Sunday, 13 March 2011

பலன் எதிர்பாரா நற்செயல் பலன் தரும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


ஒரு முறை ஒரு மன்னரும் அவர் அமைச்சரும் மாறுவேடத்தில் நகரை வலம் வந்தனர்.

அப்போது வயதான முதியவர் ஒருவர் பழச்செடி ஒன்றை நடுவதைக் கண்டனர்

மன்னர் முதியவரை நெருங்கி “தாங்கள் மரணத்தை நெருங்கும் முதியவராக இருக்கிறீர்.  இந்த செடி மரமாய் வளர்ந்து பழத்தை நீங்கள் உண்ணவா போகிறீர்கள் ...... இச்செடியின் பழத்தை உண்ணும் அளவுக்கு வாழ பேராசை ஏன்? என்றார்

அம்முதியவரோ ” இப்படி ஒவ்வொருவரும் பல ஆண்டு கழித்து விளையும் கனியை நாம் உண்ணவாப் போகிறோம் என்று எண்ணி செடிகளை நடாமல் இருந்தால் பூமியில் பழ மரங்கள் உண்டாகுமா என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் அவருக்கு ஒரு பொன்முடிப்பு தந்தார்

அப்போது அந்த முதியவர் ” என் செடி எனக்கு பலனளிக்குமா என்றீர்களோ இதோ பாருங்கள் உடனே பலன் தந்துவிட்டதே” என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் அவருக்கு மீண்டும் ஒரு பொன்முடிப்பு தந்தார்

அப்போது அந்த முதியவர் ” ஒரு மரம் வருடத்தில் ஒரு முறை தான் கனி தரும் ஆனால் நான்  நட்ட இந்த செடியோ ஒரே நேரத்தில் இரண்டு முறை பலன் அளித்து விட்டதே என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் மூன்றாம் முறையாக அவருக்கு ஒரு பொன்முடிப்பு தந்தார்

பிறகு தன் அமைச்சரிடம் இந்த இடத்தில் நாம் இருந்தால் இந்த முதியவர் இப்படி புத்திசாலித்தனமாகப் பேசிப் பேசியே நம் மொத்த கஜானாவையும் காலி செய்திடுவார் என்று சொல்ல இருவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்

இக்கதையிலிருந்து  ”பலன் எதிர்பாராமல்  செயல் நற்செயல் உடனே பலன் தரும் ” என்பதாகும்


With best regards
உண்மைச் சம்பவத்தை கதை வடிவில் எழுதியவர்கமால் Kamal

No comments:

Post a Comment