பேராசிரியர் பிரச்சாரம் செய்யக்கூடிய 13 தொகுதிகளில் பாஜக நிற்ககூடிய தொகுதியில் பிரச்சாரம் செய்யாமல் திண்டுக்கல்லில் ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும் என பாடம் எடுக்கின்றனர்.
பாஜக நேரடியாக நிற்ககூடிய தொகுதியில் முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா? நாம் பிரச்சாரம் செய்து தான் இஸ்லாமியர்களின் வாக்குகள் பாஜகவிற்கு செல்லாமல் தடுக்க முடியுமா? ஒரு Duplicate muslim கூட பாஜக வாடையைக்கூட நுகரமாட்டான் என்பதை அறியாமல் தேசிய அரசியல் நடத்துவது வேடிக்கை.
திண்டுக்கல்லில் ஏன் பிரச்சாரம் செய்கீறிர்கள் என கேட்டுக்கொண்டே..
இராமநாதபுரத்தில் நாவாஸ்கனிக்கு எதிராக தீவீர பிரச்சாரம் செய்துவருவதை இலாபகமாக மறைக்கின்றனர்.
நீங்களாவது இனி தான் வெற்றிபெற வேண்டும்?நவாஸ் கனி சிட்டிங் M.P..இது எப்பேற்பட்ட ஒற்றுமை வாதம்
அரசியலில் எனக்கு எதிராக களமாடக்கூடாது அங்க நிற்ககூடாது..பேசக்கூடாது என புலம்பலெல்லாம் அரசியல் Unfitக்கு சான்றாகிவிடும்.எது நடந்தாலும் வீயுகம் வகுத்து முன்னேறி செல்வது தான் அரசியல் சிறப்பு..இரண்டு முஸ்லீம் வேட்பாளர்கள் நேரடியாக ஒரே தொகுதியில் போட்டியிடுவதை மட்டுமே தவிர்க்க இயலும் என்பதே நடைமுறையில் உண்மை..அதுவும் முடிந்த வரை..
தற்போதைய தீவிர பாஜக ஆதரவாளரும் அன்றைய குக்கர் தலைவருடன் இணைந்து தீவிர பிரச்சாரம் மமக நின்ற மணப்பாறை பாபநாசம் தொகுதியில் நடைபெற்றது.அன்றைய சூழலில் எங்கேயாவது இது நியாயமா?தர்மமானு
மமகவின் ஒற்றுமை புலம்பல்கள் பதிவுகள் இருக்கிறதா என்பதை நிருபிக்க முடியுமா? ஏனேனில் அரசியல் என்னவென்று நன்கு அறிந்தே வைத்திருந்தோம்..
இலவச ஆதரவு என இந்தியா நலன் கருதியும் சமூகத்தின் நாடிதுடிப்பை அறிந்தும் எடுத்த முடிவை கிண்டல் செய்து பிரச்சாரம் செய்கின்றனர்.
தற்போது கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணிக்கு எந்த நிபந்தணையுமின்றி கேட்காமாலே இலவச ஆதரவு கொடுத்திருக்கின்றனர் நேற்று.பாராட்டுகிறோம்.ஆதரவுக்கு காரணம் இச்சூழலில் காங்கிரஸுக்கு ஆதரவு கொடுப்பதே இந்திய நலனுக்கு நன்மை என தெரிவித்திருக்கின்றனர்.
கேரளா காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது நன்மை..தமிழ்நாட்டு காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது இந்தியாவுக்கு கேடு..எவ்விதமான அரசியல் புரிதல்.தற்போது எங்கே சென்றது இலவச ஆதரவு வாதம்..
நிபந்தணையின்றி.
அரசியல் கணக்குகளை கொண்டு வெற்றியை தேடாமல் வெறும் உணர்ச்சிகளை கொண்டு தேர்தலை சந்தித்தால் விளைவு நாம் எதிர்பார்த்த முறையில் அமையாது என்ற ஆலோசணையோடு..
யாருடைய முடிவு மக்களின் உணர்வோடு கலந்த முடிவு..யாருடைய முடிவு
சமூகத்திடமிருந்து அந்நியப்பட்ட முடிவு என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டத்தான் போகின்றது..அன்றைய தினம் நாம் அடுத்த ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்போம்..
MP Nazheer Trichy