Tuesday, 25 January 2011

வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமமக்காகப் பிரார்த்திப்பொம்!

நாம் நன்றாக இல்லை !
காரணம் நாம் ஒன்றாக இல்லை !

ஒரே இறை – எத்தனை இயக்கங்கள் !
ஒரே மறை – எத்தனை குழப்பங்கள் !
ஒரே பிறை – எத்தனை பெருநாட்கள் !

மார்க்கம் வலியுறுத்தும் பிரியம் !
தெரியவில்லை – நமக்கு !
மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது !

முஃமின்கள் கண்ணாடி போன்றவர்கள் !
துவேச கற்களை வீசினோம் !
ஒவ்வொரு திசையிலும் சிதறினோம் !
காலமெல்லாம் நாம் கதறினோம்!

கபர்ஸ்தானாய் மாறும் ஆப்கானிஸ்தான் !
உணவின்றி மடியும் சோமாலியா !
பற்றி எரியும் பாலஸ்தீன் !
உயிர்களின் புதைகுழி காஷ்மீரின் சோகம் !

பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் இரத்தம் !
இருந்தும் திருந்தவில்லை நம் சித்தம் !

இஸ்லாமிய இயக்கங்களே – நீங்கள் !
வேற்றுமையில் ஒற்றுனை காண வேண்டாம் !
ஒற்றுமையில் வேற்றுமை என்னகூறுங்கள் !

இஸ்லாம் தான் பேரியக்கம் என்று !
ஓர் குடையின் கீழ் நின்று !
இவ்வுலகுக்கு உரக்கச் சொல்லுங்கள் !

சிந்திப்போம் ! வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமமக்காகப் பிரார்த்திப்பொம்!
       சமுதாய ஒற்றுமை புத்தகத்திலிருந்து….

No comments:

Post a Comment