இதயங்களை இணைக்கும் இனிய சந்திப்பு
https://www.facebook.com/share/p/kqkDgreHnb1G5xMw/?mibextid=oFDknk
ஏக இறைவனின் திருப்பெயரால்...
🔷 மே 17 , வெள்ளிக்கிழமை அன்று ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - நியூ செனையா கிளை நடத்திய இதயங்களை இணைக்கும் இனிய சந்திப்பு நிகழ்ச்சி எக்ஸிட் 18 ஏசியன் சூப்பர் மார்க்கெட் அருகில் உள்ள இஸ்திராஹ்வில் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
🔷 இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் மெளலவி அபுஹுரைரா அவர்கள் தலைமை தாங்க மண்டல & கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
🔷 நீச்சல் குள குளியலுடன் ஆரம்பித்த நிகழ்ச்சி மௌலவி முஹம்மத் அவர்கள் இஸ்லாத்தில் மரணம் என்ற தலைப்பில் ஜும்மா உரையாற்றினார். அப்போது உறங்கும் முன் அல்லாஹும்ம பிஸ்மிக்க என்று தொடங்கும் துவாவை ஓதுவது போல், தூங்கி எழுவதே மிகப்பெரிய சந்தோஷம் காரணம் அது சிறு மரணத்தின் மீள்தலாக உள்ளது ஆகவே அதற்கான துஆவை அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(B]ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர் தவறாமல் ஓத வேண்டும் என்று கூறி தன்னுடைய ஜும்ஆ குத்பா உரையை நிறைவு செய்ய , நியூ செனையா கிளைத் தலைவர் மங்களக்குடி அபுஹுரைரா அவர்கள் ஜும்ஆ தொழுகையை நடத்தினார்கள்.
▪️ ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து சிறுவர் முஹம்மது ஹிஸாம் அவர்கள் இறைவசனம் ஓத , கிளை துணை தலைவர் முத்துப்பேட்டை சகாப்தீன் அவர்கள் வரவேற்புரையாற்ற , மண்டல துணைத்தலைவர் மௌலவி இப்ராஹிம் அன்வாரி அவர்கள் சொற்பொழிவு ஆற்றும் போது, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மார்க்க பணி ஆற்றுவதற்கு முன்பு சமூக பொதுசேவை ஆற்றி இருக்கிறார்கள், அது போல நாமும் சமூக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தலோடு தன்னுடைய உரையை நிறைவு செய்தார்கள்..
🔹தொடர்ந்து கேள்வி பதில் போட்டி மார்க்க சமுதாய மற்றும் பொது அறிவு சம்பந்தமான கேள்வி பதில் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வை மண்டல IWF செயலாளர் O.M.ரஹ்மத்துல்லா அவர்கள் சிறப்பாக ஒருங்கிணத்தார்.
🔷 மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஆண்கள் , பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
▪️இசை நாற்காலி (மியூசிகல் சேர்) ,
▪️அதிஷ்டம் அழைக்கிறது (லக்கி கார்னர்)
▪️ தொட்டிக்குள் பந்து
▪️ பலூன் உடைத்தல்
▪️பானை உடைத்தல்
போன்ற போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
🔹இவ்விளையாட்டு போட்டிகளை மெளலவி அபுஹுரைரா மற்றும் மண்டல துணை செயலாளர் அரசை ஆஸிக் இக்பால் ஆகியோரின் தலைமையில் கிளை மற்றும் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
🔷 மேலும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்ப பயிற்சியை சுலைமானியா கிளை செயலாளர் மற்றும் சிலம்ப பயிற்சியாளரான சகோ.அபுதாலிஃப் அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.
🔷 அதனைத் தொடர்ந்து மஃரிப் தொழுகைக்குப் பிறகு மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் இந்தியாவில் தற்போது நிலவி வரும் மதரீதியான தேர்தல் பிரச்சாரம் முஸ்லிம்களை தனிமைப்படுத்த பாசிசவாதிகள் மேற்கொள்ளும் தவறான பரப்புரைகள் எடுத்து கூறி அதனை மனிதநேயமிக்க சமுதாய சேவையின் மூலமாக தான் உடைத்தெறிய வேண்டும் அப்பணியை தான் தமுமுகவும் அதன் வெளிநாட்டு பிரிவான இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரமும் செய்து வருகிறது என்பதை எடுத்து கூறி இப்பணியில் தாங்களும் இணைந்து சமூக சேவையாற்ற முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
🔹 மேலும் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை(TMMP) யின் ரியாத் மத்திய மண்டல பொறுப்புதாரர்களாக 5 சகோதரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
🔷 தொடர்ச்சியாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சகோதரர்கள் சகோதரிகள் மற்றும் சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது , மண்டல இணை செயலாளர் ஆரூர் நிசார் அலி அவர்கள் நன்றியுரையாற்ற துவாவுடன் நிகழச்சி இனிதே நிறைவடைந்தது.
🔷 இந்நிகழ்ச்சியில் தொப்புள் கொடி உறவுகள், சமுதாய சொந்தங்கள் அமைப்பின் இதயங்கள் அனைவரும் குடும்பத்துடன் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்ததால், இதயங்களை இணைக்கும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், இதில் கலந்துகொண்ட மக்களின் இதயங்களை இனிப்பாகிய நிகழ்ச்சியாக இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.
🔷 இந்நிகழ்ச்சிக்காக களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும் & சகோதரிகளுக்கும் , உணவு ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கும் , வாகன ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும் , பொருளாதார பங்களிப்பு வழங்கிய சகோதரர்களுக்கும் , ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும் , மண்டல, கிளை நிர்வாகிகளுக்கும் , செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் , நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நியூ செனையா கிளை சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
🔷 உங்கள் அனைவருடைய உழைப்பிற்கும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் நற்கூலி வழங்குவானாக...
என்றென்றும் சமுதாய பணியில் :::
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ( IWF )
நியூ செனையா கிளை
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா
No comments:
Post a Comment