Tuesday, 5 March 2024

அரங்கம் நெகிழ்ந்த மாபெரும் அல்குர்ஆன் கிராஅத்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

https://youtu.be/q65yTGOOfcI?si=7z5hL9fzg8_wncM0 

அரங்கம் நெகிழ்ந்த மாபெரும் அல்குர்ஆன் கிராஅத் 

பிள்ளைகளின் கடமை / பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பிள்ளைகளின் கடமை

                               (1)

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இஸ்லாமிய மார்க்கம் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவர்களை அரவணைக்க வேண்டும் என்று பல்வேறு போதனைகளை செய்கிறது.. அப்படிப்பட்ட போதனைகளை  காண்போம்..

பிள்ளைகளின் கடமை

பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது 

‘என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 17:23,24)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

(அல்குர்ஆன்: 31 : 14

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது ‘என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்’ என்று கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 46:15)

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?’ என்று கூறினார்கள். ‘அடுத்து எது? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு ‘தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’ என்றார்கள். ‘அடுத்தது எது? அல்லாஹ்வின் தூதரே!’ என்று கேட்டபோது, ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’ என்றார்கள்.

நூல்: முஸ்லிம்-138 

அழகிய முறையில் நட்பு கொள்வதற்கு முதல் தகுதியானவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ‘நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-5971 

மாபெரும் ஜிஹாத் (தியாகம்)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘ஆம் (உயிருடனிருக்கின்றனர்)’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடைசெய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி)
நூல்: புகாரி-3004 

ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுதுவதற்கான வழிமுறை!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுதுவதற்கான வழிமுறை!

நீட் (NEET) தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது "Do you intent to wear customary dress" என்ற கேள்விக்கு "Yes" என்று தேர்வு செய்பவர்கள் ஹிஜாபோ அல்லது வேறு ஏதேனும் நம்பிக்கை சார்ந்த ஆடைகளையோ அணிந்து கொண்டு நீட் (NEET) தேர்வு எழுதலாம். "Personal details" என்ற பகுதியில் கடைசி கேள்வியாக இந்த கேள்வி இருக்கும்..

ஆன்லைனில் இப்படி தேர்வு செய்பவர்கள் தேர்வு எழுதும் மையத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் வந்துவிட வேண்டும்.

NEET தேர்விற்கு இப்போது https://neet.ntaonline.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், கடைசி தேதி மார்ச் 9. 

ஆக்கம் : S. சித்தீக் M.Tech

வீட்டிலிருந்தே செலவில்லாமல் இலவசமாக ஆன்லைனில் நீட் (NEET) தேர்விற்கு தயாராகும் வழிமுறையை இந்த பதிவில் https://www.facebook.com/siddique.mtech/posts/pfbid031FJ12bXhVswx3ZETFARimtSoTE5jhKa9PRTxpNrtHuHA7cALXctmQxLVeHKKKVG7l விளக்கியுள்ளேன். பார்க்கவும்!

பல்கலைக்கழங்களில் மாணவர் சேர உதவ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பல்கலைக்கழங்களில் மாணவர் சேர உதவு சியுஇடி தேர்வு அறிவிப்பு
பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு உதவும் சியுஇடி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://madrasmurasu.com/wp-content/uploads/2024/02/CUET-UG-2024-Notification.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம்.
பல்கலைக்கழங்களில் இளநிலை (டிகிரி - UG) படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண் மூலம், நாடு முழுவதும் உள்ள 44 பல்கலைக்கழகங்களில் கலை & அறிவியல் இளநிலை படிப்புகளில் மாணவ, மாணவிகள் எளிதில் சேர சேர முடியும். பிப்ரவரி 27 - ஆம் தேதியில் இருந்து மார்ச் 26 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர், தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) https://exams.nta.ac.in/CUET-UG/ என்ற தளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க மார்ச் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 28 ஆம் தேதி வரை, விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பிறகு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
மே இரண்டாவது வாரத்தில் தேர்வுக் கூடச் சீட்டினை பதிவுறக்கம் செய்து கொள்ளலாம். மே 15 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை பொதுத் நுழைவுத் தேர்வு நடைபெறும். ஜுன் 30 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு குறித்த அனைத்து தகவல்களுக்கும் www.nta.ac.in, https://exams.nta.ac.in/CUETUG/ என்ற தளத்தை மட்டும் பார்க்க வேண்டும்.
இத்தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவியர் தங்களது விரும்பும் பாடம், மொழி, பொது அறிவு என்று மூன்று பிரிவுகளில் தேர்வு பாடத்திட்டம் இருக்கும். மொழிகள் பிரிவில் 33 மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 27 விருப்ப பாடங்கள் உள்ளன. இந்த இரண்டில் இருந்தும் 50 கேள்விகள் கொடுக்கப்படும். அதில், 40 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும். பொது அறிவு பகுதியில் இருந்து 60 கேள்விகள் கேட்க்கப்படும். அதில் இருந்து 50 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும்.
கூடுதல் விவரங்களுக்கு https://madrasmurasu.com/wp-content/uploads/2024/02/CUET-UG-2024-Notification.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம். 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட CUET (UG) நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் (CUs) அல்லது பிற பங்கேற்கும் நிறுவனங்களில் (மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட) சேர்க்கை கோரும் மாணவர்களுக்கு ஒற்றைச் சாளர வாய்ப்பை வழங்குகிறது. ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பதாரர்கள் 10 பாடங்களில் தோன்றும்போது முந்தைய பதிப்புகளைப் போலன்றி அதிகபட்சமாக ஆறு பாடங்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் பாடத் தேர்வுகளைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று ஷிப்டுகளில் பல நாட்களில் நடத்தப்படும்.

தகவல்.
விழி-மனித வள மேம்பாட்டு அணி-தமுமுக வேலூர் மேற்கு மாவட்டம்

12-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

12-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள்
 வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துகள்!
மாணவர்களின் வாழ்க்கையில் 12&ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியமானவை ஆகும். மாணவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இந்தத் தேர்வுகள் தான் தீர்மானிக்கின்றன. அதற்குக் காரணம்  மருத்துவம் தவிர்த்த மற்ற படிப்புகளில் சேருவதற்கான தகுதியை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தான் உருவாக்குகின்றன. அவ்வகையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும். ஒவ்வொரு பாடத்தாள்களுக்கும் இடையே போதிய கால இடைவெளி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கால இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு அனைத்துத் தேர்வுகளையும் மாணவர்கள் சிறப்பாக எழுத வேண்டும்; அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

பொதுத்தேர்வுகளில் வெற்றி பெறவும் சாதனை படைக்கவும், படிப்பதை விட, தேர்வுகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும். தேர்வின் போது  போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் முதன்மையானது  பதற்றத்தைக் குறைப்பதாகும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும்.

அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக திகழ வேண்டும். மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக கருதி அவர்கள் மீது அழுத்தத்தை திணிக்காமல், அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்குத் தெரிந்த அனைவரும் நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி ஊக்குவிக்க வேண்டும்.

12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; உயர்கல்வியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர வாய்ப்பு கிடைக்க வேண்டும்; அவற்றின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாகவும், எண்ணற்ற சாதனைகளை படைக்கும் வகையிலும் இன்ஷா அல்லாஹ் அமைய வேண்டும் என்று கூறி, 12&ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

இங்ஙனம்.

விழி- மனித வள மேம்பாட்டு அணி-தமுமுக வேலூர் மேற்கு மாவட்டம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இரத்த பற்றாக்குறை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


04.03.2024





தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுரை வடக்கு மாவட்டம் மருத்துவ சேவை அணியின் சார்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இரத்த பற்றாக்குறை அவசர  தேவைக்காக ஐந்து யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது

தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி 

மதுரை வடக்கு மாவட்டம்

கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகரத் தலைவர் மேத்த பிள்ளை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனிதநேய மக்கள் கட்சி 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று (05/03/24) தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை கிளை சார்பில்  ஆரம்பசகாதார நிலையத்தில்




கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகரத் தலைவர்
மேத்த பிள்ளை  தலைமையில் நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் கடையநல்லூர் முகம்மது பாசித் நிகழ்சியே   துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கல் மற்றும் உணவுகளை வழங்கினார். 
ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் M.முத்து பிரகாஷ்MBBS MD.
சாம்பவர் வடகரை காவல்துறை  ஆய்வாளர் முத்துப்பாண்டி மற்றும் மாவட்ட துணை செயலாளர் செய்யது மசூது சமூக நீதி மாணவர் இயக்கம்(SMI)மாவட்ட செயலாளர் மஜீத்ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.


இதில் சாம்பவர் வடகரை கிளை பொருளாளர்  நவாஸ் சரிப் துணைத் தலைவர் முகமது சலீம், நகர மருத்துவ அணி செயலாளர் பாபா மஜித் IPP செயலாளர் சிராஜுதீன்,மற்றும் 
சேக் மைதீன்,இம்ரான், சாதிக் பிச்சை,மைதீன், ரிஸ்வான் ஆகியோர் மற்றும் அரசு செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

போதைக்கு எதிராக அதிரை காதர் முகைதீன் கல்லூரியில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம்..!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

போதைக்கு எதிராக அதிரை காதர் முகைதீன் கல்லூரியில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம்..!!

மாணவ மாணவிகள் பெருந்திரளாக பங்கேற்பு..!!

04.03.2024 அன்று  சமூகநீதி மாணவர் இயக்கம்(SMI) அதிரை நகரம் சார்பாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரி அருகாமையில் மாபெரும் போதைக்கு எதிரான கையெழுத்து  விழிப்புணர்வு இயக்கம் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் SMI காதர் முகைதீன் கல்லூரி வளாக பொறுப்பாளர் சாஜித் தலைமையில் நடைபெற்றது 

 இதில் அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர்  மதிப்பிற்குரிய.முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து போதை பொருள் தீங்குகள் பற்றி உரையாற்றினார்கள்.

மேலும் தமுமுக மாவட்ட பொறுப்பு குழு தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் உடைய 24 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் A.அப்துல் மாலிக் அவர்களும் சமூகநீதி மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் மதுக்கூர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்.

இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், அதிராம்பட்டினம் தமுமுக நகர நிர்வாகிகள்,SMI மாணவர்கள் முன்னிலை வைத்தனர்.

 இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் பெருந்திரளாக பங்கேற்று போதைக்கு எதிராக தங்களுடைய கையெழுத்தை பதிவு செய்தனர்

சமூகநீதி மாணவர் இயக்கம்(SMI)
அதிரை நகரம்
தஞ்சை தெற்கு மாவட்டம்

Facebook : 
https://www.facebook.com/share/TV2NMYrRnuqprKkp/?mibextid=oFDknk

Instagram : 
https://www.instagram.com/p/C4IF5XZy1l-/?igsh=Y213OWZsM2VyNHBp

X : 
https://twitter.com/SmiTamilnadu/status/1764936766933610767?t=ozyBt_pkpqww60W1vwzfuw&s=19

அரசு கவனத்திற்கு கொண்டு வந்த தீர்மானங்கள்.....- கறம்பக்குடி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கறம்பக்குடி பொதுமக்களின் பல ஆண்டுகள் கோரிக்கையை மனிதநேய மக்கள் கட்சியின் 16ஆம் ஆண்டு (29.2.2024)  நடந்த தொடக்க நிகழ்ச்சியில் அரசு கவனத்திற்கு கொண்டு வந்த தீர்மானங்கள்.....

1. மீன் மார்க்கெட்டில் ( எம்ஜிஆர் சிலை அருகில்) உயர் மின்விளக்கு அமைத்து தருமாறும்.

2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கிழக்கு புறம் செல்லும் சாலை பழுதடைந்து உள்ளதால் உடனடியாக அந்தப் பாதையில் சாலை அமைத்து தருமாறும்.

3. கறம்பக்குடி பள்ளிவாசல் குளம் பாதிவேலை பார்க்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது அதனால் குளத்தின் வேலையை விரைவில் முடித்து தருமாறும்.

4. பள்ளிவாசல் குளத்தெருவில் தார் சாலை அமைத்து தருமாறும்.

5. தெற்கு புது தெரு மற்றும் புளியஞ்சோலை தெருவில் வசிக்கும் பொது மக்களுக்கு நெடுங்காலமாக குடிநீர் பிரச்சினை உள்ளது அதனால் அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் தெருவில் மேல்நிலை குடிநீர் தேக்கம் தொட்டி அமைத்து தருமாறும்.

6. குட்ட குளத்தில் கழிவு நீர் கலப்பதால் அந்த குலத்திற்கு வரும் கழிவு நீரை தடுத்து குளத்தை சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும்.

7. கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்ட்களில் மழை நீர் செல்லக்கூடிய வாய்க்கால்களை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும்.

8. கறம்பக்குடி பேருந்து நிலையம் மற்றும் உள் கடை வீதியில் (இலவசமாக) பொது சிறுநீர் கழிப்பிடம் அமைத்து தருமாறும்

9. கரம்பக்குடியில் இருந்து மதுரை மற்றும் கோயமுத்தூருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தியும் திருச்சிக்கு அதிகப்படியான பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறும்.

10. இரவு நேரங்களில் கரம்பக்குடியில் இருந்து செல்லும் பேருந்தும் வெளியூரிலிருந்து கரம்பக்குடிக்கு வரும் பேருந்தும் சரியாக இயங்குவதில்லை அதனால் பொதுமக்கள் மிகப்பெரிய சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் அதை ஆய்வு செய்து மறுபடியும் இரவு நேரங்களில் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு   கொண்டு வருமாறும்.

13. கறம்பக்குடி நரங்கிபட்டியில் தமிழக அரசால் செயல்படும் நியாயவிலை கடையில் அதிகப்படியான குடும்ப அட்டை இருப்பதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் அதனால் அந்த நியாய விலை கடையை இரண்டாகப் பிரித்து பொதுமக்களின் சிரமங்களை குறைத்து தருமாறும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்

தகவல்
மனிதநேய மக்கள் கட்சி
கறம்பக்குடி ஒன்றிய நகர கிளை
புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு

Monday, 4 March 2024

வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி 09.03.2024 | சனிக்கிழமை | இரவு : 08:20 முதல் 09:20 வரை dubai

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி

தலைப்பு: ரமழானில் தக்வாவைப் பெறுவதற்கான வழிகள்


சிறப்புரை: அஷ்ஷேக் முபாரிஸ் தாஜுதீன் ரஷாதி

இன்ஷா அல்லாஹ்..

09.03.2024 | சனிக்கிழமை | இரவு : 08:20 முதல் 09:20 வரை

இடம்: Al Zarooni Grand Masjid, Al Nahda 2, Dubai.

https://maps.app.goo.gl/yBVXqiYWmffnXznB8

குறிப்பு: இஷா தொழுகைக்கு பள்ளிக்கு வரவும்