IAS, IPS படிக்க Civil Services தேர்வு
கனவை நினைவாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!
கனவை நினைவாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!
இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை
மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த
தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.
முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.
இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும்,
குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் இது போன்ற தேர்வுகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்சி பெற வேண்டும், தேர்சி பெற்று இது போன்ற பதவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க,
சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வாருங்கள்.
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை. இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள், இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருதாக்கத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.
இதை மாற்ற நாமும் UPSC (IAS,IPS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும்,
தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
இந்த தேர்விற்க்கு எப்படி தயாராவது?
இந்த தலைப்பிலே பல புத்தகங்கள் புத்த கடையில் கிடைக்கும். அந்த அளவிற்க்கு இந்த தேர்வுகள் பிரபலம். பொதுவாக பயிற்சி நிறுவங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் எளிதில் இந்த தேர்வுகளில் வெற்றி பெறலாம். தமிழகத்தில் சென்னை சைதாபேட்டையில் உள்ள மனித நேர அறகட்டளை நடத்து பயிற்சி மையம் இது போன்ற தேர்வுகளுக்கு பிரசித்தி பெற்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளிக்கின்றனர்.
முஸ்லீம்களில் சிலர் Civil Services Examination பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர். சிலர் துவங்க இருகின்றனர். குறிப்பாக சென்னையில் கிரசென்ட் கல்லூரியில் ஒரு பயிற்சி மையமும், சகோ.M.F. கான் அவர்கள் நடத்தும் ஒரு பயிற்சி மையமும் உள்ளது. கள்ளகுறிச்சியில் சகோ. ரஹ்மதுல்லாஹ் நடத்தும் பயிற்சி மையம் உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லீம் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதாக கள்ள குறிச்சி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எப்போது நாம் இதில் தேர்சி பெறுவது?
பயிற்சி மையங்களுக்கு பஞ்சமில்லை, பணமும் ஒரு பிரச்சனை இல்லை ( இலவச பயிற்சிகள் பல நடத்தப்படுகின்றன). வேறு என்ன குறை? தகுதி உள்ள முஸ்லீம் மாணவர்கள்தான் குறை. முஸ்லீம் மாணவர்களிடம் இதில் தேர்சி பெரும் அளவிற்க்கு அறிவு இருகின்றது ஆனால் தன்னம்பிக்கைதான் இல்லை, பொருமையும் இல்லை. முஸ்லீம்களில் படிப்பவர்களே குறைவு, படித்துவிட்டு அதற்க்கு தகுந்த வேலை பார்ப்பவர்கள் மிக குறைவும். ஏதோ உணவு உன்ன வேலைகிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே முஸ்லீம் சமுதாயம் உள்ளது. இதை மாற்ற வேண்டும். முஸ்லீம் மாணவர்களுக்கு தன் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொருமையை போதிக்க வேண்டும். விடா முயற்சியை விதைக்க வேண்டும். நாம் சாப்பிட பிறந்தவர்கள் இல்லை, சாதிக்க பிறந்தவர்கள் என்ற உணர்வை சிறுவயதிலேயே விதைக்க வேண்டும். உணவு, இருப்பிடம் என்பது வாழ்கையின் ஒரு பகுதிதானே தவிற வாழ்கையே அதுவல்ல, முஸ்லீம்களின் இந்த குறுகிய சிந்தனையைவிட்டு அவர்களை வெளிகொண்டு வர வேண்டும். அதற்க்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் முஸ்லீம் மாணவர்களுக்கு விழிபுணர்வும், ஊக்கமும், வழிகாட்டலும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.
தேர்வை பற்றிய முழு விபரங்களும் ஆங்கிலத்தில் அட்டாச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறியவும் தேர்விற்க்கு தயாரவாதற்க்கான வழிமுறைகள் பற்றி அறியவும் Sithiqu.mtech@gmail.com என்ற E - மெயிலில் தொடர்பு கொள்ளவும்.S.சித்தீக்.M.Tech
Civil Services Examination - 2011 தேர்வை பற்றிய விபரம்.
இது 3 கட்டங்களாக நடைபெறும் தேர்வு. முதக் கட்ட தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வும் எழுத்து தேர்வாகும், மூன்றாம் கட்ட தேர்வு நேர்முக தேர்வாகும். முதல் கட்ட தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும்.விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 21/03/11 இன்ஷா அல்லாஹ்
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : அனைத்து தபால் அழுவலகங்கள்
கட்டணம் : விண்ணப்பத்தின் விலை ரூ.20 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.50.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Secretary,
Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New
Delhi - 110069
தேர்வு நடைபெறும் தேதி : 12/06/11 இன்ஷா அல்லாஹ்
வயது வரம்பு : 33 வயது (முஸ்லீம்கள் உட்பட) பிற்படுத்தபட்ட
வகுப்பினர்களுக்கு. பொது பிரிவினருக்கு 30 வயது
தேர்வு எழுத தகுதி : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment