Monday, 11 March 2024

RE:RE: INVESTMENT PROPOSAL

Greeetings

My name is Shukri Mohammed Fatouria Ghanem the son of the late (Shukri Mohammed Imhemed Ghanem)former Libyan oil minister.

I'm contacting you based on my intensive search for a sincere person I can confide in towards investing $800m USD for investmentpurposes.
i seek a capable partner who will stand as the beneficiaries of the funds.

I'm willing to give you 15% of the money as compensation for your assistance and reinvest 85% in any investment of your choice with good R.O.I.

Kindly advise ASAP,

Sincerely,
Mohammed

மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் தலைவர் அழைப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் தலைவர் அழைப்பு

மார்ச் 17ம் தேதி மும்பையில் இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவில் பங்கேற்க இந்தியா கூட்டணி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விடுத்த அழைப்பினை ஏற்று மமக தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள் பங்கேற்கிறார்கள்.

#INDIAAlliance #jawahirullahmla #2024Election 
#RahulGandhi #Congress #India #mmkitwing


https://www.facebook.com/share/p/Z2nVmJAGmBHMk1oa/?mibextid=Nif5oz

MMK TWITTER (X)
👇👇👇
https://twitter.com/mmkhqofficial/status/1767083448857235956?t=HgoXvvUbqlV-iuvKPsYW-g&s=19

மமக தகவல் தொழில்நுட்ப அணி

Sunday, 10 March 2024

தென் இந்தியாவில் பிஜேபி ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தென் இந்தியாவில் பிஜேபி ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள் கண்ணை விரித்து பாருங்கள்,  உ.பி.யில் இதுதான் நிலைமை.மதத்தை வைத்து ஆட்சி அமைத்தால் பிறகு மனிதன் மிருகம் ஆகிவிடுவான் 👍



யா ரஹ்மானே - துஆ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

யா ரஹ்மானே, எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களது கணவன், மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரிகள், உற்றார் உறவினர்கள், உலக முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களது உறவுகளை கொண்டோ, செல்வத்தை கொண்டோ, எங்களை சோதித்து விடாதே!

யா ரஹ்மானே, பொய், புறம், கோபம், பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களது சொல்லாலோ, செயலாலோ, பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால் அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக!

யா ரஹ்மானே, நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வேண்டுமென்றோ, திட்டமிட்டோ, மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சிறிதோ, பெரிதோ, எப்பேற்பட்ட பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து, மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, ரமலான் உடைய அருட் கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்கு நிறைவாக தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக!

யா ரஹ்மானே, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக! மேலும் ஹலாலான ரிஸ்கை தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, எங்களது உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் ஹலாலானவையாக தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, எங்களுக்கும், எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக!

யா ரஹ்மானே, நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்களின் தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை நீயே பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும், வேதனையிலிருந்தும், விபத்துகளிலிருந்தும், விஷஜந்துக்களிலிருந்தும், அபாயங்களிலிருந்தும், இயற்கை சீரழிவிலிருந்தும், ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும், பலாய் முஸீபத்துகளிலிருந்தும், எதிர்பாராத மரணத்திலிருந்தும், கண் திருஷ்டியிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக!

யா ரஹ்மானே, முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, எம் பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, இஸ்லாமிய சட்டத்தை எல்லாத்துறைகளிலும் மேலோங்க செய்து அதன்படி முழுமையான வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, முழுமையான பர்தா முறையில் எங்கள் பெண்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, உள்ளங்களை புரட்டக் கூடியவனே எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக, கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து எங்களை தனிமைப்படுத்தி விடாதே!

யா ரஹ்மானே, மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும், மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து எங்களது எதிரிகளை தோற்கடிப்பாயாக

யா ரஹ்மானே, எங்களை உனது நெருக்கமானவர்களாகவும், உனது பிரியமானவர்களாகவும் மாற்றுவாயாக!

யா ரஹ்மானே, உன்னுடைய பிரியத்தை எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!

யா ரஹ்மானே, தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, மரண வேதனையிலிருந்தும், கப்ரின் அதாபிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!

யா ரஹ்மானே, கியாமத் நாளின் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, கியாமத் நாளின் இழிவுகளை விட்டும் மூமீனான ஆண்கள், பெண்கள் அனைவர்களையும் பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!

யா ரஹ்மானே, கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, மறுமையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுல் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக!

யா ரஹ்மானே, எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!

யா ரஹ்மானே, ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!

யா ரஹ்மானே, மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக!

யா ரஹ்மானே, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!

யா ரஹ்மானே, உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத் வழங்குவாயாக!

யா ரஹ்மானே, யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை உன்னுடைய அருளைக் கொண்டு கபூல் செய்வாயாக! ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

துஆவில் எங்களின் நலன்களுக்கும். துஆச் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்!!🤲🏻

அபிராமம் தமுமுக சார்பில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

1-03-2024 ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் தமுமுக சார்பில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது 

கருத்தரங்கில் தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் அவர்கள் தமுமுக கொடி ஏற்றி தேவை உடைய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் 


சமூக நீதி அழைப்பாளர் தாகா புகாரி தமுமுக மாநில பேச்சாளர் சகோதரி ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் 

இந்நிகழ்ச்சிக்கு தமுமுக மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா தலைமை வைத்தார் அபிராமம் மக்கள் உரிமை அப்துல் காதர்
அபிராமம் திமுக பேரூர் செயலாளர் ஜாஹிர் உசேன் 

தமுமுக மாவட்ட நிர்வாகிகள் வா வா ராவுத்தர் இலியாஸ் ஜிந்தா மதார் பனைக்குளம் பரக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வைத்தனர் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட

இந்நிகழ்ச்சியை
 
அபிராமம் தமுமுக நிர்வாகிகள் 
அசன் இபுராஹிம் 
சுலைமான் பைஜி,
 சேட், அசன் 
முகமது 
சாகுல் ஹமீது,  
முகமது ஹமீது, ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்

Ramnad - Thinathanthi


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பாம்பனில்... ரமலானை வரவேற்போம்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பாம்பனில்...

03.03.2024 இன்று
அல்_ஹஸனாத் மக்தப் மதரஸா ஐந்தாம் ஆண்டு விழா  மற்றும் ரமலானை வரவேற்போம்...

ஹபிபுல்லாஹ் 

பாம்பன் JAQH தவ்ஹீத் ஜமாத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக...
எஸ்.சலிமுல்லாஹ்கான்
தமுமுக மாநில துணை பொதுசெயலாளர்.

📖 குர்ஆன்,ஹதீஸ் மணனம் செய்த மாணவ,மாணவிகளுக்கு & ஆசிரியர்களுகக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஷேக் அப்துல்லாஹ்
மேற்கு மாவட்ட தலைவர்,
ஹமீது சபீக்
மாவட்ட பொருளாளர்,
பாம்பன் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்...
தமுமுக பாம்பன் கிளை,
இராமநாதபுரம் மத்திய மாவட்டம்.

இரத்ததானம்!! மனித நேயத்தின் மிகச்சிறந்த அடையாளம்!!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இன்று (05:03:2024) 
#இராமநாதபுரம்_நகர்_தமுமுக_வின்
#அவசர_இரத்ததான_சேவவை


இரத்ததானம்!! 
மனித நேயத்தின் மிகச்சிறந்த  அடையாளம்!!! 

பிற உயிர்களை காப்பதற்கு இறைவனால் அளிக்கப்பட்ட மிக நல்ல சந்தர்ப்பம்!!!

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா 
மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன்_5:32)

�இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்
இராமநாதபுரம் ஊரைச் சேர்ந்த 
தேவிஹா  சகோதரிக்கு 
 0+பாசிட்டிவ் இரத்தம்
தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சுலைமான்  அவர்கள் இரத்ததானம் செய்தனர்.

உடன்..
சந்ரு
தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவர் 
இராமநாதபுரம் 

#எல்லாப்_புகழும்_இறைவனுக்கே.

என்றென்றும் மக்கள் சேவையில்..!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
மனித நேய மக்கள் கட்சி
மருத்துவ சேவை அணி
இராமநாதபுரம் நகர் .
9894485986,
9698047786  ,
9003317979,
 77080 83555,
915-973-7760,

இராமநாதபுரத்தில்..8-9 மார்ச் 2024 இரண்டு நாள் மாநாடு - பரிசு பொருட்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இராமநாதபுரத்தில்..8-9 மார்ச் 2024
இரண்டு நாள் மாநாடு நிறைவுபெற்றது

எல்லா புகழும் இறைவனுக்கே...

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை, மாநில செயலாளர் V.N. மரியம் நிஸா Dip.in Islamic studies அவர்கள் தலைமையில்
ஆயிஷா சித்திக்கா மகளிர்  இஸ்லாமிய கல்லூரி, இனைத்து கல்வி விழிப்புணர்வு மாநாடு 




*மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, ஹதீஸ் மனனம்,கேள்வி பதில்,நிகழ்ச்சி தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் 
மார்க்க அறிஞர் அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் ஆலிமா தஸ்லிமா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் மக்கள் உரிமை அபிராமம் அப்துல் காதர் 
மத்திய மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகிம் மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா அப்துல் ரஹீம் மில்லத் பிர்தவ்சி அவர்கள் முன்னிலையில் 

கல்வி பயின்ற மாணவிகளுக்கு கல்விச் சான்றிதழ் வழங்கப்பட்டது

ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் லேப் டாப் உட்பட கொடுக்க பட்டது

மாணவர்கள் கல்வி என இறைவன் உதவியால் சிறப்பாக நடைபெற்றது

ஆயிரத்திற்க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

மூன்று லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் லேப் டாப் உட்பட மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது
ஒரு வருடம் ஆறு மாதம் மூன்று மாதம் கல்வி பயின்ற 200 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது 

எல்லா புகழும் இறைவனுக்கே......

தகவல்...
தமுமுக இஸ்லாமிய பிரச்சார பேரவை

மஸ்ஜித் தக்வா ஜமாத் இராமநாதபுரம் / 2024 ரமலான் இரவு தொழுகை மார்க்க அறிஞர்களின் சிறப்புரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

2024 ரமலான் இரவு தொழுகை
மார்க்க அறிஞர்களின் சிறப்புரை


ஆண்கள் பெண்கள் தொழுகைக்கு தனித் தனியே ஏற்பாடு

தகவல்
மஸ்ஜித் தக்வா ஜமாத்
இராமநாதபுரம்