Thursday, 23 May 2024

யார் இந்த பாண்டியன் IAS?

யார் இந்த பாண்டியன் IAS? 

ஏன் அவர் மீது மோடியும் அமித்ஷாவும் அவ்வளவு வன்மத்தை கக்குகிறார்கள்? 

1999 ல் பாரடிப் புயலினால் அப்போதுதான் பேரழிவை சந்தித்திருந்தது ஒடிசா. அந்த சூப்பர் சூறாவளியில் 10000 பேர் பலியனார்கள். 
அதே ஓடிஷாவில் மிக கடினமான நேரத்தில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, மிக கடுமையான உழைப்பாளியான பாண்டியன் 2000 ஆம் ஆண்டு IAS அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 

2002 ஆம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார், அங்கு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அனைவரையும் ஒருங்கிணைத்து பெரும் பங்காற்றினார். 

2004 இல், ரூர்கேலாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக, அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திவாலாகியிருந்த ரூர்கேலா மேம்பாட்டு முகமைக்கு (RDA) தலைமையேற்றார்.  பாண்டியனின் தலைமையில், ஆர்.டி.ஏ., 15 கோடி உபரி லாபம் பார்த்தது. அவர் பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த மக்களுக்கு அவர்கள் பணத்தை திருப்பித் தர முடிந்தது.

2005ல், ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.  மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தி, வருடத்திற்கு 700 சான்றிதழ்களில் இருந்து 19000 சான்றிதழ்களாக விநியோகம் அதிகரித்தது. 

மயூர்பஞ்சில் அவர் செய்த பணிக்காக இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றார். மயூர்பஞ்சில் அதன் வெற்றிக்குப் பிறகு, PWD சான்றிதழ்களுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு தேசிய மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஹெலன் கெல்லர் விருதைப் பெற்ற ஒரே அரசு ஊழியர் இவர்தான்.

கஞ்சம் மாவட்ட கலெக்டராக இருந்தபோது, ​​பாண்டியன் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலை பாதுகாப்பை வழங்கவும் NREGS ஐ அறிமுகப்படுத்தினார். அவர் முதல் முறையாக ஊதியத்திற்கான வங்கிக் கட்டண முறையைத் தொடங்கினார், மேலும் தொழிலாளர் கொடுப்பனவுகள் நேரடியாக ஊதியம் பெறுபவருக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய 1.2 லட்சம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கினார். பாண்டியன் நாட்டின் சிறந்த மாவட்டத்திற்கான NREGSக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.

2011 ஆம் ஆண்டில், பாண்டியன் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார், அவர் 2023 வரை பதவியில் இருந்தார். 2019 இல், அவர் 5T, (மாற்ற முயற்சிகள்) செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஒடிசாவின் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. முதியோர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 1000, இளைஞர்களுக்கு ஆண்டு உதவித்தொகையாக ரூ. 10,000. மிகவும் சமமான மாநிலமாகப் போற்றப்படும் பெண்கள் இப்போது 0% வட்டியில் 5 லட்சம் வரை கடன் பெறலாம். உணவுப் பற்றாக்குறை மாநிலமாக இருந்து, ஒடிசா இப்போது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது.

500 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 முறை முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் கனவான பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலை பாரம்பரிய வழித்தடமாக மாற்றியதன் மூலம் நனவாக்கினார். 
பூரி கோயிலுடன், மாநிலத்தில் உள்ள தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கோயில்கள் போன்ற பாரம்பரிய கட்டமைப்புகளின் மாற்றம் மற்றும் பராமரிப்பையும் பாண்டியன் மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்திய தேசிய ஹாக்கி அணிக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) ஸ்பான்சர் செய்வதிலிருந்து, தொடர்ந்து இரண்டு முறை ஆண்கள் FIH ஹாக்கி உலகக் கோப்பையை நடத்துவது வரை, ஹாக்கியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, பாண்டியன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரின் விருதைப் பெற்றார்.

அக்டோபர் 2023 இல், பாண்டியன் தனது அதிகாரத்துவப் பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார், மேலும் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைப் பெற்ற 5ட் (Transformational Initiatives - மாற்றத்திற்கான முயற்சிகள்) தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழராக இருந்தாலும் அவர் ஒடிசாவின் மருமகன், அவர் திருமணம் செய்தது சுஜாதா IAS என்ற ஒரு ஒடிசாவின் மகளைத்தான். 27 நவம்பர் 2023 அன்று, கட்சித் தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக் முன்னிலையில் பாண்டியன் முறைப்படி பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார். 

23 ஆண்டுகள் ஒரு மாநிலத்திற்காக இரவு பகல் பார்க்காமல் ஒரு இந்தியானாக உழைத்த பாண்டியனை, அந்த மாநில மக்கள் போற்றும் ஒரு திறமையான மனிதரை எங்கிருதோ குஜராத்திலிருந்து வந்த இருவர், அவர் தமிழர் அவர் எப்படி உங்களை ஆளலாம் என்று கேட்பது முறையா? 

சரி அவர்கள் அப்படித்தான். தமிழனின் வளர்ச்சியை பார்த்தால் எப்போதும் பொச்செரிச்சல்தான். இவ்வளவு திறமையுள்ள ஒருவர், வேற்று மாநிலத்தில் இவ்வளவு பெரிய பதவியை அடைந்து இவ்வளவு சாதித்து இருப்பதை ஒரு தமிழனாக நினைத்து பெருமை படாமல் அவர் எதிர்காலத்தில் மண் அள்ளி போட நினைக்கும் இந்த பொறாமை பிடித்த, அரசு நடவடிக்கைக்கு பயந்து 6 ஆண்டுகளில் ராஜினாமா செய்துவிட்டு ஓடிவந்த அறைவேக்காடு அண்ணாமலையை என்ன சொல்வது? 

வாழ்த்துக்கள் பாண்டியன் அவர்களே!

Tuesday, 21 May 2024

அருள் மறை குர்ஆனை இறக்கி அருள்புரிந்த அல்லாஹ்வே!

அல்ஹம்துலில்லாஹ்! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!

அருள் மறை குர்ஆனை இறக்கி அருள்புரிந்த அல்லாஹ்வே! 
அற்புதமான இவ்வேதத்தை எங்களுக்கு அருளிய அல்லாஹ்வே!
உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உரித்தாகுக!

கருணைமிக்க எங்களின் அல்லாஹ்வே!
குர்ஆனின் மூலம்
எங்கள் உள்ளங்களை
விசாலப்படுத்துவாயாக!
 குர்ஆனை ஓதுவதினால்  எங்கள் மண்ணறையை ஒளிமயமாக்குவாயாக!
குர்ஆனை எங்களுக்கு சிபாரிசு செய்ய வைப்பாயாக!

 குர்ஆனை ஓதுவதினால்  எங்களின் வெளிரங்கத்தைப் பரிசுத்தப் படுத்துவாயாக!
 குர்ஆனை ஓதுவதினால்  எங்கள் அந்தரங்களைத் தூய்மைப் படுத்துவாயாக!

 குர்ஆனை ஓதுவதினால்  எங்கள் பாவங்களை அழிப்பாயாக!
 குர்ஆனை ஓதுவதினால்  எங்கள் தவறுகளை மன்னிப்பாயாக!

குர்ஆனை நாங்கள் தினந்தோறும் ஓதக்கூடியவர்களாக ஆக்குவாயாக!
 குர்ஆனை ஓதுவதினால்  எங்கள் நோய்களைக் குணப்படுத்துவாயாக!

குர்ஆனை பொருள் அறிந்து ஓதிட நல்வாய்ப்பு வழங்குவாயாக! குடும்பத்தோர் யாவரும் குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதிடும் முறையை தெரிந்து ஓதிவரச் செய்வாயாக!
ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

என்னைப் படைத்துப் பரிபாலிப்பவனே !

அல்ஹம்துலில்லாஹ் !
அஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் !

என்னைப் படைத்துப் பரிபாலிப்பவனே ! 
என் பாவங்களைக் கண்டும் உடனே என்னை தண்டிக்காமல் பொறுமை காப்பவனே !
என் மீது நீ காட்டும்  பொறுமையைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன்.
 
என்னை பாவம் செய்யவிடாமல் தடுப்பாயாக !
என் தவறுகளையும், பாவங்களையும் நான் உணர்ந்து வருந்தி  தௌபா செய்பவனாக என்னை ஆக்குவாயாக !

எப்பொழுதும் நான் செய்யும் தவறுகளை பிறரிடமிருந்து மறைப்பாயாக ! உன்னுடைய மன்னிப்பை நிரந்தர மாக்குவாயாக ! உன்னுடைய படைப்பினங்களுக்கு முன் என்னைக் கேவலப் படுத்திவிடாதே !

என் இரட்சகனே ! நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன்.
என்னைப் பலப்படுத்துவாயாக !
நோயாளியாக இருக்கிறேன். என்னைக்
குணப்படுத்துவாயாக !
எனக்கு சுகத்தைக் கொடுப்பாயாக ! மனஅழுத்தம் பதட்டம் போன்றவைகளை விட்டும் என் உள்ளத்தை பாதுக்காப்பாயாக !

நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி அவனிடமே எங்கள் காரியங்களை ஒபபடைத்து விட்டோம். உன்னையல்லால் வேறு நாயனில்லை.
எங்கள் இறைவனே ! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே ! எமது ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளுக்கு எங்களை காப்பாற்றியருள்வாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

Sunday, 19 May 2024

வனத்துக்குள் மற்ற உயிரினங்களுக்கு ஆபத்து வருவதை அறிந்து எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும் குரங்குகள்..!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வனத்துக்குள் மற்ற உயிரினங்களுக்கு ஆபத்து வருவதை அறிந்து எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும் குரங்குகள்..!
https://youtube.com/shorts/d70VPgGNE9s?si=OTEoxvz3ewRQUtsM

wanted P0ST GRADUATE BIOLOGY TEACHER)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இராமநாதபுரம் மாவட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை உயிரியல் ஆசிரியர்(P0ST GRADUATE BIOLOGY TEACHER)  நிரந்தர பணியிடத்திற்கு M.SC.,B.ED.(Biology, Botany, Zoology) படித்த முஸ்லிம் ( BCM ) இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.  

தொடர்புக்கு 

 8072073591

பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த நபர்? புயலை கிளப்பிய வீடியோ.. உ.பி.யில் ஷாக்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த நபர்? புயலை கிளப்பிய வீடியோ.. உ.பி.யில் ஷாக்

https://chat.whatsapp.com/BMbs20f3cxS4aP5uswKk8n1


டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் இளைஞர் ஒருவர் மொத்தம் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

லோக்சபா தேர்தல் 2024
தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் தேதிகள்
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது.


இதன் காரணமாக நாடு முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் முறைகேடு சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

8 முறை: அதில் இளைஞர் ஒருவரே பல முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். அந்த வீடியோவை அவரே எடுத்துள்ள நிலையில், இது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மொத்தம் 8 முறை அந்த நபர் பாஜகவுக்கு வாக்களித்தாக தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், பலரும் இதுபோன்ற தேர்தல் முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சாடி வருகின்றனர்.

ஃபரூகாபாத் லோக்சபா தொகுதியில் கடந்த மே 13ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்தது போலத் தெரிகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்.

கொந்தளித்த காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி இந்த வீடியோவை தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. தேர்தல் ஆணையமே, இந்த நபர் மொத்தம் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். இப்போதாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்" என்று பதிவிட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் தாக்கு: உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவரும் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவருமான அகிலேஷ் யாதவும் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "இது தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால், நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில்... பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் லூட் (கொள்ளை) கமிட்டி போலத் தான் நடந்து கொள்ளும்" என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

"ராகுல் காந்தி பிரதமராக எல்லா தகுதியும் இருக்கு, ஆனா.." கடைசியில் ட்விஸ்ட் வைத்த பிரியங்கா காந்தி
ஃபரூகாபாத் தொகுதி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஃபரூகாபாத் தொகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த ஃபரூகாபாத் தொகுதியில் இடைத்தேர்தல்கள் சேர்ந்து மொத்தம் 18 முறை தேர்தல் நடந்துள்ளது. அதில் அதிகபட்சமாக 8 முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. கடைசியாக 2009இல் காங்கிரஸ் இந்த தொகுதியை கைப்பற்றி இருந்தது. அதன் பிறகு நடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜகவே இங்கு வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019இல் நடந்த தேர்தலில் பாஜக சார்பில் முகேஷ் ராஜ்புட், பகுஜுன் சமாஜ்- சமாஜ்வாடி கூட்டணியில் பகுஜுன் சமாஜ் சார்பில் மனோஜ் அகர்வால், காங்கிரஸின் சல்மான் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் பாஜகவின் முகேஷ் 5.69 லட்சம் வாக்குகள் பெற்று சுமார் 2.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பகுஜுன் சமாஜின் மனோஜ் அகர்வால் 3.48 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். காங்கிரஸின் சல்மான் 55 ஆயிரம் வாக்குகளைப் பெற்று டெபாசிட் கூட இழந்தார்.

#இராமநாதபுரம்_நகர்_தமுமுக_வின் #அவசர_இரத்ததான_சேவவை 🩸🩸

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

[7:07 pm, 18/05/2024] Saleemullah Khan: இன்று (18:05:2024) 
#இராமநாதபுரம்_நகர்_தமுமுக_வின்
#அவசர_இரத்ததான_சேவவை 🩸🩸

இரத்ததானம்!! 
மனித நேயத்தின் மிகச்சிறந்த  அடையாளம்!!! 

பிற உயிர்களை காப்பதற்கு இறைவனால் அளிக்கப்பட்ட மிக நல்ல சந்தர்ப்பம்!!!




ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன்_5:32)

🩸இராமநாதபுரம் செய்யது அம்மாள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்
பாம்பன் ஊரைச் சேர்ந்த 
#ஜெலிலா_பேகம், பெண்மணிக்கு
B+பாசிட்டிவ் இரத்தம்...
ஷபீர் அஹமது அவர்கள் இரத்ததானம் செய்தனர்.

உடன்...
முகம்மது தமீம்
நகர் செயலாளர் ஏற்பாடு செய்திருந்தனர்.

#எல்லாப்_புகழும்_இறைவனுக்கே.

என்றென்றும் மக்கள் சேவையில்..!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
மனித நேய மக்கள் கட்சி
மருத்துவ சேவை அணி
இராமநாதபுரம் நகர் .
9894485986,
9698047786,
9003317979,
7708083555,
9159737760,

நேர்வழிக்காக துஆ செய்யுங்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



நேற்று - 18.05.2024 பரமக்குடி அஞ்சுமுக்கு ரோடு பஸ் ஸ்டாப்பில் தஃவா மேசை அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அல்லாஹ்வின் மார்க்கம் விளக்கப்பட்டது. ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு அல்குர்ஆன் வழங்கப்பட்டது. 

அனைவரின் நேர்வழிக்காக துஆ செய்யுங்கள்.

Dawa desk at Paramakudi five corner bus stop - 18.05.2024. Alquran is distributed to one person.

கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் 19-05-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

19-05-2024 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் 
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும்
இராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து 
கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் கமுதி நகர தமுமுக கிளையின் சார்பாக கலாவிருத்தி மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெற்றது.

 இந்த முகாம் மாவட்டத் தலைவர் எம்.வாவா ராவுத்தர் தலைமையில் முகாமை கமுதி காவல் ஆய்வாளர் குருநாதன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

முகாமில் 250 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்


இராமநாதபுரத்தில் மே 23 முதல் 26 SMI கோடைக்கால பன்முக முகாம் - 2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இராமநாதபுரத்தில் மே 23 முதல் 26 
SMI கோடைக்கால பன்முக முகாம் - 2024

இஸ்லாமிய வகுப்புகள்:

1. தொழுகையின் முக்கியத்துவம் + தொழும் முறை (செயற்முறை வகுப்பு)
2. ஈமானிய அடிப்படைகள் - 6
3. தூய்மை பாடம்
4. நபி (ஸல்) அவா்கள் வரலாறு
5. முஸ்லிம்களின் நற்பண்புகள்

_(தினமும் காலை 5:45 முதல் 6:45 வரை துஆ & திக்ர் மனனம் - ஒரு நாளைக்கு தலா 5 துஆ & திக்ர் என 3 நாளைக்கு
 15 துஆ & திக்ர் மனனம்)_

பொதுவான வகுப்புகள்

1. Career Counselling (என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?)
2. Relationship Development (உறவுகளை பேணுதல்)
3. Drug Addiction (போதை தடுப்பு விழிப்புணா்வு
4. Social Media (சமூக வலைதள பயன்பாடு)
5. Goal Setting (இலக்குகளை தீா்மானித்தல்)
6. Stress Management (மன அழுத்த மேலாண்மை)

_________

(தினமும் காலை 6:45 TO 7:30 - Exercise வகுப்புகள்)

: SMI கோடைகால பயிற்சி வகுப்புகள் அமைப்பு

முதல் நாள் - 1 வகுப்பு 

இரண்டாம் நாள் - 8 வகுப்புகள்
 (1 Exercise + 5 வகுப்புகள் + 1 மனன வகுப்பு + 1 தொழுகை Pratical)

மூன்றாம் நாள் - 8 வகுப்புகள் (1 Exercise + 6 வகுப்புகள் + 1 மனன வகுப்பு)

நான்காம் நாள் - 5 வகுப்புகள் (1 Exercise + 1 வகுப்பு + 2 கழக வகுப்புகள் + 1 மனன வகுப்பு)

__________

இஸ்லாமிய வகுப்புகள் - 5
பொதுவான வகுப்புகள் - 6
மனன வகுப்புகள் - 3
தொழுகை Pratical வகுப்பு - 1
அரசியல் & சமூக அமா்வுகள் - 2 
Exercise - 3
கழக வகுப்புகள் - 2
________
மொத்த வகுப்புகள் - 22

வகுப்புகள் அல்லாமல்...
மாணவ அறிமுகம் (முதல் நாள்)
திரையிடல் (தினமும் இரவு)
Feedback (இறுதி நாள்)

சமூகநிதி மாணவர் இயக்கம், இராமநாதபுரம் மண்டலம் சார்பில் மே 23 முதல் 26 வரை இந்த கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்த தலைமையின் சார்பில் மிகுந்த பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பொருப்பு மாவட்டத்தில் 10 ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் மட்டுமே அனுமதி 

குறிப்பாக 8,9 படிக்கும் மாணவர்கள் 
 அனுமதி இல்லை 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் 
சமூகநீதி மாணவர் இயக்கம்
Er. A.அப்துல் வாஜித் BE.,MBA.,
SMI இராமநாதபுரம் மண்டல செயலாளர் 

1. S.பிஸ்மில்லாஹ் கான்
மாவட்ட செயலாளர்
இராமநாதபுரம் மத்திய மாவட்டம் 

2. M.முகம்மது ஆசிர் ரஹ்மான்
மாவட்ட பொருளாளர்
இராமநாதபுரம் மத்திய மாவட்டம்

3. S.அயூப் கான்
மாவட்ட‌ துனைச் செயலாளர்
இராமநாதபுரம் மத்திய மாவட்டம்

4. M.முகம்மது ஒசாமா
மாவட்ட‌ துனைச் செயலாளர்
இராமநாதபுரம் மத்திய மாவட்டம்

5. S.முகம்மது இர்ஃபான் அலி
மாவட்ட‌ துனைச் செயலாளர்
இராமநாதபுரம் மத்திய மாவட்டம்

தொடர்பு....
 80722 76765
944-322-7380
948-854-4476