Monday, 24 June 2024

வலிமையான சமூகம் என்பது எண்ணிக்கையை கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


உங்கள் கனிவான உள்ளத்திற்கு 
அன்பான சலாம்.

வலிமையான சமூகம் என்பது எண்ணிக்கையை கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. 
அச்சமுகம் வெளிப்படுத்தும் அறிவார்ந்த அல்லது திறன் சார்ந்த செயல்பாட்டின் வெளிப்படுதலை கொண்டே அவை தீர்மானிக்கப்படுகின்றன. 
6 நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று பின்புலத்தில் 
ஆட்சி அதிகாரமிக்க சமூகமாக இருந்த முஸ்லிம் சமூகம் 
விடுதலைப் பெற்ற அரை நூற்றாண்டிற்குள் அத்தனை பெரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. 
கிட்டத்தட்ட எல்லா துறைகளில் இருந்தும் முழுமையாக வெளியேற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். 
இதனால் அதிகார வன்முறை, 
அரசியல் வன்முறை, 
என்று பல்வேறு வன்முறைகளுக்கு இந்தச் சமூகம் இறையாகி இருக்கிறது. 
இவற்றில் எல்லாம் பேரிழப்பையும் பெருத்த அவமானத்தையும் தேடி தந்தது 
ஊடக வன்முறைதான். 
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது 
இந்திய அளவில் நிகழ்த்தப்பட்ட ஊடக வன்முறையால் 
அளவிட முடியாத இழப்பையும் அவமானத்தையும் இந்த சமூகம் சந்தித்திருக்கிறது. 
இத்தகைய பெருத்த சமூக அவமதிப்புக்கு காரணம் 
ஊடகத்துறையில் 
கடந்த அறை நூற்றாண்டில் முஸ்லிம் சமூகம் எந்தவித பங்களிப்பையும் செய்யாமல் விட்டு வைத்ததுதான் முதன்மை காரணம். 
அதிகார, அரசியல், கார்ப்பரேட் சட்டைகளுக்குள் மட்டுமே இருந்து இயங்கும் நிலையில் இருக்கும் ஊடகத்தால் இத்தனை பெரிய வன்முறையை ஒரு சமூகத்தின் மீது நிகழ்த்த முடியும் என்றால்! 
வளர்ந்து வரும் உலகின் வியக்கத்தக்க அதிசயமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் 
டிஜிட்டல் ஊடகம் சாமானியன் ஒவ்வொருவருக்கும் கைக்குள் வந்து அமர்ந்து கொண்டு 
அது தன் விளையாட்டை துவக்கினால் 
இன்னும் பெரும் வீழ்ச்சியையும் இழிவையும் இந்த சமூகம் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்ததன் அடிப்படையில் 
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வலிமையான ஊடகமாக திகழப்போகும் 
டிஜிட்டல் ஊடக துறையில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை, 
தமிழர்களின் பங்களிப்பை வலிமையாக உருவாக்கும் கண்ணோட்டத்தோடு 
கடந்த 2022 ஆம் ஆண்டு அபுதாபி அய்மான் சங்கம் 
Digital journalism என்ற தனித்த பாடத்திட்டத்துடன் கூடிய வகுப்பை தொடங்கியது. 
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஊடக துறையில் 
எழுதவும், இயங்கவும் ஆற்றலுடைய வல்லுனர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. 
இப்போது இதோ மூன்றாவது ஆண்டின் தொடக்க விழா 
9 ஜூன் 2024 ஞாயிறு இரவு 8  மணிக்கு இணையவழியில் நடைபெற இருக்கிறது. 
அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகள், 
ஊடகத் துறை சார்ந்த வல்லுநர்கள், 
பேராசிரியர்கள் 
பயிற்சி பெற்ற டிஜிட்டல் மீடியா வகுப்பின் பங்கேற்பாளர்கள் என எல்லோரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் உங்களையும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். 
நிகழ்ச்சியில் இணைந்திடும் 
Google meet 
இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 

அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் 
Digital journalism 
இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 
மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.
Sunday, 9 Jun  •  8:00 – 9:30 pm
Google Meet joining info
Video call link: https://meet.google.com/eqj-ugcp-dvu

Digital journalism பயிற்சி வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Digital journalism
 பயிற்சி வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது. 

100 மாணவர்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக 
Digital Media studies பயிற்சி வகுப்பை நிறைவு செய்த 
அபுதாபி அய்மான் சங்கம் 
இப்போது மூன்றாவது ஆண்டாக 
 இணைய வழி 
 ஊடக சான்றிதழ் கல்விக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி இருக்கிறது. 

 DIGITAL JOURNALISM 
 ஓராண்டு பாடத்திட்டத்துடன் இணைய வழி பயிற்சியும் வழங்கப்படுகிறது 

 ஆர்வமுள்ள இஸ்லாமியர்கள் சேர்ந்து பயன் பெறலாம். 
 வயது வரம்பு இல்லை. 

 பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் பணியாற்றவும் சாதிக்கவும் விரும்பும் முழு ஈடுபாடு உள்ளவர்கள் மட்டும் வகுப்பில் இணைந்து பயன் பெறலாம். 

 பதிவு கட்டணம் 300ரூ 

 உங்களுக்கான முழு கல்வி கட்டணத்தையும் அய்மான் சங்கம் வழங்குகிறது. 
9 ஜூன் 2024 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை 
வாரத்தில் 5 நாட்கள் 
 மாலை 7 முதல் 8 மணி வரை வகுப்பு நடைபெறும். 

 வகுப்பில் இணைய உங்கள் விவரங்களை 
 9080475780 
 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்தவும்.

 Academy director
 ஹாஜி H.M. முஹம்மது ஜமாலுத்தீன் 
 தலைவர் 
 அய்மான் சங்கம் அபுதாபி 
 
 Project director
 Professor 
 Dr. Mohamed Askar.

 அமீரக மாணவர் சேர்க்கைக்கு தொடர்புகொள்ள 
 ஆடுதுறை M.A.K காதர் 
 நிர்வாக செயலாளர்,
 அய்மான் சங்கம்
 அபுதாபி 
 (+971 55 303 8066)

முதன்முறையாக ஒளிமூலமாக ஒற்றை மூலக்கூற்றை கண்டறிந்தத நோபல் பரிசு பெற்ற

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முதன்முறையாக ஒளிமூலமாக ஒற்றை மூலக்கூற்றை கண்டறிந்தத நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க வேதியியல் இயற்பியலாளர் வில்லியம் எசுக்கோ மோர்னர் பிறந்த தினம் இன்று (ஜூன் 24, 1953).

வில்லியம் எசுக்கோ மோர்னர் (William Esco Moerner) ஜூன் 24, 1953ல் கலிபோர்னியாவின் ப்ளேசன்டனில் பெர்த்தா பிரான்சிஸ் (ராபின்சன்) மற்றும் வில்லியம் ஆல்ஃபிரட் மூர்னர் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவரது குடும்பத்தினர் அவரை W.E என்ற எழுத்துக்களால் அழைத்தனர். அவரை அவரது தந்தை மற்றும் தாத்தாவிடமிருந்து வேறுபடுத்துவதற்கான ஒரு வழியாக வில்லியம் என்று பெயரிடப்பட்டது.மோர்னர் பாய் ஸ்கவுட்ஸ் ஆஃப் அமெரிக்காவுடன் ஈகிள் சாரணராக இருந்தார். அலெக்சாண்டர் எஸ். லாங்ஸ்டோர்ஃப் இன்ஜினியரிங் ஃபெலோவாக இளங்கலை படிப்பிற்காக செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று மேலும் மூன்று பட்டங்களைப் பெற்றார். ஒரு பி.எஸ். இயற்பியலில், ஒரு பி.எஸ். மின் பொறியியலில், இறுதி ஒரு ஏ.பி. 1975ல் கணிதத்தில் பெற்றார். இதைத் தொடர்ந்து, ஆல்பர்ட் ஜே. சீவர்ஸ் III குழுவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் அறக்கட்டளை பட்டதாரி பெல்லோஷிப்பால் ஓரளவு ஆதரிக்கப்பட்டது. இங்கே அவர் எம்.எஸ். பட்டம் மற்றும் பி.எச்.டி. முறையே 1978 மற்றும் 1982ல் இயற்பியலில் பட்டம் பெற்றார். அவரது முனைவர் ஆய்வறிக்கை ஆல்காலி ஹலைடு லட்டுகளில் IR-லேசர்-உற்சாகமான மூலக்கூறு தூய்மையற்ற பயன்முறையின் அதிர்வு தளர்வு இயக்கவியல் பற்றியது. 

தனது பள்ளி ஆண்டுகளில், மோர்னர் 1963 முதல் 1982 வரை நேர்மையான ஒரு மாணவராக இருந்தார். மேலும் அசாதாரணமான விதிவிலக்கான கல்வி சாதனைக்கான டீன் விருதையும், கல்லூரியில் பட்டம் பெற்றபோது சிறந்த சாதனைக்கான ஈதன் ஏ. எச். ஷெப்லி விருதையும் வென்றார். கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள ஐபிஎம் அல்மடன் ஆராய்ச்சி மையத்தில் 1981 முதல் 1988 வரை ஆராய்ச்சிப் பணியாளர் உறுப்பினராகவும், 1988 முதல் 1989 வரை மேலாளராகவும், 1989 முதல் 1995 வரை திட்டத் தலைவராகவும் பணியாற்றினார். இயற்பியல் வேதியியல் வருகை பேராசிரியராக நியமிக்கப்பட்ட பின்னர் ETH சூரிச் (1993-1994), 1995 முதல் 1998 வரை சான் டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் துறையில் இயற்பியல் வேதியியலில் சிறப்புத் தலைவராக பொறுப்பேற்றார். 1997 ஆம் ஆண்டில் ஹார்வர்டில் ராபர்ட் பர்ன்ஸ் உட்வார்ட் விசிட்டிங் பேராசிரியர் என்று பெயரிடப்பட்டார். பல்கலைக்கழகம், அவரது ஆராய்ச்சி குழு 1998ல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்றது.  

மோர்னர் 2011 முதல் 2014 வரை வேதியியலுக்கான துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தற்போதைய ஆராய்ச்சி மற்றும் ஆர்வத்தின் பகுதிகள் பின்வருமாறு, ஒற்றை-மூலக்கூறு ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் சூப்பர்-ரெசல்யூஷன் மைக்ரோஸ்கோபி, இயற்பியல் வேதியியல், வேதியியல் இயற்பியல், உயிர் இயற்பியல், நானோ துகள்கள் பொறி, நானோபோடோனிக்ஸ், ஒளிமின்னழுத்த பாலிமர்கள் மற்றும் நிறமாலை துளை எரியும்.  மே 2014 நிலவரப்படி, ஸ்டான்போர்ட் பட்டதாரி மாணவர்களால் எழுதப்பட்ட 26 ஆய்வறிக்கைகளில் மோர்னர் ஆசிரிய ஆலோசகராக பட்டியலிடப்பட்டார். மே 16, 2014 நிலவரப்படி, மூர்னரின் முழு சி.வி.யில் 386 வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மோர்னர் பணியாற்றிய சமீபத்திய தலையங்கம் மற்றும் ஆலோசனைக் குழுக்கள் பின்வருமாறு, தேசிய பயோமெடிக்கல் இமேஜிங் மற்றும் பயோ இன்ஜினியரிங் நிறுவனத்தின் (என்ஐபிஐபி) அறிவியல் ஆலோசகர் குழுவின் உறுப்பினர், அணு மற்றும் மூலக்கூறு அறிவியல் நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அகாடமிகா சினிகா, தைவான், வேதியியல் இயற்பியல் கடிதங்களுக்கான ஆலோசனை ஆசிரியர் குழு உறுப்பினர், ஸ்டான்போர்டில் உள்ள பயோமெடிக்கல் இமேஜிங் மையத்திற்கான ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக சுகாதார மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவர்.

தற்போது உயிரி இயற்பியலிலும் ஒற்றை மூலக்கூறுகளை படமெடுப்பதிலும் ஆய்வு செய்து வருகிறார். முதன்முறையாக ஒளிமூலமாக ஒற்றை மூலக்கூற்றை கண்டறிந்ததற்கும் குறுகிய கட்டங்களில் ஒற்றை மூலக்கூறின் நிறமாலை காட்டி ஆய்விற்காகவும் அறியப்படுகிறார். தற்போது ஒற்றை மூலக்கூறுகளின் ஒளி மூலமான ஆய்வு பரவலாக வேதியியல், இயற்பியல், மற்றும் உயிரியலில் பயன்படுத்தப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு எரிக் பெட்சிக், இசுடீபன் எல்லுடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

மதுக்கூரில் மதுக்கடை திறக்க மனிதநேய மக்கள் கட்சி எதிர்ப்பு -

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதுக்கூரில் மதுக்கடை திறக்க மனிதநேய மக்கள் கட்சி எதிர்ப்பு - காவல்நிலையத்தில் புகார் மனு அளிப்பு!

மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் மீண்டும் டாஸ்மாக்.பழயை அம்மா சந்தை, மருத்துவமனை, காவல்நிலையம், குடியிருப்பு பகுதிகள்,100 மீட்டர்க்குள் பள்ளிகூடம் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிக முக்கிய பகுதியாக இருக்க கூடிய இடத்தில் டாஸ்மாக் அமைப்பதற்கான முயற்சியில் சிலர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன் தகவலை அறிந்து இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் காவல்நிலையம் சென்று, டாஸ்மாக் அமைய எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளிக்கப்பட்டது. 

அப்புகாரில், "மதுக்கூர் பகுதிகுள் மதுபானகடைய அமைய கூடாது, 100 மீட்டர்க்குள் அரசு பள்ளிகூடம் உள்ளது,மருத்துவமனை, காவல்நிலையம் என இதனை எல்லாம் கவனித்தில் கொண்டு, அரசும், காவல்துறையும், டாஸ்மாக் அனுமதிக்க கூடாது என்றும், மேலும் அமைக்கப்பட்டால், திறக்கப்படும் நாள் அன்றே பொது மக்களை திரட்டி "டாஸ்மாக் பூட்டு போடும் போராட்டம்" நடத்தப்படும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது, செய்தி மேலிட கவனத்திற்கு செல்ல கூடிய வகையில், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று, பேட்டி அளிக்கப்பட்டது

இந்த நிகழ்வில், மமக மாவட்ட தலைவர் ஃபவாஸ், தமுமுக பேரூர் கழக செயலாளர் ஜெகபர் அலி, மமக மாவட்ட துனை செயலாளர் Er.இலியாஸ், தமுமுக மாவட்ட துனை செயலாளர் புரோஸ்கான், பேரூர் கழக பொருளாளர் முகமது சேக் ராவுத்தர், பேரூர் கழக துனை தலைவர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அணி நிர்வாகிகள், SMI சகோதரர்கள் கழக கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமுமுக மமக
தகவல் தொழில்நுட்ப அணி
மதுக்கூர் பேரூர் கழகம்
தஞ்சை தெற்கு.

இருபது கோடி முஸ்லிம்கள் பக்ரீத் திருநாளை கொண்டாடினர்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இருபது கோடி முஸ்லிம்கள் பக்ரீத் திருநாளை கொண்டாடினர்..

ஏழைகளுக்கும், தேவையுடையோருக்கும் மாமிசங்களை விநியோகித்தனர்..

சொந்த, பந்தங்களை சந்தித்தனர்..

அற்புதமான உணவுகளை உட்கொண்டனர்..

குழந்தைகளுக்கு பெருநாள் பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியூட்டினர்..

இவர்களில் ஒருவரும் மது அருந்தவில்லை..

இவர்களில் ஒருவரும் பிறமத வணக்கத்தலங்கள் முன்பு கூடி நடனமாடவில்லை..

இவர்களில் ஒருவரும் பிற மதத்தினரை (வன்முறைக்கு) தூண்டவில்லை..

என்ன ஒரு அற்புதமான சமூகம்..

நன்றி Dhruv Rathee

Thursday, 13 June 2024

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை


கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான பத்து அதி முக்கிய காரணங்கள்:

1. குடும்பத்தில் உள்ள அனைவரின் கரங்களில் தவழும் ஸ்மார்ட்போன்கள்...

2. சமூக அந்தஸ்திற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்...

3. வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறிப்போனது...

4. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை அத்தியாவசியமாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையை பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது... 

5. சீரழிந்த வாழ்க்கைமுறை மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...

6. சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினை (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது...  

7. ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தை பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்...

8. பிரமாண்ட திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்...

9. வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள்,  பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்...

10. தங்கள் சம்பாத்யத்தில் அனுபவிக்க இயலாததை குறித்த காலத்தில் குறைந்த காலத்தில் அடைந்துவிட கடன் மற்றும் கடன் அட்டைகள் அதி முக்கியமாக மாறிவிட்டதால்.....

11. வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் பணம் செலவழித்து உள் மற்றும் வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாக குப்பைகளை சேரச்செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...

நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம்.  இது குறைக்கப்படாவிட்டால், அது பல வருடங்கள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.

இது யோசிக்க விரும்புபவர்களுக்கு மிக நுட்பமான செய்தி

நம்மில் பெரும்பாலோருக்கும் இவை பொருந்தும் .!!!

Thursday, 6 June 2024

யார் அந்த கருப்பாடுகள்?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

BJP வெற்றி பெறப் பாடுபட்ட இஸ்லாமியக் கட்சி AIMIM. IMIM's Asaduddin Owaisi.

● Bijnor:
BJP - 97165
SP+RLD  - 95720.
AIMIM - 2290

● Nakur:
BJP - 1,03,771
SP - 1,03,616
AIMIM - 3591

● Kursi:
BJP - 1,18,614
SP - 1,18,094
AIMIM - 8533

● SULTANPUR:
BJP - 92245
SP - 90857
AIMIM - 5240

● Aurai:
BJP - 93438
SP - 91427
AIMIM - 2188

Shahganj:
BJP - 76035
SP- 70370
AIMIM- 7070

● FIROZABQD:
BJP - 84225
SP - 70957
AIMIM - 16290

BJP won
7 seats with difference of-
200 votes.
23 seats with difference of-
500 votes
49 seats with difference of-
1000 votes
86 seats with difference of-
2000 votes.
In all the above

தமிழகத்திலும் இது போல் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் கட்சிகளும் குழுக்களும் உள்ளதா?

யார் அந்த கருப்பாடுகள்?
-SA

லோக்சபாவில் குறைந்த முஸ்லீம் எம்பி-கள்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

லோக்சபாவில் குறைந்த முஸ்லீம் எம்பி-கள்.. தேர்தலில் கட்சிகளின் பாரபட்சம்? 2014க்கு பின் நடந்த மாற்றம் By Yogeshwaran Moorthi Published: Thursday, June 6, 2024, 15:01 [IST] சென்னை : 543 எம்பி-க்களை கொண்டுள்ள லோக்சபாவில் 26 இஸ்லாமிய எம்பி-க்கள் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டனி 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளின் வாக்கு சதவிகிதமும், எம்பி-க்களின் பிரநிதிதித்துவம் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. லோக்சபா தேர்தல் 2024 தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் முடிவுகள் அதன்படி 18வது லோக்சபா தேர்தலில் மொத்தமாக 26 இஸ்லாமிய எம்பி-க்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

 

லோக்சபாவில் மொத்தவுள்ள 543 எம்பி-க்களில் வெறும் 26 பேர் மட்டும் இஸ்லாமிய எம்பி-க்கள் என்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவிலும் இஸ்லாமிய எம்பி-க்களின் எண்ணிக்கையும் 26ஆக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதே எண்ணிக்கையிலான இஸ்லாமிய எம்பி-க்களே நாடாளுமன்றம் செல்கின்றனர். லோக்சபா வரலாற்றில் 2014ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தான் குறைந்த அளவிலான இஸ்லாமிய எம்பி-க்களே நாடாளுமன்றம் சென்றனார். அப்போதைய எண்ணிக்கை 22ஆக இருந்தது. அதேபோல் 1980 லோக்சபா தேர்தலில் மொத்தமாக 49 இஸ்லாமிய எம்பி-க்களே தேர்வு செய்யப்பட்டதாக அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

 

இந்தியாவில் 2வது அதிகபட்ச வாக்கு வங்கியையும் வைத்திருந்தாலும் இஸ்லாமிய எம்பி-க்களின் பிரதிநிதித்துவம் 10 சதவிகிதம் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Chandrababu Naidu - Stalin சந்திப்பு…பாஜகவுக்கு Message சொன்ன Stalin | Oneindia Tamil ஏனென்றால் இந்தியாவில் உள்ள பல்வேறு தொகுதிகளிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடிய சக்தியாக இஸ்லாமிய மக்கள் இருக்கின்றனர்.

 

அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய கட்சிகள் இஸ்லாமியர்களை வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையும் குறைத்து வருகிறது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இஸ்லாமியர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் வெறும் 19 இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளது. அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2019 லோக்சபா தேர்தலில் 13 பேருக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை வெறும் 6ஆக குறைந்துள்ளது. இதில் சமாஜ்வாதி கட்சியும் இணைந்துள்ளது. கடந்த தேர்தலில் 8 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தது. இந்த தேர்தலில் 4 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Advertisement முத்தலாக், 370-வது பிரிவு நீக்கம், 33% இடஒதுக்கீடு, செங்கோல்..17-வது லோக்சபாவில் மோடியின் கடைசி உரை!

 

இதுமட்டுமல்லாமல் 2019 லோக்சபாவில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் மொத்தமாக 115 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் மொத்தமாக 78 பேருக்கு மட்டுமே இந்த கட்சிகள் வாய்ப்பு கொடுத்துள்ளன. அதேபோல் 2014ல் பகுஜன் சமாஜ் கட்சி 61 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு கொடுத்த போதும், இந்த தேர்தலில் 35 பேருக்கு மட்டுமே போட்டியிட அனுமதித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே மற்ற கட்சிகள் இந்த முடிவை எடுக்க தள்ளப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இது மாற்றம் பெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கூறுகின்றனர். அதேபோல் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே வாக்களித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

Wednesday, 5 June 2024

ஜனாப் காதர்பாட்சா அவர்களை ஜனாப் அப்துல் கபூர் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.


06.06.2024 அன்னை ஆயிஷா அறக்கட்டளையின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஜனாப் அப்துல் கஃபூர் அவர்கள் CHENNAI KB அறக்கட்டளையின் நிறுவனர் ஜனாப் காதர் பாட்சாவைப் சந்தித்து நலம் விசாரித்தார். ஜனாப் காதர் பாட்சா தனது மருத்துவ சிகிச்சையை லண்டனில் வெற்றிகரமாக முடித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜனாப் காதர் பாட்சா பூரண குணமடைய அவர் ஓய்வெடுக்கவும், வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடவும் அவரது மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நாம் அனைவரும் அறிந்தபடி, ஆரோக்கியம் நம் வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும், மேலும் அவர் தனது நல்வாழ்வை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது.


இந்த சந்திப்பின் போது, ​​நமது சமூகத்தின் தற்போதைய கல்வி நிலை குறித்தும் விவாதித்தோம். கல்வியானது நமது முன்னேற்றத்திற்கு ஒரு மூலக்கல்லாக உள்ளது, மேலும் இந்த பகுதியில் நமது தொடர்ச்சியான முயற்சிகள் நேர்மறையான முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன. அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் மற்றும் வளங்களை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும் இந்த முயற்சிகள் நீண்ட காலத்திற்கு எங்கள் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும், கணிசமான ஆர்வத்தையும் விவாதத்தையும் உருவாக்கிய சமீபத்திய தேர்தல் முடிவுகளை நாங்கள் தொட்டோம். இந்தத் தேர்தல்களின் முடிவுகள் நமது சமூகத்தின் எதிர்கால திசையை வடிவமைக்கும் போது அவை முக்கியமானவை. புதிதாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எமது கூட்டு இலக்குகளை ஆதரிப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் விடாமுயற்சியுடன் செயற்படுவார்கள் என நம்புகின்றோம்.

மேலும் எங்கள் சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டுகிறோம்.

 S.ABDUL GAFOOR , 
ANNAI AYEISHA TRUST 
PARAMAKUDI 
TAMIL NADU 
INDIA 

நன்றி.



Tuesday, 4 June 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள்:

காந்தியின் இந்தியாவுக்கு மக்களின் ஆதரவு, கோட்சேவின் மதவெறி பாசிசத்திற்கு மறுதவிப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சுதந்திர இந்தியாவில் நடந்த தேர்தல்களில் இருவேறு கருத்துக்கள் நேரடியாக மோதிக் கொண்ட இந்த தேர்தலில் காந்தியக் கருத்தியலை ஓங்கி முழங்கிய இந்தியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு காந்தியத்தை இழிவு செய்து கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது.

இந்த மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைப்பட்சமான செயல்பாடு மக்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. பாஜகவின் முகமாக முன்னிறுத்தப்பட்ட பிரதமர் மோடி முஸ்லிம்களையும், தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்தி அவதூறாக பேசியதற்கு தேர்தல் ஆணையம் ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாமல் அக்கட்சியின் தலைவருக்கு அனுப்பியது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. 

 * எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது ஒன்றிய அரசின் முகமைகள் வேட்டை நாயாக பாய்ந்தன. 
 * ஜார்கண்ட் முதல்வர் மற்றும் டெல்லி முதல்வர் சிறையிடப்பட்டனர். 
 * திமுக அரசுக்கு சொல்லன்னா இன்னல்கள் பாஜகவால் தரப்பட்டது.
 * காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
 * பதிவான மொத்த வாக்குகளை அறிவதற்குக்கூட உச்சநீதிமன்றம் செல்ல வேண்டி இருந்தது.

அதேநேரம் பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் உலகின் இமாலய ஊழலாக பேசப்பட்டது, மோடியின் பி.எம். கேர் ஊழல் உலகின் பெரிய ஊழலாக கருதப்பட்டது. பணபலம் அதிகார பலம் இவற்றோடு சுயசார்பு ஜனநாயக நிறுவனங்களையும் முடக்கி ஆட்கொண்டு ஊடகங்களை தனது காலடியில் பணிய வைத்து பாஜக தேர்தலை சந்தித்தது. 

சம போட்டி இல்லாத சூழலிலும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை முன்னிறுத்திய கருத்துகளுக்கு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளது. இத்தகைய வலிமையோடு இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த திமுக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்து இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு தேசத்தைத் தட்டி எழுப்பிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

முதல் ஐந்து சுற்றில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்ததும், வாரணாசிக்குப் பிறகு இந்துக்களின் இன்னொரு புனிதத் தலமான ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே முஸ்லிம் லீக் வேட்பாளர் சகோதரர் கே. நவாஸ் கனி முன்னிலை வகித்ததும் ஒரு தெளிவான செய்தியை உணர்த்தி இருக்கிறது. காந்தியின் இந்தியா மீண்டெழும் என்பதற்கு இம்முடிவுகள் சான்றாக உள்ளன. 

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

#ElectionsResults #400Paar #mmkitwing #jawahirullahmla