Friday, 14 March 2014

துயமனதுடன் இஸ்லாத்தை ஏற்று கொள்கின்றேன் என கூறி தன் பெயரை அஹ்மது என மாற்றிகொண்டர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடிஅல்லாஹ்வின் 
மாபெரும்  கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாத்தின் இறைகோட்பாடு பற்றியும் சகோதரர் கோகுல் குமார் என்ற சகேதரருக்கு எடுத்து கூறப்பட்டது . அதன் அடிப்படையில் அவர் துயமனதுடன் இஸ்லாத்தை ஏற்று கொள்கின்றேன்  என கூறி தன் பெயரை அஹ்மது என மாற்றிகொண்டர். அல்ஹம்துலில்லாஹ் .

சகேதரர் A.S.இப்ராகிம் கலிமா சொல்லி கொடுத்தார் 

அந்த சகோதரரிடம் நமக்காக துவா செய்யும்படி கேட்டுகொண்டோம் 

அல்லாஹ்  நம்முடைய  அழைப்பு பணியை ஏற்றுக்கொள்வானாக 





Wednesday, 12 March 2014

பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் - துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்ப்பனிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.

நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் அழகிய அழைப்பு பணியினை செவ்வனே செய்வதற்கு பேச்சுக்கலை ஒரு முக்கிய அம்சம். அந்த பேச்சுக்கலையினை ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கில்


துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 3 மதமாக நடைபெற்று வருகிறது.



சபியுல்லாஹ்


இர்ஷாத் அஹ்மது


அப்துல் ரஹ்மான்

மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையில் 12.03.2014 அன்று இரவு சரியாக 09:00 மணியளவில் பேச்சுப்பயிற்சி நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Monday, 10 March 2014

சாதிக்க வேண்டும், சாதனையின் சிகரத்தைத் தொட வேண்டும் என்றால் வயது ஒரு தடை இல்லை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


சாதிக்க வேண்டும், சாதனையின் சிகரத்தைத் தொட வேண்டும் என்றால் வயது ஒரு தடை இல்லை.

உலகின் சிறு வயது பேராசிரியர் என்ற பட்டத்தை வென்று கின்னஸில் இடம் பிடித்த இந்தியாவை சேர்ந்த 13 வயது முஸ்லீம் சிறுவன்.

உலகின் மிகவும் வயது குறைந்த பேராசிரியராக இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.



இவர் தன்னைவிட இருமடங்கு வயது உடையவர்களுக்கு அனிமேஷன் குறித்த பாடங்களை சொல்லி கொடுக்கின்றார்.

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டோராடூன் என்ற நகரை சேர்ந்த அமன் ரஹ்மான் தான் இந்த சாதனையாளர்.

இவர் தனது எட்டாவது வயதிலேயே பேராசிரியராக அதிகாரபூர்வமற்ற முறையில் பணிபுரிந்துள்ளாராம். தற்போது 13 வயதாகும் இவருக்கு பேராசிரியர் பதவி சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் இவர் கரும்பலகையின் உயரம் கூட இல்லாத நிலையில் நாற்காலியின் மீது ஏறி கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக்கொடுத்துள்ளார்.



கம்ப்யூட்டர் அனிமேஷன் குறித்த வகுப்புகளுக்கு ஆசிரியராக இருக்கும் இவர் அனிமேஷனில் பல புதிய யுக்திகளை மாணவர்களுக்கு விளங்கும் வண்ணம் கற்றுத்தருகிறார்.

இவருக்கு டேராடூன் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

இவர் தனது 18 வயதை பூர்த்தி செய்தவுடன் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் கல்லூரியில் சேர்ந்து தனது அனிமேஷன் அறிவை மேலும் வளர்த்துக்கொண்டு பின்னர் இந்தியா வந்து சொந்தமாக அனிமேஷன் கல்வி நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள்.

மாணவர்களே, படிப்பில் கவனம் செலுத்துங்கள் அல்லாஹ் நாடினால் உங்கள் ஒவ்வொருவரையும் இதுபோன்ற சாதனையாளராக ஆக்குவான்.

விழுந்து விழுந்து சிரித்து ரசித்த பதிவு:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விழுந்து விழுந்து சிரித்து ரசித்த பதிவு:

தமுமுக வினர் திமுக வில் இருப்பதால் தான் நீங்கள் அதிமுக வை ஆதரித்ததாக பேசப்படுகிறதே அதைப்பற்றிய கருத்து என்ன ??

சகோ பீஜே பதில்:

தேர்தல் ஆதரவிற்காக நாங்கள் கணக்கிடுவது சமுதாய நன்மைகளை மட்டுமே..அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் எங்களுக்கு பிரச்சனையில்லை..

தமுமுக வினரை நாங்கள் கணக்கிலே எடுத்துக் கொள்ளவுமில்லை....

மேலும் தமுமுக வை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை...

உண்மையா 

அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் , அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி கொள்ளுங்கள்

அம்மாவுக்கு ஆதரவு -ADMK - TNTJ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அம்மாவுக்கு ஆதரவு

யாரு நம்மளை 2 அடி அடிக்கிறா / 10 அடிக்கிறானு  பாருங்க  சொன்னது யாரு

அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் , அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி கொள்ளுங்கள்

தயவு செய்து ஆணவம்  வேண்டாம் 

மக்களை அழைக்கிறது இஸ்லாம் இந்த வழியில்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மக்களை அழைக்கிறது இஸ்லாம் இந்த வழியில்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக பி.ஜெயினுலாப்தீன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக பி.ஜெயினுலாப்தீன் அவர்கள் முதல்வரை சந்தித்து கூறியதாக தினமணியில் செய்தி இருக்கிறது.

அவர் எந்த அடிப்படையில் அதிமுகவை ஆதரிக்கிறார் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இடஒதுக்கீடு வழங்கிய கட்சி திமுக. அதை எதிர்த்த கட்சி அதிமுக. இப்போது உயர்த்திக் கேட்டதைக்கூட இவ்வளவு நாள் ஆறப்போட்டு தேர்தல் நேரத்தில் அதை சிறுபான்மைக் கமிஷன் ஆய்வுக்கு ஜெயலலிதா அனுப்பியதிலிருந்தே ரெட்டைவேஷத்தை புரிந்து கொள்ள வேண்டாமா?

கலைஞர் மோடியை நண்பர் என்று சொன்னாரே என்று கேட்கிறார்கள். அரசியலில் ஒருவரை நாகரிகத்தோடு நண்பர் என்று சொல்ல்யிருக்கிறார். சவூதி அரேபியாவுக்கு நட்பு நாடாக இந்தியா இருக்கிறது. ஒரு பள்ளிவாச்லை இடித்த நாடு என்பதற்காக எதிரி நாடு என்றா சொல்லிவிட்டது? அது அரசியல்.

செயல்பாட்டைப்பாருங்கள். கரசேவைக்கு ஆளனுப்பியது ஜெயலலிதா அல்லவா... செங்கல் அனுப்பியது ஜெயலலிதா அல்லவா... முஸ்லீமகளுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் எல்லா சாதியினரும் கேட்பார்கள் என்று எதிர்த்தது ஜெயலலிதா அல்லவா... சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு அடங்கித்தான் நடக்க வேன்டும் என்று சொன்னது ஜெயலலிதா அல்லவா... மதமாற்ற தடைச்சட்டம் என்ற பெயரில் சிறுபான்மையினரை அச்சுறுத்தியது ஜெயலலிதா அல்லவா... சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை மமக வைச்சேர்த்துக்கொண்டு பாஜக எதிர்ப்பு வேஷம் போட்டுக்கொண்டு, முடிந்தவுடன் பதவி ஏற்பு விழாவிற்கு மோடியை அழைத்தது ஜெயலலிதா அல்லவா...

இதில் எதிலிருந்து ஜெயலலிதா மாறியிருக்கிறார், நீங்கள் ஆதரவு கொடுக்க. குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டை தேர்தலுக்கு முன்பே அதிகப்படுத்திக் கொடுத்திருந்தாலாவது உங்கள் செயலில் ஒரு நியாயம் இருக்கும்.

மமக எங்கிருக்கிறதோ அதற்கு எதிரான நிலை என்கிற எண்ணத்தை விட்டுவிட்டு சமுதாயத்திற்கு எது பலனளிக்கும் என்று பாருங்கள். மமக ஒன்றும் எதிரிகளல்ல. கொளகையை யார் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது என்கிற கருத்து வேறுபாடுதான் உங்கள் இருவருக்குமே..

ததஜ ஆதரவாளர்களிடம் ஒரு கேள்வி. உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், அதிமுகவுக்கு வாக்களித்தால் இந்த சமுதாயத்திற்கு நல்லதா? பிஜே சொன்னதற்காக வாக்களிக்காதீர்கள், உங்கள் மனசாட்சியைக் கேட்டு வாக்களியுங்கள். நீங்கள் அதிமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளுமே மோடிக்கு அளிக்கும் வாக்குகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தவறான முடிவெடுத்து எதிரிக்கு பலம் சேர்த்துவிடாதீர்கள்.....

Sunday, 9 March 2014

நாளை துபாயில் பேச்சுப்பயிற்சி நடைபெறும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

இதில் 
துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 3 மதமாக நடைபெற்று வருகிறது.

இன்ஷா அல்லாஹ் 
நாளை துபாயில் இரவு 8.30 மணியளவில் அளவில் பேச்சுப்பயிற்சி ( குரூப் டிஸ்கஸ் ) நடைபெறும்.  சகோதரர்கள் கட்டாயம் முன் அனுமதி பெற்று வரவும் தயவு செய்து அனுமதி இல்லாமல் வர வேண்டாம்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு. 

இந்த அறிய வாய்ப்பை சகோதரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் .


அமீர் - இர்ஷாத்  050-2426380

விமானம் புறப்பாடுக்கு முன் தாய் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விமானம் புறப்பாடுக்கு முன் தாய் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது... ஆனால் இப்பொழுது விமானம் காணவில்லை.... இதுதான் நாம் வாழுகின்ற வாழ்கை.... ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும்
மரணம் நாம் அனைவரையும் நெருங்கி கொண்டுதான் இருக்கிறது... மறுமைக்கு அஞ்சி வாழுவோம் இன்ஷா அல்லாஹ்.

மரணம் வரும் வேலையில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அல்லது தகர்க்க முடியாத கோட்டையில் இருந்தாலும் சரி, எந்த நேரததில், எந்த இடத்தில், எப்படி மரணம் அடைய வேண்டும் என்று இறைவன் வகுத்து வைத்துள்ளானோ! அதில் சிறிது கூட கூடவோ அல்லது குறையவோச் செய்யாது.இது இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்றே அன்றி வேறில்லை. இதையே நம்மை படைத்த இறைவன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களூக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, ";இது உம்மிடமிருந்துதான் ஏற்பட்டது" என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: "எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே" (4:78) 
மேலும்,
இன்னும், ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடபீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2:48)

Wednesday, 5 March 2014

சென்னையில் நடைபெறும் தலைமை செயற்குழு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பார்ந்த சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இன்ஷா அல்லாஹ், மார்ச் 10-ம் தேதி சென்னையில் நடைபெறும் தலைமை செயற்குழு கூட்டத்தில் நல்லதொரு முடிவை எடுத்து, சிறந்ததொரு வேட்பாளரை தேர்வு செய்து மயிலாடுதுறை தொகுதியில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

அன்புடன்,

தலைவர் - தமுமுக
துபாய்