Sunday, 10 March 2024

இராமநாதபுரத்தில்..8-9 மார்ச் 2024 இரண்டு நாள் மாநாடு - பரிசு பொருட்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இராமநாதபுரத்தில்..8-9 மார்ச் 2024
இரண்டு நாள் மாநாடு நிறைவுபெற்றது

எல்லா புகழும் இறைவனுக்கே...

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை, மாநில செயலாளர் V.N. மரியம் நிஸா Dip.in Islamic studies அவர்கள் தலைமையில்
ஆயிஷா சித்திக்கா மகளிர்  இஸ்லாமிய கல்லூரி, இனைத்து கல்வி விழிப்புணர்வு மாநாடு 




*மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, ஹதீஸ் மனனம்,கேள்வி பதில்,நிகழ்ச்சி தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் 
மார்க்க அறிஞர் அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் ஆலிமா தஸ்லிமா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் மக்கள் உரிமை அபிராமம் அப்துல் காதர் 
மத்திய மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகிம் மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா அப்துல் ரஹீம் மில்லத் பிர்தவ்சி அவர்கள் முன்னிலையில் 

கல்வி பயின்ற மாணவிகளுக்கு கல்விச் சான்றிதழ் வழங்கப்பட்டது

ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் லேப் டாப் உட்பட கொடுக்க பட்டது

மாணவர்கள் கல்வி என இறைவன் உதவியால் சிறப்பாக நடைபெற்றது

ஆயிரத்திற்க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

மூன்று லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் லேப் டாப் உட்பட மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது
ஒரு வருடம் ஆறு மாதம் மூன்று மாதம் கல்வி பயின்ற 200 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது 

எல்லா புகழும் இறைவனுக்கே......

தகவல்...
தமுமுக இஸ்லாமிய பிரச்சார பேரவை

மஸ்ஜித் தக்வா ஜமாத் இராமநாதபுரம் / 2024 ரமலான் இரவு தொழுகை மார்க்க அறிஞர்களின் சிறப்புரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

2024 ரமலான் இரவு தொழுகை
மார்க்க அறிஞர்களின் சிறப்புரை


ஆண்கள் பெண்கள் தொழுகைக்கு தனித் தனியே ஏற்பாடு

தகவல்
மஸ்ஜித் தக்வா ஜமாத்
இராமநாதபுரம்

திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி - வெல்லட்டும் ஜனநாயகம் வீழட்டும் பாசிசம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

11.03.2024

https://www.facebook.com/share/p/Mg3bRDbsDomeWJ5W/?mibextid=ox5AEW

திமுக சமூகநீதி அரசு என்றால் 
மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கவேண்டும்- ம.ம.க பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA 

திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய வெல்லட்டும்  ஜனநாயகம் வீழட்டும் பாசிசம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம்  மாவட்டத் தலைவர் A.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் ஹஜ் கமிட்டி தலைவருமான ப.அப்துல் சமது MLA, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி,மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர்.புழல் S.A. சேக் முகமது அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் பேசிய ப.அப்துல் சமது MLA அவர்கள் திமுக சமூகநீதி அரசு என்றால் மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கவேண்டும் என பேசினார் 

மேலும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#mmkitwing

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் வரும் மார்ச் 13, 2024 அன்று திருச்சியில் கூடுகிறது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் வரும் மார்ச் 13, 2024 அன்று திருச்சியில் கூடுகிறது.

நாட்டு நலன், சமுதாய நலன், கட்சி நலன் ஆகியவற்றை முன்வைத்து செயற்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கவனத்தில் கொண்டு அக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் நமது கட்சியின் நிலைப்பாட்டை எடுப்போம்
 
திமுக கூட்டணியில் நமக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டுமென்பது கட்சியை தாண்டி நமது ஆதரவாளர்கள் அனைவரின் விருப்பம்.

இதனையே கண்மணிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றீர்கள். 

ஆனால் இதில் சிலரது பதிவுகள் வரம்பு மீறியுள்ளன. இது நமது பண்பல்ல. இத்தகைய வரம்பு மீறிய பதிவுகளை பதிவிட வேண்டாமென கண்டிப்புடன் தெரிவிக்கிறேன்

எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர் 
ம ம க

மனிதநேய மக்கள் கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழா - தேனி - நீர், மோர் மற்றும் பழம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனிதநேய மக்கள் கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழா

 

தேனி வடக்கு மாவட்டம் தேவதானப்பட்டி நகரம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நீர் மோர் மற்றும் பழம் வகைகள் பொதுமக்களுக்கு தேவதானப்பட்டி நகர தலைவர் சையது அபுதாஹிர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது
 தேனி வடக்கு மாவட்ட தலைவர் எஸ் எம் அப்துல்லா பத்ரி (MC) அவர்கள் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்
 நிகழ்வில் தமுமுக வடக்கு மாவட்ட செயலாளர் தவஜீத் சபியுல்லா, மமக மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் ராஜா தமுமுக நகரச் செயலாளர் முகமது அஷார் தீன், smi மாவட்ட செயலாளர் அபீஸ் ரகுமான், சல்மான் கான்,சதாம் உசேன், நிஜாம், ஷேக், மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

IWF சவூதி கிழக்கு மண்டலத்தின் 67வது செயற்குழு, வெள்ளிக்கிழமை (08/03/24) அல்கோபாரில் தர்பியா அமர்வுடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹூ தஆலாவின் பேரருளால், IWF சவூதி கிழக்கு மண்டலத்தின் 67வது செயற்குழு, சென்ற வெள்ளிக்கிழமை (08/03/24) அன்று அல்கோபாரில் தர்பியா அமர்வுடன் துவங்கி சிறப்பாக  நடைபெற்றது.



மண்டல நிர்வாகிகள், அனைத்து கிளை நிர்வாகிகள், செயற்குழு சிறப்பு உறுப்பினர்கள், விருந்தினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

சவூதி IWF மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளரும், ரியாத் மத்திய மண்டலத்தின் தலைவருமான சகோ. மீமிசல் நூர் முஹம்மது சிறப்புரையாற்றினார்.

மாநிலத்தலைவர் பேரா. முனைவர். M.H. ஜவாஹிருல்லாஹ் ச.ம.உ அவர்கள் இணைய வழியில் பேருரை ஆற்றினார்.

இந்தியாவின் தற்போதைய சூழல், தேர்தல் கள நிலவரங்கள், பலம் வாய்ந்த அமைப்பாக சமூக அரசியல் அரங்கில் தன்னை நிலைநாட்டி உள்ள தமுமுக-மமக வின் பெருகும் செல்வாக்கு, அதற்காக நாம் இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் போன்ற கருத்துகள் அனைத்து உரைகளிலும் எதிரொலித்தன.

மேலும் கீழ்கண்ட மூன்று தீர்மானங்கள் இயற்றப்பட்டன:

1) இந்தியாவின் கல்வித் தந்தையும், முதலாவது ஒன்றிய கல்வி அமைச்சருமான மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களது பெயரால் இயங்கி வந்த இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையை மீண்டும் துவங்க வேண்டும். மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றை NCERT போன்ற பாடத்திட்டங்களில் மீண்டும் இணைக்க வேண்டும்.

2) புதுச்சேரியில் 9 வயது சிறுமி போதை ஆசாமிகளால் கொல்லப்பட்ட துயர நிகழ்வை கண்டிப்பதுடன், போதைப்பொருள் புழக்கத்திற்கு துணைப்போகிற அத்தனை சக்திகளும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்ட வேண்டும்.

3) திமுக கூட்டணியில் மமகவுக்கு ஒரு தொகுதியாவது கட்டாயம் பெற வேண்டும். அதற்கான வாய்ப்பு தவறும் பட்சத்தில் மாநிலத் தலைமையின் எந்த முடிவுக்கும் ஆதரவு அளிப்போம்.

மவ்லவி பொறியாளர் ஜக்கரியா அவர்களது நஸீஹாவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது.

இஸ்லாத்தை தழுவியவர்களின் கோரிக்கை மமக தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா நிறைவேறியது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாத்தை தழுவியவர்களின் நீண்ட நாள் கோரிக்கை மமக தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA வழியாக நிறைவேறியது 


இஸ்லாத்தை தழுவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, சீர்மரபினர் உள்ளிட்டோர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 3.5% இட ஒதுக்கீடு வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இந்த பிரிவினர் அனைவரும் BCM  ஆக வகைப்படுத்தப் படுவார்கள் என்பது இஸ்லாத்தை தழுவியவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .

மமக வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் இஃப்தார் நிகழ்வு / 17:3:24 ஞாயிற்றுக்கிழமை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மமக வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் இஃப்தார் நிகழ்வு
***

இன்ஷா அல்லாஹ் 
நாள்:- 17:3:24 ஞாயிற்றுக்கிழமை 

நேரம்:-
 மாலை 6:00 மணி

இடம்:- 
SK மஹால் 
மீனம்பாள் சாலை

சிறப்புரை:-
பா.அப்துல் சமது MLA
பொதுச்செயலாளர் 

மற்றும் மாநில நிர்வாகிகள் 


அனைவரும் வாரீர் 

அழைக்கிறது 

மனிதநேய மக்கள் கட்சி 
வடசென்னை மேற்கு மாவட்டம்

சேலம் மூக நீதி மாணவர் இயக்கம் - புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை - கண்டன ஆர்ப்பாட்டம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
 சேலம் மேற்கு மாவட்டம் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக 10/ 3 /2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் SMI மாவட்ட செயலாளர் நாகூர் மீரான் தலைமையில் புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

 முன்னிலை 

அப்துல் அக்கீம் 
மாவட்ட தலைவர் (பொறுப்பு )

அமானுல்லா 
தமுமுக மாவட்ட செயலாளர் 

ஹாஜி ஷாஜஹான் மாவட்ட பொருளாளர்

 மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் ஒன்றிய, நகர ,பேரூர், கிளை, கழக நிர்வாகிகள்

கண்டன உரை:

பொதகுடி ரியாஸ்
மாநில துணைச் செயலாளர் SMI

இக்பால்
சேலம் மண்டல பொறுப்பாளர்SMI

தோழர் அரியா கவுண்டர்
சேலம் மாவட்ட தலைவர் விவசாய சங்கம் CPIM

நன்றி உரை:
ரியாஸ்
மாவட்ட துணைச் செயலாளர்SMI

ரமலான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி! - கம்பம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ரமலான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி!

கம்பம் நகர இஸ்லாமிய பிரச்சார பேரவை-தமுமுக சார்பாக ரமலானை வரவேற்போம் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 10-3-2024





ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 - 8.30 மணிவரை கம்பம் நகர தமுமுக தலைவர் தமீமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் கம்பம் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.

மமக மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மாவட்ட ஐபிபி பொருளாளர் ஹக்கீம் கிராத் ஓதினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வாசிம் அக்ரம், தமுமுக மாவட்ட துணை செயலாளர் மௌலவி.முஹம்மது ஹனிபா பத்ரி அவர்கள் ரமலானின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சலீம் பாட்ஷா,தமுமுக நகர செயலாளர் நிஜாத் அஹமது,மமக நகர அப்பாஸ் மந்திரி, நகர துணை செயலாளர்கள் நூர் முகமது,முகமது ஆசிக், கிளை நிர்வாகிகள் காஜா மைதீன், ஹக்கீம்,  சிக்கந்தர், மருத்துவஅணி செயலாளர் முஜாஹித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஐபிபி செயலாளர் நியாஸ் அஹமது நன்றியுரை கூறி நிறைவு செய்தார்

தகவல்;
H.அப்பாஸ் மந்திரி
மாவட்ட செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி
தேனி தெற்கு மாவட்டம்.