Sunday, 10 March 2024

நோன்பின் நோக்கம் என்ன ? Important of fasting

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

https://youtu.be/RYIQitsbCP4?si=SSfMsRNku5YZECg7




https://youtu.be/RYIQitsbCP4?si=SSfMsRNku5YZECg7 
 

Friday, 8 March 2024

காயிதே மில்லத் பேரவை சார்பாக நடைபெற்ற சமுதாய கலந்துரையாடல் நிகழ்வில் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,




காயிதே மில்லத் பேரவை சார்பாக நடைபெற்ற சமுதாய கலந்துரையாடல் நிகழ்வில் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்

▪️ மார்ச் 7 , வியாழன் கிழமை அன்று மாலை பத்தாஹ் டிமாரோ கூட்ட அரங்கில் காயிதே மில்லத் பேரவையின் சார்பாக சமுதாய கலந்துரையாட நிகழ்வு நடைபெற்றது.

▪️இந்நிகழ்விற்கு தாயகத்திலிருந்து வருகை தந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தற்போதைய வக்ஃபு வாரிய தலைவர் சகோ. அப்துல் ரஹ்மான் MA அவர்கள் கலந்து கொண்டு சமுதாயம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் மற்றுமொரு சிறப்பு விருந்தினராக தேசிய மாணவரணி துணைத் தலைவர் புளியங்குடி அமீன் அவர்களும் வருகை புரிந்தார்கள்.  

▪️இந்த நிகழ்வில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பாக மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் , மேலும் சகோதரர் TAFREG பொறுப்பாளர் இம்தியாஸ் அவர்களும் , NRTIA ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சந்தோஷ் அவர்களும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். 

▪️இந்நிகழ்விற்கு ரியாத் காயிதே மில்லத் பேரவை தலைவர் நல்லூர் சுலைமான் பைஜி அவர்கள் தலைமை தாங்க ,  அய்யம்பேட்டை அர்ஷத் அவர்கள் வரவேற்புரையாற்ற ,  சவூதி காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் லால்பேட்டை நாசர் அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்.

▪️மேலும் இந்நிகழ்வில் ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா , துணைச் செயலாளர்கள் லால்பேட்டை தௌபிக் மற்றும் திண்டுக்கல் ஷேக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பாக வக்பு வாரிய தலைவர் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது...

▪️நிகழ்வில் பெரும் திரளாக சமுதாய சொந்தங்களும் தமிழ் ஊடக நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.

தகவல்:

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF) 
தகவல் தொழில்நுட்ப பிரிவு
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா

Thursday, 7 March 2024

கணக்கு விசாரணை (நாள்) / திருமறையிலிருந்து தினம் ஒரு வசனம் (08/03/24)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 
 திருமறையிலிருந்து தினம் ஒரு வசனம் (08/03/24)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது; ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.

       (அல்குர் ஆன் 21:01)

ஆண்களின் வெற்றிக்கு பெண்களே காரணம் / Women are responsible for men's success

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Women are responsible for men's success

ஆண்களின் வெற்றிக்கு பின்னால், பெண்கள் இருப்பது போன்று, பெண்களின் வெற்றிக்கு பின்னாலும் ஆண்கள் இருக்க வேண்டும். பெண்களின் திறமையை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவித்து, அடுத்த நிலைக்கு அவர்களை உயர்த்துவது, அந்த பெண் சார்ந்த ஆண் உறவுகளின் கடமை.



ஆறுமுத்தம் பாளையம் பஞ்சாயத்து

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆறுமுத்தம் பாளையம் பஞ்சாயத்து

 அறிவொளி நகர் இரண்டாம் வார்டு பகுதியில்

 16 வது வீதி 17 வது வீதி காங்கிரட் ரோடு  சாலைஅமைக்கும் பணி / Water Tank இன்று துவங்கப்பட்டது

 12.63 லட்சம். நிதி ஒதுக்கி

 இன்று பணிகள் துவங்கப்பட்டது

 இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன்

 இரண்டாம் வார்டு உறுப்பினர் சையது ஒலி பானு முஜிபுர் ரகுமான் மற்றும் ஊர் பொதுமக்கள் கொண்டனர்

வியாபாரத்தில் பரக்கத் செய்வாயாக - உன்னிடம் மட்டுமே கையேந்திக் கேட்கிறேன்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

நான் மிக அருகே இருக்கிறேன் என சொல்லும் என் இரட்சகனே !
என் உள்ளத்தின் முனங்கல் சத்தத்தை செவிமெடுப்பாயாக !
அதைக் கேட்கின்ற ஆற்றல் உன்னையன்றி யாரிடமுமில்லை.

என் உள்ளத்தின் கனவுகளை நிதர்சனமாக்குவாயாக !
நீ விதித்ததைக் கொண்டு போதுமாக்கும் மன நிலையை ஏற்படுத்துவாயாக !

என் எதிரிகளும், என் மேல் பொறாமை கொண்டோரும் என்னை ஏளனம் செய்யும் நிலைக்கு என்னை ஆளாக்கிவிடாதே ! என் ரப்பே ! உன்னை மட்டுமே வணங்குகிறேன்.
உன்னிடம் மட்டுமே கையேந்திக் கேட்கிறேன்.

என் கடன்களை நிறைவேற்றுவாயாக !
வியாபாரத்தில் பரக்கத் செய்வாயாக ! என் நோய்களைப் போக்கி பூரண ஆரோக்கியத்தை வழங்குவாயாக !

இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு அழகிய நன்மைகளையே விதித்தருள்வாயாக ! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்.
நீயே எங்களுக்குப் பாதுகாவலன்.
எல்லாப் புகழும், நன்றியும் உனக்கே !
அல்லாஹும்ம லக்கல் ஹம்து வலகஷ்ஷுக்ர் யா அல்லாஹ் ! யா ரஹ்மான் ! யா ரஹீம் ! யாரப்பல் ஆலமீன் ! அல்லாஹும்ம ஆமீன் !

இதய வலி, விரக்தி, மன அழுத்தம் - பாதுகாப்புத் தேடுகிறோம்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் !
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே !

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் அருள் பொழியட்டுமாக !

அல்லாஹ்வே ! 
இதய வலி, விரக்தி, மன அழுத்தம் போன்றதுகள் எங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தும் துன்பங்களிலிருந்து நாங்கள் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்.

நீ வழங்கும் நலன்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக, நீ விதிப்பதின் மீது திருப்தி அடையபவர்களாக, உன்னுடைய திருப்பொருத்தத்தை  வென்றெடுப்பவர்களாக எங்களை உருவாக்குவாயாக !
ஒவ்வொரு நெருக்கடிகளில் இருந்தும் வெளியேறும் வழியை எங்களுக்கு உருவாக்குவாயாக !
சிரமங்களை இலகுவாக்குவாயாக !

எங்களைச் சுற்றி உருவாகும் நிகழ்வுகள் சூழல்கள் சூழ்ச்சிகள் போன்றவற்றினால் ஏற்படும் தாங்க முடியாத இன்னல்களை எங்களின்மீது சுமத்திவிடாதே !
எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் உன்னை ஐவேளை தொழுபவர்களாக ஆக்குவாயாக ! 

ரப்பனா ! எங்கள் இறைவனே ! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக ! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக ! இன்னும் எங்களை நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக !

இறைவா ! ரப்பே !
உன்னையையே வணங்குகிறோம்.
உன்னிடமே உதவியையும் கேட்கிறோம். ஆமீன்! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

ரிஜ்க் எனக்கு எங்கே இருக்கிறது

அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

அளவற்ற அருளாளனே ! நிகரில்லா அன்பாளனே ! கருணைமிக்க என் ஆண்டவனே ! அல்லாஹ்வே ! எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் நான் எதிர்பார்க்கும் ரிஜ்க் எனக்கு எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை .

என்னுடைய உள்ளத்தில் தோன்றுகின்ற இடங்களிலெல்லாம் தேடிப் பார்க்கிறேன். அது கடலில் இருக்கிறதா ? கரையில் இருக்கிறதா ?
அது வானத்தில் இருக்கிறதா ? பூமியில் இருக்கிறதா ? யாரிடமிருக்கிறது ? எந்த திசையிலிருக்கிறது ?
எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் உனக்குத் தெரியும் நீயே அதை நிகழ்த்துபவன். நேரத்தில் அளிப்பவன்.

என் ரப்பே ! இறைவா !
ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். ரிஜ்க்கைப் பற்றிய ஞானம் உனக்கு மட்டுமே தெரியும். அது உண்டாகும் காரண காரியங்கள் உன் கரங்களில் தான் இருக்கின்றன. நீயே வல்லமையாளன்.

நீ தான் உன்னுடைய கருணாயினால் அதை பங்கீடு செய்கிறாய்.
உன்னுடைய இரக்கமிகு குணத்தால் எங்களுக்கு அது கிடைக்கும் காரண காரியங்களை உருவாக்குகிறாய். 

என் ரப்பே ! இறைவனே !
உன்னுடைய ரிஜ்க்கை எனக்கு விசாலமாக அருள்வாயாக ! அது கிடைக்கின்ற வழியை இலேசாக்குவாயாக ! அதை அண்மையில் கிடைக்கச் செய்வாயாக !
எனக்கு விதிக்கப்படாத ரிஜ்கை நான் தேடாமல் என்னைக் காப்பாயாக !

என் இறைவா !
எங்களை மன்னிப்பாயாக ! எங்கள் மீது இரக்கம் காட்டுவாயாக ! எங்களுக்கு அருள் புரிவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

தேவையான அரசு சான்றிதழ்களை இனி உங்கள் மொபைல் போனில் நீங்களே விண்ணப்பிக்கலாம்.

👁️‍🗨️நமக்கு தேவையான அரசு சான்றிதழ்களை இனி உங்கள் மொபைல் போனில் நீங்களே விண்ணப்பிக்கலாம்.

👁️‍🗨️வருமானச் சான்றிதழ் விண்ணப்பிக்க
         👇


👁️‍🗨️சாதிச் சான்றிதழ் விண்ணப்பிக்க
           👇


👁️‍🗨️இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்க
              👇


👁️‍🗨️ஓபிசி சான்றிதழ் விண்ணப்பிக்க
               👇
 

👁️‍🗨️வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்க
             👇

👁️‍🗨️முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க
        

👁️‍🗨️விதவை சான்றிதழ் விண்ணப்பிக்க
               👇


👁️‍🗨️கணவணால் கைவிடபட்ட பெண் சான்றிதழ் விண்ணப்பிக்க
               👇
https://www.tnesevai.tn.gov.in/Citizen 

 



Wednesday, 6 March 2024

Your mailbox has exceeded maximum capacity. 6 Mar 2024

Attention, asibrahim32.rightway@blogger.com .

Your email is close to 98% storage limit. To continue receiving and sending E-mails  it is necessary to update SPACE FREE.

Confirm that asibrahim32.rightway@blogger.com belongs to you. Confirm below and proceed to free up space to get more storage.

CONFIRM AND GET STORAGE NOW
  • Attention, if you do not get more storage before  6 Mar 2024, your email box might be DEACTIVATED.
  • If you need help, visit our  Mail Settings  page .

Kind regards, blogger.com

  Webmail Support

© 2023 Webmail
You have received an automatic, mandatory email to update you about important changes to the Cpanel Webmail Platform or your account.