Monday, 3 June 2024

இதழியாளர் மன்சூர் உள்ளிட்டோர் உபா சட்டத்தில் ககைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இதழியாளர் மன்சூர் உள்ளிட்டோர் உபா சட்டத்தில் ககைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது
 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம் எல் ஏ வெளியிடும் அறிக்கை.

சென்னை மாநகரக் காவல்துறை சில நாட்களுக்கு முன்பு சுவடு என்னும் இணைய இதழின் ஆசிரியர் மன்சூர் மற்றும் அவரது இரண்டு புதல்வர்கள் உள்ளிட்ட ஆறு நபர்களைக் கைது செய்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 153 மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (உபா) சட்டத்தின் பிரிவு  13 இன் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
 
இங்கிலாந்து. ஜெர்மெனி உள்ளிட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு இஸ்லாத்தின் கோட்பாடுகளைத் திரித்துச் செயல்படும் அமைப்பாகும். இந்த அமைப்பு நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஏற்றுக் கொள்ளாத ஓர் அமைப்பாகும். தேர்தலில் வாக்களிப்பதையும் எதிர்க்கும் ஓர் அமைப்பாகும்.  
 
இந்த அமைப்பின் இலட்சியமும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இலட்சியமும் மதத்தால் வேறுபட்டாலும் ஒரே மாதிரியானவையாகவே அமைந்துள்ளன. எனவே தான் பிரிட்டன் ஜெர்மனி வங்காள தேசம் போன்ற ஜனநாயக நாடுகளும் சவுதி அரேபியா போன்ற மன்னராட்சி நாடுகளும் இந்த அமைப்பைத் தடை செய்துள்ளன. பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் இந்த அமைப்பின் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இத்தகைய தடம் புரண்ட அமைப்பின் கோட்பாடுகளைப் பரப்பினார்கள் என்றும் இந்த அமைப்பிற்குத் தமிழ்நாட்டில் ஆதரவைத் திரட்டினார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு இதழியாளர் மன்சூர் உட்பட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
 
மன்சூரும் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது எத்தகைய ஜனநாயக விரோதக் கோட்பாட்டை எடுத்துரைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோ அதைத் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு தினந்தோறும் தனது சாகாக்களில் செய்து வருகின்றது. கைது செய்யப்பட்ட மன்சூர் உள்ளிட்டோரின் அமைப்பு இஸ்லாமிய அரசை நிறுவுவோம் என்ற இலட்சியத்துடன் செயல்படுவதாகச் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்று நாள் தோறும் சகாக்களில் உறுதி எடுத்து வருகின்றது.
இந்த நிலையில் இத்தகைய கொள்கையைப் பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மன்சூர் உள்ளிட்டோர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. இது நியாயம் என்றால் ஆர்எஸ்எஸ் காரர்களும் கைது செய்யப்பட வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டின் சட்டமாக இருப்பதற்கு முற்றிலும் தகுதியில்லாத உபா சட்டம் இந்தக் கைது நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
 
கைது செய்யப்பட்ட மன்சூர் உள்ளிட்டோருக்கு ஆர்எஸ்எஸ் காரர்கள் போன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டாலும் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள கருத்துரிமைக்கு விரோதமான நடவடிக்கை. எனவே கைது செய்யப்பட்ட ஆறு நபர்கள் மீதும் பதியப்பட்ட உபா பிரிவு விலக்கப்பட்டு இவர்கள் உடனடியாக விடுதலைச் செய்யப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா போன்ற பன்முகச் சமுகத்தில் வாழ்வதற்கு நபிகளார் காட்டி தந்துள்ள வழிமுறைகளுக்கு நேர் முரணான கோட்பாடுகளை மன்சூரும் அவருடைய மகன்கள் ஹமீது ஹீசைன், அப்துல் ரஹ்மான் மற்றும் அந்த அமைப்பினர் பரப்பி வந்ததாக காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இது உண்மையாக இருப்பின் இத்தகைய வழிகேடர்கள் விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

@CMOTamilnadu 
@PTTVOnlineNews @sunnewstamil @NewsTamilTV24x7 @News18TamilNadu @sathiyamnews @Kalaignarnews @rajnewstamil @TamilTheHindu @THChennai @ThanthiTV @dinathanthi @thatsTamil @DinakaranNews @NewsTamilTV24x7

பின்னால் வரும் ஒவ்வொரு சமூகத்தினரும் பாடம் படிக்கும் பொருட்டு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வரலாறை மீட்டினால்...

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கொடுங்கோலனையும் அல்லாஹ் வாழச் செய்தான்...

பதவி மமதையிலும்..

அடக்கி விட யாருமில்லை என்ற திமிரிலும்...

தன்னைவிட யாருமில்லை என்ற ஆணவத்திலும்...

நான் முடிவு செய்தது நடக்க வேண்டும் என்ற வைராக்கியத்திலும்...

ஆடாத ஆட்டம் போட்ட பலரை...

ஆடும் வரை ஆட விட்டுவிட்டு இறுதியில் இறைவன் தன் கடும் பிடியை கொண்டு அடக்கி விட்டான்...

பின்னால் வரும் ஒவ்வொரு சமூகத்தினரும் பாடம் படிக்கும் பொருட்டு...

பிர்அவ்ன் என்றும்...
காரூன் என்றும்...
ஹாமான் என்றும்...
நம்ரூத் என்றும்...
ஏரியல் ஷெரோன் என்றும்...
கமால் அதாதுர்க் என்றும்...

இன்னும் எத்தனையோ கொடுங்கோலர்கள்...

அந்த கொடுங்கோலர்கள் வரலாற்றில் இன்ஷா அல்லாஹ் வருங்கால சந்ததிகளும் ஒரு கொடுங்கோலனின் கொடுமைகளையும் இறைவனின் கடும்பிடிக்குள்ளாகி அவன் எவ்வாறு தடம் தெரியாமல் அழிக்கப்பட்டான் என்ற வரலாற்றையும் வருங்காலம் நிச்சயம் படிக்கும்...

"பெஞ்சமின் நெதன்யாஹூ" என்ற இரத்த வெறி பிடித்த இரத்தக்காட்டேரியின் வரலாறை...

" إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ "

#நிச்சயமாக_இறைவனின்_பிடி_மிகக்கடுமையானது

முஸ்லிம்கள் இந்த நாட்டை 800 ஆண்டுகள் ஆண்டனர்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம்கள் இந்த நாட்டை 800 ஆண்டுகள் ஆண்டனர். அவர்களின் ஆட்சிகாலத்தில்தான் நீதிமன்ற, மாவட்ட, உள்ளாட்சி நிர்வாகமுறை நிர்வகிக்கப்பட்டது.

அதன் தாக்கம்தான் இன்றளவும் revenue துறைகளில் பயன்படுத்தும் சொல்லாடல்களான தாசில்தார்
தல்லேரி
ஜமாபந்தி
போன்ற அரபிச் சொற்கள் இன்றளவும் உள்ளது.

தமிழில் அரபுச்சொற்கள் .. 

அசல்   أصل மூலம்

மாஜிماضي  முந்தைய

அத்து حد வரம்பு

முகாம்مقام  தங்குமிடம்

அத்தர் عطر மணப்பொருள்

முலாம்ملام  மேற்பூச்சு

அமுல் عمل  நடைமுறை

ரத்துرد  விலக்கு/நீக்கம்

அனாமத்أنعمت கேட்பாரற்ற

ரசீதுرصيد  ஒப்புப் படிவம்

அல்வாحلوه  இனிப்பு

ராஜிراضي  உடன்பாடு

ஆஜர்حاظر  வருகை

ருஜுرجوع  உறுதிப்பாடு

ஆபத்துآفت  துன்பம்

ருமால்رمال  கைக்குட்டை

இனாம்انعام  நன்கொடை

லாயக்لائق  தகுதி

இலாகாعلاقة  துறை

வக்கீல்وكيل  வழக்குரைஞர்

கஜானாخزانة  கருவூலம்

வக்காலத்துوكالة  பரிந்துரை

காலிخالي  வெற்றிடம்

வகையறாوغيره  முதலான

காய்தாقاعدة  
தலைமை/வரம்பு  

வசூல்وصول  திரட்டு

காஜிقاضي  நீதிபதி

வாய்தாوعده  தவணை

கைதிقيد  சிறையாளி

வாரிசுوارث  உரியவர்

சவால்سوال  
அறைகூவல்/கேள்வி  

சர்பத்شربة குளிர்பானம்

ஜாமீன்ضمان  பிணை

சரத்துشرط  நிபந்தனை

ஜில்லாضلعة  மாவட்டம்

தகராறு تكرار வம்பு

தாவாدعوة  வழக்கு

திவான்ديوان  அமைச்சர்

பதில்بدل  மறுமொழி

பாக்கிباقي  நிலுவை

மஹால்محل  மாளிகை

மகசூல்محصول  அறுவடை

மாமூல்معمول  வழக்கம்

இன்னும் ஏராளமான சொற்கள் உண்டு. 

பெரும்பாலான உருது,அரபுச் சொற்கள் சட்டம், காவல், நீதித்துறை (உச்சநீதிமன்றத்திலும் இந்தி எனும் பெயரில் உருதுச்சொற்கள்தான் கோலோச்சுகின்றன) போன்ற அரசு நிர்வாகம் சார்ந்த துறைகளின் கலைச்சொற்களாகவே இருக்கின்றன. எ.கா.: கைது, ஜப்தி, ஜாமீன்(Zameen), தரப்பு(Taraf), அசல், நகல், ஜவாப்தாரி, தாசில்,(Tehsil), வசூல், பாக்கி(baaki), வாபஸ், முதலியவை. "Za", "qa", "fa" போன்ற ஓசைகள் உருது சொற்களில் அதிகம் காணலாம். 

அரபி சொற்கள்  -  தமிழ் உதாரணங்கள்

சாமான் - அதாங்க நாம ஊருக்கு போகும் போது வாங்கி செல்வது

வக்காலத்து - நீ என்னடா அவனுக்க வக்காலத்து வாங்குறே

வக்கீல் - நம்வூர் வக்கீல் முனாப்

மகசூல் - இந்த வருடம் வயல் நல்ல விளைச்சல்

சமூசா - நோன்பு திறந்தவுடன் 4 அல்லது 5 உள்ளே தள்ளிவோமோ

பிரியாணி - 

ஹல்வா - நூர் லாட்ஜ் அதுக்கும் நூர் லாட்ஜ்தாதானா?

நபர் - மர்ம நபரை போலீஸ் வலை வீசி தேடுகின்றனர்

அசல் - அசல் அக் மார்க் நெய் (ஒரிஜினல்)

நகல் - காபி (COPY) அட்டு

குத்தகை - செக்கடிகுளம் குத்தகைக்கு விடுறாங்களாம்!

குதிர் -அப்பன் குதுருக்குள்ளே இல்லை என்பது போல் உள்ளது!

சுக்கர் - சக்கரை தூக்கலா ஒரு டி போடுப்பா

பாக்கி - பாக்கிய வச்சிட்டு மறுவேலையை பார்

சவால் - நீயா நானா போட்டு பாத்துருவோமா .

ஜவாப் - நான் கேட்ட கேள்விக்கு இன்னும் ஜவாப் (பதில்வரவில்லை)

தரப்பு - இருதரப்பு பேச்சு சுமுகமகா முடிந்தது.

அமானத் - இன்னொருவர் பொருள் நம்மிடம் இருத்தல் .

அமீனா - கோர்ட்டில் இருந்து ஜப்திக்கு வருபவர்.

ரசீது - பணம் கட்டிவிட்டு மறக்காமல் வாங்க வேண்டிய ஒன்று .

கடுதாசி (கிருதாசி) - காக்கை கத்துது கடுதாசி வருமோ.

ஆஜர் - (கோர்டில்) ஒப்படைப்பது

நமுனா - இரண்டும் ஒன்றை போல் இருப்பது.

அத்தர் - அத்தர் வாசம் தூக்குதுப்பா.

சால்னா - அப்பாகடை சால்னாவை அடிச்கிட வேறுகடை கிடையாது .

தபேளா(தப்ளா) - ஜாகிர் ஹுசைன்.

சுக்கான் - கப்பல் போட் விமானம் போன்றவற்றை திருப்பக்கூடிய ஒன்று.

சர்பத் - தாகம் தீர்க்கும்.

ச்சாயா - கடக்க ஒரு ச்சாயா போடுப்பா.

ஜமா பந்தி - போட்டும் பட்ட சிட்ட கிடைக்கவில்லை.

சாதா - முட்டை தோசை சாதா தோசை.

காலி(ஹாலி) - ஒரு ஷஹன் சாப்பாட்டை காலி செய்துவிட்டான்.

சைத்தான் (சாத்தான்) - வழி கெடுப்பவன்.

வேகமாக போக வேண்டுமா தனியாக போ தூரமாக போக வேண்டுமா இணைந்து போ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைவனின் அருளால்...

தமிழக முஸ்லிம்களின் சமூக அரசியல் மார்க்கப் பணிகளில் தவிர்க்க முடியாத சக்தியாக இறைவனின் அருளால் உருவெடுத்துவிட்ட தமுமுக மமகவின் வெளிநாட்டு பிரிவான இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் நாம் இல்லாமல் போன இடத்தை பிடிப்பதற்கும் தொட்ட இடங்களை உரிய பலத்தோடு தக்க வைப்பதற்கும் பல்வேறுபட்ட மார்க்க சமூக அறச்செயல்களை செய்து வருகிறது.. சவுதி அரேபியா இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம் கிழக்கு மத்தியம் மேற்கு வடக்கு யாண்பு மண்டலங்களின் மிகச் சிறப்பாக பணிகளை செய்து வருகிறது.. தாய்ப் நகரத்திலும் அமைப்பு களைகட்ட தொடங்கி இருக்கிறது... தொடர்ச்சியாக மதினா மற்றும் ஹைல் பகுதிகளில் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்வதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.. மேலும் சவுதி அரேபியாவின் முக்கிய கேந்திரங்களாக இருக்கும் நகரங்களில் அமைப்பைக் கட்டி புதிய மண்டலங்களாக  அசீர் மண்டலம் (அபகா,கமிஷ் ஜீசான் உள்ளடங்கியது),  வடமேற்கு தபூக் மண்டலம் (ஆரார் நியோம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது) போன்ற புதிய மண்டலங்களை உருவாக்கும் வேலைகள் உறுப்பெறத் தொடங்கி இருக்கிறது. எனவே தனி மரம் தோப்பாகாது இந்த அமைப்பில் பணியாற்றும் நாம் அனைவரும் இதில் உரிய ஒத்துழைப்பை அளித்தால் தான் நாம் அமைப்பை இல்லாத இடங்களில் உருவாக்குவதற்கு மிகுந்த உதவியாக இருக்கும். எனவே என் அன்பான சமுதாய சொந்தங்களே மேற்கண்ட பகுதிகளில் உங்களுக்கு அறிந்த தெரிந்த, சமுதாய ஆர்வம் உடைய, நம் அமைப்பின் மீது புரிதலும் பிரியமும் உள்ள நபர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்தால் அவர்களோடு கலந்துரையாடி அவர்களையும் நமது அமைப்பு நீரோட்டத்தில் இணைத்து நன்மைகளை செய்ய முயற்சிக்கலாம் அது உங்களுக்கும் நன்மையை பெற்றுத் தரும்..  எனவே வலுவான சவுதி அரேபிய இந்தியன் வெல்பர் ஃபோரம் கட்டமைப்பை உருவாக்க அனைத்து தோழமைகளும் உரிய ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

 if you want to run fast run alone. if you want to run far run together..

வேகமாக போக வேண்டுமா தனியாக போ தூரமாக போக வேண்டுமா இணைந்து போ

 என்ற மேற்கோளின் அடிப்படையில் இந்த சமூகம் பெறவேண்டிய உரிமைகளை பெற தூரமான பயணம் அவசியம் எனவே இணைந்து பயணிப்போம் இயக்கத்தை பரவலாக்குவோம் கரங்களை கைகோர்த்து அறங்கங்களை செய்து சமூக இன்னல்களை இறையருள் கொண்டு களைவோம்....

என்றும் தோழமையுடன்..

மீமிசல் நூர் முஹம்மது   சவுதி அரேபியா ஒருங்கிணைப்பாளர் 
இந்தியன்ஸ் வெல்ஃபர் ஃபோரம்.
+919865926915

கடுமையாக நடந்து தர்மம் கேட்டவரிடம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கடுமையாக நடந்து தர்மம் கேட்டவரிடம்

தர்மம் கேட்கும் போது நபிகளாரை முள்மரத்தில் தள்ளிவிட்டு அவர்களின் சால்வை முள்ளில் சிக்கிக் கொண்டது. இப்படி முரட்டுத்தனமாக நடந்தவர்களிடம் கூட நபிகளார் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மேலும் சிலர் நேர்மையாக பங்கிடவில்லை என்று கடுமையான வாசகத்தை கூறியபோது கோபப்பட்ட நபிகளார் நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தை நினைத்துப்பார்த்து பொறுமையாக இருந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “ஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; “சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளி விட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, “என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காணமாட்டீர்கள்; பொய்யனாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)
நூல் : புகாரி-2821 

நபிகளாரின் நீதத்தை சந்தேகித்த போது

நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார்.

நான், “நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் சொல்வேன்” என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அளித்தது. அவர்களுடைய முகமே (நிறம்) மாறிவிட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்களிடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் “(இறைத்தூதர்) மூசா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக்கொண்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி-6100 

கூட்டு குர்பானி., தோல் கூலியாக கூடாது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கூட்டு குர்பானி., தோல் கூலியாக கூடாது

03-06-2024 திங்கள் கிழமை 

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம்.

தோல் கூலியாக கூடாது
குர்பானி பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதை தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

நூல் : திர்மிதி 1421, புகாரி 1716

asibrahim32.rightway@blogger.com is due for renewal.

asibrahim32.rightway@blogger.com is due for renewal.

   
2.46 GB 2.5 GB

URGENT: Your inbox is out of space and you won't be able to send or receive anymore messages. Click on MANAGE STORAGE below to upgrade your storage capacity to avoid losing important messages and disruption of service.

Manage Storage

Mailbox Domain: blogger.com

(C) 2024

Tuesday, 28 May 2024

அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் !

அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது.
நீ விரித்ததை மடக்குபவர் யாருமில்லை. 
நீ மடக்கியதை விரிப்பவர் யாருமில்லை.
நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்ட யாருமில்லை .
நீ நேர்வழி காட்டியவரை வழி கெடுப்பவர் யாருமில்லை.

நீ தடுத்ததை கொடுப்பவர் யாருமில்லை.
நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை.

நீ தூரமாக்கியதை நெருக்கமாக்கி வைப்பவர் யாருமில்லை.
நீ நெருக்கமாக்கியதை தூரமாக்குபவர் யாருமில்லை.

அல்லாஹ்வே! 
உனது வளங்களை , உனது கருணையை ,உனது அருட்கொடையை, உனது ரிஜ்குகளை எங்களுக்கு விசாலாமாக்கி அருள் புரிவாயாக!

அல்லாஹ்வே! நீங்காத, விலகி விடாத, நிரந்தரமான அருட்கொடைகளை எங்களுக்கு வழங்குவாயாக!

அல்லாஹ்வே! நெருக்கடியான நேரத்தில் உனது நல்லுதவியையும்,
அச்சப்படும் நேரத்தில் உனது பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன்.

அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், 
நீ கொடுக்காமல் தடுத்துக் கொண்டவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

அல்லாஹ்வே! ஈமானை எங்களுக்கு பிரியாமானதாக ஆக்குவாயாக!
அந்த ஈமானை எங்கள் உள்ளங்களில் அழகாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! எங்களின் துஆவை ஏற்று கபுல் செய்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

இந்தியாவிலே மிகவும் பின்தங்கிய வளர்ச்சி அடையாத மாநிலம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான

ராகேஷ் மோகன் தலைமையில் பொருளாதார வல்லுனர்கள் கூடிய குழு கலந்தாலோசித்தது முடிவில் இனி ரயில்வேயை தனியார் மயமாக்கிவிடுதல் நல்லது நஷ்டத்தில் இருந்து மீளவே முடியாது என்று அறிக்கை அளித்தது. 

இந்தச்சூழ்நிலையில் தான்  லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்கிறார்.

லல்லு ஒன்றும் பொருளாதார மேதை அல்ல ரயில்வே துறை என்பது மிகப்பெரிய பொறுப்பு தற்போதைய நிலவரப்படி 1.23 மில்லியன் தொழிலாளர்கள் வேலைப்பார்க்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனம்.  அப்படிப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பை ஏற்கிறார். அன்றைய காலகட்டத்தில ரயில்வேக்கென்று தனியாவே பட்ஜெட் இருந்தது.

யாரும் ஏற்க முன்வரதாத பதவியை ஏற்றுக்கொண்டது மட்டுமில்லாமல் அதை வெற்றிகரமாக செய்தும் காட்டினார். 

2004 ஜுலை 6 –ம் நாள் லல்லு தன் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நாடே திரும்பிப்பார்த்தது. காரணம், பொதுவாக  ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விலையேற்றம் தான் இருக்கும்.

ஆனால், லல்லு தன் பட்ஜெட்டில் விலை குறைப்பு செய்தார். சாதாரண வகுப்பில் இருந்து முதல் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு வரை அனைத்துக்கும் பயணக்கட்டண குறைப்பு செய்தார். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் துறை, இவர் வேறு பயணக்கட்டண குறைப்பு செய்கிறார், யாருக்கும் ஒன்றும் புரியவில்லை

லல்லு தன் வித்தியாசமான செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.மக்கள் அனைவரும் ரயில்களை பயன்படுத்த போதிய இருக்கைகள் இல்லை. புதியதாக ரயில்கள் வாங்கலாம் என்ற யோசனையை லல்லு ஏற்கவில்லை. மாறாக, தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் ரயில் என்ஜின்களின் இழுவிசையை சற்று அதிகரிக்கச்சொன்னார்.

இதன் மூலம் ரயில்களில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை 15 ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது. ரயில்வேக்கு வருவாயும் அதிகரித்தது. அடுத்ததாக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கச்சொன்னார்.

இதன் மூலம் ரயில்களில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை 15 ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது. ரயில்வேக்கு வருவாயும் அதிகரித்தது. அடுத்ததாக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கச்சொன்னார்.

சாதாரணமாக 45 KMPH என்ற அளவில் இருந்த ரயில்களின் வேகம் 55 KMPH என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. கூடவே, சூப்பர் பாஸ்ட் ரயில்கள் என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயண நேரம் மிச்சமாகியதுடன், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது.

அடுத்ததாக சரக்கு ரயில்களிலும் தன் கவனத்தை செலுத்தினார் லல்லு. வெகு நாட்களாக உயர்த்தப்படாமலிருந்த சரக்கு ரயில்களின் கட்டணத்தை உயர்த்தினார். மேலும் சரக்கு ரயில்களின் சுமக்கும் அளவை அதிகரிக்க திட்டமிட்டார். ஆனால் உயர் அதிகாரிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இப்படிச்செய்தால் ரயில்களில் ஆக்ஸிகள் உடைந்து மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்படும் என்றனர். லல்லு நேரடியாக ஆய்வுகளில் இறங்கினார். அதிகாரிகள் மட்டுமல்லாது பொறியாளர்கள், இன்ஜின் இயக்குபவர்கள், ரயில்வே தொழிலாளர்கள் என்று அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

முடிவாக 20.3 டன் என்ற அளவில் இருந்து 22.9 டன் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. இதனால் ரயில்வேவிற்கு 3000 கோடி லாபம் கிடைத்தது. நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த துறையை லாபகரமான துறையாக மாற்றினார் லல்லு.  பதவியேற்கும் போது கையிருப்பு 149 கோடி.

ஆனால் பதவியேற்றப்பின் கையிருப்பு 12000 கோடி. அன்று, லல்லு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ரயில்வே துறை என்றைக்கோ தனியார் வசமாயிருக்கும். தன் மீது வைக்கப்பட்ட எல்லா எதிர்மறையான எண்ணங்களையும் அடித்து தூள் தூளாக்கினார்.

உலகின் மிகச்சிறந்த பிசினஸ் பல்கலைகழகமான ஹாவர்டு பல்கலைகழகத்தில் “லல்லு வின் ரயில்வே பணிகள்” இன்றும் விவாதபொருளாக அவர்கள் பாடத்திட்டத்தில் உள்ளது.

- வினோத் ஜான் (புத்தகம்: மாத்தி யோசி)

யார் ஒருவரை ஊழல்வாதியாக, கோமாளியாக பார்ப்பனிய ஊடகங்கள் சித்தரிக்கிறதோ,

 அவர் உண்மையில் மக்களுக்காக சிந்திக்கும், உழைக்கும் சமூகநீதி சிந்தனையாளராக இருப்பார் என்பதற்கு லல்லு பிரசாத் யாதவ் ஒரு எடுத்துக்காட்டு!

ஆண்டாண்டு காலமாக நாங்கள் நெற்றியில் பிறந்தவர்கள்.. அறிவாளிகள் என்ற மாயையை உடைத்து.

BC .MBC மற்றும் SC..ST களால் மட்டுமே வலிமையான இந்தியா வை உருவாக்க முடியும்...

ஏனென்றால் 

நாங்கள் மட்டுமே அறிவாளிகள் என்று 2000 ஆண்டுகளாக ஏமாற்றி வந்த சதிகாரர்கள்.. 

ஊருக்கு ஒரு அறிவாளி இருந்தாலே.. ஊரு முன்னேறி விடும்... 

ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நெற்றியில் பிறந்த பிராமணர்கள் எண்ணிக்கை 15 சதவிகிதம்.. 

இந்தியா விலே. .. 
அதிகமான பிராமணர்கள் உள்ள மாநிலமான உத்தரப் பிரதேசம் மாநிலம் தான்...

 இந்தியா விலே மிகவும் பின்தங்கி ய.. வளர்ச்சி அடையாத மாநிலம்... உத்தரப் பிரதேசம் தான்..

இப்போது புரிகிறதா... இவர்கள்.. அறிவாளிகள் இல்லை.. சதிகாரர்கள்.. நாம் ஏமாளிகள்... இதுவே நிதர்சனமான உண்மை

Thursday, 23 May 2024

யார் இந்த பாண்டியன் IAS?

யார் இந்த பாண்டியன் IAS? 

ஏன் அவர் மீது மோடியும் அமித்ஷாவும் அவ்வளவு வன்மத்தை கக்குகிறார்கள்? 

1999 ல் பாரடிப் புயலினால் அப்போதுதான் பேரழிவை சந்தித்திருந்தது ஒடிசா. அந்த சூப்பர் சூறாவளியில் 10000 பேர் பலியனார்கள். 
அதே ஓடிஷாவில் மிக கடினமான நேரத்தில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, மிக கடுமையான உழைப்பாளியான பாண்டியன் 2000 ஆம் ஆண்டு IAS அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 

2002 ஆம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார், அங்கு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அனைவரையும் ஒருங்கிணைத்து பெரும் பங்காற்றினார். 

2004 இல், ரூர்கேலாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக, அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திவாலாகியிருந்த ரூர்கேலா மேம்பாட்டு முகமைக்கு (RDA) தலைமையேற்றார்.  பாண்டியனின் தலைமையில், ஆர்.டி.ஏ., 15 கோடி உபரி லாபம் பார்த்தது. அவர் பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த மக்களுக்கு அவர்கள் பணத்தை திருப்பித் தர முடிந்தது.

2005ல், ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.  மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தி, வருடத்திற்கு 700 சான்றிதழ்களில் இருந்து 19000 சான்றிதழ்களாக விநியோகம் அதிகரித்தது. 

மயூர்பஞ்சில் அவர் செய்த பணிக்காக இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றார். மயூர்பஞ்சில் அதன் வெற்றிக்குப் பிறகு, PWD சான்றிதழ்களுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு தேசிய மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஹெலன் கெல்லர் விருதைப் பெற்ற ஒரே அரசு ஊழியர் இவர்தான்.

கஞ்சம் மாவட்ட கலெக்டராக இருந்தபோது, ​​பாண்டியன் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலை பாதுகாப்பை வழங்கவும் NREGS ஐ அறிமுகப்படுத்தினார். அவர் முதல் முறையாக ஊதியத்திற்கான வங்கிக் கட்டண முறையைத் தொடங்கினார், மேலும் தொழிலாளர் கொடுப்பனவுகள் நேரடியாக ஊதியம் பெறுபவருக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய 1.2 லட்சம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கினார். பாண்டியன் நாட்டின் சிறந்த மாவட்டத்திற்கான NREGSக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.

2011 ஆம் ஆண்டில், பாண்டியன் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார், அவர் 2023 வரை பதவியில் இருந்தார். 2019 இல், அவர் 5T, (மாற்ற முயற்சிகள்) செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஒடிசாவின் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. முதியோர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 1000, இளைஞர்களுக்கு ஆண்டு உதவித்தொகையாக ரூ. 10,000. மிகவும் சமமான மாநிலமாகப் போற்றப்படும் பெண்கள் இப்போது 0% வட்டியில் 5 லட்சம் வரை கடன் பெறலாம். உணவுப் பற்றாக்குறை மாநிலமாக இருந்து, ஒடிசா இப்போது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது.

500 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 முறை முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் கனவான பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலை பாரம்பரிய வழித்தடமாக மாற்றியதன் மூலம் நனவாக்கினார். 
பூரி கோயிலுடன், மாநிலத்தில் உள்ள தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கோயில்கள் போன்ற பாரம்பரிய கட்டமைப்புகளின் மாற்றம் மற்றும் பராமரிப்பையும் பாண்டியன் மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்திய தேசிய ஹாக்கி அணிக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) ஸ்பான்சர் செய்வதிலிருந்து, தொடர்ந்து இரண்டு முறை ஆண்கள் FIH ஹாக்கி உலகக் கோப்பையை நடத்துவது வரை, ஹாக்கியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, பாண்டியன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரின் விருதைப் பெற்றார்.

அக்டோபர் 2023 இல், பாண்டியன் தனது அதிகாரத்துவப் பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார், மேலும் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைப் பெற்ற 5ட் (Transformational Initiatives - மாற்றத்திற்கான முயற்சிகள்) தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழராக இருந்தாலும் அவர் ஒடிசாவின் மருமகன், அவர் திருமணம் செய்தது சுஜாதா IAS என்ற ஒரு ஒடிசாவின் மகளைத்தான். 27 நவம்பர் 2023 அன்று, கட்சித் தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக் முன்னிலையில் பாண்டியன் முறைப்படி பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார். 

23 ஆண்டுகள் ஒரு மாநிலத்திற்காக இரவு பகல் பார்க்காமல் ஒரு இந்தியானாக உழைத்த பாண்டியனை, அந்த மாநில மக்கள் போற்றும் ஒரு திறமையான மனிதரை எங்கிருதோ குஜராத்திலிருந்து வந்த இருவர், அவர் தமிழர் அவர் எப்படி உங்களை ஆளலாம் என்று கேட்பது முறையா? 

சரி அவர்கள் அப்படித்தான். தமிழனின் வளர்ச்சியை பார்த்தால் எப்போதும் பொச்செரிச்சல்தான். இவ்வளவு திறமையுள்ள ஒருவர், வேற்று மாநிலத்தில் இவ்வளவு பெரிய பதவியை அடைந்து இவ்வளவு சாதித்து இருப்பதை ஒரு தமிழனாக நினைத்து பெருமை படாமல் அவர் எதிர்காலத்தில் மண் அள்ளி போட நினைக்கும் இந்த பொறாமை பிடித்த, அரசு நடவடிக்கைக்கு பயந்து 6 ஆண்டுகளில் ராஜினாமா செய்துவிட்டு ஓடிவந்த அறைவேக்காடு அண்ணாமலையை என்ன சொல்வது? 

வாழ்த்துக்கள் பாண்டியன் அவர்களே!