Saturday, 6 December 2014

"தோப்புத்துறை சகோதரர்கள் ஒருங்கிணைப்பு" கூட்டத்தில்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்... நேற்று 05.12.2014 வெள்ளி மாலை துபாயில் நடந்தேறிய

"தோப்புத்துறை சகோதரர்கள் ஒருங்கிணைப்பு" கூட்டத்தில் "பெண்கள் மீதான ஆண்களின் கடமை!" என்ற தலைப்பில் சகோ. பரமக்குடி  A.S. இப்ராஹிம் MBA உரை நிகழ்த்தினார்கள்.

அதில் கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியமனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்அவளுடன் அழகிய முறையில் பழகுவதுஅவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம்போதிக்கும் நல்உபதேசங்கள் போன்றவற்ரை எடுத்து கூறினார்கள் 


Tuesday, 18 November 2014

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

thks Sulthan 

12 ஆண்டுகளுக்குப் பின்னர் குஜராத் கலவர இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது நானாவதி கமிஷன்!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அகமதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரங்கள் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை மாநில முதல்வர் ஆனந்திபென் படேலிடம் நீதிபதி நானாவதி கமிஷன் இன்று சமர்பித்தது.
2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி நானாவதி தலைமையிலான விசாரணைக் கமிஷன், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பான தங்களது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் அந்த எரிப்புச் சம்பவம் திட்டமிடப்பட்ட சதி என்று கூறியிருந்தது.
இந்த விசாரணைக்கு 24 முறை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள், மூத்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், மற்றும் சில இந்து இயக்கங்களின் பங்கு என்னவென்பது பற்றி இந்த கமிஷன் விசாரணை மேற்கொண்டது.
இறுதி அறிக்கை தயாராகி விட்டதால் விசாரணைக்கு காலநீட்டிப்பு தேவையில்லை என்று நீதிபதி நானாவதி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நீதிபதி நானாவதி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அக்‌ஷய் மேத்தா ஆகியோர் குஜராத் முதல்வர் வீட்டிற்கு இன்று சென்று அறிக்ககையை அளித்தனர்.
"2000 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்." என்று நீதிபதி நானாவதி தெரிவித்தார். ஆனால் அதன் உள்ளடக்கங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
Thanks tamiloneindia 

மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...

Posted by: 
Updated: Thursday, March 6, 2014, 11:06 [IST]
கண்ணணூர்: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது உயிர்பிச்சைக் கேட்டு கூப்பிய கைகளுக்கும், மிரட்சி மிகுந்த கண்களுக்கும் சொந்தக்காரரான குத்புதீன் அன்ஸாரியும், தலையில் காவி ரிப்பனும், இடதுகையில் வாளும் ஏந்தி ஆக்ரோஷமாக வெறிக் கூச்சலிடும் கலவரக்காரரும் நேரடி காட்சியாக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்ட அசோக் மோச்சியும் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பு கேரள மாநிலம் தளிப்பரம்பில் உள்ள சிரவக்கில் என்ற இடத்தில் 'இனப்படுகொலையின் 12 ஆண்டுகள்' என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
இந்த கருத்தரங்கில் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் நேரடி காட்சியாக மக்கள் மனங்களில் நிறைந்த இரண்டு பேர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் தோன்றினார்கள்.
மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...
அந்த பிப்ரவரி 28
2002ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை நெருங்கிய போது காலனியில் ஒரே பரபரப்பு. கோத்ராவில் ஒரு ரயில் பெட்டி எரிந்து அயோத்தியிலிருந்து வந்த நிறையப் பேர் இறந்துவிட்டார்கள் என்று யாரோ சொன்னார்கள். பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் அலறுகின்றன. இந்த மாதிரி நேரங்களில் ஆட்கள் குடும்பத்தை இழுத்துக்கொண்டு எங்கெல்லாமோ ஓடுவார்கள் என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார். விஷமிகள் வாசலை அடைவது வரை காத்துக்கொண்டிருப்பது முட்டாள்தனம். பலரும் அங்குமிங்கும் ஓடுவதைப் பார்த்தார் அன்சாரி.
விடிய விடிய கூக்குரல்
வீட்டை அடைந்தபோது அம்மா மற்றும் மனைவியின் முகங்கள் பயத்தால் இருளடைந்திருப்பதைப் பார்த்தார். நேரம் மூன்று மணியாகியிருக்கும் யாரும் உறங்கவில்லை. அலறல்களும் ஆவேசக் கூக்குரல்களும் அழுகைச் சத்தங்களும் கேட்கத் துவங்கின. வேண்டாதது எதுவோ நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்துத்தான் அன்சாரி வீட்டின் மேல் மாடியில் போய் நின்று காப்பாற்ற யாராவது வருவார்களா என்று தேடினார்.
கைகூப்பிய அன்சாரி
அப்போது அன்சாரி வீடுகளுடன் பற்றி எரிகிற மனிதர்களையும் பார்த்தார். ‘வெறியர்களுடன் கூடவே அவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் போலீசையும் கண்ட அன்சாரி உயிரைக் காப்பாற்றுங்கள் என்று கூவியபடி அன்சாரி அவர்களை நோக்கிக் கைகூப்பினார். அப்போது அதிரடிப் படையின் கூடவேயிருந்த ராய்ட்டர்ஸின் அர்கோ தத்தா என்னும் புகைப்படக்காரரின் கேமரா பலமுறை மின்னியதை அன்சாரி பார்க்கவில்லை. அதிரடிப் படை வெறியர்களை விரட்டியடிப்பதைப் பார்த்தார்.
மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...
கலவரத்தின் முகமான அன்சாரி
சொந்தமாக இருந்த ஒற்றையறை வீடு, டிவி, தையல் இயந்திரம் எல்லாம் இழந்தாகிவிட்டது. உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு ஷாஹெயாத் அகதிகள் முகாமுக்குச் சென்றார் அன்சாரி.
அகதிகள் முகாமில் பனிரெண்டு நாட்கள் கழிந்தபோதுதான் தன் படம் பத்திரிகையில் பிரசுரமான தகவலை யாரோ சொன்னார்கள். எவ்வளவோ பேரின் படம் பத்திரிகையில் வருவதுதானே என்றுதான் அன்சாரி அப்போது நினைத்தார். ஆனால் அதுதான் குஜராத் கலவரத்தின் முகமாகிப் போனது.
விவாதப் பொருளான அன்சாரி
இந்தியாவிலுள்ள பத்திரிகை நிறுவனங்கள் அனைத்துமே குஜராத் கலவரத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால் முதலில் வைக்க வேண்டிய படமாக அந்தப் புகைப்படத்தை தனியே எடுத்து வைத்திருந்தன. அது அன்சாரிக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் அவரால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஊடகங்கள் மூலமாகவும் இணையம் மூலமாகவும் அவருடைய படம் எல்லா இடங்களையும் சென்று அடைந்துவிட்டிருந்தது. அந்தப் படத்தைப் பற்றிய விரிவான விவாதங்கள் பல இடங்களிலும் நடந்தன.
வாளேந்திய கலவரக்கார்
குஜராத் கலவரத்தை துல்லியமாக அடையாளப்படுத்துவதில் இரண்டு புகைப்படங்கள் முக்கிய பங்கு வகித்தன. ஒன்று அன்சாரியின் புகைப்படம். இன்னொன்று, தலையில் இறுக்கிக் கட்டிய துணியுடன் வாளை உயர்த்தி வீரமுழக்கம் இடுகின்ற ஒருரின் புகைப்படம். இந்த இருவரும் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் சந்தித்து கலந்துரையாடினர்.
ரோஜாவை வழங்கி மோச்சி
கலவரத்தின் போது கைகளில் வாளை ஏந்திய அசோக் மோச்சி, அன்ஸாரிக்கு, சுகந்தம் மிகுந்த ரோஜாப்பூவை வழங்கினார். அன்றும், இன்றும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக வாழ்ந்து வரும் மோச்சி, செலவுகள் தாங்க முடியாததால் திருமணம் கூட செய்யாமல் இருக்கிறார்.
மறைந்து போன கொடூரம்
அவருடைய முகத்தில் பழைய கொடூரம் இன்று இல்லை. புன்சிரிப்புடன் காணப்பட்டார். மோச்சியின் வார்த்தைகளில் அன்பு கலந்திருந்தது. மனிதநேயத்தை விளக்க எந்த மொழியும் தடையில்லை என்று கூறி அன்ஸாரியை கட்டி அணைத்து மோச்சி கூறினார்.
வெறுப்பின் அரசியல்
குஜராத் கலவரத்தில் வேட்டைக்காரனுடைய முகமாக உயர்த்திக் காட்டப்பட்ட தலித் இளைஞனான அசோக் மோச்சி முதல்முறையாக மேடையில் தோன்றி பேசினார். அப்போது அவர், 'இனி மேலாவது நாம் வெறுப்பின் அரசியலை நிறுத்தியே தீரவேண்டும் என்றார்.
யாருக்கும் வாக்களிக்கவில்லை
இனப்படுகொலை ஏற்படுத்திய வேதனையால் விழிப்புணர்வு பெற்ற நான் அதன் பிறகு யாருக்கும் வாக்கு அளிக்கவில்லை. எனது மனதில் உள்ள எதிர்ப்பைநான் தெரிவித்தேன். இனியாவது எனக்கு அதில் இருந்து விடுதலை வேண்டும் என்றார் ' மோச்சி உணர்ச்சி மேலிட.
மாற்றத்தின் அடையாளம்
இது ஒரு மாற்றத்தின் துவக்கமாக அமையட்டும் என்றார் குத்புதீன் அன்ஸாரி. கேரளாவின் அன்பு தாங்க முடியாமல் தவிக்கிறேன் என்றார்.
அன்சாரியின் சுயசரிதை
இந்நிகழ்ச்சியில் ஸஈத் ரூமி எழுதிய 'நான் குத்புதீன் அன்ஸாரி' என்ற சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு இடதுசாரி ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெறுப்பு அரசியலை வளர்த்தும் சங்க்பரிவாரத்தின் தந்திரங்களை குறித்து இருவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் அபூர்வமான காட்சியை காண ஏராளமானோர் நிகழ்ச்சியில் திரண்டிருந்தனர்.
thanks Tamiloneindia 

Saturday, 18 October 2014

பார்த்திபனூர் ஜமாஅத் முக்கிய பிரமுகர் முகம்மது ஈசா அவர்களின் மகன் காதர் பாட்சா MA புனித ஹஜ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பார்த்திபனூர் ஜமாஅத் முக்கிய பிரமுகரம் மேலும் பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளையின் ஆலோசகரும்மான முகம்மது ஈசா அவர்களின் மகன் காதர் பாட்சா MA அவர்கள் புனித ஹஜ் பயனத்தை இனிதே முடித்து இன்று காலை 18-10-2014 சென்னை வந்து அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்





அவர்களுடைய ஹஜ் அல்லாஹ் ஏற்றுக்கெள்வானாக. அனைவரும் துவா செய்யவும் .

சென்னையில் இருந்து பரமக்குடி யாசர்
துணை செயலாளர் - அன்னை ஆயிசா டிரஸ்ட்  

Sunday, 5 October 2014

பார்த்திபனூர் ஜமாஅத் மு.காதர் பட்சா புனித ஹஜ் 2014

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் மாபொரும் கிருபையால் இந்த வருடம் 2014 ஹஜ் நல்லபடியாக முடிந்தது அல்ஹம்துலில்லாஹ் . பார்த்திபனூர் ஜமாஅத் மு.காதர் பட்சா புனித ஹஜ் முடித்து இன்ஷாஅல்லாஹ் 18-10-2014 சென்னை வருகிறார்கள்

மு.காதர் பட்சா


மு.காதர் பட்சா


மு.காதர் பட்சா & பரமக்குடி முகம்மது இபுராகிம் 


மு.காதர் பட்சா


படங்கள் : ஜபல் அரஃபா,மஸ்ஜித் நம்ரா (அரஃபாத்). 

கடந்த வருடத்தை விட 0.6 % மக்கள் அதிகமாக ஹஜ் செய்து இருக்கிறார்கள் 


Small increase in foreign pilgrims

October 2, 2014

The Minister of Interior announced today that 1,389,053 pilgrims from 163 nationalities have arrived in Saudi Arabia to perform this year's Hajj.  The figure reflects an increase of 8,545 (0.6 percent) over last year.

Ministry of Interior Prince Mohammed bin Naif bin Abdulaziz, who is also Chairman of the Supreme Hajj Committee, said in a report presented to the Custodian of the Two Holy Mosques King Abdullah bin Abdulaziz that 55 percent of this year's pilgrims are male.

The minister said that 1,315,850 pilgrims came by air, 59,204 by land and 13,999 by sea.

http://www.saudiembassy.net/latest_news/news10021401.aspx  







Thursday, 2 October 2014

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஏ.ஜி. நூரானி இதுவரை வெளிவராத உண்மைளை விளக்குகிறார்!

காந்தியை படுகொலை செய்த இந்த RSS பார்ப்பன ஹிந்துத்வா கூட்டம் தான் இன்று நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது 

அதனால் தான் அன்று தீவிரவாதி சாவர்க்கரின் போட்டோவை பாராளுமன்றத்தில் வைத்தார்கள். 

இன்று காந்தி ஜெயந்தியை அரசு விடுமுறையில் இருந்து நீக்க வேண்டும் என்று முடிவு எடுத்து உள்ளார்கள், 

ஆட்சிக்கு வந்தவுடன் கோட்சே தூக்கு தண்டனை சம்மந்தமான எல்லா டாகுமென்ட்களையும் எரித்தார்கள் என்பதில் இருந்து இவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரிய ஆரம்பத்திருக்கிறது. 





கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் அன்று மாலை ஸ்வபன் தாஸ் குப்தா தொலைக்காட்சியில் ஓர் உண்மையை வெளிப்படுத்தினார். 

வி.டி. சாவர்க்கருக்கு மகாத்மா காந்தியின் படுகொலையில் பங்குண்டு என்றும், ஆனால் அவர் தப்பித்து விட்டார் என்றும் மொரார்ஜி தேசாய் சொன்னதாக எல்.கே. அத்வானி தன்னிடம் கூறினார் என்பதுதான் அந்தச் செய்தி.அன்றைய பாம்பே மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் ஒருமுறை இவ்வாறு கூறினார்: 

“காந்தியின் படுகொலை குறித்த புலன் விசாரணை பாம்பே மாகாணத்தில் நடந்து வருகிறது. அதில் நான் நேரடியாகத் தொடர்பு வைத்து கேட்டு அறிந்து வருகிறேன்.”அவருக்கு உண்மை என்ன என்று தெரியும். 

பாம்பே குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) சிறப்புக் கிளையின் துணை கமிஷனராக இருந்த ஜாம்ஷெட் நகர்வாலாவுக்கும் அது தெரியும். அவர் உள்துறை அமைச்சர் மொரார்ஜிக்கு மிக நெருங்கியவராக இருந்தார்.

1948ம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று மத்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இவ்வாறு எழுதியனுப்பினார்:

“காந்தியின் படுகொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தை நான் தினமும் கவனித்து வருகிறேன். சாவர்க்கரின் கட்டுப்பாட்டிலுள்ள ஹிந்து மகாசபாவின் தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலைக்கான சதித் திட்டத்தைத் தீட்டி, அதனை நிறைவேற்றியது.”
(Sardar Patel’s Correspondence, Volume 6, Page 56)

அன்றைய மத்திய அமைச்சரவையில் ஓர் அங்கமாக இருந்த சியாம பிரசாத் முகர்ஜி சாவர்க்கருக்காக பட்டேலிடம் பொருத்தமற்ற முறையில் வக்காலத்து வாங்கி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். 

சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்ட அதே நாளில் சாவர்க்கரின் சார்பில் முகர்ஜி பட்டேலிடம் பேசினார். சியாம பிரசாத் முகர்ஜிதான் சாவர்க்கருக்கு அடுத்தபடியாக ஹிந்து மகாசபாவின் தலைவரானார்.பட்டேல் சியாம பிரசாத் முகர்ஜிக்கு இவ்வாறு பதிலனுப்பினார்:“இந்த வழக்கின் பொறுப்பாளரான பாம்பேயின் அரசுத் தரப்பு வழக்கறிஞர், இன்னபிற சட்ட வல்லுனர்கள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆகியோர் என்னை டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் சந்தித்தனர். நான் அவர்களிடம் ஒன்றைத் தெளிவாகச் சொன்னேன். சாவர்க்கரை இந்த வழக்கில் சேர்ப்பது என்பது முழுக்க முழுக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றின் நிலைப்பாட்டைப் பொறுத்துதான்.

இந்த விவகாரத்தில் அரசியல் வந்து விடக்கூடாது. சாவர்க்கரை வழக்கில் சேர்க்கவேண்டும் என்ற கருத்திற்கு அவர்கள் வருவார்களேயானால் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அதற்கான ஆவணங்கள் என் மேஜைக்கு வரவேண்டும் என்று நான் மீண்டும் அவர்களுக்குத் தெளிவு படுத்தி விட்டேன்.

ஹிந்து மகாசபா ஓர் அமைப்பு என்ற ரீதியில் காந்தி படுகொலையின் சதிக்குக் காரணமில்லை என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். ஆனால் அதே வேளை, அதன் கணிசமான உறுப்பினர்கள் காந்தி படுகொலை நடந்தவுடன் இனிப்பு வழங்கி கொண்டாடியதையும் நாம் கவனிக்காமல் கண் மூடி இருந்துவிட முடியாது. 

இந்த (இனிப்பு வழங்கப்பட்ட) விவகாரம் தொடர்பாக நம்பகமான தகவல்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ளன. அத்தோடு ஆபத்தான இன்னொன்றும் உள்ளது. அது தீவிரவாத வகுப்புவாதம்.

மகந்த் திக்விஜய் நாத், பேரா. ராம் சிங், தேஷ்பாண்டே போன்ற ஹிந்து மகாசபாவின் பேச்சாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்த மதவெறி பிடித்த தீவிரவாத வகுப்புவாதத்தைப் பிரச்சாரம் செய்து வந்தனர். இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெருத்த ஆபத்தை உண்டு பண்ணும் என்பதையும் நாம் மறுக்க முடியாது. 

இதே ஆபத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்தும் உள்ளது. இராணுவ நடவடிக்கைகள் அல்லது பகுதி இராணுவ நடவடிக்கைகளை அது மறைமுகமாக நடத்தி வருகிறது.”
(Sardar Patel’s Correspondence, Volume 6, Pages 65-66)

பட்டேல் முகர்ஜிக்கு மீண்டும் எழுதினார்:“காந்திஜியின் படுகொலை குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தப் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மகாசபா ஆகிய இரு அமைப்புகளின் பங்கு குறித்து நான் இப்பொழுது கருத்து கூறக்கூடாது. ஆனால் ஒன்றை எனக்குக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளின் விளைவால், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளின் விளைவால், நாட்டில் ஒரு சூழல் உருவானது. 

எப்படிப்பட்ட சூழல் என்றால் இப்படிப்பட்ட கொடூரக் கொலைகள் நடப்பதற்கு சாத்தியப்படக்கூடிய அளவுக்கு மோசமான சூழல் உருவானது.ஹிந்து மகாசபாவின் மதவெறி பிடித்த தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலையைச் செய்தது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. 

ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகள் அரசின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அது தடை செய்யப்பட்ட பின்பும், அதன் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்று எனக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. 

மாறாக, உண்மையில் சொல்லவேண்டும் என்றால், அதன் கீழறுப்பு நடவடிக்கைகள் அதிகமாகத்தான் ஆகியிருக்கின்றன.”
(Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323)“

மகாத்மா காந்தியின் வாழ்வும், மரணமும்” (The Life and Death of Mahatma Gandhi) என்ற நூலை ராபர்ட் பெய்ன் (Robert Payne) என்பவர் எழுதி 1969ல் வெளியிட்டார். 

அதில் சாவர்க்கர் குறித்து அவர் இவ்வாறு எழுதுகிறார்:“காந்தி படுகொலை செய்யப்பட்டு 8 மணி நேரத்துக்குள் சாவர்க்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர்தான் இந்தப் படுகொலையின் முதல் சந்தேகத்திற்குரியவர். ஆனால் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் ஆரம்பத்தில் கைது செய்யப்படவில்லை. அவர் லண்டனில் வசித்திருந்தால் உடனே அவர் மீது சந்தேகம் பாய்ந்திருக்கும்.

நாதுராம் வினாயக் கோட்சேதான் சதித் திட்டம் தீட்டுவதற்கு ஒருங்கிணைப்பு செய்தவர் என்று காட்டுவதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு எந்தக் கஷ்டமும் இருந்திடவில்லை.ஆனால் சாவர்க்கர் நேரடியாக இதில் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்படுவதற்கு மிகுந்த கஷ்டம் இருந்தது. 

படுகொலை நடப்பதற்கு முன்பாக பல மாதங்கள் தான் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், சொற்ப நபர்களே தன்னை வந்து சந்தித்ததாகவும், கோட்சேயோ, நாராயண் டி. ஆப்தேயோ தன்னை ஒரு வருடத்திற்கும் மேலாக சந்திக்கவேயில்லை என்றும் சாவர்க்கர் கூறினார்.

காந்திப் படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது ஜனவரி 27ம் நாள், திகாம்பர் பாட்கே என்பவர் கோட்சேவையும், ஆப்தேவையும் பாம்பேயில் சாவர்க்கர் இல்லத்திற்கு காலை 9 மணிக்கு அழைத்துச் சென்றார். பாட்கே கீழ்த்தளத்தில் காத்திருக்க, தங்கள் அரசியல் குருவான சாவர்க்கரை கடைசியாக ஒரு முறை பார்க்கவும், இறுதிக் கட்ட அறிவுரைகளைக் கேட்டு விட்டுப் போகவும் கோட்சேவும், ஆப்தேவும் மேல் தளத்திற்குச் சென்று சாவர்க்கரைச் சந்தித்தனர்.ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் கோட்சேவும், ஆப்தேவும் திரும்பி கீழ்த்தளத்திற்கு வந்தனர். அவர்களுடன் சாவர்க்கரும் வந்தார். “வெற்றியுடன் திரும்பி வாருங்கள்” என்று சாவர்க்கர் அவர்களிடம் சொன்னார். இந்தப் படுகொலைக்கு தார்மீக ரீதியான அதிகப் பொறுப்பு சாவர்க்கருக்கே உள்ளது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323) 

1975ம் ஆண்டு லாரி காலின்ஸ், டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய மிகப் பிரபலமான “நள்ளிரவில் சுதந்திரம்” (Freedom at Midnight) என்ற நூல் வெளிவந்தது. 

அந்த நூல் காவல்துறை ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேற்கு பாகிஸ்தானிலிருந்து இங்கே வந்த அகதியான மதன்லால் கே. பஹ்வா 1948ம் ஆண்டு ஜனவரி 20 அன்று காந்தி பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு குண்டை வெடிக்கச் செய்தான். அவனுடன் கூட வந்த கோட்சேயும், இன்னும் சிலரும் தப்பி ஓடி விட்டனர்.

அடுத்த நாள், இந்த வழக்கு விசாரணையை பாம்பே மாகாண உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் காவல்துறை அதிகாரி நகர்வாலாவிடம் ஒப்படைத்தார். 

“நள்ளிரவில் சுதந்திரம்” நூலில் அதன் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்:“நகர்வாலா மதன்லாலைப் பிடிக்க அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார். காந்தியைக் கொல்ல முனைந்தவர்கள் பனை மரங்களுக்கிடையில் அமைதியாக இருந்த வீடுகளைக் கடந்து பாம்பேயின் கெலுக்சர் சாலையில் அமைந்துள்ள சாவர்க்கரின் வீட்டிற்குச் சென்றார்கள் என்பதைக் கண்டறிய அந்த இளம் அதிகாரிக்கு வெகு நாட்கள் பிடிக்கவில்லை. 

மதன்லால் அந்தக் கொலை முயற்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாவர்க்கரை அவரது வீட்டில் வைத்து சந்தித்ததை அடிப்படையாக வைத்து சாவர்க்கரைக் கைது செய்ய நகர்வாலா மொரார்ஜியிடம் அனுமதி கேட்டார்.

மொரார்ஜி கோபத்துடன் அதற்கு மறுத்ததுடன் இவ்வாறு அந்த அதிகாரியிடம் எரிந்து விழுந்தார்: “உமக்கென்ன பைத்தியமா? இந்த மொத்த மாகாணமும் தீக்கிரையாகிப் போக வேண்டும் என்று நீர் எண்ணுகிறீரா?”நகர்வாலாவால் சாவர்க்கரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்தான் போட முடியவில்லை. 

ஆனால் ஒரு காரியம் செய்தார். பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட அதிபுத்திசாலிப் பிரிவான ‘கண்காணிப்பாளர் பிரிவு’ (Watchers’ Branch) என்ற பிரிவுக்கு சாவர்க்கரைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைக்க முடிந்தது.”(நள்ளிரவில் சுதந்திரம், பக். 417)

சாவர்க்கர் தீவிரக் கண்காணிப்பின் கீழ் வந்தார். ”ஜிம்மி நகர்வாலாவின் பாம்பே புலன் விசாரணை முதல் 48 மணி நேரத்தில் கொஞ்சம் புதிய செய்திகளைக் கொண்டு வந்தது. பாம்பே கண்காணிப்பாளர் பிரிவு சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கர் இல்லத்தின் முன்பு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டது. ஆனால் அதிபுத்திசாலியான சாவர்க்கர் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தவில்லை.

சில ஆபத்தான மர்ம அலை அந்த இல்லத்திலிருந்து வெளிவருவது போலிருந்தது.சாவர்க்கரின் வீட்டைச் சுற்றி அவரின் சீடர்களின் நடமாட்டங்களில் நகர்வாலாவுக்கு சந்தேகம் பிறந்தது. அவரது போலீஸ் மூளை ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போவது குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தது. டெல்லி காவல்துறைத் தலைவரிடம் நகர்வாலா இவ்வாறு கூறினார்: “ஏன் என்று கேட்காதீர்கள். இன்னொரு கொலை முயற்சி நடக்கவிருக்கிறது. இங்கு நிலவும் சூழ்நிலையை வைத்து நான் இதனை உணர்கிறேன்.”(நள்ளிரவில் சுதந்திரம், பக். 429-430) - 

மொரார்ஜியின் மௌனம், 

ஒரு நீதிபதியின் தடை மெரார்ஜி மிகத் தாமதமாக தன் கருத்தைத் தெரிவித்தார். காந்தி படுகொலை வழக்கில் அவர் ஆதாரங்களைத் தந்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் சி.கே. தஃப்தாரி என்பவர் நீதிபதி அத்மா சரணுக்கு அளித்த மனுவின் உள்ளடக்கச் செய்தியை 1948ம் ஆண்டு செப்டம்பர் 1 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் வெளியிட்டது. அதில் சாவர்க்கர் சம்பந்தப்பட்ட செய்தி உள்ள பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“கண்ணியத்திற்குரிய மொரார்ஜி தேசாய் அவர்களைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கர்) வழக்கறிஞர் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டார்: “சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பேரா. ஜெய்னின் கூற்று போக, உங்களுக்கு சாவர்க்கர் குறித்து வேறு ஏதேனும் தகவல் தெரியுமா?” “மொரார்ஜி இதற்கு இவ்வாறு பதிலளித்தார்: “நான் முழு உண்மைகளையும் சொல்லட்டுமா? நான் பதிலளிக்கத் தயாராகவே வந்திருக்கிறேன். சாவர்க்கர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்?”

குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கரின்) வழக்கறிஞர் தான் கேட்ட கேள்வியைப் பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்தக் கேள்வி, பதில், சாவர்க்கரின் வழக்கறிஞரின் கூற்று இவையனைத்தையும் நீதிமன்றத்தில் பதிவு செய்ய அனுமதிக்கும்படி நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதி அவ்வாறு பதிவு செய்வதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.

”இப்படி நீதிபதி போட்ட தடையை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏப்ரல் 8, 1948 அன்று பாம்பே சட்டசபையில் மொரார்ஜி வெளிப்படையாக இவ்வாறு சொன்னார்:

“சாவர்க்கரின் கடந்த கால சேவைகள் அனைத்தும் இந்தத் தீய சேவையின் மூலம் அழிந்துவிட்டது.”அனைத்துக் கொலைகளிலும் முக்கிய குற்றவாளிக்கெதிரான வழக்கில் அவருடன் கூட சென்று, அந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்து, பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூற அனுமதிக்கப்பட்ட ஒருவரின் (அப்ரூவராக மாறியவரின்) வாக்குமூலம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறும்.காந்திப் படுகொலை வழக்கில் அது நடந்தது டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரால். இந்த வழக்குக்குத் தீர்ப்பளித்த நீதிபதி ஆத்மா சரண் தனது தீர்ப்பில் டிகாம்பர் பாட்கேவின் வாக்குமூலத்தை மிகத் துல்லியமாக அலசுகிறார்.“

டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் 20.07.1948 முதல் 30.07.1948 வரை நடைபெற்றது. அவர் ஏழு நாட்கள் குறுக்கு விசாரணை மட்டும் செய்யப்பட்டார். ஆதலால் அவரது ஆதாரம் கொடுக்கும் விதம், அவரது அந்தஸ்து அனைத்தையும் அறிய முடிந்தது. அவர் அவரது தரப்பு உண்மைகள் அனைத்தையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக விவரித்தார். அவர் எந்தவொரு குறுக்கு விசாரணைக் கேள்விக்கும் நழுவலாக பதில் சொல்லவில்லை. அல்லது அந்தக் கேள்வியிலிருந்து தப்பிக்க முயலவில்லை. இவ்வளவு நீண்ட நெடிய சம்பவத்தை பிசிறில்லாமல் துல்லியமாகச் சொல்வது வேறு யாருக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இவ்வளவு நீண்ட விஷயங்களை எவராலும் மனனம் செய்யமுடியாது.

“அப்ரூவர் அவரது ஆதாரத்தில் சொல்லும்பொழுது, 20.01.1948 அன்று மெரினா ஹோட்டலில் வைத்து அவர்கள் வெடிப்பஞ்சுகளுக்கு பிரைமர் பொருத்தியதாகவும், கையெறி குண்டுகளுக்கு வெடிக்கருவி பொருத்தியதாகவும், சதித்திட்டம் குறித்து கலந்தாலோசித்ததாகவும், அவர்களிடையே சில “விஷயங்களை” பரிமாறிக்கொண்டதாகவும் கூறுகிறார்.

ஆனால் இதற்கு நேரடி தொடர் ஆதாரம் எதனையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்க முடியவில்லை ஆனால் மறுமகமான தொடர் ஆதாரம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. நைன் சிங் என்பவரின் ஆதாரத்தின் படி (விசாரணைகள் பி-17, பி-24 ஆகியன ஆதரித்தபடி) மூன்று தேநீர்கள் சொல்லப்பட்டு, அறை எண் 40ல் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.“

ஆதாரங்களை ஆராயும்பொழுது ஒரு விஷயம் எல்லோருக்கும் நன்றாக விளங்கும். அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கூறும்பொழுது அதன் வெளிச்சத்தில் முந்தைய நடப்புகளையும் நாம் கணித்துக்கொள்ளலாம். அப்ரூவரின் வாக்குமூலம் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளுக்கு முழுமையாகப் பொருந்துகிறது. தொடராகவும் அமைந்துள்ளது. 

ஆனால் வி.டி. சாவர்க்கர் போன்ற சில குற்றவாளிகளை அடையாளப்படுத்தும் விஷயத்தில் அப்ரூவரின் ஆதாரம் தொடராக இல்லை.“அப்ரூவர் (சாவர்க்கர் விஷயத்தில்) கூறிய ஆதாரம் என்னவென்றால் 

14.01.1948 அன்று நாதுராம் வி. கோட்சேயும், நாராயண் டி. ஆப்தேவும் அவரை தாதரில் உள்ள ஹிந்து மகாசபா அலுவலகத்திலிருந்து சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். 

“விஷயத்தை” வைப்பதற்கு சில ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருப்பதாக அவரிடம் சொல்லப்பட்டது. “விஷயம்” அடங்கிய பையைக் கையில் வைத்திருந்த கோட்சேவும், ஆப்தேவும் சாவர்க்கர் சதானின் வெளியில் அப்ரூவரை விட்டு விட்டு வீட்டின் உள்ளே சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் அதே பையுடன் வெளியே வந்தனர்.“

அதன் பிறகு அப்ரூவர் என்ன சொல்கிறார் என்றால், 15.01.1948 அன்று, தீட்சித் மகாராஜ் கோயிலின் சுற்றுச்சுவருக்கருகில் வைத்து நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் இவ்வாறு கூறினார்: “காந்தி கொல்லப்படவேண்டும் என்று சாவர்க்கர் தீர்மானித்திருக்கிறார். அந்த வேலையை எங்களிடம் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்.” “

அதன் பிறகு அப்ரூவர் சொல்வது என்னவென்றால், 17.01.1948 அன்று கடைசியாக ஒரு தடவை சாவர்க்கரைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று நாதுராம் வி. கோட்சே சொன்னார். அதன்படி அவர்கள் சாவர்க்கர் சதானுக்குச் சென்றனர். நாராயண் டி. ஆப்தே தரைத் தளத்திலுள்ள ஓர் அறையில் அப்ரூவரைக் காத்திருக்குமாறு கூறிவிட்டு, அவரும், கோட்சேவும் முதல் தளத்திற்குச் சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் கீழே வந்தனர். அவர்களுக்குப் பின்னால் சாவர்க்கரும் தொடர்ந்து வந்தார். நாதுராம் வி. கோட்சேவையும், நாராயண் டி. ஆப்தேவையும் நோக்கி சாவர்க்கர் “யஷஸ்விஹூன்யா” (சென்று வாருங்கள், வென்று வாருங்கள்) என்று கூறினார்.“

சாவர்க்கர் சதானிலிருந்து திரும்பி வரும்பொழுது நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் சாவர்க்கர் தங்களிடம் இவ்வாறு கூறியதாகக் கூறினார்: “காந்தியின் 100 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த வேலை வெற்றிகரமாக முடியும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை”.

“வினாயக் டி. சாவர்க்கர் மேல் அரசுத்தரப்பு தொடுத்துள்ள வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தை மட்டுமே மையமாக வைத்து அமைந்துள்ளது. வினாயக் டி. சாவர்க்கருக்கெதிரான அப்ரூவரின் கூற்றே அரசுத் தரப்பு விளக்கத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. அப்ரூவர் கூறும் நிகழ்வுகளின் இடைத்தொடர்ச்சிக்கு செல்வி ஷாந்தாபாய் பி. மோடக், அய்தப்பா கே. கோடியான் ஆகிய இருவரின் ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

ஆனால் நீதிமன்றம் அந்த இருவரையும் அவ்வளவு முக்கியமாகக் கருதவில்லை.“சாவர்க்கரின் இல்லத்தில் முதல் தளத்தில் நாதுராம் வி. கோட்சேவுக்கும், நாராயண் டி. ஆப்தேவுக்கும் இடையில் என்ன உரையாடல் நடைபெற்றது, அவ்விருவருக்கும், சாவர்க்கருக்குமிடையே என்ன உரையாடல் நடைபெற்றது என்பது குறித்த எந்த விவரமும் வழக்குப் பதிவில் இல்லை. 

ஆதலால் சாவர்க்கர் அப்ரூவர் முன்னிலையில் கோட்சேயிடமும், ஆப்தேவிடமும் (சென்று வாருங்கள், வென்று வாருங்கள் என்று) வாழ்த்துக் கூறியது மகாத்மா காந்தியின் படுகொலை சம்பந்தப்பட்டதுதான் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.“ஆதலால் அப்ரூவரின் கூற்றை வைத்து சாவர்க்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது 
உறுதியில்லாததாக ஆகிறது.”

ஆக, அப்ரூவராக மாறிய பாட்கே உண்மையான ஒரு சாட்சிதான் என்று நீதிபதி ஒப்புக்கொண்டாலும், சாவர்க்கர் சம்பந்தப்பட்டு அவர் கூறிய நிகழ்வுகள் ஒப்புறுதிப்படுத்தப்படாததால் (uncorroborated), அதன் தொடர்ச்சி உறுதிப்படுத்தப்படாததால் சாவர்க்கருக்கு தண்டனை அளிப்பது “பாதுகாப்பற்றது” என்று நீதிபதி கருதுகிறார்.

ஆனால், ஏழு பக்கங்கள் கழித்து, அடுத்த அத்தியாயத்தில் (XXV), பாட்கே குறித்து நீதிபதி கூறிய கருத்துகளுக்கு அவரே முரண்படுகிறார். ஆதாரச் சட்டத்தின் அடிப்படையில் சாவர்க்கரை சிறைக்கு அனுப்புவது “பாதுகாப்பற்றது” என்றுதான் நீதிபதி கூறியுள்ளார். 

ஆனால் சாவர்க்கரின் பங்கு குறித்து நீதிபதி இவ்வாறு கூறுகிறார்:“வினாயக் டி. சாவர்க்கர் அவரது வாக்குமூலத்தில் இந்தச் ‘சதி’யில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுகிறார். தனக்கு கோட்சே, ஆப்தே ஆகியோர் மேல் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்றும் கூறுகிறார். 

மேலே குறிப்பிடப்பட்டது போல் அரசுத்தரப்பு வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக குறிப்பிடப்பட்டது போல் அப்ரூவரின் கூற்றை மட்டுமே வைத்து சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது பாதுகாப்பற்றது. 

ஆதலால் 20.01.1948 அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்று கருதுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை.

”இந்த இறுதி வாக்கியம் தீர்ப்பின் இடைக்கூற்று மட்டுமே. இதற்கு சட்டரீதியாக எந்த மதிப்பும் இல்லை. அப்ரூவர் பாட்கேயின் வாக்குமூலத்தில் 20.01.1948 அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்ரூவரின் கூற்றில் நம்பகத்தன்மைக்கு எந்தக் குறைவுமில்லை. ஆனால் ஒப்புறுதிப்பாடு (corroboration) குறைபாடு மட்டுமே உள்ளது.ஆதாரம் ஒப்புறுதிப்படுத்தப்பட்டது, ஆனால் மிகத் தாமதமாக!

சாவர்க்கரின் மரணத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவரது உதவியாளர்கள் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷன் முன் காந்திப் படுகொலை குறித்து பேசினார்கள். அப்பொழுது அப்ரூவர் பாட்கேவின் கூற்றுகளுக்கு போதுமான அளவு ஒப்புறுதிப்பாட்டைக் கொடுத்தார்கள்.

நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷனின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: 

“1948 மார்ச் 4ம் தேதி பாம்பே போலீசில் பதிவு செய்யப்பட்டபடி, சாவர்க்கரின் மெய்க்காப்பாளரான அப்பா ராம்சந்த்ர காசரின் வாக்குமூலம் இவ்வாறு கூறுகிறது: 

1946லேயே ஆப்தேவும், கோட்சேவும் சாவர்க்கரை அடிக்கடி சந்திக்க வருவர். கர்க்கரேயும் சில நேரங்களில் சாவர்க்கரைச் சந்திக்க வருவார். 1947 ஆகஸ்ட் மாதம் சாவர்க்கர் ஒரு கூட்டம் சம்பந்தமாக பூனா சென்றிருந்தபொழுது கோட்சேயும், ஆப்தேயும் அவர் கூடவே எப்பொழுதும் இருந்தனர். அவர்கள் சாவர்க்கருடன் ஹிந்து மகாசபாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். தனக்கு வயதாகிக்கொண்டு வருவதாகவும், அவர்கள்தான் இந்தப் பணியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சாவர்க்கர் ஆப்தேவிடமும், கோட்சேயிடமும் கூறினார். 

1947 ஆகஸ்ட் 5 அல்லது 6ம் தேதி, டெல்லியில் அனைத்திந்திய ஹிந்து மாநாடு நடைபெற்றது. அதற்கு சாவர்க்கரும், கோட்சேயும், ஆப்தேவும் விமானத்தில் சென்றனர். அதேபோல் அங்கிருந்து பாம்பேக்கு ஒன்றாகவே விமானத்தில் திரும்பினர். 

1948 ஜனவரி 13 அல்லது 14 அன்று, கர்க்கரே ஒரு பஞ்சாபி இளைஞனோடு சாவர்க்கரிடம் வந்தார். அவர்கள் சாவர்க்கரை 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேட்டி கண்டனர். அதேபோல் 15 அல்லது 16ம் தேதி, ஆப்தேவும், கோட்சேவும் இரவு 9.30 மணியளவில் சாவர்க்கரைப் பேட்டி கண்டனர். அதற்கு ஒரு வாரம் கழித்து, 23 அல்லது 24 தேதியாக இருக்கலாம், ஆப்தேவும், கோட்சேவும் மீண்டும் சாவர்க்கரைச் சந்திக்க வந்தனர்.காலை 10 முதல் 10.30 மணியளவில் அவருடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.”இப்படிப் போகிறது அந்த அறிக்கை.

ஆக, சாவர்க்கர் காந்திப் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதுது முழு முதல் உண்மை. 

வழக்கு நடந்த நேரத்தில் அப்ரூவரின் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி கருதியதால் சாவர்க்கர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதற்குப் பின்னால் வந்த அனைத்து ஆதாரப்பூர்வ தகவல்களும் காந்தியின் படுகொலையில் சாவர்க்கருக்கு முழு பங்கிருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இதனை உணர்ந்து நாட்டையே களங்கப்படுத்தும் விதமாக பா.ஜ.க. அரசு பாராளுமன்றத்தில் சாவர்க்கருக்கு வைத்த சிலை அகற்றப்படுமா? - 

-- 
with peace,
Shajahan Mohamed Umer
"Help People"
"Worship the Creator not his creations"

"There is none worthy and worship the God except the one.
  We can't create idols or statues of the God because No one has seen the God" (Logic)
என்னுடைய நாடு இந்த உலகம்உலகத்தில் வாழும் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்பங்காளிகள். நாம் அனைவரும் ஒரு தாய் தந்தை மக்கள். உலக மக்கள் அனைவரையும் நேசிக்கிறேன், மதிக்கிறேன், மரியாதை செலுத்துகிறேன். எனக்கு இனவெறி, நிறவெறி, மதவெறி, ஜாதிவெறி, மொழிவெறி, பணவெறி, தேசியவெறி, கோத்திரவெறி,குடும்பவெறி, பெருமை, கர்வம், அகம்பாவம், பரிகாசம், திமிர், தெனாவட்டு போன்ற எதுவும் கிடையாதுஉலக மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம், அது அவர்கள் இஷ்டம். நன்மையை ஏவ வேண்டும், தீமையை தடுக்க வேண்டும்.

" ஒன்றே குலம் ஒருவனே தேவன், 
  யாதும் ஊரே யாவரும் கேளீர், 
  பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் "

உதவி செய்வது அனைத்தும் தர்மமாகும்.

Wednesday, 1 October 2014

அரஃபா நாள் நோன்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

"நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நாள் நோன்பு நோற்பது பற்றி கேட்கப்பட்டது,அதற்கு நபி (ஸல்) அவர்கள் முந்தைய மற்றும் பிந்தைய வருடத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம்)
எனவே அந்நாளில் நோன்பு நோற்று அல்லாஹ்வின் அருளை பெற உங்களுக்கு நினைவூட்டுகிறது .

UAE - 03.10.2014

INDIA - 05.10.2014

எப்படி வந்தது குடியரசு ?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இன்றைய தலைமுறையினர், சுதந்திர தினம் எப்போது என சொல்லி விடுவர். ஆனால் குடியரசு தினம் எப்போது, ஏன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டால், அனைவருக்கும் பதில் தெரியுமா என்பது சந்தேகமே.
குடியரசு என்பதன் நேரடிப் பொருள், “மக்களாட்சி’. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் நடவடிக்கையில் மக்கள் பங்கேற்கின்றனர். குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில், நேரடியாகவே மக்களால் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறைதான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.
எப்படி வந்தது குடியரசு: நாடு சுதந்திரம் பெறும் முன், பல சுதந்திர போராட்ட தலைவர்களும் ஆங்கிலேயரிடம் இருந்து “டொமினியன்’ அந்தஸ்து பெற்றால் போதும் என எண்ணினர். டொமினியன் அந்தஸ்து என்பது, பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். இதற்கு நேரு, நேதாஜி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், முழுமையான சுயராஜ்யம் தான் லட்சியம் என சுதந்திர போராட்ட தலைவர்களிடம் மாற்றம் வந்தது. 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள், தங்கள் விருப்பத்துக்கு செயல்படக் கூடாது என்பதற்காக அரசியலமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியலமைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.
அடிப்படை கடமைகள்: இந்திய அரசியலமைப்பு சட்டம், பகுதி 5ல் மக்களின் அடிப்படைக் கடமைகள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.
* தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும்
* அனைவரும் நாட்டுக்காக சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
* ஜாதி, மதம், இன பாகுபாடின்றி சகோதர மனப்பான்மையோடு ஒன்றாக பழக வேண்டும்.
* பாரம்பரியம், கலாசாரத்தை பின்பற்ற வேண்டும்.
* இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.
* வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், அறிவியல் மற்றும் மனிதாபிமான உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
* அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
* 6-14 வயது குழந்தைகள் கல்வி பெறுவது அவசியம்.
எதிரிகள் ஜாக்கிரதை: இந்திய பாதுகாப்பு படைகளில், தரைப்படையே (ராணுவம்) பெரியது. எல்லைப் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரங்கள், அமைதியை நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை இவற்றின் பணி.
மத்திய படைப் பிரிவு: இது, உ.பி.,யில் உள்ள லக்னோவை தலைமையகமாக கொண்டது. இதன் தலைவர் (கமாண்டர் ஆப் சீப் – ஜி.ஓ.சி.,) ஓம் பிரகாஷ்.
கிழக்கு படைப்பிரிவு: கோல்கட்டாவை தலைமையகமாக கொண்டது. இதன் தலைவர் குல்திப் சிங் ஜம்வால்.
வடக்கு படைப் பிரிவு: காஷ்மீரில் உள்ள உதம்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் இதன் தலைவர் ஹர்சரண்ஜித் சிங் பனாக்.
தெற்கு படைப்பிரிவு: 1895ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படைப்பிரிவானது, சுதந்திரத்தின் போதும், இந்திய மாகாணங்கள் பிரிக்கும் போது முக்கிய பங்கு வகித்தது. தவிர, 1961ல் கோவாவை இணைக்கும் போதும், 1965 மற்றும் 1971ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும் சிறப்பாக செயல்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள புனேயை தலைமையிடமாக கொண்டுள்ளது. இதன் தலைவர் நோபல் தம்புராஜ்.
தென் மேற்கு படைப்பிரிவு: ராஜஸ் தானில் உள்ள ஜெய்ப்பூரை தலைமையகமாக கொண்டு துவங்கப்பட்டது. இதன் தலைவர் பர்மேந்திர குமார் சிங்.
மேற்கு படைப்பிரிவு:1947ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள இந்த படைப்பிரிவு, அரியானா மாநிலத்தில் உள்ள ஜந்தர்மந்தரை தலைமையிடமாக கொண்டது. இதன் தலைவர் தல்ஜித் சிங்.
வேண்டும் விமானம் தாங்கி கப்பல்: ராணுவப் பாதுகாப்பு படைப் பிரிவில், விமானம் தாங்கி கப்பல்களுக்கு தனி இடம் உண்டு. அண்டை நாடுகளுடன் போரிடும் போது,போர் விமானங்களை தாங்கிச் சென்று எளிதில் தாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், 28,700டன் எடை கொண்ட ஐ.என்.எஸ்.விராத் என்ற விமானம் தாங்கி கப்பல் 1987ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இது தவிர, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா (2012), ஐ.என்.எஸ்.,விக்ராந்த்(2014), ஐ.என்.எஸ்., விஷால்(2017) ஆகிய கப்பல்கள் கட்டுமானப் பணியில் உள்ளன.
பாசறை திரும்புதல்: குடியரசு தின விழா முடிந்து, மூன்று நாட்கள் கழித்து படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜனவரி 29ம் தேதி மாலை மூன்று படைகளும் இவ்விழாவில் பங்கேற்கும். ராஷ்டிரபதி பவனில் விஜய் சவுக் என்ற பகுதியில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தரைப்படை, கடற்படை, விமானப்படையின் “பேண்டு’ வாத்திய இசையுடன் விழா துவங்குகிறது. ஜனாதிபதி தனது பரிவாரங்களுடன் இந்த விழாவுக்கு தலைமை ஏற்கிறார். ஜனாதிபதிக்கு “சல்யூட்’ அளிக்கப்பட்டு, “பேண்டு’ வாத்தியம், “டிரம்பட்’டில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. ஜனாதிபதி வணக்கம் செலுத்துவதுடன் படை திரும்புதல் நிகழ்ச்சி நிறைவடைகிறது.
கொள்ளை கொள்ளும் குடியரசு அணிவகுப்பு: 1950ம் ஆண்டு ஜன.26ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளை ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். 1930ம் ஆண்டு ஜனவரி 26 அன்று, இந்திய விடுதலை இயக்கத்தினர் “பூரண சுதந்திரம்’ அடைய தீர்மானம் நிறைவேற்றினர். அந்த தினத்தை நினைவு கூரும் வகையில் ஜன.26, குடியரசு தினமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. குடியரசு தின விழாவில் ராணுவ அணிவகுப்பு முக்கிய இடம் பெறுகிறது. தலைநகர் டில்லியில் உள்ள இந்தியா “கேட்டில்’ பிரதமர் வீரவணக்கம் செலுத்தி விழாவை துவக்கி வைக்கிறார். ஜனாதிபதி மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
ராணுவ அணிவகுப்பின் சிறப்பம்சங்கள்:
* காலை 9.30க்கு துவங்கும் அணிவகுப்பு மூன்று மணி நேரம் நடக்கிறது.
* ஐந்து கி.மீ., தூரமுள்ள “ராஜ்பாத்’ சாலையில் அணிவகுப்பு நடக்கும். இது ராஷ்டிரபதி பவனில் ஆரம்பித்து செங் கோட்டை, இந்தியா “கேட்’ வழியாக செல்கிறது.
* அணிவகுப்பு துவக்கத்தின் போது பிரதமர், இந்தியா “கேட்டில்’ உள்ள அமர் ஜவான் ஜோதியில், போரின் போது உயிர் நீத்தவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்.
* ஜனாதிபதி 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
* தரைப்படை, கடற்படை, விமானப்படை என்ற வரிசையில் அணிவகுப்பு நடைபெறும்.
* இந்திய கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வண்ணம் அணிவகுப்பு நிகழ்ச்சி இருக்கும்.
* இறுதியில் விமான சாகசம் நடக்கும்.
* இந்தியா முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1,200 பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம்பெறும். மாநிலங்களின் கிராமியக் கலை நிகழ்ச்சியும், பழங்குடி இனத்தவரின் நடனமும் இதில் இருக்கும்.
* முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
* அணிவகுப்புக்கு மொபைல், கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை.
நன்றி: ஞானமுத்து

இவர் அஷ்ஷைக் அப்துர் ரஸ்ஸாக் அல் ஹலபி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இவர் அஷ்ஷைக் அப்துர் ரஸ்ஸாக் அல் ஹலபி.
ஷாம் நாட்டைச் சார்ந்தவர்.
திருக்குர் ஆனை ஓதிய நிலையிலேயே அல்லாஹ் அவரின் ரூஹை எடுத்துவிட்டான்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
********************
اللهم انا نسالك حسن الخاتمه
இறைவா ! நாங்கள் உன்னிடம் கேட்கிறோம்.
எங்களின் இறுதி முடிவை அழகிய முறையில் ஆக்கித்தருவாயாக !!
Abdul Kader Manbayee