Wednesday 30 March 2011

Google Map பிரச்சனையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



ஒரு இணையப் பக்கம் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட பிரச்சனையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
முதலில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதையும் பிரச்சனை என்ன என்பதையும் சொல்கிறேன். நான் ஒரு தொடா்பு கொள்ளல் பக்கம் (Contact Us) ஒன்றை செய்து கொண்டிருந்தேன். ஒரு படிவம் (Form), முகவரி, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை  இணைத்து ஒரு பக்கம் தயார் செய்தேன். இறுதியாக Google Map இல் முகவரியைக் காட்டுமாறு செய்து அதற்கான நிரலையும் (Coding) எடுத்தேன். நிரலை இணைத்த பின் தான் பிரச்சனை விளங்கியது.
image
மேலுள்ள படத்தில் உள்ளவாறு “Last Updated by…..” என்பது வருவது தான் பிரச்சனை.
சரி இதற்கு தீா்வு என்ன என்று தேடிய போது கிடைத்ததை உங்களில் யாருக்கேனும் உதவலாம் என்று பதிவு செய்கிறேன்.
உங்களுக்கு Google Map ஐ பயன்படுத்தி வரைபடம்(Map) உருவாக்கத் தெரியுமெனில் நீங்கள் கீழுள்ள பெட்டிச் செய்தியை தவிர்க்கலாம். 
முதலில் சுருக்கமாக Google Map இல் ஒரு முகவரியை குறிப்பது எவ்வாறு என்று காண்போம். (Creating a Map)
  1. முதலில் http://maps.google.com/ ஐ உங்கள் இணைய உலாவியில் திறந்து கொள்ளுங்கள்.
  2. Sign in என்ற இணைப்பை கிளிக் செய்து உள் நுழையுங்கள். (உங்களிடம் கூகிள் கணக்கு இருக்கவேண்டும்.)
  3. இடது பக்க பகுதியில் My Maps என்பதை கிளிக் செய்யுங்கள்

    image 
  4. Create my map என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள். (மேலுள்ள படம் பார்க்க)
  5. ஒரு தலைப்பு(title) மற்றும் அதைப்பற்றிய சிறு விளக்கம்(Description) இறுதியாக Public அல்லது Unlisted என்பதை தெரிவு செய்யுங்கள். 

    image 
  6. வலது பக்கத்தில் காணப்படும் Add a placemark என்பதை தெரிவு செய்து வரைபடத்தில் (Map) எந்த இடத்தை குறிக்க விரும்புகிறீா்களோ அதில் கிளிக் செய்யுங்கள்.

    image 
  7. பின் அதற்கு வேண்டிய தலைப்புக் கொடுத்து Description என்ற பகுதியில் முகவரியை அல்லது சிறு விளக்கத்தைக் கொடுத்து OK பொத்தானை அழுத்தி சேமியுங்கள்.
  8. கடைசியாக இடது பக்கத்தில் உள்ள Done என்ற பொத்தானை அழுத்துங்கள்.
  9. இப்போது நீங்கள் ஒரு வரைபடத்தை தயார் செய்து விட்டீா்கள்
  10. தயார் செய்த படத்தை உங்கள் இணையப் பக்கத்தில் இணைக்க Link என்பதை கிளிக் செய்து Paste HTML to embed in website என்பதற்கு கீழ் உள்ள நிரலை பிரதி செய்து தேவையான இடத்தில் ஒட்டி விடுங்கள்.

    image
சரி இப்போது “Last Updated by…..”  என்பதை எப்படி இல்லாமல் செய்வது என்று காண்போம்.
  • நீங்கள் உருவாக்கிய வரைபடத்தில் (Map) இருக்கிறீா்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் திறந்து கொள்ளுங்கள். (My Maps ஐ கிளிக் செய்து வரைபடத்தை திறக்கவும்)
  • View in Google Earth என்பதை வலது கிளிக் செய்து கொள்ளுங்கள். Copy link address என்பதை கிளிக் செய்து இணைப்பை பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • புதிய ஒரு tab இல் http://maps.google.com/ பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.
  • திறந்தபின் அதன் தேடல் பெட்டியில் (Search Box) நீங்கள் பிரதிசெய்ததை ஒட்டி Search Mapsஎன்ற பொத்தானை அழுத்தி தேடுங்கள்.
  • நீங்கள் உருவாக்கிய வரைபடம் திறந்து கொள்ளும். இப்போது மேலே படி நிலை 10 (Step 10) இல் காட்டிவாறு வரைபடத்திற்கான நிரலை பிரதி செய்து உங்கள் இணையப் பக்கத்தில் ஒட்டி விடுங்கள். அவ்வளவு தான்.

    image

Regards

ALAVUDEEN

No comments:

Post a Comment