Tuesday, 2 April 2024

நோன்பில் மூன்று படித்தரங்கள் உள்ளள :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இப்னு குதாமாஹ் அல்மக்திஸீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

நோன்பில் மூன்று படித்தரங்கள் உள்ளள :

1. பொதுவான நோன்பு
2. குறிப்பான நோன்பு
3. குறிப்பிலும் குறிப்பான நோன்பு 

• பொதுவான நோன்பை பொறுத்தவரையில்!

அது வயிறு மற்றும் மர்மஸ்தானததை இச்சையை நிறைவேற்றுவதிலிருந்து தடுத்துக் கொள்வதாகும்.

• குறிப்பான நோன்பை பொறுத்தவரையில்!

அது பார்த்தல், நாவு, கை, கால், செவி, பார்வை மற்றும் ஏனைய (அனைத்து) உறுப்புகளையும் பாவங்களிலிருந்து தடுத்துக் கொள்வதாகும்.

• குறிப்பிலும் குறிப்பான நோன்பை பொறுத்தவரையில்!

அது அற்பமான நோக்கங்கள் மற்றும் அல்லாஹ்வை விட்டும் தூரப்படுத்துகின்ற சிந்தனைகளை விட்டும் உள்ளத்தை தடுத்துக் கொள்வதாகும். 

மேலும் அல்லாஹ்வையன்றி மற்ற அனைத்தைவிட்டும் முழுவதுமாக தடுத்துக் கொள்வதாகும்.

 📚 مُختَصَر مِنهاجِ القاصِدِين 1/44

சிறந்த தர்மம் எது?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறந்த தர்மம் எது? 

'தர்மத்தில் சிறந்தது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது ரமலானில் செய்யும் தர்மம் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி

Monday, 1 April 2024

பொது மக்கள் நலன் கருதி ஒரு முக்கிய அறிவிப்பு !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பொது  மக்கள்  நலன்  கருதி  ஒரு  முக்கிய  அறிவிப்பு !

நீங்கள் வாக்குச்சாவடி சென்று , அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால் , உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி , வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ் "சேலஞ்ச் ஓட்டு" கேட்டு வாக்கினை பதிவு செய்யுங்கள். உங்கள் வாக்கினை உங்களுக்கு முன்னதாக வேறொருவர் பதிவு செய்திருந்தால் , "டெண்டர் ஓட்டு" கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். ஒரு வாக்குச் சாவடியில் 14% க்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால் , அங்கு மறு வாக்குப் பதிவு நடத்தப்படும். வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்றிட இத்தகவலை அதிகபட்ச வாட்ஸ் அப் குழுக்களுக்கும் , நண்பர்களுக்கும் சமுதாய  நலன் கருதி இத்தகவலை மறவாமல் பகிர்ந்திடுங்கள்.

தோழர் ஆர்.சச்சிதானந்தம் & நெல்லை முபாரக் - வெல்வது யார்.?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


தோழர் ஆர்.சச்சிதானந்தம் & நெல்லை முபாரக் - வெல்வது யார்.?

பத்தாண்டுக்கால மத்திய பாஜகவின் உணவு அரசியல், உடை அரசியல், கல்வி அரசியல், பாரபட்ச அரசியல் என சிறுபான்மை சமூகத்தை சிறுகசிறுக சிதைக்கும் செயல்பாட்டில் முழு ஒத்துழைப்பு வழங்கியது மாநிலத்தில் ஆண்ட அதிமுக அரசு.

தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் பற்றிய வெறுப்பு பேச்சினால் தான் வெளியே வந்தார்களே தவிர, பாஜகவின் கொள்கையை கண்டித்து வரவில்லை.

அண்ணாமலை என்ற நபரின் மீதுள்ள வெறுப்பினால் பாஜகவில் இருந்த இரத்ததில் ஊறி போன சங்பரிவார சிந்தனை தலைவர்கள் பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இவர்கள் எல்லாம் கட்சிதான் மாறியுள்ளனரே தவிர, கொள்கை மாறவில்லை. 

காங்கிரஸிலும், பாஜகவிலும் இல்லாமல் தனித்து விடப்பட்ட அதிமுக குறைந்த 5 சீட்டு வென்றாலும் (வாய்ப்பேயில்லை) நாளை பாஜக ஆட்சி அமைக்க இந்த 5 சீட்டுடன் 'மோடி எங்கள் டாடி' என கோஷமிட்டவாறு பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பார்கள்.

இதுவெல்லாம் இஸ்லாமிய சமூகம் நன்கு அறிந்ததே

முஸ்லிம்கள் ஓட்டு பொதுவாகவே அதிமுகவிற்கு விழவே விழாது, 

இதில் CAA NRC NPR சட்டம் இயற்ற காரணமான அதிமுகவை முஸ்லிம்கள் ஒரு போதும் ஆதரிக்கமாட்டார்கள்..

கூட்டணி என்ற பெயரில் தோற்கும் தொகுதியை SDPI க்கு வழங்கி, அதுவும் அதிமுகவின் சின்னத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முபாரக்கை நிறுத்தியுள்ளது.

ஒருவேளை நெல்லை முபாரக் வென்றால் அவர் sdpi எம்பி அல்ல, அதிமுக எம்பி... அதிமுகவின் கொறடாவின் உத்திரவுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். 

தனித்து sdpi நின்றால் இஸ்லாமிய ஓட்டுகள் மொத்தமாக கிடைத்திருக்கும்.

எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிட்டு பாஜக ஆதரவு நிலை எடுக்கும் அதிமுகவை நம்பவே நம்பாது இஸ்லாமிய சமூகம்.

Spdi கட்சியும் நெல்லை முபாரக்கும் எப்படி குட்டிகரணம் அடித்தாலும், இஸ்லாமிய மக்களின் ஓட்டை வாங்கிட முடியாது. 

நேற்று வரை 'பாசிசத்தை எதிர்ப்போம்' என்று கோஷமிட்ட sdpi கட்சி.. 

உண்மையாக பாசித்தை நேரடியாகவும், கொள்கைரீதியாகவும் எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியை எதிர்த்து நிற்கிறது.

நாளைக்கு திமுகவும் பாஜக ஆதரவு நிலை எடுக்கலாம் என்று sdpi கருதினால் திமுக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதியை அதிமுகவிடம் கேட்டு வாங்கி நின்றிருக்க வேண்டும்..

பாசிச எதிர்ப்பு கட்சியான இடது சாரி கட்சிகள் நிற்கும் தொகுதியை sdpi தேர்ந்தெடுத்திருக்க கூடாது.

ஆனால் sdpi க்கு நோக்கம் பாசிச எதிர்ப்பு அல்ல, ஒரே ஒரு MP யாவது வேண்டும் அதற்கு எந்த நிலையில் கீழறங்கி போகலாம் என்ற பேராசை தான்.. 

இந்த பேராசைக்கு இஸ்லாமிய சமுதாயம் இணங்காது.

சிறுபாண்மையினரின் காவலர் எடப்பாடியார், அம்மா வழியில் உயிரை அர்ப்பணம் செய்வேன் என உணர்ச்சி பொங்க முபாரக் பேசினாலும்..

அதிமுக கட்சியினர் உட்பட மாற்று மதமக்களின் ஓட்டு கூட திண்டுக்கல் மண்ணின் மைந்தன் இல்லை என்பதால் நெல்லை முபாரக்கிற்கு கிடைக்காது.

எனவே நெல்லை முபாரக்கிற்கு தோல்வி உறுதி...

* திண்டுக்கலில் நன்மதிப்போடு வலம் வரும் தோழர் ஆர்.சச்சிதானந்தம் 37 வருட முழு நேர அரசியல் வாழ்க்கை.

26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக 1996 - 2006 வரை இரண்டு முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்.

திண்டுக்கல் என்றாலே கம்னியூஸ்ட் கட்சிக்கு என தனி செல்வாக்கு உண்டு. 

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர்களும் ஆர்.சச்சிதானந்தம் பக்கபலமாக இருப்பவர்கள்.

பாசிசத்தை கொள்கை ரீதியாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் திண்டுக்கல் வேட்பாளர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் 

குறைந்த பட்சம் 5 லட்சத்திற்கு அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவார்.

2 வது இடம் பாமக..
3 வது இடம் நெல்லை முபாரக்...

✍ தக்கலை ஆட்டோ கபீர்

உங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள் Cஉங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள் உரிமை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள்

உரிமை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நம்மை காப்பாற்ற மேலும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். அந்த ஐந்தாம் வருட முடிவில் ஒரு வேளை நமக்கான ஓட்டு உரிமையை நாம் இழந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

அரசியல் சாணக்கியர்கள், வரலாற்று ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அத்துனை பேர் அறிவு கூற்றின்படி சொல்வதை நாம் கேற்காமல் உள்ளூர் கோடாங்கிகளின் பேச்சை கேட்டு உரிமை இழந்து உணர்வை இழக்க வேண்டாம். அது உங்கள் உரிமை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நம்மை காப்பாற்ற மேலும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். அந்த ஐந்தாம் வருட முடிவில் ஒரு வேளை நமக்கான ஓட்டு உரிமையை நாம் இழந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

அரசியல் சாணக்கியர்கள், வரலாற்று ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அத்துனை பேர் அறிவு கூற்றின்படி சொல்வதை நாம் கேற்காமல் உள்ளூர் கோடாங்கிகளின் பேச்சை கேட்டு உரிமை இழந்து உணர்வை இழக்க வேண்டாம்.

#இறந்து_கிடந்த_உடல்_மீட்பு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#இறந்து_கிடந்த_உடல்_மீட்பு...

இராமநாதபுரம் மாவட்டம் காரேந்தன் ஊரைச் சேர்ந்த #பாண்டி வயது 45 என்பவர்  இடையார் வலசை NH சாலையில்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்து
இரவு 11.30 மணிக்கு காவல்துறை உதவியிடன் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு
#தமுமுக_ஆம்புலன்ஸ் மூலம் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இறந்த உடலைக் கொண்டு  சேர்க்கப்பட்டது.

தகவல்...
தமுமுக மருத்துவ சேவை அணி,

இராமநாதபுரம் மத்திய மாவட்டம்.

Sunday, 31 March 2024

நபி (ஸல்) அவர்கள் பாராட்டிய நபித்தோழர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபி (ஸல்) அவர்கள் பாராட்டிய  நபித்தோழர்கள்

                                  (1)

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதி தூதராக அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவர்களை இறுதி தூதராக தேர்ந்தெடுத்ததற்கு முன்னரே அவர்களின் குணம், பழக்க வழக்கங்கள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டி கூறும் அளவிற்கு தான் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜாவே நபிகள் நாயகம் அவர்களுக்கு வியாபாரத்தில் இருந்த விசுவாசம், நியாயமான கட்டமைப்பு, வாக்குறுதியில் நேர்மை என அனைத்தும் பார்த்து தான் மணமுடித்து கொண்டார்கள். அதேப் போன்று நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்த பல நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். அந்த இனிமையான தருணங்களை பார்போம்..

உமர் (ரலி) கண்டு சைத்தான் விரண்டோடுதல்

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், தனது மனைவி மற்றும் மனைவியின் சகத் தோழிகள் சகஜமாக பேசி சிரித்துக் கொண்டிருக்க உமர் (ரலி) அவர்கள் முகமன் கூறி உள்ளே வர அனைத்து பெண்களும் அலறியபடி ஓடிவிட்டனர். உடனே உமர் (ரலி) அவர்கள் என்னவென்று கேட்க உங்களைப் பார்த்துதான் அனைவரும் பயந்தபடி ஓடிவிட்டனர். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நீர் ஒரு தெருவில் நடந்து வந்தால் சைத்தான் அடுத்த தெருவில் ஓடி விடுவான் என்று தனக்கு கொடுக்காத மரியாதையை உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்.

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள்.

உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

(என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே’ என்றார்கள். உமர் (ரலி), ‘எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண்கள், ‘ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும், அதிகக் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கிறீர்கள்’ என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
நூல் : புகாரி-3294 

அபூஉபைதா பின் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே!, நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-3744 

நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்த நம்பிக்கையாளர் அபூஉபைதா (ரலி)

நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், ‘நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்’ என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த ‘அமீன்’ என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
நூல் : புகாரி-3745 


தனியார் கல்விக் கூடங்களில் சேர்ந்து படிக்க - ஒர் அரிய வாய்ப்பு.,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தனியார் கல்விக் கூடங்களில் சேர்ந்து படிக்க    வசதியற்றவர்கள்...  
வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கும்...   

ஒர் அரிய வாய்ப்பு., 

தேவையுள்ளவர்கள் முயற்சிகள் செய்யலாம். 
அரசு உதவிகளையும் பெறலாம்.

அல்லாஹ் போதுமானவன்

Thursday, 28 March 2024

தியாகதுருகத்தில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

29.03.2024

தியாகதுருகத்தில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு...

தொழிலாளி குடும்பத்துக்கு அரசு வேலையும் நிவாரணமும் தமிழக அரசு அளிக்க வேண்டும்..

மனிதநேய மக்கள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோரிக்கை....


கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகமாக கூட்டமாக இருக்கும் இடத்தில் அபாயகரமாக தாறுமாறாக பேருந்தை ஓட்டி வந்ததன் விளைவாக...

 தியாகதுருகம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த சேட்டு என்கிற தொழிலாளி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார்...

இந்நிகழ்வுஅந்தப் பகுதியில் மிகுந்த பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது மிகுந்த ஏழ்மையான கறிக்கடை  தொழிலாளியான இவரது வருமானத்தை நம்பி அவர் குடும்பம் இருந்துள்ளது. மிகுந்த கஷ்டமான குடும்பம்...

குர்ஆனில் துஆக்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குர்ஆனில் துஆக்கள்
தொடர் 17

رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏ 

“இறைவா! 
கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”

அல்குர்ஆன் : 20:114

 رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏ 

“என் இறைவா! 
என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” 

அல்குர்ஆன் : 23:39

رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ

“என் இறைவனே! 
என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”.

அல்குர்ஆன் : 23:94