முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Monday, 24 June 2024
Digital Journalism இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி
மடைதிறந்த வெள்ளமாய் கருத்துக்களும் தகவல்களும்
வலிமையான சமூகம் என்பது எண்ணிக்கையை கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை.
Digital journalism பயிற்சி வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது.
முதன்முறையாக ஒளிமூலமாக ஒற்றை மூலக்கூற்றை கண்டறிந்தத நோபல் பரிசு பெற்ற
மதுக்கூரில் மதுக்கடை திறக்க மனிதநேய மக்கள் கட்சி எதிர்ப்பு -
இருபது கோடி முஸ்லிம்கள் பக்ரீத் திருநாளை கொண்டாடினர்..
Thursday, 13 June 2024
கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை
Thursday, 6 June 2024
யார் அந்த கருப்பாடுகள்?
லோக்சபாவில் குறைந்த முஸ்லீம் எம்பி-கள்..
லோக்சபாவில் குறைந்த முஸ்லீம் எம்பி-கள்.. தேர்தலில் கட்சிகளின்
பாரபட்சம்? 2014க்கு பின் நடந்த மாற்றம் By Yogeshwaran Moorthi Published:
Thursday, June 6, 2024, 15:01 [IST] சென்னை : 543 எம்பி-க்களை கொண்டுள்ள லோக்சபாவில்
26 இஸ்லாமிய எம்பி-க்கள் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டனி 292 தொகுதிகளிலும்,
இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் தெலுங்கு தேசம், ஐக்கிய
ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்
ஒவ்வொரு கட்சிகளின் வாக்கு சதவிகிதமும், எம்பி-க்களின் பிரநிதிதித்துவம் குறித்த தகவல்
தெரிய வந்துள்ளது. லோக்சபா தேர்தல் 2024 தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் முடிவுகள்
அதன்படி 18வது லோக்சபா தேர்தலில் மொத்தமாக 26 இஸ்லாமிய எம்பி-க்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர்.
லோக்சபாவில் மொத்தவுள்ள 543 எம்பி-க்களில் வெறும் 26 பேர் மட்டும்
இஸ்லாமிய எம்பி-க்கள் என்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு
லோக்சபா தேர்தல் முடிவிலும் இஸ்லாமிய எம்பி-க்களின் எண்ணிக்கையும் 26ஆக இருந்தது.
5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதே எண்ணிக்கையிலான இஸ்லாமிய எம்பி-க்களே நாடாளுமன்றம்
செல்கின்றனர். லோக்சபா வரலாற்றில் 2014ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தான் குறைந்த
அளவிலான இஸ்லாமிய எம்பி-க்களே நாடாளுமன்றம் சென்றனார். அப்போதைய எண்ணிக்கை 22ஆக இருந்தது.
அதேபோல் 1980 லோக்சபா தேர்தலில் மொத்தமாக 49 இஸ்லாமிய எம்பி-க்களே தேர்வு செய்யப்பட்டதாக
அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இந்தியாவில் 2வது அதிகபட்ச வாக்கு வங்கியையும் வைத்திருந்தாலும்
இஸ்லாமிய எம்பி-க்களின் பிரதிநிதித்துவம் 10 சதவிகிதம் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chandrababu Naidu - Stalin சந்திப்பு…பாஜகவுக்கு Message சொன்ன Stalin | Oneindia
Tamil ஏனென்றால் இந்தியாவில் உள்ள பல்வேறு தொகுதிகளிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க
கூடிய சக்தியாக இஸ்லாமிய மக்கள் இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய கட்சிகள் இஸ்லாமியர்களை
வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையும் குறைத்து வருகிறது. 2019ஆம் ஆண்டு லோக்சபா
தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இஸ்லாமியர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. ஆனால்
2024 லோக்சபா தேர்தலில் வெறும் 19 இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளது.
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2019 லோக்சபா தேர்தலில் 13 பேருக்கு வாய்ப்பு கொடுத்த
நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை வெறும் 6ஆக குறைந்துள்ளது. இதில் சமாஜ்வாதி கட்சியும்
இணைந்துள்ளது. கடந்த தேர்தலில் 8 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தது.
இந்த தேர்தலில் 4 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Advertisement முத்தலாக்,
370-வது பிரிவு நீக்கம், 33% இடஒதுக்கீடு, செங்கோல்..17-வது லோக்சபாவில் மோடியின் கடைசி
உரை!