Wednesday 12 January 2011

எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் காலமானார்கள்!

புதன், ஐனவரி 122011
சமூக ஆர்வலரும், காயல்பட்டணம் அல்ஜாமியுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் செயற்க்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகருமான கொச்சியார் தெருவை சார்ந்த எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்கள் இன்று காலை 11.20 மணியளவில் காலமானார்கள். அன்னாருக்கு வயது 70.

கொச்சியார் தெருவைச் சார்ந்த மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் அல்ஹாஃபிழ் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் மருமகனும், அல்ஹாஜ் எம்.எல்.செய்யித் இப்றாஹீம் எஸ்.கே. அவர்களின் சகோதரரும், ஜனாப் எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம், ஹாஃபிழ் எஸ்.ஹெச்.முஹம்மத் ஸாலிஹ் என்ற எஸ்.கே.ஸாலிஹ் (தாருத்திப்யான் நெட்வர்க்) ஆகியோரின் தந்தையும், ஜனாப் எம்.எல்.அப்துர்ரஷீத், ஜனாப் எம்.ஏ.கே.முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ ஆகியோரின் மாமனாரும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா, நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

http://kayalpatnam.com/shownews.asp?id=5458

No comments:

Post a Comment