Sunday 17 November 2013

வாழ்க ஜனநாயகம் (?) 28 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரிக்கு ஜாமீன்.....!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்க ஜனநாயகம் (?) 28 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரிக்கு ஜாமீன்.....!!

குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் 28 ஆண்டுகள் தண்டனை பெற்ற குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு 3 மாதம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு குஜராத் அமைச்சரவையில் பெண்கள் மற்றும்
குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் மாயா கோட்னானி.

இவர் 2002 ஆம் ஆண்டு மோடியின் அரசில் எம்.எல்.ஏவாக
இருந்தார். அப்போது நடந்த இனப்படுகொலையில் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையில் 34 பெண்கள் 33 குழந்தைகள் உட்பட மொத்தம் 97 பேர்களின் படுகொலையில் முக்கிய பங்கு வகித்தது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதால் 28 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையில் முன்னணியில் நின்று களப்பணியாற்றியதற்கு வெகுமதியாக 2007 அமைச்சரவையில் அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள்
நல்வாழ்வுத்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டது என மோடிக்கு எதிராக
விமர்சனங்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது மாயா கோட்னானிக்கு 3 மாதம் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை சிறையிலிருந்து மாயா கோட்னானி ஜாமீல் வெளியாகிறார். இவர் ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்கை ரிதுவான் :

பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலைகாரிக்கு முறைப்படி மரண தண்டனை விதித்திருக்க வேண்டும்.

அப்படி செய்யாமல் 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்படியிருந்தும் அந்த கொலைகாரிக்கு ஜாமீன் வழங்கங்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அப்துல் நாசர் மதானி மீது இன்றுவரை எந்த ஒரு குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.

வெறும் சந்தேக கைதியாக இருக்கும் நிலையில்...

உடல்நிலை மிக மோசமாக உள்ளது. இருந்தும் கூட மருத்துவ சிகிச்சைக்காக கூட ஜாமீனில் விட மனமில்லை..

வாழ்க ஜனநாயகம்.

நன்றி : Ban RSS Save ou nation & முஹம்மது நிஹால்

No comments:

Post a Comment