Monday, 18 March 2024

மனிதநேய மக்கள் கட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றி !!! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை !!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனிதநேய மக்கள் கட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றி !!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை !!!

மத்தியில் 5 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவித்து - பொருளாதாரத்தை சீரழித்து - மக்கள் விரோதப் போக்குகளைக் கடைப்பிடிக்கும் பாசிச பா.ஜ.க அரசையும், மாநில உரிமைகளை அடகு வைத்து ஊழலில் ஊறித் திளைக்கும் அ.தி.மு.க அரசையும் வீழ்த்துவது ஒன்றே 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒற்றை இலக்காகும். அதற்குத் தோள் கொடுத்து துணை நிற்கும் ஜனநாயக சக்திகளின் துணையுடன் இந்தக் கூட்டணி தேர்தல் களத்தைச் சந்திக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணிக்கும் ஜனநாயக சக்திகளில் சில அமைப்புகளுக்கு தேர்தல் களத்தில் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பதை ஏற்கனவே விளக்கி, அவர்களின் ஆதரவும் தொடர வேண்டும் என்று கோரியிருந்தேன். கடந்த 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதல் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கும் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் மற்ற நிர்வாகிகளும் அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து தங்கள் எண்ணங்களைத் தெரிவித்து, பாசிச பா.ஜ.க. ஆட்சியை விரட்டுவதற்கு தங்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க கூட்டணியில் குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட்டிருந்தும் இம்முறை எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணிக்குள் தொகுதிகள் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டதும், அதனை மனிதநேய மக்கள் கட்சியினர் ஏற்றுக்கொண்டு தி.மு.க கூட்டணிக்கு எந்தவித நிபந்தனை இன்றி ஆதரவளித்திருப்பதற்கு, மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோலவே, மேலும் பல அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் தேர்தலில் பேட்டியிடும் வாய்ப்பு அமையாத நிலையிலும் தங்கள் ஆதரவினைத் தெரிவித்து வருகிறார்கள்.

கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வரும் அரசியல் இயக்கங்களுக்கும் அமைப்பினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அடுத்தடுத்து வரக்கூடிய தேர்தல் வாய்ப்புகளில் அரசியல் இயக்கங்களுக்குரிய ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்து, தங்களின் பேராதரவுடன் நாற்பதுக்கு நாற்பது மக்களவை தொகுதிகளையும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதுடன், மக்கள் நலன் சார்ந்த உங்களின் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் என்றும் குரல் கொடுப்போம் என்ற உறுதியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

#DMK4TN #Tmmk #Mmk

இருப்பதைக் கொண்டு எவ்வாறு திருப்தி அடைவது?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இருப்பதைக் கொண்டு எவ்வாறு திருப்தி அடைவது?

இருப்பதை வைத்து திருப்தி அடைவது எப்படி என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர். உலகத்தில் நம்மை விட மேலான நிலையில் சிலர் இருப்பது போல் நம்மை விடத் தாழ்ந்த நிலையிலும் பலர் உள்ளனர். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நமது நிலையை ஒப்பு நோக்கிப் பார்த்தால் இருப்பதை வைத்து திருப்தி அடையும் மனநிலை நமக்கு வந்து விடும்.
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِى الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ مِمَّنْ فُضِّلَ عَلَيْهِ
உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 5670

சங்கரன்பந்தல் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஊர் இளைஞர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி எச்சரிக்கை:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சங்கரன்பந்தல் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஊர் இளைஞர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி எச்சரிக்கை:

அஸ்ஸலாமு அலைக்கும், 

இன்று இரவு தொழுகை முடிந்தவுடன் நிர்வாகத்தின் சார்பில் இமாம் அவர்கள் அறிவிப்பு செய்தார்கள். 

அதில் நமதூர் இளைஞர்கள் இரவு நேரத்தில் தரங்கம்பாடி, காரைக்கால், பூந்தோட்ட எரவாஞ்சேரி என பல ஊருக்கு மந்தி சாப்பிட என கூறி அதிவேகத்தில் (ரேஸ்) பைக்கில் சுற்றிதிரிகின்றனர் என்றும் அதை பெற்றோர்கள் கண்டித்து அவர்களை, பாதுகாக்க நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் இதை அறிந்து தங்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்பு விசயத்தில் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.

சமூக அக்கறையுடன் செயல்படும் சங்கரன்பந்தல் ஜாமீஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு .

🤝 சங்கரன்பந்தல் மஸ்ஜித் நிர்வாகத்திற்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்  #நான் 
தேரிழந்தூர் H.முகம்மது சைபுல்லா உஸ்தா


முஸ்லிம் பெண்கள் அதிகமாக நகை அணிந்து வெளியூர் நிகழ்ச்சிக்கு செல்வதை சில காலம் தவிர்க்கலாம் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம் பெண்கள் அதிகமாக நகை அணிந்து வெளியூர் நிகழ்ச்சிக்கு  செல்வதை சில காலம் தவிர்க்கலாம் !

வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வர இருக்கும் காரணத்தினால் தேர்தல் ஆணையம் ஐம்பதாயிரம் (50,000) ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் அது உங்கள் பணமாக இருப்பதற்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.

அதுமட்டுமின்றி கடந்த தேர்தலில் ஒரு சில முஸ்லிம் பெண்கள் நகை அணிந்து சென்று வெளியூர் நிகழ்ச்சிக்கு  செல்லும்போது  அவர்கள் பல இன்னல்களை சந்தித்து உள்ளார்கள். எனவே  இந்த தகவலை முஸ்லிம் சமுதாய மக்களிடையே அதிகமாக பகிர வேண்டும்.

50,000/ரூபாய்க்கு மேல்  தவிர்க்கமுடியாமல் பணம் எடுத்துக்கொண்டு சென்றால் அதற்கு உரிய ஆவணம் ( Bank passbook) வைத்துக்கொள்ளுங்கள். ஆபரண நகைகளை அதிகமாக அணிந்துகொண்டு வெளியூர் செல்லுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும்
அல்லாஹ் பாதுகாப்பானாக !

NO BJP

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது: எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்.

நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நாட்கள் வரப்போகின்றன.

கழுதையும் சென்றது.

கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது. 

கழுதை நரியிடம் சொன்னது: நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது.

அதற்கு நரி சொன்னது: சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம். 

கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது.

மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது! 

கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை  அறுத்துவிட்டது.

நரி சொன்னது: நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை  அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம். 

நரி கழுதையை மீண்டும் அழைத்து சென்றது.

இந்த முறை, சிங்கம் கழுதையைப் பிடித்து கொன்றது.

சிங்கம் நரியிடம் சொன்னது: பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப கழுதையை அழைத்து வந்துவிட்டாயே. போய் கழுதையின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா.
   
நரி கழுதையின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது; கழுதையின்  நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. 

சிங்கம் கோபமடைந்து கேட்டது: மூளை எங்கே? 

நரி பதிலளித்தது: அந்த கழுதைக்கு மூளை இல்லை அரசே. மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி மூன்றாம் முறை வந்திருக்குமா?

(மூன்றாவது முறையாக ஏமாறும் கழுதைகளாக நாம் இருக்கவேண்டாம் என்று எச்சரிப்பதற்காக பலநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பஞ்சதந்திரக் கதை இது)

சுட்டவடை 🚶 🚶 🚶

விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்பொழுது?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்பொழுது?

சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்?

இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.

ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1950

ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.

வெளிநாட்டு மாணவர்கள் தாக்குதல் - அவமானம் இந்தியாவுக்கு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வெளிநாட்டு மாணவர்கள் தாக்குதல்  - அவமானம் இந்தியாவுக்கு 


Sunday, 17 March 2024

டாக்டர் மன்மோகன்சிங் காலத்து தேர்தல் நிதி சட்டத்துக்கும்... மோடி காலத்து தேர்தல் நிதிப்பத்திர சட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகள் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

டாக்டர் மன்மோகன்சிங் காலத்து தேர்தல் நிதி சட்டத்துக்கும்...
மோடி காலத்து தேர்தல் நிதிப்பத்திர சட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகள் :

#மன்மோகன்சிங்கின்_கம்பெனிச்சட்டம்
■ஒரு நிறுவனம் முந்தைய 3 நிதியாண்டுகளில் சம்பாதித்த நிகர லாபத்தில், அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடை 7●5%க்கும் அதிகமாக இருக்கக்கூடாது.

■புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள்...தங்களின் முதல் 3 நிதியாண்டுகளுக்குள் அரசியல் பங்களிப்பையோ தேர்தல் நன்கொடை அளிப்பதையோ அச்சட்டம் தடைசெய்தது.

■அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க நினைக்கும் நிறுவனங்கள், முதலில் அதன் இயக்குநர் குழு கூட்டத்தில், நிதி வழங்குவது குறித்து அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

■நிறுவனங்கள் ஆண்டுதோறும், தாங்கள் அளித்துள்ள நிதி, எந்த கட்சிக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்ற தகவல்களையும் வெளியிட வேண்டும்.


#மோடியின்_தேர்தல்நிதிப்பத்திரச்சட்டம்:
■தேர்தல் நிதிப்பத்திரச்சட்டம் 2018 மூலம், Companies Act 2013ன் 7.5% சதவீத வரம்புடன் நிதி வழங்கும் முறை முற்றாக நீக்கப்பட்டது. ஆகவே... 215 கோடி இலாபம் காட்டிய கம்பெனி 1368 கோடி நிதி கொடுக்கிறது.

■ நிறுவனம் லாபகரமானதா... இல்லையா என்பதெல்லாம் தேர்தல் நிதிப்பத்திரம் வாங்கும்போது வங்கியில் சொல்லத் தேவையில்லை. ஆகவே... நஷ்டம் அடைந்த கம்பெனிகளும் தேர்தல் நிதி அள்ளி அள்ளி அளிக்கின்றன.

■ நிறுவனம் துவங்கி 3 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்கிற விதியும் தேர்தல் பத்திரம் வாங்க அவசியமில்லை. ஆகவே... புதிது புதிதாக துவங்கிய போலி (ஷெல்) நிறுவனங்கள் எல்லாம் தேர்தல் நிதி அளிக்கின்றன.

■தாங்கள் மூலம் நிதி வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்களையும் நிறுவனங்கள் வெளியிட வேண்டியதில்லை. ஏனென்றால்... வெளியிடும் நபர் மூலமாக ஷெல் கம்பெனிகள் யாருடையது... என மக்களுக்கு தெரிந்துவிடும்.

■ தேர்தல் நிதிப்பத்திரம் மூலமாக நன்கொடை அளிப்பவர்களது பெயர் வங்கிக்கு மட்டுமே தெரியும். இதை அந்த நிறுவனம் தன் இயக்குனர் குழு கூட்டத்தில்... நிதி நிலை அறிக்கையில் தெரிவிப்பதோ... நிறுவன மேலாண்மை உறுப்பினர்கள் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றுவதோ... தேவை இல்லை. எனவே, நிறுவனத்துக்கு வெளியே இருந்து...கட்சியின் கருப்புப்பணம் அந்த நிறுவனப்பெயரால் கட்சிக்கு வெள்ளையக்கப்பட்டு செல்லும் வாய்ப்புள்ளது.

■சும்மா ஒப்புக்கு இதன் பெயர் "தேர்தல் நிதிப்பத்திரம்" என்றாலும்... தேர்தல் காலத்தில் மட்டுமின்றி.... தேர்தல் எதுவுமே நடக்காத காலத்திலும் SBI வங்கிகளில் விற்கப்படும். ஆகவே... கட்சி வசூல் பாதிக்க கூடாது.

■ வருமான வரிச் சட்டம் 1961 - ன் படி, 
அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகள் குறித்து வருமானவரித்துறையினரிடமும், 
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951- ன் படி, 
ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் அரசியல் கட்சிகள் பெறும் நிதி குறித்த தரவுகளை தேர்தல் ஆணையத்திடமும், அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்ற... முந்தைய கால இந்திய  சட்ட விதிமுறை மோடியால்  திருத்தப்பட்டது. இதனால்... யாருக்கும் எந்த அச்சமும் இல்லாமல் கணம் கைமாற்றி விடப்பட்டுள்ளது.

எலெக்டோரல் பாண்டு சட்டத்திற்கு முன்னதாக..
பழைய சட்டத்தில்...  ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமாக பெறும் அனைத்து நன்கொடைகளையும் பொதுவில் வெளியிடவேண்டும் என்ற நடைமுறை இருந்தது. தற்போது... சுப்ரீம் கோர்ட்டு... மோடியின் தேர்தல் நிதிப்பத்திர சட்டத் திருத்தத்தை... அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பு கூறி... அச்சட்டத்திற்கு தடை போட்டுவிட்டதால்... கட்சிகள் பெற்ற நிதியை தேர்தல் ஆணையத்திடம் SBI கொடுத்து, அது பொதுவில் வெளியிடப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு இட்டுள்ளது.

முன்னதாக 2017 ஆம் ஆண்டு தேர்தல் நிதிப்பத்திரம் தொடர்பாக சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகும்போது... தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது. அதில், “தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படும் நன்கொடைகள் குறித்து அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29 Cல் திருத்தம் கொண்டுவரப்பட்டது பிற்போக்கு நடவடிக்கை” என மோடி அரசை சாடி யிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலர் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விதிவிலக்கு நிரந்தர விதிவிலக்கு, தற்காலிக விதிவிலக்கு என இரு வகைகளாக உள்ளன.
தற்காலிகமான விதிவிலக்குப் பெற்றவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பை விட்டு விட்டு வேறு மாதங்களில் நோன்பு நோற்று விட வேண்டும்.
நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள் வேறு மாதங்களில் கூட அதை நிறைவேற்றத் தேவையில்லை.

 1. தள்ளாத வயதினர் 

இவர்கள் நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர்காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர்காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள்.
இவர்கள் நோன்பை விட்டு விடலாம்.
ஆரோக்கியமான காலகட்டத்தில் அவர்கள் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடித்து வந்திருந்தால் தள்ளாத வயதில் நோன்பு நோற்காதிருந்தாலும் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான்.

صحيح البخاري
2839 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ هُوَ ابْنُ زَيْدٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزَاةٍ، فَقَالَ: «إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا، مَا سَلَكْنَا شِعْبًا وَلاَ وَادِيًا إِلَّا وَهُمْ مَعَنَا فِيهِ، حَبَسَهُمُ العُذْرُ»

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டோம். அப்போது நபியவர்கள், மதீனாவில் சிலர் உள்ளனர். உங்களின் கூலியில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களை (போருக்கு வரவிடாமல்) தடுத்து விட்டது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி 2839

அடியார்கள் விஷயத்தில் இறைவன் எவ்வளவு கருணையுடையவன் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. யாரேனும் முதுமையின் காரணமாக நோன்பை விட்டிருந்தால் அவர்களது நல்ல எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
முதுமை என்பதை வயது சம்பந்தப்பட்டதாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலர், எண்பது வயதிலும் திடகாத்திரமாக இருப்பார்கள். வேறு சிலர் அறுபது வயதிலேயே தளர்ந்து விடுவார்கள். முதுமையுடன் நோன்பு நோற்க இயலாத நிலையும் சேர்ந்தால் தான் அவர்களுக்கு விதிவிலக்கே தவிர குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் விதிவிலக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

 2. நோயாளிகள் 

நோயாளிகளிலும் இரண்டு வகையினர் உள்ளனர். கேன்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.
தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு, நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அல்குர்ஆன் 2:184

நோயுற்றவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளாமல் அல்லாஹ் வழங்கிய சலுகையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.
நோன்பு வைப்பதால் மரணம் வரும் அல்லது இருக்கின்ற நோய் அதிகரிக்கும் என்ற நிலையில் நோன்பு நோற்றால் அவர்களின் செயல் இறைவனிடம் நன்மையாகப் பதிவு செய்யப்படாது. அதிகப் பிரசங்கித் தனமாகத் தான் கருதப்படும்.
இது தான் உயர்ந்த நிலை என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லியிருப்பார்கள்.
பயணம் செய்வோர் வேறு மாதங்களிலும் நோற்கலாம் என்று கூறியது போல் நோயாளிகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.
தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும்.  எனவே இவர்கள் நோன்பை விட்டு விடலாம்.

 3. பயணிகள் 

பயணிகளுக்கும் அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான்.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அல்குர்ஆன் 2:184

இந்தச் சலுகை தற்காலிகமானது தான். ஏனெனில் பயணங்கள் சில நாட்களில் முடிந்து விடக் கூடிய ஒன்றாகும்.
பயணிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டது குறித்து விரிவான பல செய்திகள் உள்ளன. அவற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பயணிகள் என்றால் ரயிலிலோ, பேருந்திலோ சென்று கொண்டிருப்பவர் மட்டும் தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. இவர்களும் பயணிகள் தான் என்றாலும், இன்னும் பலரையும் பயணிகள் பட்டியலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சேர்த்துள்ளார்கள்.
ஒருவர் சொந்த ஊரிலேயே இருக்கிறார். நாளை காலை பத்து மணிக்கு வெளியூர் செல்வதாகத் தீர்மானிக்கிறார். இவரும் பயணி என்ற வட்டத்திற்குள் வந்து விடுவார்.

مسند أحمد
27233 – حَدَّثَنَا عَتَّابٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَزِيدَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ كُلَيْبِ بْنِ ذُهْلٍ، عَنْ عُبَيْدِ بْنِ جَبْرٍ قَالَ: رَكِبْتُ مَعَ أَبِي بَصْرَةَ مِنَ الْفُسْطَاطِ إِلَى الْإِسْكَنْدَرِيَّةِ فِي سَفِينَةٍ، فَلَمَّا دَفَعْنَا مِنْ مَرْسَانَا أَمَرَ بِسُفْرَتِهِ فَقُرِّبَتْ، ثُمَّ دَعَانِي إِلَى الْغَدَاءِ وَذَلِكَ فِي رَمَضَانَ، فَقُلْتُ: يَا أَبَا بَصْرَةَ، وَاللَّهِ مَا تَغَيَّبَتْ عَنَّا مَنَازِلُنَا بَعْدُ؟ فَقَالَ: «أَتَرْغَبُ عَنْ سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» قُلْتُ: لَا، قَالَ: فَكُلْ فَلَمْ نَزَلْ مُفْطِرِينَ حَتَّى بَلَغْنَا مَاحُوزَنَا،

பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா என்ற நபித்தோழருடன் கப்பலில் ஏறினேன். அப்போது காலை உணவைக் கொண்டு வரச் செய்தார்கள். என்னையும் அருகில் வரச் சொன்னார்கள். அப்போது நான், நீங்கள் ஊருக்குள் தானே இருக்கிறீர்கள்? (ஊரின் எல்லையைக் கடக்கவில்லையே) என்று கேட்டேன். அதற்கவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நீர் புறக்கணிக்கப் போகிறீரா? என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர் : உபைத் பின் ஜப்ர்
நூல் : அஹ்மத்

ஒருவர் ஊரின் எல்லையைத் தாண்டாவிட்டாலும், பயணத்திற்கு ஆயத்தமாகி விட்டாலே அவரும் பயணியாகி விடுகின்றார். பயணிகளுக்குரிய சலுகையை அவரும் பெற்றுக் கொள்கிறார் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் நோன்பு நோற்றவராக இருக்கும் போது பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. வைத்த நோன்பை முறித்து விட இவருக்கு அனுமதி உண்டு. இதனால் எந்தக் குற்றமும் ஏற்படாது.

صحيح مسلم
2666 – حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ – يَعْنِى ابْنَ عَبْدِ الْمَجِيدِ – حَدَّثَنَا جَعْفَرٌ عَنْ أَبِيهِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ – رضى الله عنهما – أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ فِى رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ فَصَامَ النَّاسُ ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ ثُمَّ شَرِبَ فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ فَقَالَ « أُولَئِكَ الْعُصَاةُ أُولَئِكَ الْعُصَاةُ ».

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அவர்களுடன் சென்ற மக்களும் நோன்பு நோற்றிருந்தார்கள். குராவுல் கமீம் என்ற இடத்தை அடைந்த போது,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரச் செய்தார்கள். மக்கள் பார்க்கும் விதமாக அருந்தினார்கள். சிலர் மட்டும் நோன்பைத் தொடர்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது, அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம்

ரமளான் நோன்பை நோற்ற பின் பயணம் மேற்கொண்டால் அந்த நோன்பை முறிக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த ஹதீஸ் அவர்களின் கருத்துக்கு எதிராக நிற்கின்றது. இதனால் அவர்கள் இந்த ஹதீசுக்குப் புதுமையான ஒரு விளக்கம் தந்து தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்ட பின் பயணத்திலேயே நோன்பு நோற்றிருப்பார்கள். பயணத்தில் நோற்ற நோன்பு என்பதால் தான் முறித்தார்கள். மதீனாவிலேயே நோற்ற நோன்பு என்றால் அதை முறித்திருக்க மாட்டார்கள் என்பது தான் இவர்களின் விளக்கம். இந்த விளக்கம் முற்றிலும் தவறாகும்.
ஹதீஸின் ஆரம்பத்தைக் கவனித்தால் நோன்பு வைத்தவர்களாகத் தான் புறப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இடையில், வழியில் நோன்பு நோற்றார்கள் என்று கூறுவதற்கு இந்த ஹதீஸின் துவக்கம் இடம் தரவில்லை.
மேலும் குராவுல் கமீம் என்ற இடம் மதீனாவுக்கு அருகில் உள்ள இடமாகும். மதீனாவிலிருந்து புறப்பட்டு இரவில் தங்கி விட்டு, மறுநாள் அடையும் தொலைவில் குராவுல் கமீம் என்ற இடம் அமைந்திருக்கவில்லை. காலையில் புறப்பட்டு அஸர் நேரத்தில் வந்து சேர்ந்து விடக் கூடிய அளவுக்கு அருகில் தான் உள்ளது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பாளியாகத் தான் புறப்பட்டார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாததாகும்.
எனவே பயணத்தில் நோற்ற நோன்பாக இருந்தாலும், அல்லது ஊரில் நோன்பு நோற்று விட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும் இரண்டு நோன்பையும் முறித்து விட அனுமதி இருக்கிறது என்பதே சரியான கருத்தாகும்.
பயணத்தில் நோன்பை விட்டு விடுவது அனுமதிக்கப்பட்டதா? அல்லது கண்டிப்பாக விட்டு விட வேண்டுமா?
மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில், நோன்பை முறிக்காத மக்களைப் பற்றி குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பயணத்தில் நோன்பைக் கட்டாயம் முறித்தாக வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இவ்வாறு வாதம் புரிவதற்கு ஏற்ற வகையில் அந்த ஹதீஸ் அமைந்திருப்பது உண்மை தான். ஆயினும் வேறு பல சான்றுகளைக் காணும் போது அவ்வாறு கருத முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

صحيح البخاري
1943 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، – زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -: أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو الأَسْلَمِيَّ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَأَصُومُ فِي السَّفَرِ؟ – [ص:34] وَكَانَ كَثِيرَ الصِّيَامِ -، فَقَالَ: «إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ»

நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டு விடு என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 1943

صحيح مسلم
2680 – حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ رَبِيعَةَ قَالَ حَدَّثَنِى قَزَعَةُ قَالَ أَتَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِىَّ – رضى الله عنه – وَهُوَ مَكْثُورٌ عَلَيْهِ فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ عَنْهُ قُلْتُ إِنِّى لاَ أَسْأَلُكَ عَمَّا يَسْأَلُكَ هَؤُلاَءِ عَنْهُ. سَأَلْتُهُ عَنِ الصَّوْمِ فِى السَّفَرِ فَقَالَ سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى مَكَّةَ وَنَحْنُ صِيَامٌ قَالَ فَنَزَلْنَا مَنْزِلاً فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّكُمْ قَدْ دَنَوْتُمْ مِنْ عَدُوِّكُمْ وَالْفِطْرُ أَقْوَى لَكُمْ ». فَكَانَتْ رُخْصَةً فَمِنَّا مَنْ صَامَ وَمِنَّا مَنْ أَفْطَرَ ثُمَّ نَزَلْنَا مَنْزِلاً آخَرَ فَقَالَ « إِنَّكُمْ مُصَبِّحُو عَدُوِّكُمْ وَالْفِطْرُ أَقْوَى لَكُمْ فَأَفْطِرُوا ». وَكَانَتْ عَزْمَةً فَأَفْطَرْنَا ثُمَّ قَالَ لَقَدْ رَأَيْتُنَا نَصُومُ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- بَعْدَ ذَلِكَ فِى السَّفَرِ.

நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் பயணத்தில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் நோன்பு நோற்றவர்களாக மக்காவை நோக்கிப் புறப்பட்டோம். ஒரு இடத்தில் இளைப்பாறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் எதிரிகளை நெருங்கி விட்டீர்கள். எனவே நோன்பை விடுவதே உங்கள் உடலுக்குப் பலமாக இருக்கும் என்று கூறினார்கள். (விட்டு விடுங்கள் என்று கட்டளையாகக் கூறாததால்) இதைச் சலுகையாகக் கருதிக் கொண்டோம். சிலர் நோன்பு நோற்றோம். வேறு சிலர் நோன்பை விட்டு விட்டோம். பின்னர் மற்றோர் இடத்தில் இளைப்பாறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடிந்தால் நீங்கள் எதிரிகளைச் சந்திக்கவுள்ளீர்கள். நோன்பை விடுவதே உங்கள் உடலுக்குப் பலம் சேர்க்கும். எனவே நோன்பை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் கட்டளையிட்டதால் இப்போது அனைவருமே நோன்பை விட்டு விட்டோம். இதன் பிறகு (பல சந்தர்ப்பங்களில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றவர்களாகப் பயணம் செய்துள்ளோம் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : கஸ்ஆ
நூல் : முஸ்லிம்

நோன்பை முறிக்காதவர்களைக் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பயணத்தின் போது கூறினார்களோ அதே பயணத்தின் தொடர்ச்சியைத் தான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) விளக்குகின்றார்கள். இதன் பிறகு பல பயணங்களில் நாங்கள் நோன்பு நோற்றுள்ளோம் என்று கூறுகிறார்கள்.
பயணத்தில் நோன்பு நோற்பது குற்றமென்றால் இதன் பிறகு நபிகள் நாயகத்துடன் மேற்கொண்ட பயணங்களின் போது நபித்தோழர்கள் நோன்பு நோற்றிருக்க மாட்டார்கள். மேலும் இந்தப் பயணத்தின் தொடர்ச்சியிலேயே நபித்தோழர்களில் சிலர் நோன்பு நோற்றுள்ளனர் என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரிய வருகிறது.
பயணத்தில் நோன்பை விடுவது சலுகை தானே தவிர கட்டாயமில்லை என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.
அப்படியானால் நோன்பை விடாதவர்களைக் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் கூற வேண்டும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து அனைவருக்கும் அதைக் காட்டி விட்டு அருந்தியுள்ளார்கள். இதைக் கண்ட பிறகு உடனே அதைப் பின்பற்றுவது தான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். நான் ஒரு செயலைச் செய்து காட்டிய பிறகும் அதற்கு மதிப்பளிக்காவிட்டால் அந்த வகையில் அவர்கள் குற்றவாளிகள் தான் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். இப்படிக் கருதுவது தான் நாம் எடுத்துக் காட்டிய மற்ற ஹதீஸ்களுடன் மோதாமல் இருக்கும்.

صحيح مسلم
2685 – وَحَدَّثَنِى أَبُو الطَّاهِرِ وَهَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِىُّ – قَالَ هَارُونُ حَدَّثَنَا وَقَالَ أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ أَبِى الأَسْوَدِ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِى مُرَاوِحٍ عَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو الأَسْلَمِىِّ – رضى الله عنه – أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَجِدُ بِى قُوَّةً عَلَى الصِّيَامِ فِى السَّفَرِ فَهَلْ عَلَىَّ جُنَاحٌ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « هِىَ رُخْصَةٌ مِنَ اللَّهِ فَمَنْ أَخَذَ بِهَا فَحَسَنٌ وَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ »

பயணத்தின் போது நோன்பு நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அது அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே! யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹம்ஸா பின் அம்ரு (ரலி)
நூல்: முஸ்லிம்

பயணத்தில் நோன்பை விட்டு விடுவது தான் சிறப்பானது என்று இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
பயணத்தில் நோன்பு நோற்கவே கூடாது என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

صحيح البخاري
1946 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ الحَسَنِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَرَأَى زِحَامًا وَرَجُلًا قَدْ ظُلِّلَ عَلَيْهِ، فَقَالَ: «مَا هَذَا؟»، فَقَالُوا: صَائِمٌ، فَقَالَ: «لَيْسَ مِنَ البِرِّ الصَّوْمُ فِي السَّفَرِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்த போது ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டார்கள். அங்கே ஒரு மனிதருக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இது என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இவர் நோன்பு வைத்திருக்கிறார் என்று மக்கள் விடையளித்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பயணத்தில் நோன்பு நோற்பது நல்ல காரியங்களில் அடங்காது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 1946

பயணத்தில் இருக்கும் அந்த நபர் வெப்பத்தை தாங்கமுடியாமல் நிழல் பந்தல் அமைக்கும் நிலையில் இருக்கிறார். பயணத்தில் நோன்பு நோற்பதற்கு இவருக்கு சக்தியில்லாத போதும் பிடிவாதமாக நோன்பு வைக்கிறார். மேலும் பந்தல் அமைத்தாவது நோன்பு வைப்பது சிறந்தது என்று கருதியுள்ளார். இதுபோன்ற நிலையில் உள்ளவர் பயணத்தில் நோன்பு நோற்பது நல்லதல்ல என்ற கருத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாம் எடுத்துக் காட்டிய பல ஹதீஸ்களுடன் இது முரண்படும் நிலை ஏற்படும்.
ஒருவர் பயணம் மேற்கொண்டு வேறு ஊரில் சில நாட்கள் தங்குகிறார். தங்கும் காலத்தில் அவர் பயணத்தை மேற்கொள்ளாவிட்டாலும் வெளியூரில் இருப்பதால் அவரும் பயணிக்குரிய சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

صحيح البخاري  4275 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا غَزْوَةَ الفَتْحِ فِي رَمَضَانَ»، قَالَ: وَسَمِعْتُ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، يَقُولُ مِثْلَ ذَلِكَ، وَعَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ [ص:146] عَنْهُمَا قَالَ: «صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا بَلَغَ الكَدِيدَ – المَاءَ الَّذِي بَيْنَ قُدَيْدٍ وَعُسْفَانَ – أَفْطَرَ، فَلَمْ يَزَلْ مُفْطِرًا حَتَّى انْسَلَخَ الشَّهْرُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியின் போது நோன்பு நோற்றவர்களாகப் போருக்கு ஆயத்தமானார்கள். கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டார்கள். பின்னர் அம்மாதம் (ரமளான்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 4275, 4276

ரமளான் மாதம் பிறை 20ல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. எஞ்சிய பத்து அல்லது ஒன்பது நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலேயே தங்கியிருந்தும் நோன்பு நோற்கவில்லை. எனவே வெளியூர் பயணம் மேற்கொண்டவர்கள் வெளியூரில் இருக்கும் வரை நோன்பை விட்டு விடலாம். ஆனால் விடுபட்ட நோன்பைப் பின்னர் நோற்றுவிட வேண்டும்.

 4. மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் 

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் நோன்பை விட்டு விடச் சலுகை பெற்றுள்ளனர். சலுகை மட்டுமின்றி மாதவிடாய் நேரத்தில் நோன்பைக் கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்றும், விடுபடும் நோன்பை வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

صحيح مسلم
789 – وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عَاصِمٍ عَنْ مُعَاذَةَ قَالَتْ سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ مَا بَالُ الْحَائِضِ تَقْضِى الصَّوْمَ وَلاَ تَقْضِى الصَّلاَةَ فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ قُلْتُ لَسْتُ بِحَرُورِيَّةٍ وَلَكِنِّى أَسْأَلُ. قَالَتْ كَانَ يُصِيبُنَا ذَلِكَ فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلاَ نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلاَةِ.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் நாங்கள் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 508

மாதவிடாய்க் காலம் என்பதைப் பற்றிப் பெரும்பாலான பெண்கள் தவறாகவே விளங்கி வைத்துள்ளனர். மாதவிடாய் என்பது உடற்கூறு, வாழ்கின்ற பிரதேசம், உணவுப் பழக்கம், வயது ஆகியவற்றைப் பொறுத்து வித்தியாசப்படும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கணக்கில் மாதவிடாய் வெளிப்படாது.
சில பெண்களுக்கு ஓரிரு நாட்களிலேயே மாதவிடாய் ஏற்பட்டு நின்று விடும். இவர்கள் மாதவிடாய் நின்றவுடன் நோன்பு நோற்க வேண்டும். இன்னும் ஒரு வாரம் ஆகவில்லையே என்றெல்லாம் நினைக்கக் கூடாது.
அது போல் சில பெண்களுக்குப் பதினைந்து நாட்கள் கூட மாதவிடாய் நீடிக்கலாம். அவர்கள் பதினைந்து நாட்களும் நோன்பை விட்டு விட வேண்டும். இந்த விஷயத்தில் பல பெண்கள் அறியாமையிலேயே உள்ளனர்.
மேலும் பெண்களிடம் இன்னொரு அறியாமையும் உள்ளது.
புனிதமிக்க ரமளான் மாதத்தில் நோன்பை விடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது என்று எண்ணி மாதவிடாயைத் தள்ளிப் போடச் செய்யும் மாத்திரைகளை சில பெண்கள் உட்கொள்கிறார்கள். ஹஜ்ஜின் போதும் இது போன்று நடந்து கொள்கிறார்கள்.
அல்லாஹ் பெண்களுக்கு இயற்கையாக வழங்கியுள்ள தன்மையை மாற்றுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தராது என்பதை இவர்கள் உணர வேண்டும். மாதவிடாய் என்பது அல்லாஹ் செய்த ஏற்பாடாகும். ரமளானில் சில நாட்கள் நோன்பு தவறி விடுவதால் ஆண்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் பெண்களுக்குக் குறைந்து விடாது. விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் களாச் செய்து விடும் போது புனித ரமளானில் நோன்பு நோற்ற அதே நன்மையை இவர்களும் அடைவார்கள்.

அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதளவும் தீங்கு இழைக்க மாட்டான். மாறாக மனிதர்கள் தமக்கே தீங்கு இழைக்கின்றனர்.
திருக்குர்ஆன் 10:44

அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.
திருக்குர்ஆன் 4:40

மாதவிடாயை அவனே ஏற்படுத்தி விட்டு, அந்தக் காலத்தில் நோன்பு நோற்க வேண்டாம் என்று அவனே கட்டளையிட்டு விட்டு, அவர்களின் கூலியை அவனே குறைப்பான் என்பது இறைவன் விஷயத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாததாகும்.

 5. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் சலுகை உண்டு 

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர்.

سنن النسائي
2315 – أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَجُلٌ مِنْهُمْ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ وَهُوَ يَتَغَدَّى، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلُمَّ إِلَى الْغَدَاءِ»، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَضَعَ لِلْمُسَافِرِ الصَّوْمَ وَشَطْرَ الصَّلَاةِ، وَعَنِ الْحُبْلَى وَالْمُرْضِعِ»

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : நஸயீ 2276

இவர்கள் ரமளானில் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்று விட வேண்டும்.

மோடி ஒரு "பாசிஸ்ட்"

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மோடி ஒரு "பாசிஸ்ட்"

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ 

#mmkitwing #jawahirullahmla #மமக #MMK

https://fb.watch/qQj8hvEHjy/?mibextid=Nif5oz