அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல பிஷப் உத்தரவு சென்னை: அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய, ஊட்டி பாதிரியார் முறைப்படி விசாரணையை எதிர்கொள்ளுமாறும், இதற்காக அமெரிக்காவுக்குச் செல்லுமாறும் பிஷப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மின்னசோடா மாகாணத்தில் கத்தோலிக்க பாதிரியாராக இருந்தவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால். வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜெயபால் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது அவர், ஊட்டியில் உள்ள அமல்ராஜ் என்ற பிஷப்பின் கீழ் பணியாற்றி வருவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களை அவர் தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயபாலால் பாதிக்கப்பட்டோர், மின்னசோடாவில் ஒன்று கூடி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் சர்ச் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர். ஆனால், 'பாதிரியாரை எளிதாக நாங்கள் விரட்டிவிட முடியாது. அவர் பிஷப் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். ஆசிரியர்கள் நியமனத்தில் எனக்கு உதவியாக இருக்கிறார். இதுபற்றி அவரிடம் விசாரித்த போது தான் குற்றமற்றவன் எனக் கூறுகிறார். எனக்கு வேறு வழி தெரியவில்லை' என்றார். இந்நிலையில், பாதிரியார் ஜெயபால் அமெரிக்கா சென்று வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா உத்தரவிட்டிருக்கிறார். பாதிரியார் ஜெயபாலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்குமாறு ஊட்டி பிஷப்பிடம் பேசியிருப்பதாகவும் பேராயர் சின்னப்பா கூறினார். Source : http://thatstamil.oneindia.in/news/2010/04/07/accused-abuse-catholic-priest-ask.html
“செக்ஸ்” புகார்: பெல்ஜியம் பிஷப் ராஜினாமா! சனி 24, ஏப்ரல் 2010 5:14:19 PM (IST) பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பிஷப் ரோஜர் வாங் கெல்வ் ராஜினாமா செய்தார். பெல்ஜியம் நாட்டில் பிளேமிஷ் நகரில் உள்ள புரூஜெஸ் நகரில் கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் ஆக இருந்தவர் ரோஜர் வாங் கெல்வ் (73). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவனுடன் "செக்ஸ்” உறவு வைத்திருந்ததாகவும், அதனால் அவன் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் இவர் மீது புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தனது குற்றத்தை பிஷப் ரோஜர் ஒப்புக்கொண்டார். எனவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். செக்ஸ் புகார் தொடர்பாக அங்கு தனது பதவியை ராஜினாமா செய்த முதல் பிஷப் இவர்தான் Source : http://tamil.allnews.in/all-news/all-news/
பாதிரியாரிடம் 21 ஆயிரம் ஆபாச வீடியோ! ஸ்பெயின் நாட்டில் உள்ள விலா பேம்ஸ் நகரை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் மீது செக்ஸ் தொடர்பான புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து அந்த பாதிரியார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் வைத்திருந்த கம்ப்யூட்டரில் ஏராளமான செக்ஸ் வீடியோ காட்சிகள் பதிவு செய்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் கோப்பில் 21 ஆயிரம் செக்ஸ் வீடியோக்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை குழந்தைகள் தொடர்பான செக்ஸ் வீடியோ காட்சிகள் ஆகும். இதையடுத்து பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். செக்ஸ் வீடியோ படம் எடுத்ததற்கும் இவருக்கும் சம்பந்தம் உண்டா? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். செக்ஸ் புகாரில் சிக்கியதை அடுத்து பாதிரியாரை சபையில் இருந்து நீக்க கிறிஸ்தவ டயோசிசன் முடிவு செய்திருக்கிறது. http://www.inneram.com/2010111411893/21000-sex-video-files-found-in-church-fathers-house
பெண்ணை கடத்திய மதபோதகர் கைது நாகர்கோவில் : வீட்டில் இருந்த பெண்ணை கடத்திச் செல்ல முயன்ற மதபோதகரை, பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரபுரம் வேஞ்சத்திப் பகுதியில் வீட்டில் இருந்த பெண்ணை, காரில் வந்த மூன்று பேர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், பொது மக்களும் துரத்திச் சென்றதால், பயந்துப் போன அவர்கள் காரை ரோட்டில் நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர். இதில், ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். அவர் அஞ்சுகிராமம் அருகே காப்பகம் நடத்தி வந்த மதபோதகர் ஜஸ்டின் என்பதும், இவர்கள் கடத்திய பெண், அங்கு பணியாற்றிய மேபல் என்பதும் தெரியவந்தது. ஜஸ்டின் நடத்திய காப்பகத்துக்கு உரிய அனுமதி பெறாததால் அது “சீல்’ வைக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், சாட்சியை கலைப்பதற்காக மேபலை கடத்தியது, விசாரணையில் தெரியவந்தது. ஜஸ்டின் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=127226
மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்-கொடைக்கானல் பள்ளி தாளாளர் தலைமறைவு! மதுரை: பள்ளி மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து விட்டு தலைமறைவாகியுள்ள கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியின் தாளாளர் பிரைட் (76) தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியான கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலில் சிறப்பு சலுகையின் கீழ் படித்து வரும் ஆதவற்ற மாணவிகளிடம், அப் பள்ளியின் தாளாளர் பிரைட் தவறாக நடந்து கொண்டார் என்று புகார் எழுந்தது. இதையடுத்து, பிரைட் திடீரென தலைமறைவானார். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவருடை பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது நில மோசடி புகாரும் பதிவாகி உள்ளது. காமுத்தாய் என்ற பெண்மணிக்குச் சொந்தமான நிலத்தை, தனக்கு 99 வருட குத்தகைக்கு அவர் விட்டுள்ளதாக கூறி போலியான ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்து பெரும் மோசடி செய்துள்ளார் பிரைட் என்பது அந்தக் குற்றச்சாட்டு. இந்தப் புகார் குறித்தும் கொடைக்கானல் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரைட் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு மனு இதுவரை தாக்கலாகவில்லை என்று மதுரை கிளை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன Source : http://thatstamil.oneindia.in/news/2010/06/23/kodaikanal-school-official-facing-sexual.html
நாகர்கோவில் : வீட்டில் இருந்த பெண்ணை கடத்திச் செல்ல முயன்ற மதபோதகரை, பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரபுரம் வேஞ்சத்திப் பகுதியில் வீட்டில் இருந்த பெண்ணை, காரில் வந்த மூன்று பேர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரும், பொது மக்களும் துரத்திச் சென்றதால், பயந்துப் போன அவர்கள் காரை ரோட்டில் நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர். இதில், ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். அவர் அஞ்சுகிராமம் அருகே காப்பகம் நடத்தி வந்த மதபோதகர் ஜஸ்டின் என்பதும், இவர்கள் கடத்திய பெண், அங்கு பணியாற்றிய மேபல் என்பதும் தெரியவந்தது. ஜஸ்டின் நடத்திய காப்பகத்துக்கு உரிய அனுமதி பெறாததால் அது “சீல்’ வைக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், சாட்சியை கலைப்பதற்காக மேபலை கடத்தியது, விசாரணையில் தெரியவந்தது. ஜஸ்டின் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்க்க: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=127226
போலீசாரும், பொது மக்களும் துரத்திச் சென்றதால், பயந்துப் போன அவர்கள் காரை ரோட்டில் நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர். இதில், ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். அவர் அஞ்சுகிராமம் அருகே காப்பகம் நடத்தி வந்த மதபோதகர் ஜஸ்டின் என்பதும், இவர்கள் கடத்திய பெண், அங்கு பணியாற்றிய மேபல் என்பதும் தெரியவந்தது. ஜஸ்டின் நடத்திய காப்பகத்துக்கு உரிய அனுமதி பெறாததால் அது “சீல்’ வைக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், சாட்சியை கலைப்பதற்காக மேபலை கடத்தியது, விசாரணையில் தெரியவந்தது. ஜஸ்டின் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்க்க: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=127226
திருச்சி : ""கற்பழிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றவாளிகள் பெயர்களை நீக்க முயற்சிக்கும் மாஜிஸ்திரேட் மீதும், போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் மீது அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்துள்ள தஞ்சாவூரான் சாவடியை சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி (32), கடந்தாண்டு அக்டோபரில், கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கற்பழிப்பு புகாருக்கு உள்ளான பாதிரியார் ராஜரத்தினம், முதல்வர் பதவியை துறந்து, மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் பெற்றார். கோட்டை மகளிர் போலீசார் முன்னிலையில், விசாரணைக்கும் ஆஜரானார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி, கடந்த 29ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதில், பாதிரியார் ராஜரத்தினம், சேசு சபை தலைவர் தேவதாஸ், பாதிரியார்கள் ஜோ சேவியர், சேவியர், டாக்டர் சுசித்ரா ஆகியோர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.
கடந்த 3ம் தேதி, ப்ளாரன்ஸ் மேரி குற்றப்பத்திரிகை நகல் கேட்டு, திருச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு நகல் வழங்காமல், அன்றே குற்றப்பத்திரிகையை ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கன், கோட்டை போலீசாருக்கு திருப்பி அனுப்பினார். தகவலறிந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியும், அவரது வக்கீல் இருதயசாமியும், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு வந்தனர். அப்போது, ப்ளாரன்ஸ் மேரி தயாராக கொண்டு வந்திருந்த மனுவை, குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அளித்தார். கற்பழிப்பு வழக்கில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றவாளிகளின் பெயர்களை நீக்கவும், ஆவணங்களை மறைக்கவும் முயற்சி நடக்கிறது. அதற்கு போலீஸ் அதிகாரிகளும், ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட்டும் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் தப்பிக்க விடாமலும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என, அப்புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து ப்ளாரன்ஸ் மேரி கூறியதாவது: புகாருக்கு உள்ளாகியுள்ள பாதிரியார்கள், நாங்கள் பணபலம், அரசியல் பலம் மிக்கவர்கள். எங்கள் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள், உயர் பதவியில் இருக்கின்றனர். எங்களை ஒன்றும் செய்ய முடியாது என ஏற்கனவே மிரட்டினர். தற்போது, குற்றப்பத்திரிகை திரும்ப பெற்றதிலிருந்து, மிரட்டியதை செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில், குற்றப்பத்திரிகை திரும்ப அனுப்பப்பட்டதில், போலீஸ் கமிஷனரும், ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கனும் உடந்தையாக உள்ளனர். பல அரசியல்வாதிகளும் உடந்தையாக இருக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். நீதி கிடைக்கும் வரை என்னுடைய போராட்டம் தொடரும். இவ்வாறு ப்ளாரன்ஸ் மேரி கூறினார்.
ப்ளாரன்ஸ் மேரியின் வக்கீல் இருதயசாமி கூறியதாவது: கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் உள்ளதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வேண்டும் என, வரும் 15ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். பாதிரியார் ராஜரத்தினத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரிய முறையீட்டு மனுவும், அன்று விசாரணைக்கு வருகிறது. போலீஸ் கமிஷனர் சொல்லியே ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கன் குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியதாக, அவரே என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு இருதயசாமி கூறினார். Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182795
No comments:
Post a Comment