Wednesday, 15 January 2025

ஆம்புலன்ஸ் - பல்லாவரம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு விட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

இன்று நள்ளிரவு 16-01-2025-செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டவுடன் அவரை செம்பாக்கம் பகுதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற பொழுது

பல்லாவரம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு விட்டது

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் யாருக்கும் எந்த விதமான சேதாரமும் இல்லை செம்பாக்கம் பகுதி ஆம்புலன்ஸ் மட்டும் சேதாரமடைந்தது அல்லாஹ்வுடைய கிருபை கொண்டு அந்த ஆம்புலன்ஸுக்கு அனைத்து பேப்பர்களும் சரியான முறையில் இருந்த காரணத்தினால் விபத்து ஏற்படுத்திய இன்னொரு காருடைய ஓனர்  சரி செய்து கொடுத்து விடுவதாக வாக்குறுதி அளித்தார் மேலும் முதல் தவணையாக ரூபாய் 10,000 கொடுத்து விட்டார்

விபத்து ஏற்பட்டவுடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஐ ஜமால் அவர்களும் செம்பாக்கம் பகுதி நிர்வாகிகளும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விட்டனர் அவர்கள் செல்லும் பொழுது செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல் பகுதி தலைவர் சாதிக் அவர்களை  தொடர்பு கொண்டார் சாதிக்கும் துரிதமாக செயல்பட்டு இவர்கள் போவதற்குள் ஆம்புலன்ஸ் எடுத்து வந்து அந்த நோயாளியை செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரம் தொகுதி ஆம்புலன்சில் நோயாளியை  மாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்

துரிதமாக செயல்பட்ட செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் செம்பாக்கம் பகுதி நிர்வாகிகளுக்கும் பம்மல் பகுதி நிர்வாகிகளுக்கும் மாவட்டக் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

துணைப் பொதுச்செயலாளர் மாமன்ற  உறுப்பினர் அண்ணன் யாக்கூப் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பதிவு போடப்பட்டுள்ளது

S.K.ஜாஹிர் உசேன் மாவட்ட தலைவர் செங்கல்பட்டு வடக்கு

Tuesday, 14 January 2025

கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்..

15.01.2025 கழுதை ஒன்று புலியிடம் கூறியது "புல் நீல நிறமானது" என்று .
புலி அதற்கு "இல்லை, புல் பச்சை." என்றது. விவாதம் சூடுபிடித்தது, இருவரும் நடுவர் மன்றத்தை நாட முடிவு செய்தனர், இதற்காக அவர்கள் காட்டின் ராஜாவான சிங்கத்தின் முன் சென்றனர். கழுதை உடனே கத்த ஆரம்பித்தது "அரசே, புல் நீல நிறம் என்பது உண்மைதானே?".
சிங்கம் "ஆம். உண்மை, புல் நீல நிறமானது." என்றது.
"புலி என்னுடன் உடன்படவில்லை மற்றும் முரண்படுகிறது மற்றும் என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டிக்கவும்" என்றது கழுதை.
"புலிக்கு 5 ஆண்டுகள் மௌன தண்டனை விதிக்கப்படும்" என்று அரசர் உத்தரவு போட கழுதை மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து, தன் வழியில் சென்றது.
புலி அரசரின் தண்டனையை ஏற்றுக்கொண்டது, ஆனால் புலி சிங்கத்திடம் தண்டனையை கடைபிடிக்கும் முன் கேட்டது "அரசே, நீங்கள் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?, எல்லாவற்றிற்கும் மேலாக, புல் பச்சையாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை".
அதற்கு சிங்கம் "உண்மையில், புல் பச்சைதான் என்றது.
"அப்படியானால் என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்?".
சிங்கம் பதிலளித்தது..
"புல் நீலமா அல்லது பச்சையா என்ற கேள்விக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பதும், அதற்கு மேல் அந்தக் கேள்வியால் என்னைத் தொந்தரவு செய்வதும் உன்னைப் போன்ற துணிச்சலான புத்திசாலித்தனமான உயிரினத்துக்கு உகந்ததில்லை என்பதால்தான் இந்தத் தண்டனை."
உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாத முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும். ஆனால் அவர்களது நம்பிக்கைகள், மாயைகளினால் அடையும் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்...

 பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.                   (அல்குர்ஆன்: 17:37-38)

எவ்வளவோ ஆதாரங்களை நாம் முன்வைத்தாலும், புரிந்துகொள்ளும் திறனில்லாதவர்களும் இருக்கிறார்கள், மற்றவர்கள் மீது ஈகோ மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் சரி என்று நினைப்பதுதான். அறியாமை அலறும்போது, புத்திசாலித்தனம் அமைதியாக இருக்கும். அறிவாளியாகிய உங்கள் அமைதி அதிக மதிப்புடையது என்பதை உணர்ந்து நடந்தால், வாழ்வு வளமாகும்..!

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது “”ஸலாம்” எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 25:63) ➚

48 ஆவது சென்னை புத்தகக் காட்சி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

48 ஆவது சென்னை புத்தகக் காட்சி.
 
தமுமுகவின் மக்கள் உரிமை அரங்கை நிறைத்த நினைவுகள்..
👇👇👇
https://www.facebook.com/share/p/17Utq5pvV3/

Monday, 13 January 2025

வாழ்க்கையில இரண்டே தத்துவங்கள்தான்....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்க்கையில இரண்டே தத்துவங்கள்தான்....
கொஞ்ச நாள் பொறுத்தால் எல்லாம் மாறிவிடும்...
கொஞ்ச நாள் போகப்போக எல்லாம் பழகிவிடும்

Thursday, 9 January 2025

JOB - DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (PJSC)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் அரசு நிறுவனமான துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் (DEWA)  கீழ்க்காணும் இன்ஜினியரிங் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவித்துள்ளது!! அமீரகத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இன்ஜினியரிங் துறை சார்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....

09.01.2025  

உங்கள் CV களை hr.recruitment@dewa.gov.ae என்ற முகவரிக்கு அனுப்பவும் !

DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (PJSC)

DEWA (PJSC) INVITES QUALIFIED AND EXPERIENCED PROFESSIONALS TO APPLY FOR THE FOLLOWING VACANT POSITIONS- hr.recruitment@dewa.gov.ae

https://www.dewa.gov.ae/en/about-us/service-guide/consumer-services

https://www.dewa.gov.ae/en/

(சில சகோதரர்கள் வேலை தேடுகின்றனர் சில இடங்களில் வேலையும் உள்ளது முயற்சி செய்யுங்கள் இறைவன் நாடினால் சிறந்ததை அடைந்து கொள்வீர்கள)

இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல் பால் வீராங்கனை வசீமாவுக்கு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல் பால் வீராங்கனை வசீமாவுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கப் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

திருச்சி அருகே உள்ள புலிவலம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தளர்ச்சி இல்லா தொடர் முயற்சிகளாலும் கடுமையான பயிற்சிகளாலும் நான்காவது ஆசிய ரோல்பால் விளையாட்டில் இந்திய அணி சார்பில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்று, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப் பெருமை சேர்த்துள்ளார் வசீமா என்ற மாணவி.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக கல்வியிலும் முன்னணி மாணவியான அவர் இறுதி பருவத் தேர்வை எழுத இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஜமால் முகமது கல்லூரியின் மாணவியாகிய வசீமா ஒரு சாதாரண தொழிலாளியின் மகளாகப் பிறந்து, கல்வி நிறுவனங்களும் குடும்பத்தினரும் தந்த ஊக்கத்தால் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

ரோல் பால் என்பது மிகுந்த சிரமம் உடைய ஒரு விளையாட்டு ஆகும். உருளைகள் வைத்த காலணிகளை அணிந்து ஆடப்படும் இந்த விளையாட்டில் ஆசியாவின் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன.

கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய அளவிலான நான்காவது ரோல் பால் சாம்பியன் பட்டத்துக்கான விளையாட்டில் இந்தியா, இலங்கை, ஈரான், மியான்மர், நேபாளம், மலேசியா, ஓமன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், பூட்டான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன இறுதிப்போட்டியில் ஈரான் அணியை எதிர்கொண்டு இந்திய ரோல்பால் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. 

மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் ரோல்பால் அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்ட வென்ற வசீமாவும் ஆண்கள் பிரிவில் சிவச்சந்திரனும் பாராட்டு பெற்றுள்ளனர். இருவரும் தமிழ்நாட்டினர் என்பது நமக்கு கூடுதல் சிறப்பாகும். இருவருக்கும் தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் வழங்கி கவுரவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
எம்.எச்.ஜவாஹிருல்லா 
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

Wednesday, 8 January 2025

M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.

M. H. ஜவஹிருல்லா (1959-ம் ஆண்டு பிறந்தவர்) இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதியாவர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் (MMK) நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். 1959-ம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் இளங்குடியில் பிறந்த ஜவஹிருல்லா, தன்னுடைய வாழ்க்கையை புறக்கணிக்கப்பட்ட சமுதாயங்களின், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களின் மறுக்கப்பட்ட உரிமைகளையும், நலன்களையும் ஊக்குவிப்பதில் அர்ப்பணித்துள்ளார்.

ஜவஹிருல்லாவின் ஆரம்பக் கல்வி பாரம்பரிய இஸ்லாமிய படிப்புகளிலும், நவீன கல்வியிலும் அடிப்படை பெற்றுள்ளதுடன், அவர் பொருளாதாரம் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார், அதே துறையில் முதுகலைப்படிப்பை முடித்து, பின்னர் இஸ்லாமிய படிப்புகளில் பிஏச்.டி. பெற்றார். இந்த கல்விப் பின்னணி சமூக செயற்பாட்டிலும், அரசியலிலும் அவரது சமூக சமுதாயப் பணிகளுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியது.

2009-ஆம் ஆண்டு, ஜவஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியை நிறுவினார், இது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கட்சி. அவரது தலைமையில், MMK தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் பங்காற்றும் கட்சியாக உயர்ந்துள்ளது, முக்கிய அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகள் பேணவும், அதற்காக வாதிடவும் பல முறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜவஹிருல்லாவின் அரசியல் வாழ்க்கை, 2011 முதல் 2016 வரை ராமநாதபுரம் தொகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்த காலத்தை மையமாக கொண்டது. அவற்றில், சமூகநீதி, சமய ஒற்றுமை, சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற பிரச்சினைகளுக்கு அவர் திறம்பட தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார். சட்டப்பேரவையில் அவர் எடுத்த முயற்சிகள் பெரும்பாலும் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வாழ்க்கைத்துணைகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டன.

அரசியலுக்கு அப்பால், ஜவஹிருல்லா பல சமூக நலத்திட்டங்களில் சோம்பலின்றி ஈடுபட்டு வருகின்றார். அவர் சமய ஒற்றுமைக்கு வலியுறுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு சமய மற்றும் சமூகக் குழுக்களுக்கிடையே இடைவெளியை குறைக்கும் பணியில் கஷ்டப்பட்டு வருகின்றார்.

M. H. ஜவஹிருல்லா இன்று தமிழ்நாட்டின் அரசியல் பரப்பில் முக்கியமான தலைவராகத் தொடர்ந்தும் செயல்படுகின்றார், அனைத்து மக்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் அதிகாரம் என்பவற்றுக்காகப் போராடி வருகின்றார்.

சீமான் பேச்சு கண்டிக்கதக்கது / மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

09.01.2024 Chennai 

https://youtu.be/56qaH3wk7e0?si=TELGpAb-rY28ggO_&sfnsn=wiwspwa

சீமான் பேச்சு கண்டிக்கதக்கது, தமிழ்நாட்டின் வரலாற்றை புரியாமல் யாரையோ திருப்தி படுத்துவதற்கு ஆற்றிய உரை - 

மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

திருமணத்திற்கு இனி பத்திரப்பதிவு அலுவலகம் வர தேவையே இல்லை.! ஈசியா ஆன்லைனில் பண்ணலாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருமணத்திற்கு இனி பத்திரப்பதிவு அலுவலகம் வர தேவையே இல்லை.! ஈசியா ஆன்லைனில் பண்ணலாம்

திருமண பதிவுகளை எளிதாக்க, தமிழக அரசு புதிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. 

இதன் மூலம் வீட்டிலிருந்தே திருமணத்தை பதிவு செய்து கட்டணத்தை செலுத்த முடியும். 

பத்திரிக்கை அடித்து, உறவினர்களை கூப்பிட்டு  விருந்து வைத்து திருமணமானது விஷேசமாக நடந்தாலும் அந்த திருமணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிந்தால் மட்டுமே செல்லுபடியாகும். 

எனவே பத்திர பதிவு அலுவலகத்தில் மணமகன், மனமகள் போட்டா, ஆதார் ஆவணங்கள், வயது சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்கள் கொடுத்து பதிவு செய்யப்படுகிறது. 




தற்போது உள்ள சூழலில் பாஃபோர்ட் போன்ற காரணங்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் அவசியமாக உள்ளது. 

எனவே இதற்காக மீண்டும் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளர் முன்பாக கையெழுத்திட்டு முறைப்படி திருமணங்கள் நடைபெறும்.

திருமண பதிவு - பத்திரபதிவு அலுவலகம்

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு சட்டத்தின் படி திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைபதிவு செய்ய முடியும். 

இது சட்டம் மாற்றப்பட்டு 2020-ம் ஆண்டு இந்த சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் ஒன்று கொண்டுவந்தது. 

அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் பெரும்பாலானவர்கள் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று அலைய விரும்பாத நிலையே உள்ளது. 

இதனால் பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள் மற்றும் காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்

லஞ்சமாக கைமாறும் பணம்

மேலும் பத்திர பதிவு அலுவலங்களில் திருமணத்தை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள்களோடு லஞ்சமாக பல ஆயிரத்தில் பணமும் கைமாறுவது தெரியவந்தது. 

இதனையடுத்து திருமணத்தை பத்திர பதிவு அலுவலகத்தில் சென்று பதிவு செய்யும் முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. 

அதன் படி  பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் வீட்டில் இருந்தே திருமணத்தை பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் செலுத்த முடியும். 

திருமணம் செய்துகொள்ளப்பட்டதற்கான ஆவணங்கள் உரிய முறையில் இருந்தால் உடனடியாக திருமண சான்றிதழ்களும் வழங்கப்படவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆன்லைனில் திருமண பதிவு

தமிழக பத்திர பதிவுத்துறையில் பல்வேறு பணிகள் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்டார்-2 மென் பொருள் மூலமாக எளிமையாக சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் அடுத்தக்கட்டமாக ஸ்டார்-3 மென் பொருள் அப்டேட் செய்யப்பட உள்ளது. இந்த சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

எனவே திருமண பதிவுகள் பொதுமக்களே வீட்டில் இருந்து மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் விரைவில் அறிமுகமாக இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முதற்கட்டமாக தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும் எனவும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tuesday, 7 January 2025

புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளுக்கான பதவி காலம், 2025 ஜனவரி 5ந்தேதியோடு நிறைவடைந்த நிலையில் 28 மாவட்டங்களுக்கான ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் “பொதுமக்கள் புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

நமது கோரிக்கையின் அடிப்படையில் எங்கள் ஊரில் பொதுமக்கள் புகார் பதிவேடு பராமரிக்கப்பட்டுள்ளது. 

நமது நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரியை சந்தித்து தங்களது கிராமத்திற்குத் தேவையான அத்தியாவசிய பணிகள் குறித்து எழுத்துப் பூர்வமாகமனுக் கொடுத்து பொதுமக்களின்  தேவைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மு. உசைன் கனி
மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி
மாநில பொறுப்பாளர்.