Wednesday, 16 March 2011

இந்து யாத்திரிகர்களுக்கு பொருளாதர சலுகை வழங்கும் மத்திய மாநில அரசுகள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

அஸ்ஸலாமு அலைக்கும்,

அளவற்ற அருளாலனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...


இந்து யாத்திரிகர்களுக்கு பொருளாதர சலுகை வழங்கும் மத்திய மாநில அரசுகள்.

பிரபுல் கொராடிய என்ற இந்துதுவாவின் ஊதுகோல் உச்ச நீதி மன்றத்தில் முஸ்லீம்களுக்கு ஹஜ் மானியம் தருவதை தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தான், இதை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மர்க்கன்டேய கட்சு மற்றும் G.S.  மிஸ்ராமுட்டாள் தனமாக தாக்கல் செய்த இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.   இந்த இந்துவா துரோகிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, என்னவோ ஹஜ் யாத்திரிகர்களுக்கு மட்டும்தான் மானியம் வழங்கப்படுவாதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் இந்துக்களுக்கும் இது போல் அவர்களின் புனித ஸ்தலத்திற்க்கு செல்ல மத்திய மாநில அரசுகள் பல்வேறு பொருளாதார உதவிகள் செய்கின்றன.

இந்து யாத்திரிகர்களுக்கு கர்நாடகா மாநில 2010 பட்ஜெட்டில் ரூ 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்
1. மானசரோவர் செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.3கோடி

2. திருப்பதி செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.5 கோடி

3.  சபரிமலை செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.5 கோடி 

இது போல பல மாநிலங்களிலும் பல கோடி ருபாய்கள் இந்து யாத்திரிகர்களுக்கு வழங்கப்படுகின்றது. தமிழக அரசு இந்த ஆண்டு 2011 பட்ஜெட்டில் இந்து கோயில்களுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் முஸ்லீம்களுக்கு சொத்த பணத்தில் பள்ளிவாசல் கட்ட கூட அனுமதி தருவதில்லை தமிழக அரசு.

இந்து யாத்திரிகர்களுக்கு இந்தியன் ரயில்வே  துறையின் சலுகைகள்

மத்திய அரசின் இந்தியன் ரயில்வே துறை இந்துக்கள் தங்களின் புனித ஸ்தலத்திற்க்கு செல்ல பல்வேறு வகையான சலுகைகளை அறிவிக்கின்றது. நாம் ஆராய்ந்த வரை முஸ்லீம்களுக்கோ, கிறித்தவர்களுக்கோ  இப்படி  இந்தியன் ரயில்வே சலுகைகள் அறிவிப்பது கிடையாது.

இந்துக்களின் புன்னிய ஸ்தலங்களுக்கு செல்ல பல் வேறு வகையான திட்டங்களில் மொத்த ரயில் கட்டணத்தில் 20 % வரை சலுகை அளிக்கின்றது. 

உதாரணத்திற்க்கு " "Bharat Darshan Special Tourist Train" இது  HYDERABAD - HARIDWAR - RISHIKESH - VARANASI - KOLKOTTA - PURI - KONARK - BHUBANESHWAR . ஆகிய இடங்களில் உள்ள 12 கோயில்களுக்கு செல்கின்றது.  14 நாள்களுக்கு  ஒரு நபருக்கு ரூ.7695 வாங்குகின்றனர். இரயில் கட்டணம், உணவு , தங்கும் வசதி, இரயில் அல்லாமல் கோயில்களுக்கு சென்றுவர  பேருந்து போக்குவரத்து உட்பட அனைத்தும் சேர்த்து இந்த தொகை.  இதை ஆராய்ந்தால் இரயில் கட்டணத்தில் 20 % சலுகை வருகின்றது

தற்போது இந்துக்களின் புன்னிய ஸ்லத்திற்க்கு செல்ல 4 திட்டங்களை இந்தியன் ரயில்வே துறை அறிவித்துள்ளது.   ஆனால் முஸ்லீம்களுக்கோ, கிருத்துவர்களுக்கோ  எந்த சலுகை திட்டமும் இல்லை. இன்னும் கோயில்களின் பக்தர்களுக்கு பல்வேரு சலுகைகளை அரசு வழங்கிவருகின்றது. நிலைமை இப்படி இருக்க ஹஜ் பயனிகளுக்கு மட்டுமே அரசு மானியம் தருவதாக கூறுவது வடிகட்டிய பொய் என்பதை முஸ்லீம் அல்லாதோர்களுக்கு நான் சொல்ல வேண்டும்.

S.சித்தீக்.M.Tech

No comments:

Post a Comment