் 22 ஆண்டுகளாக முறையாக பத்திரம் போட்டு,2024 வரை மாநகராட்சி வரி கட்டிய ஆவணங்களுடன் இருக்கும் பள்ளிவாசல் நிலத்தில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிவாசல் பேஸ் மட்டம் வரை போடப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு வந்த நிலையில் பள்ளிவாசல் இடத்திற்கு எதிராக உள்ள பிஜேபி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் இந்த இடம் பூங்காவிற்கு சொந்தமானது இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து பள்ளி கட்டுமான பணியை நிறுத்திவிட்டார்.

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் KN.சேகரன் அவர்களையும் மற்றும் ஆளும் அரசின் முக்கிய பொறுப்பாளர்களையும் சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் பிஜேபியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து எந்தவித செவியும் சாய்க்காமல் காலத்தை கடத்திவிட்டனர்.

முன்னாள் திமுகவின் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் KN.சேகரன் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பள்ளியை கட்டுமான பணிகள் செய்யாமல் இருந்து வந்தனர், ஆனால் அவரும் கையை விரித்து விட்டார்.

ஆனால் ரமலான் மாதத்தில் பள்ளிவாசலில் தொழுகையும் இப்தார் நிகழ்வுகளும் நடந்து வந்தன அதே போன்று இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்று நேற்று அந்த இடத்தை சுத்தம் செய்ய போனபோது வழக்கம் போல பிஜேபி ஒன்றிய செயலாளர் கொலை செய்து விடுவேன்பள்ளிவாசலை கட்ட முடியாது இது உத்தரகாண்ட்,ஜார்கண்டு  போல கலவரம் செய்து விடுவேன் என்றும் மிரட்டியும் காவல்துறை முன்பும் அதே வார்த்தைகளை கூறியபோதும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று 17.03.2024 லுஹர் தொழுகைக்கு பிறகு சென்று  களத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகளும், SDPI கட்சி, மமக கட்சி ஆகிய நிர்வாகிகளும்,அந்த பகுதி இளைஞர்களும் ஒன்றிணைந்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். 

ஆனால் காவல்துறை அதிகாரிகளும், தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர், துணை தாசில்தரும் அந்த இடத்தில் அசர் தொழுகை கூடாது சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று தொழுகையை நடத்தக் கூடாது என்று மிரட்டி வந்தனர்.

ஆனால் பலமுறை அஸர் தொழுகை நிறைவேற்ற முயற்சித்தும் காவல்துறை  தடுத்து வந்தனர்.

 இறுதியாக அஸர் தொழுகையை நிறைவேற்றினோம். அஸர் தொழுகையை தொழுதது குற்றம் என்று அனைவரையும் கைது செய்ய வாகனங்களை வரவழைத்தது காவல்துறை.

இந்த சம்பவம் அறிந்து அந்தப் பகுதியில் பொதுமக்களும், SDPI , மமக கட்சியினுடைய நிர்வாகிகளும் பெருந்திரளாக திரண்டதன் விளைவாக கைது செய்வதை கைவிட்டது காவல்துறை.

முறையாக பத்திரப்பதிவு செய்து வரி கட்டிய ரசீதுடன் இருக்கும் பள்ளிவாசலை கட்ட விடாமல் தடுக்கும் பிஜேபியின் ஒன்றிய செயலாளருக்கு இசைவு கொடுக்கும் தமிழக அர


சின் காவல் மற்றும் மற்ற துறையை வன்மையாக கண்டிக்கிறோம் சிறுபான்மை சமூகத்தின் மீது தொடுக்கப்படும் இது போன்ற தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இது உத்தரப்பிரதேசமா.? இல்ல தமிழ்நாடா? என்ற ஐயம் திராவிட மாடல் ஆட்சியில் நடக்கின்றது.

DMK வேட்பாளர்கள் பட்டியல்... எந்தெந்த தொகுதிகளில் யார், யார் போட்டி?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

20.03.2024 

DMK வேட்பாளர்கள் பட்டியல்... எந்தெந்த தொகுதிகளில் யார், யார் போட்டி?



தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்கள் சந்தித்து, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். உடன் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது எம்எல்ஏ மற்றும் திமுக அமைச்சர்கள்.




#mmkitwing #MKStalin #jawahirullahmla #INDIAAlliance #abdhulsamadmla

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0pQ9HRiZ9YZyguJNq8ZtXEkG5DhEjKmZDxSsZZXxvhreXHxE6sWk3QbB4G1EPwgZAl&id=100064421633072&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

MMK TWITTER X
👇👇👇
https://twitter.com/mmkhqofficial/status/1770080571999531150?t=nLe-nrL3yRNfLFSgsFQxQA&s=19

MMKITWING

தேர்தல் ஒரு பக்கம் நடக்கட்டும். புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

20.03.2024 தேர்தல் ஒரு பக்கம் நடக்கட்டும். புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது. 

நமது நிர்வாகிகள் அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் உங்கள் அருகில் உள்ள அரசு பள்ளிக்குச் சென்று கலந்தாய்வு செய்யலாம். குறைகளை கேட்டறிந்து தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு மனுச் செய்யலாம் / நிறைவேற்றக்கோரலாம் அல்லது நமது தலைமையின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

கட்டாயக் கல்விச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளியில் பயில, ஏழ்மைநிலையில் உள்ள மாணவ மாணவிகளை கண்டறிந்து கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்து கொடுக்கலாம். அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகள் அதிகம் சேர்ப்பதற்கு நமது நிர்வாகிகளே முழு முயற்சி மேற்கொள்ளலாமே?




பள்ளியில் வசதிகள் குறைவாக இருந்தால் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதை மேம்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யலாமே?

தோழர்.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி - MP

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத்  தொகுதியில் போட்டியிடும் #CPIM  வேட்பாளர்

தோழர்.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பழனி பாரூக் அவர்களை ஆயக்குடி மமக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாவட்ட துணை செயலாளர் ர.சா.காதர் மைதீன்,பேரூர் தலைவர் சையது சேக் அப்துல்லாஹ் மற்றும் கிளை பேரூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வெற்றி வேட்பாளர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் தோழர் சு.வெங்கடேசன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் 
இன்று 19:3:24 மனிதநேய மக்கள் கட்சி மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார் 

தோழர் சு.வெங்கடேசன் அவர்களின்வெற்றிக்கு மனிதநேய மக்கள் கட்சி தோளோடு தோல் நின்று களப்பணி ஆற்றி தமிழகத்தில் அதிகப்படியான ஓட்டு வித்தியாசத்தில் தோழரை வெற்றி பெற செய்ய களப்பணியாற்றுவோம்..







நோன்பிருப்போம், உணவளிப்போம் - புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹித் பள்ளிவாசல் சார்பாக நோன்பு காலங்களில் ஏழை குடும்பங்களுக்கு உணவு தயார் செய்வதற்காக உணவுப் பொருட்களை நோன்பிருப்போம், உணவளிப்போம் திட்டத்தின் கீழ் கடந்த ஏழு ஆண்டுகளைத் தொடர்ந்து 8 வது ஆண்டாக இந்த வருடம் சுமார் 65 குடும்பங்களுக்கு 1,50,000 ரூபாய் மதிப்புள்ள பல சரக்கு சாமான்கள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மஸ்‌ஜிதுர் ரஹ்மான் தலைவர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான், செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் சதாம் உசேன், துணைத் தலைவர் சமதானியா சாகுல், துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது, முகம்மது ரபீக், எம்.எஸ்.ஹமீது, இமாம் இப்னு தைமியா இஸ்லாமிய கல்லூரி தாளாளர் பொறியாளர் காஜா முஹைதீன் செயற்குழு உறுப்பினர் ஜாஹிர் தீன், மத்ரஸா பொறுப்பாளர் பஷீர் ஒலிEx.mc, தமுமுக நகர செயலாளர் அசன், பள்ளிவாசல் இமாம் மவுலவி அப்துல் மஜீத் பைஜி அட்மின் சுலைமான் உள்ளிட்டோர் இந்த பணியினை சிறப்பாக செய்தனர்.

ஸ்ரீ YOUTUBE CHANNEL தடை செய்ய கோரியும் , வீடியோவை பேசி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பத்ரி நாராயணன் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது

சென்னை மாம்பழம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ Tv என்கிற YOUTUBE CHANNEL கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து , இந்து மற்றும் முஸ்லீம் மக்களிடையே மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பொய் பிரச்சாரத்தை இந்த சேனல் வெளியிட்டுள்ளது . 

இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தி பேசிய ஸ்ரீ YOUTUBE CHANNEL தடை செய்ய கோரியும் , வீடியோவை பேசி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்குமாறு புகார் மனு அளிக்கப்பட்டது . 

 மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்..!!

இந்நிகழ்வில் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷெரீப் ஹாஜியார் , செயலாளர் அக்பர் அலி , தமுமுக மமக மாவட்ட தலைவர் M. அப்துல் ஹக்கீம் , IUML மாவட்டத் தலைவர் SM. அய்யூப் ஆகியோர் கலந்து கொண்டனர் . 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மேட்டுப்பாளையம்
கோவை வடக்கு மாவட்டம்

இது விளம்பரத்திற்காக அல்ல விழிப்புணர்வுக்காக

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,.

ரத்த தானம் செய்வோம் 
மனித நேயம் காப்போம்

இது விளம்பரத்திற்காக அல்ல விழிப்புணர்வுக்காக

குடியாத்தம் ஒன்றிய தமுமுகவின் சார்பில் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணிக்கு ஒரு யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது


ஒன்றிய ஊடக அணி செயலாளர் 
J.அப்துல் ரஹ்மான் ஒரு யூனிட் ரத்ததானம் செய்தார்..

என்றும் மனிதநேய பணியில் 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
வேலூர் மேற்கு மாவட்டம்

புளியங்குடியில் அதிகாலையில் விபத்து!களத்தில் தமுமுக!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,






புளியங்குடியில் அதிகாலையில் விபத்து!களத்தில் தமுமுக!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவரின் மகன் முத்துகுமார் (வயது 31) இன்று அதிகாலையில் எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே விபத்துக்குள்ளாகி  மரணமடைந்தார். அவருடைய உடலை வாகன இடைப்பாட்டில் சிக்கியதால் தீயணைப்பு படை மற்றும் காவல்துறை உதவியுடன் உடலைக் கைப்பற்றி  தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

களப்பணியில்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மருத்துவ சேவை அணி
புளியங்குடி நகரம்