Sunday, 13 March 2011

பிளாக்பெர்ரி அலைபேசியில் தமிழ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

*
பிளாக்பெர்ரி போன் ஒன்னு வாங்கிட்டு, அதில் தமிழ் தெரியலையேனு நொந்து, ஒரு வாரமா, ஏதோதோ ரூபத்தில் தேடியதில், நேற்று இரவு தேடல் வெற்றிகரமாய் முடிந்தது.

How to view Tamil -
இந்த ஸ்டைலிலியே தேடிய போது எதுவும் சரியாக் கிடைக்கலை. இந்த தளத்தில் Opera Mini ப்ரௌஸரை இன்ஸ்டால் பண்ணச் சொன்னாங்க. அதன் படியே இன்ஸ்டால் ஆகிடுச்சு. ஆனால், அந்த ப்ரௌஸர் திறக்கவே இல்லை. இங்கே துபாயில் எடிசலாட் செட்டிங்கில் என்னவோ செஞ்சு வச்சிருக்காங்க. இது வேலைக்காகாதுன்னு விட்டாச்சு.
இனி ரூட்டை மாத்தி தேடணும்னு முடிவு பண்ணி, How to view Hindi -னு தேட ஆரம்பித்த போது இந்த தளம் கண்ணில் பட்டது. இதில் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. OS வெர்ஷன் 6 இருந்தா கண்டிப்பா தமிழைப் பார்த்திடலாம்னு ஒரு தெம்பு வந்துச்சு. அப்புறமா Indic font support -ங்கிற key word வச்சு தேடினேன்.
இப்போ இந்த தளத்தில் "net_rim_font_indic.cod" என்கிற ஃபைல் இருந்தால் தமிழ் தெரியும்னு தெரிஞ்சது. ஆனா, இந்த சுட்டியைச் சொடுக்கினா, அது ஃபோரத்துக்குள்ளே போகுது. அதில் நான் மெம்பர் இல்லை.
இன்னும் கொஞ்சம் தேடியதில், blackberry india -ங்கிற பேரில் ஒரு google group தென்பட்டது. அங்கே போனால், பெரிய விவாதமே பண்ணியிருக்காங்க. எனக்குத் தேவையான cod ஃபைல் இங்கே கிடைச்சது.
இனி அடுத்த சவால், இந்த cod ஃபைலை எப்படி இன்ஸ்டால் பண்ணுவது. மறுபடியும் தேட, என்னவெல்லாமோ சொன்னாங்க:
Read your cod file into memory as a byte array and then:
byte[] cod = getCodHoweverYouWant(); 
int newHandle = CodeModuleManager.createNewModule(cod.length, cod, cod.length);
     
if (newHandle == 0) {
    // Do something informative here
    return;
}




     

int code = CodeModuleManager.saveNewModule(newHandle, true);
   Use "code" to determine if the module was saved correctly (compare it to the CodeModuleManager.CMM_* constants). 
 
இப்படியெல்லாம் போட்டிருந்தாங்க. மிரண்டுட்டேன். டேய், நான் இந்த அளவு வொர்த் இல்லைடா, ஏதாவது ஈஸியான வழியைச் சொல்லுங்கடான்னு புலம்பிக்கிட்டே மறுபடியும் தேட, bbsak-னு ஒரு டூலை வச்சு இன்ஸ்டால் பண்ணலாம்னு தெரிய வந்தது.
அது எங்கே கிடைக்கும்னு பாத்தா ஒரு புண்ணியவான் இங்கே அழகா ஒரு டுடோரியல் போட்டிருக்காரு. அதன்படி அச்சு பிசகாம செஞ்சு முடிச்சா, அழகா cod ஃபைல் இன்ஸ்டால் ஆகி, ப்ளாக்பெர்ரி ரீபூட் ஆனது.
அதுக்கு முன்னாடியே, இன்பாக்ஸில் கட்டம் கட்டமா தெரிஞ்ச தமிழ் கவிதை மடல் ஒன்னு போட்டு வச்சிருந்தேன்.
ரீபூட் ஆகி முடிஞ்சதும் நேரா இன்பாக்ஸ் போய் பாத்தா, தெய்வமே, தமிழ் அழகா துல்லியமா தெரிஞ்சது!!!
ஃபேஸ் புக் போனேன். தமிழ் தெரிஞ்சது.
கூகிள் டாக் போனேன். தமிழ் தெரிஞ்சது.
ஜிமெயில் போனேன். தமிழ் தெரிஞ்சது.
வாவ்! எனக்குக் கிடைச்ச சந்தோஷத்தை சொல்லி முடியாது.
இன்று ஆஃபீஸுக்குப் போனேன். பிளாக்பெர்ரியோட ப்ரௌஸரில் http://scriptconv.googlelabs.com/ -இந்த தளத்தை தட்டச்சினேன். கூகிள் ஸ்க்ரிப்ட் கன்வெர்ட்டர்க்குப் போனது. Naan ippo bLaackperry tamizhan னு டைப் அடிச்சு, கன்வெர்ட் டூ-வில் தமிழைப் போட்டு, கன்வெர்ட்டைக் கிளிக்கினா,
நான் இப்போ ப்ளாக்பெர்ரி தமிழன் -னு காட்டுச்சு.
காப்பி பேஸ்ட் பண்ணி ஸ்டேடஸ் மெஸேஜை மாத்தினேன்.

Now, my blackberry 9780 is a breeze.
நான் இப்போ ப்ளாக்பெர்ரி தமிழன் :)))
நன்றி : கோகுல்குமரன், பண்புடன் குழுமம்

No comments:

Post a Comment