Tuesday, 21 May 2024

என்னைப் படைத்துப் பரிபாலிப்பவனே !

அல்ஹம்துலில்லாஹ் !
அஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் !

என்னைப் படைத்துப் பரிபாலிப்பவனே ! 
என் பாவங்களைக் கண்டும் உடனே என்னை தண்டிக்காமல் பொறுமை காப்பவனே !
என் மீது நீ காட்டும்  பொறுமையைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன்.
 
என்னை பாவம் செய்யவிடாமல் தடுப்பாயாக !
என் தவறுகளையும், பாவங்களையும் நான் உணர்ந்து வருந்தி  தௌபா செய்பவனாக என்னை ஆக்குவாயாக !

எப்பொழுதும் நான் செய்யும் தவறுகளை பிறரிடமிருந்து மறைப்பாயாக ! உன்னுடைய மன்னிப்பை நிரந்தர மாக்குவாயாக ! உன்னுடைய படைப்பினங்களுக்கு முன் என்னைக் கேவலப் படுத்திவிடாதே !

என் இரட்சகனே ! நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன்.
என்னைப் பலப்படுத்துவாயாக !
நோயாளியாக இருக்கிறேன். என்னைக்
குணப்படுத்துவாயாக !
எனக்கு சுகத்தைக் கொடுப்பாயாக ! மனஅழுத்தம் பதட்டம் போன்றவைகளை விட்டும் என் உள்ளத்தை பாதுக்காப்பாயாக !

நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி அவனிடமே எங்கள் காரியங்களை ஒபபடைத்து விட்டோம். உன்னையல்லால் வேறு நாயனில்லை.
எங்கள் இறைவனே ! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே ! எமது ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளுக்கு எங்களை காப்பாற்றியருள்வாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

Sunday, 19 May 2024

வனத்துக்குள் மற்ற உயிரினங்களுக்கு ஆபத்து வருவதை அறிந்து எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும் குரங்குகள்..!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வனத்துக்குள் மற்ற உயிரினங்களுக்கு ஆபத்து வருவதை அறிந்து எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும் குரங்குகள்..!
https://youtube.com/shorts/d70VPgGNE9s?si=OTEoxvz3ewRQUtsM

wanted P0ST GRADUATE BIOLOGY TEACHER)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இராமநாதபுரம் மாவட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை உயிரியல் ஆசிரியர்(P0ST GRADUATE BIOLOGY TEACHER)  நிரந்தர பணியிடத்திற்கு M.SC.,B.ED.(Biology, Botany, Zoology) படித்த முஸ்லிம் ( BCM ) இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.  

தொடர்புக்கு 

 8072073591

பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த நபர்? புயலை கிளப்பிய வீடியோ.. உ.பி.யில் ஷாக்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த நபர்? புயலை கிளப்பிய வீடியோ.. உ.பி.யில் ஷாக்

https://chat.whatsapp.com/BMbs20f3cxS4aP5uswKk8n1


டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் இளைஞர் ஒருவர் மொத்தம் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

லோக்சபா தேர்தல் 2024
தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் தேதிகள்
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது.


இதன் காரணமாக நாடு முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் முறைகேடு சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

8 முறை: அதில் இளைஞர் ஒருவரே பல முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். அந்த வீடியோவை அவரே எடுத்துள்ள நிலையில், இது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மொத்தம் 8 முறை அந்த நபர் பாஜகவுக்கு வாக்களித்தாக தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், பலரும் இதுபோன்ற தேர்தல் முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சாடி வருகின்றனர்.

ஃபரூகாபாத் லோக்சபா தொகுதியில் கடந்த மே 13ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்தது போலத் தெரிகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்.

கொந்தளித்த காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி இந்த வீடியோவை தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. தேர்தல் ஆணையமே, இந்த நபர் மொத்தம் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். இப்போதாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்" என்று பதிவிட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் தாக்கு: உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவரும் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவருமான அகிலேஷ் யாதவும் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "இது தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால், நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில்... பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் லூட் (கொள்ளை) கமிட்டி போலத் தான் நடந்து கொள்ளும்" என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

"ராகுல் காந்தி பிரதமராக எல்லா தகுதியும் இருக்கு, ஆனா.." கடைசியில் ட்விஸ்ட் வைத்த பிரியங்கா காந்தி
ஃபரூகாபாத் தொகுதி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஃபரூகாபாத் தொகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த ஃபரூகாபாத் தொகுதியில் இடைத்தேர்தல்கள் சேர்ந்து மொத்தம் 18 முறை தேர்தல் நடந்துள்ளது. அதில் அதிகபட்சமாக 8 முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. கடைசியாக 2009இல் காங்கிரஸ் இந்த தொகுதியை கைப்பற்றி இருந்தது. அதன் பிறகு நடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜகவே இங்கு வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019இல் நடந்த தேர்தலில் பாஜக சார்பில் முகேஷ் ராஜ்புட், பகுஜுன் சமாஜ்- சமாஜ்வாடி கூட்டணியில் பகுஜுன் சமாஜ் சார்பில் மனோஜ் அகர்வால், காங்கிரஸின் சல்மான் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் பாஜகவின் முகேஷ் 5.69 லட்சம் வாக்குகள் பெற்று சுமார் 2.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பகுஜுன் சமாஜின் மனோஜ் அகர்வால் 3.48 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். காங்கிரஸின் சல்மான் 55 ஆயிரம் வாக்குகளைப் பெற்று டெபாசிட் கூட இழந்தார்.

#இராமநாதபுரம்_நகர்_தமுமுக_வின் #அவசர_இரத்ததான_சேவவை 🩸🩸

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

[7:07 pm, 18/05/2024] Saleemullah Khan: இன்று (18:05:2024) 
#இராமநாதபுரம்_நகர்_தமுமுக_வின்
#அவசர_இரத்ததான_சேவவை 🩸🩸

இரத்ததானம்!! 
மனித நேயத்தின் மிகச்சிறந்த  அடையாளம்!!! 

பிற உயிர்களை காப்பதற்கு இறைவனால் அளிக்கப்பட்ட மிக நல்ல சந்தர்ப்பம்!!!




ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன்_5:32)

🩸இராமநாதபுரம் செய்யது அம்மாள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்
பாம்பன் ஊரைச் சேர்ந்த 
#ஜெலிலா_பேகம், பெண்மணிக்கு
B+பாசிட்டிவ் இரத்தம்...
ஷபீர் அஹமது அவர்கள் இரத்ததானம் செய்தனர்.

உடன்...
முகம்மது தமீம்
நகர் செயலாளர் ஏற்பாடு செய்திருந்தனர்.

#எல்லாப்_புகழும்_இறைவனுக்கே.

என்றென்றும் மக்கள் சேவையில்..!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
மனித நேய மக்கள் கட்சி
மருத்துவ சேவை அணி
இராமநாதபுரம் நகர் .
9894485986,
9698047786,
9003317979,
7708083555,
9159737760,

நேர்வழிக்காக துஆ செய்யுங்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



நேற்று - 18.05.2024 பரமக்குடி அஞ்சுமுக்கு ரோடு பஸ் ஸ்டாப்பில் தஃவா மேசை அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அல்லாஹ்வின் மார்க்கம் விளக்கப்பட்டது. ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு அல்குர்ஆன் வழங்கப்பட்டது. 

அனைவரின் நேர்வழிக்காக துஆ செய்யுங்கள்.

Dawa desk at Paramakudi five corner bus stop - 18.05.2024. Alquran is distributed to one person.

கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் 19-05-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

19-05-2024 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் 
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும்
இராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து 
கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் கமுதி நகர தமுமுக கிளையின் சார்பாக கலாவிருத்தி மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெற்றது.

 இந்த முகாம் மாவட்டத் தலைவர் எம்.வாவா ராவுத்தர் தலைமையில் முகாமை கமுதி காவல் ஆய்வாளர் குருநாதன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

முகாமில் 250 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்


இராமநாதபுரத்தில் மே 23 முதல் 26 SMI கோடைக்கால பன்முக முகாம் - 2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இராமநாதபுரத்தில் மே 23 முதல் 26 
SMI கோடைக்கால பன்முக முகாம் - 2024

இஸ்லாமிய வகுப்புகள்:

1. தொழுகையின் முக்கியத்துவம் + தொழும் முறை (செயற்முறை வகுப்பு)
2. ஈமானிய அடிப்படைகள் - 6
3. தூய்மை பாடம்
4. நபி (ஸல்) அவா்கள் வரலாறு
5. முஸ்லிம்களின் நற்பண்புகள்

_(தினமும் காலை 5:45 முதல் 6:45 வரை துஆ & திக்ர் மனனம் - ஒரு நாளைக்கு தலா 5 துஆ & திக்ர் என 3 நாளைக்கு
 15 துஆ & திக்ர் மனனம்)_

பொதுவான வகுப்புகள்

1. Career Counselling (என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?)
2. Relationship Development (உறவுகளை பேணுதல்)
3. Drug Addiction (போதை தடுப்பு விழிப்புணா்வு
4. Social Media (சமூக வலைதள பயன்பாடு)
5. Goal Setting (இலக்குகளை தீா்மானித்தல்)
6. Stress Management (மன அழுத்த மேலாண்மை)

_________

(தினமும் காலை 6:45 TO 7:30 - Exercise வகுப்புகள்)

: SMI கோடைகால பயிற்சி வகுப்புகள் அமைப்பு

முதல் நாள் - 1 வகுப்பு 

இரண்டாம் நாள் - 8 வகுப்புகள்
 (1 Exercise + 5 வகுப்புகள் + 1 மனன வகுப்பு + 1 தொழுகை Pratical)

மூன்றாம் நாள் - 8 வகுப்புகள் (1 Exercise + 6 வகுப்புகள் + 1 மனன வகுப்பு)

நான்காம் நாள் - 5 வகுப்புகள் (1 Exercise + 1 வகுப்பு + 2 கழக வகுப்புகள் + 1 மனன வகுப்பு)

__________

இஸ்லாமிய வகுப்புகள் - 5
பொதுவான வகுப்புகள் - 6
மனன வகுப்புகள் - 3
தொழுகை Pratical வகுப்பு - 1
அரசியல் & சமூக அமா்வுகள் - 2 
Exercise - 3
கழக வகுப்புகள் - 2
________
மொத்த வகுப்புகள் - 22

வகுப்புகள் அல்லாமல்...
மாணவ அறிமுகம் (முதல் நாள்)
திரையிடல் (தினமும் இரவு)
Feedback (இறுதி நாள்)

சமூகநிதி மாணவர் இயக்கம், இராமநாதபுரம் மண்டலம் சார்பில் மே 23 முதல் 26 வரை இந்த கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்த தலைமையின் சார்பில் மிகுந்த பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பொருப்பு மாவட்டத்தில் 10 ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் மட்டுமே அனுமதி 

குறிப்பாக 8,9 படிக்கும் மாணவர்கள் 
 அனுமதி இல்லை 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் 
சமூகநீதி மாணவர் இயக்கம்
Er. A.அப்துல் வாஜித் BE.,MBA.,
SMI இராமநாதபுரம் மண்டல செயலாளர் 

1. S.பிஸ்மில்லாஹ் கான்
மாவட்ட செயலாளர்
இராமநாதபுரம் மத்திய மாவட்டம் 

2. M.முகம்மது ஆசிர் ரஹ்மான்
மாவட்ட பொருளாளர்
இராமநாதபுரம் மத்திய மாவட்டம்

3. S.அயூப் கான்
மாவட்ட‌ துனைச் செயலாளர்
இராமநாதபுரம் மத்திய மாவட்டம்

4. M.முகம்மது ஒசாமா
மாவட்ட‌ துனைச் செயலாளர்
இராமநாதபுரம் மத்திய மாவட்டம்

5. S.முகம்மது இர்ஃபான் அலி
மாவட்ட‌ துனைச் செயலாளர்
இராமநாதபுரம் மத்திய மாவட்டம்

தொடர்பு....
 80722 76765
944-322-7380
948-854-4476

இதயங்களை இணைக்கும் இனிய சந்திப்பு - ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இதயங்களை இணைக்கும் இனிய சந்திப்பு

https://www.facebook.com/share/p/kqkDgreHnb1G5xMw/?mibextid=oFDknk

ஏக இறைவனின் திருப்பெயரால்...

🔷 மே 17 , வெள்ளிக்கிழமை அன்று ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - நியூ செனையா கிளை நடத்திய இதயங்களை இணைக்கும் இனிய சந்திப்பு நிகழ்ச்சி எக்ஸிட் 18 ஏசியன் சூப்பர் மார்க்கெட் அருகில் உள்ள இஸ்திராஹ்வில் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

🔷 இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் மெளலவி அபுஹுரைரா அவர்கள் தலைமை தாங்க மண்டல & கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

🔷 நீச்சல் குள குளியலுடன் ஆரம்பித்த நிகழ்ச்சி மௌலவி முஹம்மத் அவர்கள் இஸ்லாத்தில் மரணம் என்ற தலைப்பில் ஜும்மா உரையாற்றினார். அப்போது உறங்கும் முன் அல்லாஹும்ம பிஸ்மிக்க என்று தொடங்கும் துவாவை ஓதுவது போல், தூங்கி எழுவதே மிகப்பெரிய சந்தோஷம் காரணம் அது சிறு மரணத்தின் மீள்தலாக உள்ளது ஆகவே அதற்கான துஆவை அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(B]ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர் தவறாமல் ஓத வேண்டும் என்று கூறி தன்னுடைய ஜும்ஆ குத்பா உரையை நிறைவு செய்ய , நியூ செனையா கிளைத் தலைவர் மங்களக்குடி அபுஹுரைரா அவர்கள் ஜும்ஆ தொழுகையை நடத்தினார்கள்.

▪️ ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து சிறுவர் முஹம்மது ஹிஸாம் அவர்கள் இறைவசனம் ஓத , கிளை துணை தலைவர் முத்துப்பேட்டை சகாப்தீன் அவர்கள் வரவேற்புரையாற்ற ,  மண்டல துணைத்தலைவர் மௌலவி இப்ராஹிம் அன்வாரி அவர்கள் சொற்பொழிவு ஆற்றும் போது, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மார்க்க பணி ஆற்றுவதற்கு முன்பு சமூக பொதுசேவை ஆற்றி இருக்கிறார்கள், அது போல நாமும் சமூக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தலோடு தன்னுடைய  உரையை நிறைவு செய்தார்கள்..

🔹தொடர்ந்து கேள்வி பதில் போட்டி மார்க்க சமுதாய மற்றும் பொது அறிவு சம்பந்தமான கேள்வி பதில் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வை மண்டல IWF செயலாளர் O.M.ரஹ்மத்துல்லா அவர்கள் சிறப்பாக ஒருங்கிணத்தார்.

🔷 மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஆண்கள் , பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்  
▪️இசை நாற்காலி (மியூசிகல் சேர்) , 
▪️அதிஷ்டம் அழைக்கிறது (லக்கி கார்னர்) 
▪️ தொட்டிக்குள் பந்து
▪️ பலூன் உடைத்தல் 
▪️பானை உடைத்தல்
போன்ற போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

🔹இவ்விளையாட்டு போட்டிகளை மெளலவி அபுஹுரைரா மற்றும் மண்டல துணை செயலாளர் அரசை ஆஸிக் இக்பால் ஆகியோரின் தலைமையில் கிளை மற்றும் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

🔷 மேலும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்ப பயிற்சியை  சுலைமானியா கிளை செயலாளர் மற்றும் சிலம்ப பயிற்சியாளரான சகோ.அபுதாலிஃப் அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். 

🔷 அதனைத் தொடர்ந்து மஃரிப் தொழுகைக்குப் பிறகு மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் இந்தியாவில் தற்போது நிலவி வரும் மதரீதியான தேர்தல் பிரச்சாரம் முஸ்லிம்களை தனிமைப்படுத்த பாசிசவாதிகள் மேற்கொள்ளும் தவறான பரப்புரைகள் எடுத்து கூறி அதனை மனிதநேயமிக்க சமுதாய சேவையின் மூலமாக தான் உடைத்தெறிய வேண்டும் அப்பணியை தான் தமுமுகவும் அதன் வெளிநாட்டு பிரிவான இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரமும் செய்து வருகிறது என்பதை எடுத்து கூறி இப்பணியில் தாங்களும் இணைந்து சமூக சேவையாற்ற முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

🔹 மேலும் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை(TMMP) யின் ரியாத் மத்திய மண்டல பொறுப்புதாரர்களாக 5 சகோதரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

🔷 தொடர்ச்சியாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சகோதரர்கள் சகோதரிகள் மற்றும் சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது , மண்டல இணை செயலாளர் ஆரூர் நிசார் அலி அவர்கள் நன்றியுரையாற்ற துவாவுடன்  நிகழச்சி இனிதே நிறைவடைந்தது.

🔷 இந்நிகழ்ச்சியில் தொப்புள் கொடி உறவுகள், சமுதாய சொந்தங்கள் அமைப்பின் இதயங்கள் அனைவரும்  குடும்பத்துடன் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்ததால், இதயங்களை இணைக்கும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், இதில் கலந்துகொண்ட மக்களின் இதயங்களை இனிப்பாகிய நிகழ்ச்சியாக இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.

🔷 இந்நிகழ்ச்சிக்காக களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும் & சகோதரிகளுக்கும் , உணவு ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கும் , வாகன ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும் , பொருளாதார பங்களிப்பு வழங்கிய சகோதரர்களுக்கும் , ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும் , மண்டல, கிளை நிர்வாகிகளுக்கும் , செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் , நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நியூ செனையா கிளை சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

🔷 உங்கள் அனைவருடைய உழைப்பிற்கும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் நற்கூலி வழங்குவானாக...

என்றென்றும் சமுதாய பணியில் :::

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ( IWF )
நியூ செனையா கிளை
மத்திய மண்டலம் 
ரியாத் - சவூதி அரேபியா



Understanding Continuous Improvement: தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

  1. Understanding Continuous Improvement: Begin by defining what continuous improvement means and its significance in organizational success. Explain the principles behind it, such as Kaizen (continuous improvement) and Lean methodologies.

  2. Creating Awareness: Educate employees about the importance of continuous improvement for both personal and organizational growth. Highlight success stories or case studies where continuous improvement initiatives led to tangible benefits.

  3. Problem-Solving Techniques: Equip employees with various problem-solving tools and techniques, such as root cause analysis, fishbone diagrams, and 5 Whys, to identify and address issues effectively.

  4. Encouraging Innovation: Foster a culture that encourages creativity and innovation. Teach employees how to generate and implement innovative ideas to improve processes, products, or services continually.

  5. Empowering Employees: Empower employees to take ownership of improvement opportunities within their areas of responsibility. Encourage them to voice their ideas, suggestions, and concerns openly.

  6. Setting Goals and Metrics: Establish clear, measurable goals for improvement initiatives and track progress regularly. Define key performance indicators (KPIs) to monitor the impact of continuous improvement efforts.

  7. Providing Training and Resources: Offer training sessions, workshops, or online courses on topics related to continuous improvement, such as problem-solving, teamwork, and change management. Provide access to relevant resources and tools to support employees in their improvement efforts.

  8. Celebrating Successes: Recognize and celebrate achievements and milestones resulting from continuous improvement initiatives. Acknowledge the efforts of individuals and teams involved and share success stories to inspire others.

  9. Continuous Learning: Emphasize the importance of lifelong learning and personal development. Encourage employees to seek out opportunities for learning and self-improvement, both within and outside the organization.

  10. Leadership Support: Ensure that leaders within the organization actively support and participate in continuous improvement initiatives. Leadership buy-in is crucial for fostering a culture of continuous improvement from the top down.

  11. Feedback and Reflection: Promote a culture of feedback and reflection, where employees regularly review past experiences, learn from mistakes, and identify areas for improvement.

Overall, continuous improvement mindset training aims to cultivate a culture where every employee is committed to making incremental improvements on a daily basis, leading to enhanced efficiency, quality, and overall performance.

தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வது: தொடர்ச்சியான முன்னேற்றம் என்றால் என்ன மற்றும் நிறுவன வெற்றியில் அதன் முக்கியத்துவத்தை வரையறுப்பதன் மூலம் தொடங்கவும். Kaizen (தொடர்ச்சியான முன்னேற்றம்) மற்றும் லீன் முறைகள் போன்ற அதன் பின்னணியில் உள்ள கொள்கைகளை விளக்குங்கள்.

விழிப்புணர்வை உருவாக்குதல்: தனிப்பட்ட மற்றும் நிறுவன வளர்ச்சிக்கான தொடர்ச்சியான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஊழியர்களுக்குக் கற்பித்தல். தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகள் உறுதியான பலன்களுக்கு வழிவகுத்த வெற்றிக் கதைகள் அல்லது வழக்கு ஆய்வுகளை முன்னிலைப்படுத்தவும். சிக்கலைத் தீர்க்கும் நுட்பங்கள்: சிக்கல்களைத் திறம்படக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க, மூல காரண பகுப்பாய்வு, மீன் எலும்பு வரைபடங்கள் மற்றும் 5 ஏன் போன்ற பல்வேறு சிக்கல் தீர்க்கும் கருவிகள் மற்றும் நுட்பங்களுடன் பணியாளர்களைச் சித்தப்படுத்துங்கள். புதுமைகளை ஊக்குவித்தல்: படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தை வளர்க்கவும். செயல்முறைகள், தயாரிப்புகள் அல்லது சேவைகளை தொடர்ந்து மேம்படுத்த புதுமையான யோசனைகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் செயல்படுத்துவது என்பதை ஊழியர்களுக்குக் கற்பிக்கவும். பணியாளர்களுக்கு அதிகாரமளித்தல்: பணியாளர்கள் தங்கள் பொறுப்புப் பகுதிகளுக்குள் முன்னேற்ற வாய்ப்புகளை உரிமையாக்கிக் கொள்ள அதிகாரம் அளித்தல். அவர்களின் யோசனைகள், பரிந்துரைகள் மற்றும் கவலைகளை வெளிப்படையாகக் கூற அவர்களை ஊக்குவிக்கவும். இலக்குகள் மற்றும் அளவீடுகளை அமைத்தல்: முன்னேற்ற முன்முயற்சிகளுக்கு தெளிவான, அளவிடக்கூடிய இலக்குகளை அமைத்து, தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும். தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகளின் தாக்கத்தை கண்காணிக்க முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை (KPIs) வரையறுக்கவும். பயிற்சி மற்றும் வளங்களை வழங்குதல்: சிக்கலைத் தீர்ப்பது, குழுப்பணி மற்றும் மாற்ற மேலாண்மை போன்ற தொடர்ச்சியான முன்னேற்றம் தொடர்பான தலைப்புகளில் பயிற்சி அமர்வுகள், பட்டறைகள் அல்லது ஆன்லைன் படிப்புகளை வழங்குதல். ஊழியர்களின் முன்னேற்ற முயற்சிகளுக்கு ஆதரவாக தொடர்புடைய ஆதாரங்கள் மற்றும் கருவிகளுக்கான அணுகலை வழங்கவும். வெற்றிகளைக் கொண்டாடுதல்: தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகளின் விளைவாக சாதனைகள் மற்றும் மைல்கற்களை அங்கீகரித்து கொண்டாடுங்கள். சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் குழுக்களின் முயற்சிகளை அங்கீகரித்து, மற்றவர்களை ஊக்குவிக்க வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ச்சியான கற்றல்: வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள். நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கற்றல் மற்றும் சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைத் தேட ஊழியர்களை ஊக்குவிக்கவும். தலைமைத்துவ ஆதரவு: நிறுவனத்தில் உள்ள தலைவர்கள் தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகளில் தீவிரமாக ஆதரிப்பதையும் பங்கேற்பதையும் உறுதிசெய்யவும். மேலிருந்து கீழாக தொடர்ச்சியான முன்னேற்றத்தின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு தலைமைத்துவம் வாங்குதல் முக்கியமானது. கருத்து மற்றும் பிரதிபலிப்பு: கருத்து மற்றும் பிரதிபலிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், ஊழியர்கள் கடந்த கால அனுபவங்களை தவறாமல் மதிப்பாய்வு செய்யவும், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் மற்றும் முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காணவும். ஒட்டுமொத்தமாக, தொடர்ச்சியான முன்னேற்ற மனப்பான்மை பயிற்சியானது, ஒவ்வொரு பணியாளரும் தினசரி அடிப்படையில் அதிகரிக்கும் மேம்பாடுகளைச் செய்ய உறுதிபூண்டுள்ள கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது மேம்பட்ட செயல்திறன், தரம் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு வழிவகுக்கும்.