Monday 14 April 2014

இது நரகத்திற்குரிய செயல் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


ஏக இறைவனின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நாங்கள் மேற்கொண்ட பயணமொன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் (சற்று தாமதமாக) வந்து கொண்டிருந்தார்கள். அஸர் தொழுகையின் நேரம் வந்துவிட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
அப்போது நாங்கள் (கால்களைக் கழுவாமல்) கால்களைத் தண்ணீர் தொட்டுத் தடவ (மஸ்ஹு செய்ய) ஆரம்பித்தோம்.
(இதை பார்த்த) நபி (ஸல்) அவர்கள்..
(உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் என்று கூறினார்கள்.
புகாரி 60 / முஸ்லிம் 406
-----------------------------------------------------------
இறைவன் கருணையாளன். நம் சிறு பாவங்களை மன்னிக்கக் கூடியவன்.
எனினும் நம்மால் இயன்றவரை  அவனுடைய கட்டளைகளை முழுமையாக நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்..
சிலநேரங்களில் தாமதாக தொழுகைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு,ஜமாத்தில் கலந்துவிட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக உளூ செய்துவிட்டு ஓட முயற்சிப்போம்.
அந்நேரங்களில் நம் அங்கங்களை சரியான முறையில் கழுவுவதில் கவனக்குறைவு ஏற்பட்டு விடும்.
சில நேரங்களில் தலைக்கு மஸஹ் செய்தோமா இல்லையா என்று உளூவை முடித்தப் பிறகு அல்லது தொழுகையில் நின்ற பிறகு யோசித்துக் கொண்டிருப்போம்.
இன்னும் பல நேரங்களில் குதிகால்களை கழுவுவதில் முழுமையில்லாமல் விட்டுவிடுவோம்..
இது முற்றிலும் தவறு சகோதர சகோதரிகளே..
இது நரகத்திற்குரிய செயல் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்..
தாமதித்துவிட்ட தொழுகைக்காக இப்படி அவசரமாக குறையுடன் உளூ செய்துவிட்டு, முழு தொழுகையையும் பாழாக்குவதை விட..
பொறுமையாக குறையின்றி உளூ செய்துவிட்டு, கிடைத்த ஜமாத்தில் கலந்துகொண்டு, மீதமுள்ள ரக்காஅத்துகளை பூர்த்தி செய்து மன திருப்தியோடு வருவது சிறந்தது...
அல்லாஹ் அவனுக்கு குறைவின்றி நன்றி செலுத்தும் அடியார்களாக நம்மை ஆக்குவானாக..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..
by sheik dawood

No comments:

Post a Comment