Sunday 13 March 2011

ஜப்பானில் சுனாமி தாக்குதல் ! அந்நாட்டு மக்களுக்காக துஆ செய்ய பாக்கர் கோரிக்கை!

(11.03.2011) காலை ஜப்பானில் வராலாறு காணாத அளவுக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்ப்பட்டதின் விளைவாக அங்கு கடும் சுனாமி தாக்கியது. இதில் ஏராளமான உயிர் பலிகள் ஏற்ப்பட்டுள்ளதாகவும் படகுகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. .ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்து விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்திய கடல் பகுதிகளில் பாதிப்புகள் இல்லை என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுக்காப்பான இடங்ககளுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் . இதையடுத்த ஜப்பானை அடுத்துள்ள நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .
இன்று இதஜ தலைமையகத்தில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் தலைவர் பாக்கர் சுனாமி தாக்கிய தகவலை தொழுத மக்களிடம் கூறி இதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி வேண்டினார் .
தகவல் : ஹஸன் வாஹா.

No comments:

Post a Comment