Monday 6 April 2020

லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.

லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.

1. அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.

2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.

3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள்.ஆனால்
அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.

4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.

5. இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம்.

6. பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி, மௌலவி, மதகுருமார்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது.

7. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் ,கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல.

8. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

9. இந்த உலகமும் தங்களுக்கு சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன.

10. நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும், இந்த நம்பிக்கை முதலில் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டது.

11. உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.

12. நாமும் நம் குழந்தைகளும் 'பாஸ்ட் பூட் ' இல்லாமல் கூட வாழலாம்.

13. தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.

14. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்று கிடையாது.

15. சமூக ஊடகம் பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே.

16. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே, வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல.

17 இந்தியப் பெண்கள் காரணமாக வீடு கோயிலாக மாறும்.

18. பணத்திற்கு மதிப்புக் குறைவே.

19. இந்தியப் பணக்காரர்கள் பலர் நற்குணம் நிறைந்தவர்கள்.

20. இக்கட்டான நேரத்தை இந்தியரால் மட்டுமே கையாள முடியும்.

21. ஒற்றைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் சிறந்தது.

உங்கள் நன்பனான AS

Saturday 4 April 2020

சரியான விடையை தேர்ந்தெடுக்க*

*சரியான விடையை தேர்ந்தெடுக்க*

1) Feb 24 ல் டெல்லியில் தப்லீக் ஜமாத் நடத்திய கூட்டத்தில் சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட வெளிநாட்டுகாரர்களுக்கு வீசா வழங்கியது யார்?

A. டெல்லி முஸ்லிம்கள்

B. கெஜ்ரிவால்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. இந்திய பிரதமர்

2) அதே Feb 24 ல் நடந்த லட்ச கணக்கான பேர் கலந்து கொண்ட 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை நடத்தியது யார்? அதில் கலந்து கொண்ட பல அமெரிக்கர்களுக்கு வீசா வழங்கியது யார்?

A. கிறிஸ்தவர்கள்

B. இந்திய பிரதமர்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. டொனால்ட் ட்ரம்ப்

3) Feb 21 அன்று ஈஷா யோகா மையம், கோயம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சிக்கு சீனா, இத்தாலி, ஜெர்மன், பிரான்ஸ், லெபனான் போன்ற பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு இந்தியாவிற்குள் வர வீசா வழங்கியது யார்?

A. இந்திய பிரதமர்

B. அமெரிக்கா பிரதமர்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. ஜக்கி வாசு தேவ்

4) டெல்லி மற்றும் பிற மாநிலங்களுக்கு பிழைக்க சென்ற மக்களுக்கு உணவளிக்காமலும் வீடு திரும்ப வழிவகை செய்யாமலும் ஊரடங்கை அமல்படுத்தி கூட்டம் கூட்டமாக ரோட்டில் அழையவிட்டது யார்?

A. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

B. அமெரிக்கா பிரதமர்

C. இந்திய பிரதமர்

D. ஆண்டி இண்டியன்ஸ்

5) வீசா வழங்கப்பட்டு இந்தியாவிற்குள் வந்தவர்களை (மத்திய அரசு கட்டுபாட்டுக்குள் இருக்கும்) ஏர்போர்ட்டில் Screening Process சரியாக செய்யாததற்
கு யார் பொறுப்பு?

A. மோடி

B. இம்ரான்கான்

C. இந்திய மக்கள்

D. கொரோனா

6) இப்பொழுது இந்தியாவில் கொரோனா பரவியதற்கு யார் காரணம்?

A. இந்து

B. முஸ்லிம்

C. கிறிஸ்டின்

D. மோடி

சங்கிகளுக்கு Questions ரொம்ப Tough ஆ இருக்கும். அதனால 6 கேள்விக்கும் சேர்த்து ஒரே ஒரு Clue கொடுக்குறேன்.

(இல்லாத ரயில்வே ஸ்டேஷனில் 'டீ' ஆத்தியவர்.)
...........................................


உங்கள் நன்பனான AS

பிறர் நலமே முக்கியம்இஸ்லாம் மகளின் திருமண நகைகாகவும் செலவுக்காவும் வைத்த பணத்தை பசியோடு இருப்பவர்களின் உணவுக்கு பணத்தை பயன்படுத்தி பொதுச்சேவை செய்யும இஸ்லாமிய குடும்பம்👇🏽👇🏽

பிறர் நலமே முக்கியம்இஸ்லாம்

மகளின் திருமண நகைகாகவும் செலவுக்காவும் வைத்த பணத்தை
பசியோடு இருப்பவர்களின் உணவுக்கு பணத்தை பயன்படுத்தி பொதுச்சேவை செய்யும
இஸ்லாமிய குடும்பம்👇🏽👇🏽

திருநெல்வேலியில் மருத்துவமனை கட்டுவதற்காக இடம்

காமாராஜரின் நெருங்கிய நண்பர் திருநெல்வேலி பெட்டைக்குளத்தைச் சார்ந்த காதிர். அவரிடம் காமராஜர் திருநெல்வேலியில் மருத்துவமனை கட்டுவதற்காக இடம் கேட்க - தன்னுடைய சொந்த நிலத்தை பணம் வாங்காமல் தானமாக கொடுத்தார் பெட்டைக்குளம் காதிர் சாகிப் அவர்கள். அவர் கொடுத்த இடத்தில் தான் திருநெல்வேலி மருத்துவமனை இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் இதனையெல்லாம் ஞாபகப்படுத்தவேண்டும் என்கிற அவசியம் இருப்பதால் ஞாபகப்படுத்துகிறேன். இந்த தகவலைச் சொன்ன நண்பர் Thoufeek Thangal - க்கு நன்றி

Police man north side

https://m.facebook.com/story.php?story_fbid=2566685416912212&id=100007123352247?sfnsn=scwshmo&extid=USOdKFDZd3WcYr7v&d=n&vh=i


உங்கள் நன்பனான AS

9 நிமிடம் விளக்கை அனைப்பதற்கு பதில், ஒரு 9 நாட்களுக்கு டீ.வியை அனைத்து வைப்பது நன்று.

🌏 உலக மக்கள் தொகை சுமார் 700 கோடி

முதல் 16 நாடுகள்:

1 சீனா 140 கோடி
2 🇮🇳 133 கோடி
3 அமெரிக்கா 33 கோடி
4 இந்தோனேசியா 23 கோடி
5 பிரேசில் 21 கோடி
6 பாக்கிஸ்தான் 20 கோடி
7 வங்காளதேசம் 16 கோடி
8 நைஜீரியா 15 கோடி
9 உருசியா 14 கோடி
10 ஜப்பான் 12 கோடி
11 மெக்சிக்கோ 10 கோடி
12 எகிப்து 9 கோடி
13 பிலிப்பைன்ஸ் 9 கோடி
14 வியட்நாம் 8 கோடி
15 ஜெர்மன் 8 கோடி
16 எதியோப்பியா 7 கோடி

இன்றைய தேதியில் உலகில் கொரானா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் சுமார் 12-லட்சம்
இது மொத்த உலக மக்கள் தொகையில் #0.17% சதவிகிதம் தான்

"ஒரு சதவிகிதம் கூட வரவில்லை".

அதில் இறந்தவர்கள் 61-ஆயிரம்.
🌏 மொத்த மக்கள் தொகையில் #0.0009% சதவிகிதம் தான்

நோயிலிருந்து #மீண்டவர்கள் 2-லட்சத்திற்கும் மேல்

அதாவது மாண்டவர்களை விட மீண்டவர்களின் எண்ணிக்கை #அதிகம்.

அதனால் மக்கள் தேவை இல்லாமல் பீதி அடைய வேண்டாம்.

நோய் வருவதற்கு முன்,
பயம் நம்மை கொன்று விடுப்போகிறது ..

வரலாறு காணாத நோய் தொற்று தான் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால்..

பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த ஊடகங்கள் தான்,
நாள் முழுக்க கொரனா செய்திகளை பரபரப்பாக தொடர்ந்து ஒளிபரப்பி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றது.

கெட்ட செய்தியை மட்டுமே சொல்வதைத் தவிர இவர்களுக்கு வேறெதுவும் தெரியாது.

ஊடகங்களை அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும்

ஒரு நாளைக்கு
காலையில் 30 நிமிடங்களும்,
மாலையில் 30 நிமிடங்களும் மட்டுமே செய்திகள் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

மக்கள் நலன் கருதி அரசு இதை உடனே செய்திட வேண்டும்.

மக்களும் இந்த செய்தி சேனல்களை வச்ச கண் வாங்காமல் பார்ப்பதை நிறுத்திவிட்டு ✋,
பீதியிலேயே வாழாமல் இயல்பாக இருக்க சற்று முயற்சிக்க வேண்டும்.

9 நிமிடம் விளக்கை அனைப்பதற்கு பதில்,
ஒரு 9 நாட்களுக்கு டீ.வியை அனைத்து வைப்பது நன்று.

Jamal Ibrahim

உங்கள் நன்பனான AS

இந்துக்களே மனசாட்சிக்கு_பயந்து_சொல்லுங்கள்

#மனசாட்சிக்கு_பயந்து_சொல்லுங்கள்...
இந்த உடையில் இருக்கும் தப்லிக்வாதிகள் யாரையாவது சாலையோரங்களிலோ பொதுவெளியிலோ #சிறுநீர் கழித்து பார்த்திருக்கீர்களா?

பார்க்கிலோ பீச்சிலோ பெண்களுடன் #அநாகரிகமாக நடந்து பார்த்திருக்கீர்களா?

#சினிமா_தியேட்டரில் பார்த்திருக்கீர்களா?

#மதுபான_பாரில் பார்த்திருக்கீர்களா?

#போதையில் தள்ளாடி பார்த்திருப்பீர்களா?

#வட்டிக்கு விட்டு பார்த்திருப்பீர்களா?

#பணம் வைத்து சூதாடி பார்த்திருப்பீர்களா?

என்றாவது #மாற்று_மதத்தவரிடம் போதனை செய்து பார்த்திருக்கிறீர்களா?

#வரதட்சணை வாங்கி கேள்விபட்டிருக்கிறீர்களா?

ஏதாவது #பொதுபிரச்சினைகளில் பார்த்திருக்கீர்களா?
(CAA போராட்டங்களில் கூட தப்லிக் ஜமாத் கலந்து கொண்டதில்லை)

இவ்வளவு அவதூறுகளுக்கு பின்னும் ஏதாவது ஒரு தப்லிக்வாதியை அழைத்து பேசிப்பாருங்கள் #அமைதியாக #அழகாக ஒரு விளக்கத்தை கொடுத்துவிட்டு #இறைவன்_போதுமானவன் என சொல்லி அங்கிருந்து நகர்ந்து விடுவர்!

இறைவன் யார் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் #இறைவன்_உண்மை

அந்த #இறைவன்_போதுமானவன்


உங்கள் நன்பனான AS

மெல்ல திரை விலகுவதாய் தோன்றுகிறது. விஜயபாஸ்கர் ஊடகங்களை சந்தித்தவரைலும் 'டெல்லிமாநாடு' என்ற வார்த்தை வெளிப்படவே இல்லை.

மெல்ல திரை விலகுவதாய் தோன்றுகிறது. விஜயபாஸ்கர் ஊடகங்களை சந்தித்தவரைலும் 'டெல்லிமாநாடு' என்ற வார்த்தை வெளிப்படவே இல்லை. தமிழகத்தின் முதல் உள்ளூர் தொற்றான மதுரை நோயாளியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது கூட அவருக்கு கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனை இருப்பதாகவும் எனவே கொரோனாதான் என உறுதியாகச் சொல்லவியலாதெனவும் தெரிவித்தார். பின் மறுநாள் காலை அந்த மதுரை நோயாளி மரணச்செய்தி வெளியானது. அப்போதுகூட முஸ்லிம்கள் குறித்து எதிர்மறை சித்திரம் எதுவும் வரையப்பட்டிருக்கவில்லை.

பின் காட்சி மாறி விஜயபாஸ்கர் ஓரங்ட்டப்பட்டு சுகாதாரத்துறை செயலர் ஊடகங்களை சந்திக்கிறார். 'டெல்லி மாநாடு, முஸ்லிம்கள்' என்ற பதம் கொரானாவை விட வேகமாக பரவுகிறது. சொல்லி வைத்தாற்போல திடீரென தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்கிறது. கொரோனா தொற்றாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தனை முஸ்லிம்களுக்கும் உண்மையிலேயே முறையான சோதனை நடத்தப்பட்டிருக்கிறதா?

ரத்தமாதிரி மற்றும் பிற பரிசோதனை முடிவுகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? எனில் சர்வதேச முடிவுகளின் அடிப்படையில் அது ஒத்துப் போகக்கூடியதுதானா? இவர்கள் குடும்பத்தினரின் உடல்நலம் எப்படி இருக்கிறது? அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையேயில்லை. பீலா ராஜேஷ் அறிவிக்கும் எண்களில் அவர் அறுதியிடுவதெல்லாம் "இன்று இத்தனை தொற்றாளர்களைக் கண்டறிந்துள்ளோம். அதில் இத்தனை பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள்" என்பதைக் கடந்து மாநிலத்திற்கு தேவையான வேறெந்த தொடர்ந்து தகவலுமில்லை.

ஆனால் களத்தில் என்ன நிகழ்வதென்ன? 'தீவிரவாதிகள்' எனும் பதத்தை விட 'நோய் பரப்புபவர்கள் ' எனும் பதம் நன்றாகவே வேலை செய்கிறது. சாலையில் போலிஸ், மருத்துவமனையில் டாக்டர், தெருவினுள் சக மனிதன் என அனைவருமே வாயில் வந்ததையெல்லாம் பேசுகிறார்கள். "துலுக்கன் நமக்கெல்லாம் கொரோனாவ பரப்பி வுட்டுட்டான்" என்பது சமூக உரையாடலாகியிருக்கிறது.

"அந்தளவுக்கெல்லாம் இல்லையென" பலரோ சிலரோ மறுக்கலாம். ஆனால் இருக்கிறதென்பது நிஜம். இன்று பொது சமூகம் கொரோனாவுக்கு பயப்பட சிறுபான்மைச்சமூகமோ பொது சமூகத்திற்கு பயப்பட என கசப்பான சமூக விலகல் துவங்கியிருக்கிறது.

நாசூக்காக புன்னகைத்து விட்டு எவ்வித உரையாடலுமற்று விலகிச் செல்லும் மனிதர்கள் உருவாகியிருக்கிறார்கள். கடந்து செல்வதுதான் எதுவும். எனினும் பெரும்பான்மையினரின் ஆதரவற்று ஒற்றைச்சமூகமாய் எத்தனையைத்தான் கடப்பது.

சரி, இன்றைய நிலையென்ன? முதலில் அத்தியாவசியப் பொருள்கள் யாவும் தடையின்றி கிடைக்குமென்றார்கள். இன்று வரை விலையதிகமெனினும் பெரும்பாலான பொருள்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால் இறைச்சிக்கடைகளை நாளை முதல் தடை செய்திருக்கின்றார்கள். சமூக இடைவெளியற்றுப்போகுமென்று காரணம் சொல்லப்படுகிறது. எனில் மளிகைக் கடைகளிலும், மார்க்கெட்டிலும், இன்னபிற இடங்களிலும் முறையான சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதென இந்த அரசு நம்புகிறதா?

எனில் அசைவ உணவுத் களின் மீதான ஒவ்வாமையை ஒரு அரசே தோற்றுவிப்பது ஏன்? இதற்குமுன் ஆசிஃப் பிரியாணியின் மீது செலுத்தப்பட்ட வன்மம். மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஆட்டிறைச்சியை 'நாய்க்கறி' என சங்கிகள் பரப்பிய அவதூறு. இன்றுவரையிலும் கோவை HMR உணவகத்தை குறித்து பரப்பப்படும் வன்மம்நிறைந்த அபாண்டங்களிலெல்லாம் இஸ்லாமியப் பொருளாதாரத்தை சிதைக்க வேண்டுமென்ற கீழ்மைச்சிந்தனை இருந்திருக்கவில்லையா?

இப்படியான சூழலில் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றான இறைச்சிக்கடைகளை ஒரு அரசே மூட உத்தரவிடுவதன் பின்னணியென்ன?

பெரும்பாலும் மதமாச்சரியங்கள் ஏதுமற்று கலந்து வாழும் இச்சமூக அமைப்பினுள் ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகமே குறிவைத்து அவதூறு செய்யப்படும்போது உடனடியாகத்தலையிட்டு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசிற்குத்தானே இருக்கிறது? டெல்லி மாநாட்டுச் சென்றவர்களில் "616 பேரின் போன்கள் அணைக்கப்பட்டிருக்கின்றன." என அவர்களை தேடப்படும் குற்றவாளிகளைப்போல அறிவித்த சுகாதாரச் செயலர் அடுத்த நாள் "அனைவரும் தாமாகவே பரிசோதனைக்கு வந்துவிட்டார்கள். அனைவருக்கும் நன்றி" என ஒற்றை வார்த்தையில் கடந்துவிட்டார்.

ஆனால் நேற்று தொடங்கி இனிவரும் காலங்களிலும் அவர் கூறிய வார்த்தையின் விளைவுகளை அனுபவிக்கப்போவது ஒட்டு மொத்த சமூகமும்தான். இனி முதல்வர் தலையிட்டு தெளிவுபடுத்தினாலும் இப்பழிச்சொல் அகலுமா எனத் தெரியவில்லை.

இறுதியாக ஊடகங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வரும் அவதூறுகளை அப்படியே நம்பி எதிர்வினையாற்றும் பெரும்பான்மையினரிடம் ஒன்று கேட்கிறேன். 'தீவிரவாதிகள்' என்றாலும் நம்புகின்றீர்கள். 'நோய் பரப்புபவர்கள்' என்றாலும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

உங்களுடனே கலந்து வாழும் ஒரு சமூகத்தைப்பற்றி உங்களுக்கென எந்த ஒரு மதிப்பீடும் இல்லையா? எனில் உங்களிடம் என்னவாகத்தான் இருக்கிறோம் நாங்கள்?

- பதிவு : Farooq Meeran


உங்கள் நன்பனான AS

Wednesday 1 April 2020

ஊடக தரத்தை கவனியுங்கள்

ஊடக தரத்தை கவனியுங்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட முன்னாள் குடியரசு தலைவர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதாக செய்தி

இவர்கள்தாம் உண்மை செய்தியை தருவார்கள் என்று நம்பனுமாம்