Wednesday, 7 May 2014

மோடியை கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு வந்து சிறையில் தள்ள வேண்டும் -

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மோடியை கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு வந்து சிறையில் தள்ள வேண்டும் - பெண் சிங்கம் மம்தா கர்ஜனை...!
இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள போங்கோவன் என்னும் இடத்தில் பேசிய மம்தா, மேற்கு வங்கத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெங்காலி பேசுபவர்களுக்கும் பெங்காலி மொழி பேசாதவர்களுக்கும் இடையே பிளவு உண்டாக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது.
மக்கள் மத்தியில் வேறுபாடுகளை சுட்டிக்காட்டி கலவரம் உண்டாக்க திட்டமிடும் மோடிக்கு பிரதமர் ஆக எந்த தகுதியும் கிடையாது.
தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறும் இவரின் இடு
ப்பை சுற்றி கையிற்றை கட்டி சிறையில் அடைக்கவேண்டும்.
அவர் இங்கு பொதுக்கூட்டங்களில் பேச நான் அனுமதித்துள்ளேன். இதே நான் இவ்வாறு குஜராத்தில் பேசமுடியுமா? இவர் அரசியலில் ஈடுபடவே தகுதி அற்றவர் என மம்தா பேசியுள்ளார்.
ஒரு வகையில் பார்த்தால் மம்தா சொன்னது உண்மை தான், மேற்கு வங்கத்தில் சென்று பேசிய மோடி அங்குள்ள மக்கள் மத்தியில் மொழி வாரியாக பிரச்சனையை ஏற்படுத்தினார்.
இதே மம்தா குஜராத் சென்று கண்டிப்பாக இவ்வாறு பேச முடியாது. அண்டர் கிரவுன்டில் ஏற்பாடு செய்து அடியாட்களை கொண்டு கூட்டம் நடத்த விடாமல் செய்வார்.
கெஜ்ரிவால் அங்கே சென்று எத்தனை சிரமங்களை மேற்கொண்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
மோடியின் ஆட்டம் இத்துடன் முடிந்து விடுமா ?.
இன்னும் தொடருமா ?.
என்பதை அறிய இன்னும் சிறிது நாட்களே உள்ளன.
அவனுடைய ஆட்டம் முடிய அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.

Saturday, 3 May 2014

இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஊடகம் எப்படி நடந்து கொள்கிறது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,





இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஊடகம் எப்படி நடந்து கொள்கிறது என்று பாருங்கள் எனது அருமை தொப்புள் கொடி உறவுகளே....
அசாமில் நேற்று நடந்த பயங்கரவாத சம்பவத்தை எந்த ஒரு பத்திரிகையும் பெரிது படுத்தி எழுதவில்லை என்ன காரணம் தெரியுமா ....?
பயங்கரவாத செயலால் இறந்த 30பேரும் எம் இஸ்லாமிய சமுகத்தை சார்ந்தவர்கள் என்ற காரணத்தால் ...
" ஊடகமும் ஒரு தூண் இந்தியவிற்கு என்று சொல்லை மாற்றி , தற்பொழுது பாசிச பயங்கரவாத கும்பலுக்கு ஒரு தூணாக விளங்குகிறது ஊடகம் "
-மதுக்கூர் ஃபவாஸ் தமுமுக .

Thursday, 1 May 2014

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு
ஒருவர் பலி வன்மையாக கண்டிக்கிறேன்
இதைச்செய்த காட்டுமிராண்டிதனத்தில் உள்ளவர்கள் மனிதகுல விரோதிகள்... யாராக இருந்தாலும் மிகக்கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்...."
கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.
Like ·  · 

Saturday, 26 April 2014

துபாயில் இன்று 27.04.2014 இரவு 9.00 மணியளவில் பேச்சுப்பயிற்சி வகுப்பு -MTTC

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.
இதில் துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி பல்வேறு இடங்களில் கடந்த 6 வருடமாக நடைபெற்று வருகிறது.

இன்ஷா அல்லாஹ் 
துபாயில் இன்று 27.04.2014 இரவு 9.00 மணியளவில் பேச்சுப்பயிற்சி  வகுப்பு மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெறும்.  

சகோதரர்கள் கட்டாயம் முன் அனுமதி பெற்று வரவும் தயவு செய்து அனுமதி இல்லாமல் வர வேண்டாம்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு. 

இந்த அறிய வாய்ப்பை சகோதரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் .
அமீர் - மதுக்கூர் ஹாஜா 050-6989822


http://asibrahim.blogspot.ae/2010/12/starting-thuwa.html




Monday, 21 April 2014

துபாயில் 22.04.2014 இரவு 9.00 மணியளவில் பேச்சுப்பயிற்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

இதில் 
துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 4 மதமாக நடைபெற்று வருகிறது.

இன்ஷா அல்லாஹ் 
துபாயில் இன்று 22.04.2014 இரவு 9.00 மணியளவில் பேச்சுப்பயிற்சி  நடைபெறும்.  சகோதரர்கள் கட்டாயம் முன் அனுமதி பெற்று வரவும் தயவு செய்து அனுமதி இல்லாமல் வர வேண்டாம்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு. 

இந்த அறிய வாய்ப்பை சகோதரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் .
அமீர் - இர்ஷாத்  050-2426380

தேர்தல் 24.04.2014

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல்

Monday, 14 April 2014

மரணித்து விட்டால் மூன்று காரியங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் (வழியாக மட்டும் நன்மைகள் அவருக்கு சேர்ந்து கொண்டேயிருக்கும். அவைகள்) தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும்.
அந்த மூன்று காரியங்கள் :
நிலையான தர்மம்,பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4005

மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்!!!!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
அண்மைக் காலத்தில் நமது தலைமையை நோக்கி திருமணம் தொடர்பான புகார்கள், விமர்சனங்கள் படையெடுக்க ஆரம்பித்தன.
தவ்ஹீது மணமகன் பெண் வீட்டாரிடம் ஏதேனும் மறைமுகமாக வரதட்சணை வாங்கிய விவகாரமா? அல்லது பெண் வீட்டில் விருந்தா? இது தொடர்பான புகார் எதுவும் வரவில்லை. விமர்சனம் எதுவும் வரவில்லை.
வந்த புகார், விமர்சனம் அனைத்தும் மண்டபத்தில் நடக்கும் திருமணம் குறித்துத் தான். மண்டபத்தில் திருமணம் மார்க்க அடிப்படையில் கூடாது என்பதாலா? அதுவும் இல்லை. மாறாக, மண்டபத் திருமணங்களில் செய்யப்படும் செலவினங்கள் பற்றியே விமர்சனம் எழுகின்றது.
திருமண விருந்தான வலீமாவைப் பொறுத்த வரையில் மார்க்கத்தில் ஒரு வரையறை இல்லை. அவ்வாறு ஒரு வரையறை வைக்க முடியாத நெருடலான விஷயம் திருமண விருந்து.
ஆனாலும் அதில் வரம்பு கடந்து சென்று விடக் கூடாது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணமக்களை வாழ்த்தும் போது கூட அல்லாஹ் (பரக்கத்) அருள் செய்வானாக என்று தான் பிரார்த்திக்கின்றார்கள். அதனால் தம்பதியருக்கும் மிக மிக அவசியம் பரக்கத் என்பதை இதன் மூலம் விளங்கலாம்.
பரக்கத் என்பதன் பொருள்!!!!!!!!!!!!!!!
இந்த பரக்கத் என்பதன் பொருள் என்ன? என்பதை விரிவாகத் தெரிந்து கொள்வதற்காக அல்லாஹ்வின் திருமறை வசனங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களையும் பார்ப்போம்.
பூமியில் புதைந்து கிடக்கும் பரக்கத்
நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் (பரக்கத்) பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
அல்குர்ஆன் 41:10
உலகில் இந்தப் பூமியில் மனித இனம் மட்டுமே உயிர் வாழவில்லை. ஊர்வன, பறப்பன, நீர்வாழ் உயிரினங்கள் போன்ற எண்ணற்ற உயிரினங்கள் பூமியில் வாழ்கின்றன. தாவர இனமும் அறிவியல் அடிப்படையில் உயிரினம் தான். கோடான கோடி உயிரினங்களுக்கும் தாவர வகைகளுக்கும் உணவு வழங்கும் ஓர் உன்னதத் தாயாக, ஊட்டச் சத்து வழங்கும் தானியக் களஞ்சியமாக பூமி திகழ்கின்றது. இன்று உலகில் வாழ்கின்ற மக்கள் தொகை 700 கோடியாகும்.
இப்போது வாழ்கின்ற மக்களுக்கும், ஏற்கனவே வாழ்ந்து மறைந்தவர்களுக்கும் உலகம் அழியும் நாள் வரை உலகில் பிறக்கப் போகின்றவர்களுக்கும் உணவு அளிக்கவிருப்பது இந்தப் பூமி தான்.
மழையில் அடங்கிய மகத்தான பரக்கத்!!!!!!!!!!!!!!!!!!
அண்மைக் காலத்தில் தமிழகத்தின் தென் பகுதி கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் கூட வற்றிப் போய் விட்டது. அணைகளில் பாசனத்திற்கு அல்ல, குடிநீருக்குக் கூட தண்ணீர் இல்லாத அளவுக்குத் தரை தட்டியது.
ஊராக இருந்தாலும், ஆறாக இருந்தாலும் அதற்குத் தனது உணவு வளத்தை பூமி தர வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் வான்மழை தான். இல்லையென்றால் மனித வாழ்வு அஸ்தமித்துப் போய் விடும். அந்த வான்மழைக்கும் அல்லாஹ் பரக்கத் என்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றான்.
அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் (பரக்கத்) பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.
அல்குர்ஆன் 7:96
சந்ததியில் அடங்கிய சமுதாய பரக்கத்!!!!!!!!!!!!!!!!!!
இந்தப் பூமியில் வாழும் 700 கோடி மக்களும் யார் என்கிறீர்கள்? எல்லாம் நூஹ் நபியின் கப்பலில் இருந்தவர்கள் தான். வெள்ளம் வந்து விரோதிகள் அழிக்கப்பட்டு, கப்பல் தரையிறங்கிய போது கப்பலிலிருந்து இறங்கிய நூஹ் நபியின் சமுதாயத்தை நோக்கி அல்லாஹ் பரக்கத் என்ற வார்த்தையின் பன்மைச் சொல்லைப் பயன்படுத்துகின்றான்.
"நூஹே! உம் மீதும், உம்முடன் உள்ள சமுதாயங்கள் மீதும் (பரக்கத்) பாக்கியங்கள் பொழியவும், நம்மிடமிருந்து சாந்தி நிலவிடவும் இறங்குவீராக!'' என்று கூறப்பட்டது. சில சமுதாயங்களுக்கு சுக வாழ்வை அளிப்போம் பின்னர் துன்புறுத்தும் நமது வேதனை அவர்களை அடையும்.
அல்குர்ஆன் 11:48
மறுபடியும் வரும் "மண்'ணின் பரக்கத்!!!!!!!!!!!!!!!!!
யுக முடிவு நாள் ஏற்படும் போது பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும், எந்த முடி வீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கி விடும். பின்னர் பூமிக்கு, "நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக; உன்னிடமுள்ள வளங்களை (பரக்கத்தை) மறுபடியும் தருவாயாக'' என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரே யொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தோல் அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போது மானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமான தாயிருக்கும்.
நூல்: முஸ்லிம் 5228
இந்த ஹதீஸிலிருந்து பரக்கத்தின் பொருளை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது குறைந்த வாழ்வாதாரத்தில் நிறைவான வளம் பெறுதல் என்று விளங்கிக் கொள்ளலாம்.
ஆட்டு மந்தையில் பரக்கத்!!!!!!!!
ஒட்டகத் தொழுவங்களில் தொழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "ஒட்டகத் தொழுவங்களில் தொழாதீர்கள். ஏனெனில் அவை ஷைத்தான்களாகும்'' என்று பதில் சொன்னார்கள். அவர்களிடம் ஆட்டுத் தொழுவங்களைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அத்தொழுவங்களில் தொழுங்கள்! ஏனெனில் அவை அருள் (பரக்கத்) நிறைந்தவையாகும்'' என்று பதில் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: பர்ரா பின் ஆஸிப் (ரலி)
நூல்: அபூதாவூத் 493
இன்று உலகில் கோடிக்கணக்கான ஆடுகள் உணவுக்காக அறுத்துப் பலியிடப்படுகின்றன. அவை ஈனுகின்ற குட்டிகளோ மிகக் குறைவாக இருப்பினும் பலன்கள் மிக அதிகமாக இருக்கின்றன. பன்றிகள் அதிகமான குட்டிகள் போடுகின்றன. அவற்றின் பலன்கள் மற்றும் உணவுக்காக அறுப்பதும் மிக மிகக் குறைவு தான். இந்தக் கணக்கின்படிப் பார்த்தால் உலகில் ஏராளமான பன்றிகள் பெருகிப் போயிருக்க வேண்டும். ஆட்டினம் அழிந்து போயிருக்க வேண்டும். ஆனால் ஆட்டினம் பல்கிப் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றது.
இவையெல்லாம் அல்லாஹ்வின் மகத்தான அற்புதங்கள். பரக்கத்திற்குரிய அரிய சான்றுகள்.
இந்த பரக்கத்தை மணமக்கள் அடைய வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் திருமணத்தை எளிமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் மண்டபத் திருமணங்கள் இதற்கு நேர் மாற்றமானவை. மண்டபத்திலும் ஒரு சில எளிய திருமணங்கள் நடந்தாலும் அவை ஆடம்பரத்தின் அடையாளச் சின்னமாகத் தான் அமைகின்றன.
மண்டப வாடகையிலேயே பணக்கார வாடை தெரிய ஆரம்பித்து விடுகின்றது. அடுத்தபடியாக, மண்டப அரங்கத்தை அலங்கரிக்கும் வண்ண விளக்கு, அலங்காரங்கள் என்று அதன் பரிமாணம் அகன்று கொண்டே செல்கின்றது. எளிமைத் திருமணத்திற்கு இது எள்ளளவுக்கும் கட்டியம் கூறுவதாக இல்லை. ஏழையின் திருமணமாகவே இருந்தாலும் மண்டபத் திருமணம் ஒரு மாளிகைத் திருமணமாகக் காட்சியளிக்கின்றது.

இது நரகத்திற்குரிய செயல் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


ஏக இறைவனின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நாங்கள் மேற்கொண்ட பயணமொன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் (சற்று தாமதமாக) வந்து கொண்டிருந்தார்கள். அஸர் தொழுகையின் நேரம் வந்துவிட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
அப்போது நாங்கள் (கால்களைக் கழுவாமல்) கால்களைத் தண்ணீர் தொட்டுத் தடவ (மஸ்ஹு செய்ய) ஆரம்பித்தோம்.
(இதை பார்த்த) நபி (ஸல்) அவர்கள்..
(உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் என்று கூறினார்கள்.
புகாரி 60 / முஸ்லிம் 406
-----------------------------------------------------------
இறைவன் கருணையாளன். நம் சிறு பாவங்களை மன்னிக்கக் கூடியவன்.
எனினும் நம்மால் இயன்றவரை  அவனுடைய கட்டளைகளை முழுமையாக நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்..
சிலநேரங்களில் தாமதாக தொழுகைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு,ஜமாத்தில் கலந்துவிட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக உளூ செய்துவிட்டு ஓட முயற்சிப்போம்.
அந்நேரங்களில் நம் அங்கங்களை சரியான முறையில் கழுவுவதில் கவனக்குறைவு ஏற்பட்டு விடும்.
சில நேரங்களில் தலைக்கு மஸஹ் செய்தோமா இல்லையா என்று உளூவை முடித்தப் பிறகு அல்லது தொழுகையில் நின்ற பிறகு யோசித்துக் கொண்டிருப்போம்.
இன்னும் பல நேரங்களில் குதிகால்களை கழுவுவதில் முழுமையில்லாமல் விட்டுவிடுவோம்..
இது முற்றிலும் தவறு சகோதர சகோதரிகளே..
இது நரகத்திற்குரிய செயல் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்..
தாமதித்துவிட்ட தொழுகைக்காக இப்படி அவசரமாக குறையுடன் உளூ செய்துவிட்டு, முழு தொழுகையையும் பாழாக்குவதை விட..
பொறுமையாக குறையின்றி உளூ செய்துவிட்டு, கிடைத்த ஜமாத்தில் கலந்துகொண்டு, மீதமுள்ள ரக்காஅத்துகளை பூர்த்தி செய்து மன திருப்தியோடு வருவது சிறந்தது...
அல்லாஹ் அவனுக்கு குறைவின்றி நன்றி செலுத்தும் அடியார்களாக நம்மை ஆக்குவானாக..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..
by sheik dawood

Saturday, 12 April 2014

அஜ்மான் இந்தியன் இஸ்லாஹி சென்டர் சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் 11-04-2014 – வெள்ளிக்கிழமை
(UAE-நேரம்) இரவு 07.00 மணி முதல் 08.15 மணி வரை  அஜ்மான் இந்தியன் இஸ்லாஹி சென்டர் சார்பாக ( INDIAN ISLAHI CENTER ) மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் .

அதில் சகோதரர் A.S.இபுராகிம் - பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை துபாய் கிளை தலைவர் சொர்க்கத்திற்கு உண்டான எழிய வழி என்ற தலைப்பில் அல்லாஹ்வும், அல்லாஹுவுடைய தூதர் முஹம்மது நபி (ஸல் ) சொன்ன கட்டளைகள் என்ன என்பதை அறிந்து அதன் பிரகாரம் நடக்க வேண்டும் எனவும் மேலும் சிறிய செயல்களாக இருந்தாலும் பெரிய செயல்களாக இருந்தாலும் அல்லாஹ்வும், அல்லாஹுவுடைய தூதர் முஹம்மது நபி (ஸல் ) கூறியிருக்கின்றார்களா என பார்த்து நம்முடைய வாழ்க்கையை அமைத்து கொள்ளவேண்டும் என அறிவுரை கூறபட்டது. 

இது ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்!