Tuesday, 19 March 2024

2,299 கிராம உதவியாளர் நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

19.03.2024 

2,299 கிராம உதவியாளர் நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும், 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறித்தியுள்ளது.

கிராம உதவியாளர் பணி என்றால் என்ன?


தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கிராம உதவியாளர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகள்


குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அறிவிக்கப்பட்ட பதவிக்கான வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்

வண்டி ஓட்டும் திறன் இருக்க வேண்டும்

இருதாரமணம் இருக்கக் கூடாது

கிராம உதவியாளர் பதவிக்கு வயது வரம்பு


ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.


குறைந்தபட்ச வயது அனைத்து பிரிவினருக்கு 21க்கு மேல் இருக்க வேண்டும்.

காலியிடங்கள் விவரங்கள்:


அரியலூர் - 21, சென்னை 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் - 66, திண்டுக்கல் - 29, தருமபுரி - 39, ஈரோடு - 141, காஞ்சிபுரம் - 109, கரூர் - 27, கிருஷ்ணகிரி -33, மதுரை - 155, மயிலாடுதுறை - 13, நாகப்பட்டினம் - 68, நாமக்கல் - 68,பெரம்பலூர் - 21, புதுக்கோட்டை - 27, ராமநாதபுரம் - 29, ராணிபேட்டை 43, சேலம் - 105,சிவகங்கை - 46, தஞ்சாவூர் - 305, தேனி-25, திருவண்ணாமலை - 103, திருநெல்வேலி - 45, திருப்பூர் - 102, திருவாரூர் - 139, திருவள்ளூர் - 151, திருச்சி - 104. தூத்துக்குடி - 77, தென்காசி - 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் - 38, வேலூர் - 30, விழுப்புரம் - 31 ஆகும்.

சம்பளம்: Special Time Scales of pay Matrix Level 6 (குறைந்தபட்சம் ரூ.11;100- அதிகபட்சம் Rs.35,100)

எதனடிப்படையில் தேர்வு முறை இருக்கும்?


திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சாண்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.


திறனறிதல் தேர்வுவாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும். எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு தமிழக அரசின் https://www.tn.gov.in , வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளத்தை அவ்வப்போது பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இக்லாஸ் IAS அகாடமி, சென்னை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ,

இக்லாஸ் IAS அகாடமி, சென்னை. 

TNPSC குரூப்-4 தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது அதற்காக, சென்னை இக்லாஸ் IAS அகாடமி சார்பாக ஆன்லைன் தேர்வுகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்பதை உங்களுக்கு அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். 
 
எங்களது TNPSC குரூப்-4 ஆன்லைன் தேர்வுகளில் சேர ஒரே ஒரு நிபந்தனை! மாணவ மாணவிகள் உங்கள் முயற்சிகளில் நேர்மையாகவும் சீராகவும் இருக்க வேண்டும். 
 
பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தவும்.

ஆண்கள்: [https://chat.whatsapp.com/GLxpIXKL8803gKlZYX4dba]

பெண்கள்: குழு விவரங்களுக்கு பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது வாட்ஸ்அப் செய்யவும்: 9840686562.

அட்டவணை மற்றும் தேர்வு முறைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் வாட்ஸ்அப் குழுவில் தெரிவிக்கப்படும்.


அன்புடன்,
இக்லாஸ் IAS அகாடமி,

தொடர்புக்கு: 9840686562
www.iklas.in

இந்தியா ஏன் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறது ?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியா  ஏன் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறது ? 














இராமநாதபுரம் & பரமக்குடியில் மூன்று ஈமானிய அமர்வு 17-3-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,




இராமநாதபுரம் & பரமக்குடியில் 
 மூன்று ஈமானிய அமர்வு 17-3-2024

பரமக்குடி மேலப்பள்ளிவாசலில் 
மாலை 5 -30 மணிக்கு தக்வா வை பேணி பாதுகாப்போம் என்ற தலைப்பிலும், 

பரமக்குடி பாரதிநகரில் உள்ள தமுமுகவின் மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் இரவு 6-45 மணிக்கு பள்ளிவாசல்களை பேணி பாதுகாப்போம் என்ற தலைப்பிலும்

இராமநாதபுரம் மஸ்ஜித் தக்வா பள்ளியில் சத்திய சாஹபி தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலி அவர்கள் வாழ்கை வரலாறு 
 
மெளலவி அப்துல் காதர் மன்பயி அவர்கள் மார்க்க விளக்க உரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரிகள்  கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.....

தகவல்/செய்தி
இஸ்லாமிய பிரச்சார பேரவை
இராமநாதபுரம்

ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல்

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது முக்கியமான கொள்கையாகும். ஒவ்வொருவரும் தத்தமது செய்கைகளுக்குப் பொறுப்பாளிகள் என்றாலும் இதிலிருந்து சில வணக்கங்கள் மட்டும் விதி விலக்குப் பெறுகின்றன. நோன்பும் அவ்வாறு விதிவிலக்குப் பெற்ற வணக்கங்களில் ஒன்றாகும்.

நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1952

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா?என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்! நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1953

புகாரியின் மற்றொரு ஹதீஸில் ஒரு பெண் வந்து இவ்வாறு கேட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நோன்பு கடமையாகி களாவாகவுள்ள நிலையில் யாரேனும் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருக்காக நோன்பு நோற்கலாம் என்று கூறுவதை விட நோற்பது அவசியம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடனுடன் நோன்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். மேலும் கடனை விட நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதியுடையது எனவும் கூறுகிறார்கள்.

இறந்தவர்களுக்காக மார்க்கத்தில் இல்லாத கத்தம் பாத்திஹா ஓதுவதை விடுத்து இறந்தவர் மீது நோன்பு களாவாக இருந்தால் அதை நிறைவேற்றலாம். இறந்தவரின் சொத்துக்களுக்கு மட்டும் வாரிசாக ஆசைப்படுவோர் மார்க்கம் அவர்கள் மீது சுமத்திய இந்தக் கடமையைச் செய்வதில்லை. நாமறிந்த வரை பெற்றோர்களுக்காக ஹஜ் செய்பவர்களைக் கூட காண்கிறோம். ஆனால் நோன்பு நோற்பவர்களைக் காண முடியவில்லை. பெற்றோர் மீது கடமையான நோன்புகள் களாவாக இருந்தால் தான் வாரிசுகள் நோற்க வேண்டும். உபரியான சுன்னத்தான நோன்புகளுக்கு ஆதாரம் இல்லை. ஏனெனில் இறந்தவர்களை அது குறித்து அல்லாஹ் விசாரிக்க மாட்டான். மேலும் இந்த ஹதீஸில் கடமையான நோன்பு பற்றியே கூறப்பட்டுள்ளது

நபி நாயகம் (ஸல்) கற்றுத்தந்த துவாக்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


நபி நாயகம் (ஸல்) கற்றுத்தந்த துவாக்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்தனர்.

அல்லாஹும்ம அப்து(க்)க வப்னு அப்தி(க்)க கான யஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த வஅன்ன முஹம்மதன் அப்து(க்)க வரசூலு(க்)க வஅன்(த்)த அஃலமு பிஹி மின்னீ இன் கான முஹ்ஸினன் ஃபஸித் ஃபீ இஹ்ஸானிஹி வஇன் கான முஸீஅன் ஃபக்ஃபிர்லஹு வலா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா தஃப்தின்னா பஃதஹு

பொருள்: இறைவா! இவர் உனது அடிமையும் உனது அடிமையின் மகனுமாவார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி உனது அடியாரும், தூதரும் ஆவார் என்றும் சாட்சி கூறிக் கொண்டு இருந்தார். அவரைப் பற்றி நீயே நன்கு அறிந்தவன். இவர் நல்லவராக இருந்தால் இவரது நற்கூலியை அதிகரிப்பாயாக! இவர் தீயவராக இருந்தால் இவரை மன்னித்து விடுவாயாக! இவரது நற்செயலுக்கான கூலியை எங்களுக்குத் தடுத்து விடாதே! இவருக்குப் பின் எங்களைச் சோதனையில் ஆழ்த்தி விடாதே!

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்னத் அபூ யஃலா (11/477)

ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆச் செய்தனர்.

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஃபு அன்ஹு வஆஃபிஹி வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பிமாயின் வஸல்ஜின் வபரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ(க்)கிஹி ஃபித்ன(த்)தல் கப்ரி வஅதாபன்னார்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 1601

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்.

பொருள்: இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப் படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்தப்படுவது போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக!

இந்த துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த போது மனனம் செய்து கொண்டேன். இந்தச் சிறப்பான துஆவின் காரணத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக் கூடாதா என்று எண்ணினேன்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 1600

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வரும் துஆவை ஓதுவார்கள். அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வகாயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வஉன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான் அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு.

பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை ஈமானுடன் இறக்கச் செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் கூலியைத் தடுத்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்து விடாதே!

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்கள்: அபூ தாவூத் 2786, இப்னு மாஜா 1487

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்துள்ளனர்.

அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க வஹப்லி ஜிவாரி(க்)க ஃப(க்)கிஹி மின் ஃபித்ன(த்)தில் கப்ரி வமின் அதா பின்னாரி ஃபஅன்(த்)த அஹ்லுல் வஃபாயி வல்ஹக்கி ஃபக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்

பொருள்: இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். உண்மையாளன். இவரை மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் புரிபவன்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

நூல்கள்: அபூ தாவூத் 2787, இப்னு மாஜா 1488, அஹ்மது 15443

இன்னாரின் மகன் இன்னார் என்ற இடத்தில், அதாவது ஃபுலானப்ன ஃபுலான் என்ற இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது, நான்காவது தக்பீர்களுக்குப் பின் மேற்கண்ட துஆக்களை ஓதிக் கொள்வதுடன் நமக்குத் தெரிந்த மொழியிலும் துஆச் செய்யலாம்.

‘இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான் 7/345, 7/346

உள்ளத் தூய்மையுடன் கலப்பற்ற முறையில் துஆச் செய்வது என்றால் நமக்குத் தெரிந்த மொழியில் துஆச் செய்யும் போது தான் அது ஏற்பட முடியும். எனவே இறந்தவருக்காக மறுமை நன்மையை வேண்டி தாய் மொழியில் துஆச் செய்யலாம்

Monday, 18 March 2024

Manapparai 7 ward - Water tank - MLA Abdul Samad opened

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



மனிதநேய மக்கள் கட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றி !!! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை !!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனிதநேய மக்கள் கட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றி !!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை !!!

மத்தியில் 5 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவித்து - பொருளாதாரத்தை சீரழித்து - மக்கள் விரோதப் போக்குகளைக் கடைப்பிடிக்கும் பாசிச பா.ஜ.க அரசையும், மாநில உரிமைகளை அடகு வைத்து ஊழலில் ஊறித் திளைக்கும் அ.தி.மு.க அரசையும் வீழ்த்துவது ஒன்றே 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒற்றை இலக்காகும். அதற்குத் தோள் கொடுத்து துணை நிற்கும் ஜனநாயக சக்திகளின் துணையுடன் இந்தக் கூட்டணி தேர்தல் களத்தைச் சந்திக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணிக்கும் ஜனநாயக சக்திகளில் சில அமைப்புகளுக்கு தேர்தல் களத்தில் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பதை ஏற்கனவே விளக்கி, அவர்களின் ஆதரவும் தொடர வேண்டும் என்று கோரியிருந்தேன். கடந்த 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதல் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கும் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் மற்ற நிர்வாகிகளும் அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து தங்கள் எண்ணங்களைத் தெரிவித்து, பாசிச பா.ஜ.க. ஆட்சியை விரட்டுவதற்கு தங்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க கூட்டணியில் குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட்டிருந்தும் இம்முறை எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணிக்குள் தொகுதிகள் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டதும், அதனை மனிதநேய மக்கள் கட்சியினர் ஏற்றுக்கொண்டு தி.மு.க கூட்டணிக்கு எந்தவித நிபந்தனை இன்றி ஆதரவளித்திருப்பதற்கு, மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோலவே, மேலும் பல அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் தேர்தலில் பேட்டியிடும் வாய்ப்பு அமையாத நிலையிலும் தங்கள் ஆதரவினைத் தெரிவித்து வருகிறார்கள்.

கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வரும் அரசியல் இயக்கங்களுக்கும் அமைப்பினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அடுத்தடுத்து வரக்கூடிய தேர்தல் வாய்ப்புகளில் அரசியல் இயக்கங்களுக்குரிய ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்து, தங்களின் பேராதரவுடன் நாற்பதுக்கு நாற்பது மக்களவை தொகுதிகளையும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதுடன், மக்கள் நலன் சார்ந்த உங்களின் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் என்றும் குரல் கொடுப்போம் என்ற உறுதியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

#DMK4TN #Tmmk #Mmk

இருப்பதைக் கொண்டு எவ்வாறு திருப்தி அடைவது?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இருப்பதைக் கொண்டு எவ்வாறு திருப்தி அடைவது?

இருப்பதை வைத்து திருப்தி அடைவது எப்படி என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர். உலகத்தில் நம்மை விட மேலான நிலையில் சிலர் இருப்பது போல் நம்மை விடத் தாழ்ந்த நிலையிலும் பலர் உள்ளனர். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நமது நிலையை ஒப்பு நோக்கிப் பார்த்தால் இருப்பதை வைத்து திருப்தி அடையும் மனநிலை நமக்கு வந்து விடும்.
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِى الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ مِمَّنْ فُضِّلَ عَلَيْهِ
உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 5670

சங்கரன்பந்தல் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஊர் இளைஞர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி எச்சரிக்கை:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சங்கரன்பந்தல் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஊர் இளைஞர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி எச்சரிக்கை:

அஸ்ஸலாமு அலைக்கும், 

இன்று இரவு தொழுகை முடிந்தவுடன் நிர்வாகத்தின் சார்பில் இமாம் அவர்கள் அறிவிப்பு செய்தார்கள். 

அதில் நமதூர் இளைஞர்கள் இரவு நேரத்தில் தரங்கம்பாடி, காரைக்கால், பூந்தோட்ட எரவாஞ்சேரி என பல ஊருக்கு மந்தி சாப்பிட என கூறி அதிவேகத்தில் (ரேஸ்) பைக்கில் சுற்றிதிரிகின்றனர் என்றும் அதை பெற்றோர்கள் கண்டித்து அவர்களை, பாதுகாக்க நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் இதை அறிந்து தங்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்பு விசயத்தில் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.

சமூக அக்கறையுடன் செயல்படும் சங்கரன்பந்தல் ஜாமீஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு .

🤝 சங்கரன்பந்தல் மஸ்ஜித் நிர்வாகத்திற்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்  #நான் 
தேரிழந்தூர் H.முகம்மது சைபுல்லா உஸ்தா