Tuesday, 25 January 2011

14 மாதத்துக்கு இலவச உணவு: குவைத் மக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பணம்; அரசு உத்தரவு



14 மாதத்துக்கு இலவச உணவு:
குவைத் மக்களுக்கு
ரூ.20 ஆயிரம் கோடி பணம்;
அரசு உத்தரவு
குவைத் சிட்டி, ஜன.18-

அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் 11 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உள்ளனர். எண்ணை வளம் மிக்க இந்த நாடு செல்வ செழிப்புடன் திகழ்க்கிறது. இந்த நிலையில் இந்நாட்டு மக்களுக்கு இலவச உணவு மற்றும் ரூ.20 ஆயிரம் கோடி பண உதவி வழங்கப்பட உள்ளது.

இது அடுத்த ஆண்டு (2012) மார்ச் 31-ந் தேதி வரை அதாவது 14 மாதங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கான உத்தரவை குவைத் மன்னர் ஷேக் சபாஅல்-அகமது அல்-சபா பிறப்பித்துள்ளார். இதன் மூலம் அங்கு வாழும் மக்களுக்கு தலா 1000 தினார் (ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 561) வழங்கப்படும். அவை தவிர அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களும் இலவசமாக கிடைக்கும்.

இந்த சலுகை அங்கு வாழும் 20 லட்சத்து 40 ஆயிரம் வெளிநாட்டினருக்கு கிடைக்காது. வருகிற பிப்ரவரி மாதத்தில் குவைத் சுதந்திரம் அடைந்த 50-வது ஆண்டு பொன்விழாவும், ஈராக் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற்ற 20-வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. எனவே, தான் இந்த சலுகை அறிவிப்பை குவைத் அரசு நேற்று இரவு வெளியிட்டது

No comments:

Post a Comment