Wednesday, 13 March 2024

இன்றைய 14-03-2024, இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்த செய்தி. / DMK & MMK-MHJ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,





CAA / சிஏஏ-வுக்கு எதிராக

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



சவாலாக அமைந்த மக்கள் பணி சாதுர்யமாக செயல்பட்ட IWF குவைத் மண்டல நிர்வாகிகள்;

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சவாலாக அமைந்த மக்கள் பணி சாதுர்யமாக செயல்பட்ட IWF குவைத் மண்டல நிர்வாகிகள்;

திருவண்ணாமலை சமுத்திரம் காலணியை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி #சோலை அவர்கள்,  கடந்த 8 மாதத்திற்கு முன்பு குவைத் வீட்டில் வேலைக்கு வந்துள்ளார். பணிச்சுமை காரணமாகவும், வயது மூப்பின் காரணமாக உடல் நலமும் பாதிக்கப்பட்டது.  தன் நிலையை கணவருக்கு தெரியப்படுத்தினார். கணவர் சங்கர் அவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் #செஞ்சி_மஸ்தான் அவர்களுக்கு மணு எழுதி தன் மனைவியை மீட்டு தருமாறு கேட்டுக்கொண்டார். வெளிநாடுவாழ் தமிழர் நலவாரியத்திடம் தகவலை தெரிவித்தார் அமைச்சர். வாரியத்திலிருந்து இந்திய தூதரகத்தை அனுகி அப்பெண்மணியை மீட்டுதருமாறு கேட்டுக்கொண்டனர். தூதரகம் சரியாக ஒத்துழைப்பு தராததால், வாரியம், இந்தியர் நல்வாழ்வு பேரவை குவைத் மண்டல நிர்வாகிகளை அனுகி அப்பெண்மணியை மீட்டு தாயகம் அனுப்பி வைக்குமாறு  கேட்டுக்கொண்டனர்.

 மண்டல தலைவர் #லால்குடி_ஜபருல்லாக்கான் அவர்களின் ஆலோசணையின்படி மண்டல செயலாளர் #கொடிக்கால்பாளையம்_கஜ்ஜாலி அவர்கள் துரிதமாக செயல்பட்டு ஒரு மாதகாலம் கடுமையான முயற்சிக்கு பிறகு, இந்திய தூதரகத்தின் வாயிலாக அப்பெண்ணை மீட்டு 11/03/2024 அன்று இரவு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார். குடும்பத்தார்கள் IWF குவைத் மண்டல நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்தார்கள். அப்பெண்மணிக்கு பயணச்சீட்டு எடுக்க உதவிய மண்டல நிர்வாகிகளுக்கு மண்டல தலைவர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.





எல்லாப் புகழும் இறைவனுக்கே...

என்றென்றும் மக்கள் பணியில்;

சமுதாய ஊழியர்கள்,
இந்தியர் நல்வாழ்வு பேவை,
குவைத் மண்டலம்.

தொடர்புக்கு,
55078876, 55139660, 69333276, 69696778

குர்ஆன் முப்பது ஜுஸ்வுகளையும் டவுன்லோடு செய்யாமல் விரல் கொண்டு தொட்டு நீங்கள் விரும்பிய ஜுஸ்வுகளை கேட்கலாம்

 இது ரமலான் மாதத்தினுடைய மிகச் சிறந்த அன்பளிப்பாகும். குர்ஆன் முப்பது ஜுஸ்வுகளையும் டவுன்லோடு செய்யாமல் விரல் கொண்டு தொட்டு நீங்கள் விரும்பிய ஜுஸ்வுகளை கேட்கலாம் இதை நீங்கள் கேளுங்கள் , உங்களின் நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் இதை அனுப்பி வையுங்கள்

 ஜுஸ்வு 1 ⇨ http://j.mp/2b8SiNO
 ஜுஸ்வு 2 ⇨ http://j.mp/2b8RJmQ
 ஜுஸ்வு 3 ⇨ http://j.mp/2bFSrtF
  ஜுஸ்வு 4 ⇨ http://j.mp/2b8SXi3
 ஜுஸ்வு 5 ⇨ http://j.mp/2b8RZm3
 ஜுஸ்வு 6 ⇨ http://j.mp/28MBohs
 ஜுஸ்வு 7 ⇨ http://j.mp/2bFRIZC
 ஜுஸ்வு 8 ⇨ http://j.mp/2bufF7o
ஜுஸ்வு 9 ⇨ http://j.mp/2byr1bu
 ஜுஸ்வு 10 ⇨ http://j.mp/2bHfyUH
 ஜுஸ்வு 11 ⇨ http://j.mp/2bHf80y
 ஜுஸ்வு 12 ⇨ http://j.mp/2bWnTby
 ஜுஸ்வு 13 ⇨ http://j.mp/2bFTiKQ
  ஜுஸ்வு 14 ⇨ http://j.mp/2b8SUTA
ஜுஸ்வு 15 ⇨ http://j.mp/2bFRQIM
ஜுஸ்வு 16 ⇨ http://j.mp/2b8SegG
 ஜுஸ்வு 17 ⇨ http://j.mp/2brHsFz
 ஜுஸ்வு 18 ⇨ http://j.mp/2b8SCfc
 ஜுஸ்வு 19 ⇨ http://j.mp/2bFSq95
 ஜுஸ்வு 20 ⇨ http://j.mp/2brI1zc
 ஜுஸ்வு 21 ⇨ http://j.mp/2b8VcBO
ஜுஸ்வு  22 ⇨ http://j.mp/2bFRxNP
 ஜுஸ்வு 23 ⇨ http://j.mp/2brItxm
 ஜுஸ்வு 24 ⇨ http://j.mp/2brHKw5
ஜுஸ்வு 25 ⇨ http://j.mp/2brImlf
 ஜுஸ்வு 26 ⇨ http://j.mp/2bFRHF2
ஜுஸ்வு 27 ⇨ http://j.mp/2bFRXno
 ஜுஸ்வு 28 ⇨ http://j.mp/2brI3ai
ஜுஸ்வு 29 ⇨ http://j.mp/2bFRyBF
 ஜுஸ்வு 30 ⇨ http://j.mp/2bFREcc

Thirumavalavan M.P Ramadan Fasting 20th year

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Thirumavalavan M.P Ramadan Fasting 20th year

🔹20 வது ஆண்டாக தொடர்ந்து ரமலான் மாத நோன்பு இருக்கும் தொல் திருமாவளவன்

🔹முழு விவரம்

https://www.adminnews.in/tamil-nadu-news/thirumavalavan-m-p-ramadan-fasting-20th-year/



Tuesday, 12 March 2024

ஆறுமுத்தம் பாளையம் அறிவொளி நகர் மேல்நிலைப்பள்ளி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருப்பூர்  மாவட்டம்

பல்லடம் ஒன்றியம் 


ஆறுமுத்தம் பாளையம் அறிவொளி நகர் மேல்நிலைப்பள்ளி 

புதிய பள்ளி கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

 இப்பணியை ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன்

 இரண்டாம் வார்டு உறுப்பினர் சையது ஒலி பானு முஜிப் ரஹ்மான்

 ஐந்தாம் வார்டு உறுப்பினர்
முத்துக்குமாரசாமி இன்று பார்வையிட்டனர்

கைகளைத் தானமாகக் கொடுத்தவர் / தானமாகப் பெற்றவர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனித நேயம் தந்த மதநல்லிணக்கம்..! 
                                             
இதயத்தைத் தொடும் இந்தப் படத்தைப் பற்றி அறிந்த பிறகு, கூப்பிய கைகளுடன் நிற்கும் இவர்களுக்கு வணக்கம் செலுத்த தயங்க மாட்டோம்.                                                       

படத்தில் கூப்பிய கைகளுடன் நிற்கும் நபர்,  இராணுவத்தின் துணிச்சலான வீரர்  அப்துல் ரஹீம். எதிரிகளுடனான போரில் வெடிகுண்டுகளைச் செயலிழக்க செய்யும் போது வெடிகுண்டு வெடித்ததில் ரஹீம் தனது இரு கைகளையும் இழந்தார்.

கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர், இறப்பதற்கு முன் தனது இரு கைகளையும் தானம் செய்துள்ளார். கைகளைத் தானமாகப் பெற்றவர்  இராணுவ வீரர் ரஹீம். 
 
எதிரே நிற்கும் பெண்கள், ஜோசப்பின் மகளும், மனைவியும். ரஹீமின் உடலோடு ஜோசப்பின் கைகள் இணைந்திருப்பதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடிக்கின்றனர். ஏனென்றால், மகளின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்த கைகள் அவை.  

ரஹீமின் இடது பக்கத்தில் நிற்பவர் கை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் சுப்பிரமணியம் சுவாமி. 

கைகளைத் தானமாகக் கொடுத்தவர் ஒரு கிறிஸ்தவர்...  

கைகளைத்

தானமாகப் பெற்றவர் ஒரு இஸ்லாமியர்.. 

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஒரு இந்து.. 

இதுதான் மனிதகுலத்தின் உண்மையான சாராம்சம். மதம், நாடு, பாரம்பரியம் எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள். ஒருவருக்கொருவர் அன்புடனும், அக்கறையுடனும் வாழ்கிறோம் என்பதுதான்  நிதர்சனமான உண்மை. 

மனித நேயத்திற்கு மதம் ஒரு பொருட்டு அல்ல.

நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது ⏰

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது ⏰

சில பள்ளிகளில் நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்துகின்றனர். எப்படியென்றால், சூரியன் மறைந்தவுடன் நோன்பைத் திறக்காமல், சூரியன் மறைந்து 7 – 10 நிமிடங்கள் கழிந்த பின்பே நோன்பு திறக்கின்றனர். அவர்கள் வெளியிடும் நோன்பு கால அட்டவணையில் கூட சூரியன் மறைவு என்று ஒரு நேரம் போட்டிருப்பார்கள். அதை விட 7 to 10 நிமிடங்கள் கூடுதலாக நோன்பு திறக்கும் நேரத்தைப் போட்டிருப்பார்கள். கேட்டால் பேணுதல் என்கின்றனர். இவர்களின் இந்த செயல் தவறு என்பதை பின்வரும் ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நோன்பானது பஜ்ர் ஆரம்பமாகும் நேரத்திலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் தான்.

“இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2006

சூரியன் மறைந்தவுடன் நோன்பை உடனே திறந்து விட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. அச்செயல் தான் நன்மைக்கு வழிவகுக்கும்.

“நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)

நூல்: புகாரி 1957

நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப்படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?” என்று கேட் டார்கள். நாங்கள் “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)’ என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)

நூல்: முஸ்லிம் 2004

சூரியன் மறைந்தவுடன் என்றால், இருட்டாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை, சூரியன் மறைந்தாலும் உடனே முழுவதும் இருட்டாகி விடுவதில்லை, பகலின் வெளிச்சம் இருக்கத் தான் செய்யும். நாம் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறந்து விட வேண்டுமே தவிர, இருட்டு வரவேண்டும் என்பதற்காக காலம் தாழ்த்தக் கூடாது.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், ‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!” என்றார். நபி(ஸல்) அவர்கள். ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?’ என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி)

நூல்: புகாரி 1955

எனவே நபி(ஸல்) அவர்களே செய்யாத ஒன்றை பேணுதல் என்ற பெயரில் யார் சொன்னாலும் அதனை ஏற்கத் தேவையில்லை. எனவே நோன்பு திறப்பதை தாமதிக்காமல், சூரியன் மறைந்தவுடன் திறந்து விட வேண்டும்.

CAA / சிஏஏ-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐயூஎம்எல் மனு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#BREAKING |

சிஏஏ-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐயூஎம்எல் மனு

ஹரியானா BJP முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,