Tuesday, 5 March 2024

அரசு கவனத்திற்கு கொண்டு வந்த தீர்மானங்கள்.....- கறம்பக்குடி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கறம்பக்குடி பொதுமக்களின் பல ஆண்டுகள் கோரிக்கையை மனிதநேய மக்கள் கட்சியின் 16ஆம் ஆண்டு (29.2.2024)  நடந்த தொடக்க நிகழ்ச்சியில் அரசு கவனத்திற்கு கொண்டு வந்த தீர்மானங்கள்.....

1. மீன் மார்க்கெட்டில் ( எம்ஜிஆர் சிலை அருகில்) உயர் மின்விளக்கு அமைத்து தருமாறும்.

2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கிழக்கு புறம் செல்லும் சாலை பழுதடைந்து உள்ளதால் உடனடியாக அந்தப் பாதையில் சாலை அமைத்து தருமாறும்.

3. கறம்பக்குடி பள்ளிவாசல் குளம் பாதிவேலை பார்க்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது அதனால் குளத்தின் வேலையை விரைவில் முடித்து தருமாறும்.

4. பள்ளிவாசல் குளத்தெருவில் தார் சாலை அமைத்து தருமாறும்.

5. தெற்கு புது தெரு மற்றும் புளியஞ்சோலை தெருவில் வசிக்கும் பொது மக்களுக்கு நெடுங்காலமாக குடிநீர் பிரச்சினை உள்ளது அதனால் அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் தெருவில் மேல்நிலை குடிநீர் தேக்கம் தொட்டி அமைத்து தருமாறும்.

6. குட்ட குளத்தில் கழிவு நீர் கலப்பதால் அந்த குலத்திற்கு வரும் கழிவு நீரை தடுத்து குளத்தை சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும்.

7. கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்ட்களில் மழை நீர் செல்லக்கூடிய வாய்க்கால்களை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும்.

8. கறம்பக்குடி பேருந்து நிலையம் மற்றும் உள் கடை வீதியில் (இலவசமாக) பொது சிறுநீர் கழிப்பிடம் அமைத்து தருமாறும்

9. கரம்பக்குடியில் இருந்து மதுரை மற்றும் கோயமுத்தூருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தியும் திருச்சிக்கு அதிகப்படியான பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறும்.

10. இரவு நேரங்களில் கரம்பக்குடியில் இருந்து செல்லும் பேருந்தும் வெளியூரிலிருந்து கரம்பக்குடிக்கு வரும் பேருந்தும் சரியாக இயங்குவதில்லை அதனால் பொதுமக்கள் மிகப்பெரிய சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் அதை ஆய்வு செய்து மறுபடியும் இரவு நேரங்களில் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு   கொண்டு வருமாறும்.

13. கறம்பக்குடி நரங்கிபட்டியில் தமிழக அரசால் செயல்படும் நியாயவிலை கடையில் அதிகப்படியான குடும்ப அட்டை இருப்பதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் அதனால் அந்த நியாய விலை கடையை இரண்டாகப் பிரித்து பொதுமக்களின் சிரமங்களை குறைத்து தருமாறும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்

தகவல்
மனிதநேய மக்கள் கட்சி
கறம்பக்குடி ஒன்றிய நகர கிளை
புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு

Monday, 4 March 2024

வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி 09.03.2024 | சனிக்கிழமை | இரவு : 08:20 முதல் 09:20 வரை dubai

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி

தலைப்பு: ரமழானில் தக்வாவைப் பெறுவதற்கான வழிகள்


சிறப்புரை: அஷ்ஷேக் முபாரிஸ் தாஜுதீன் ரஷாதி

இன்ஷா அல்லாஹ்..

09.03.2024 | சனிக்கிழமை | இரவு : 08:20 முதல் 09:20 வரை

இடம்: Al Zarooni Grand Masjid, Al Nahda 2, Dubai.

https://maps.app.goo.gl/yBVXqiYWmffnXznB8

குறிப்பு: இஷா தொழுகைக்கு பள்ளிக்கு வரவும்

சொர்க்கவாசிகளின் நிலை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சொர்க்கவாசிகளின் நிலை 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், "(இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள்; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள்;ஒருபோதும் இறக்கமாட்டீர்கள். இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடையமாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள்" என்று அறிவிப்புச் செய்வார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5457

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

 கருத்துத் தெரிவிக்கும் போது முதலில் பெரியவர் பேச வேண்டும்

ஒரு கூட்டம் முக்கியமான நபரைப் பார்த்துப் பேசுவதற்காகச் சென்றால் அக்கூட்டத்தில் பெரியவர் முதலில் பேச வேண்டும். பெரியவர்களைப் பின் தள்ளி விட்டு இளையவர்கள் முந்திக் கொள்ளக் கூடாது.

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘பெரியவர்களைப் பேச விடு! பெரியவர்களைப் பேச விடு!’ என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் (வாய் மூடி) மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி)
நூல்: புகாரி-3173

மூத்தவருக்கு முதலிடம்

சாப்பாடு, பானம் போன்று ஏதேனும் பொருட்களைக் கொடுக்கும் போது முதலில் வயதில் மூத்தவருக்கு வழங்க வேண்டும். பின்பு அவரை விட வயது குறைந்தவருக்கு வழங்க வேண்டும். பெரியவர்களுக்குக் கண்ணியம் கொடுப்பதற்காக இவ்வழிமுறையை இஸ்லாம் பேணச் சொல்கிறது. நமக்குத் தேனீர் வழங்கப்படும் போது முதலில் நம்மை விட மூத்தவருக்கு மரியாதைக்காகக் கொடுத்து விட்டு பின்பு நாம் குடிக்கின்றோம்.

நம்மை விட மூத்தவர்கள் வந்திருக்கும் போது அவர்களைக் காக்க வைத்து இளையவர்கள் உண்டால் அது மரியாதைக் குறைவாகக் கருதப்படும். ஆனால் மூத்தவர்கள் உண்ண இளையவர்கள் காத்திருந்தால் இதை மரியாதைக் குறைவு என்று யாரும் கூற மாட்டார்கள்.

மூத்தவரோடு இளையவர் சரிக்கு சமமாக ஏதேனும் ஒரு விஷயத்தில் போட்டி போட்டால், என்ன தான் இருந்தாலும் அவர் வயதில் மூத்தவரில்லையா? என்று நாம் கேட்கிறோம். பெரியவர் மீது தவறே இருந்தாலும் சிறியவன் நீ பணிந்து தான் போக வேண்டும் என்று உபதேசம் செய்கிறோம். பெரியவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறோம். இந்த ஒழுங்கு முறையைத் தான் நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் உணர்த்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் பல் துலக்கும் குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்தவாறு கனவு கண்டேன். அப்போது இரண்டு மனிதர்கள் (பல்துலக்கும் குச்சி வேண்டி) என்னிடத்தில் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மற்றொருவரை விடப் பெரியவர். அவர்களில் சிறியவருக்கு அக்குச்சியை நான் கொடுத்தேன். அப்போது ‘பெரியவருக்கு முதலில் கொடுங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. எனவே அதை நான் பெரியவரிடத்தில் கொடுத்தேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
நூல்: முஸ்லிம்-5732 (5324)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் பானம் கொண்டு வரப்பட்டால் அதை அருந்தி விட்டு மீதத்தை வலது புறத்தில் இருப்பவருக்குத் தருவார்கள். ஆனால் ஒரு முறை பெருமானாரிடத்தில் குவளையில் பானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களின் வலது புறம் சிறுவனும் இடது புறம் பெரியவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

பெரியவர்களுக்கு முதலில் தர வேண்டும் என்று எண்ணி அந்தச் சிறுவனிடத்தில், ‘இதை நான் இந்தப் பெரியவர்களுக்குத் தரட்டுமா?’ என்று அனுமதி வேண்டினார்கள். ஆனால் அந்த சிறுவன், ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்கு கிடைக்கக் கூடிய மீதத்தை நான் எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் அதை அச்சிறுவனுடைய கையில் வைத்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: புகாரி-2351

வழமையாக நபி (ஸல்) அவர்கள் வலது புறத்தில் உள்ளவருக்குத் தான் தருவார்கள். ஆனால் இடது புறத்தில் பெரியவர்கள் இருந்ததால் அவர்களுக்குத் தர வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் அந்தச் சிறுவர் பெருமானாரின் மீது வைத்திருந்த அன்பினால் அவர்கள் வைத்த மீத பானத்தை நான் தான் குடிப்பேன் என்று கூறினார்.

இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுக்கு இரக்கப்பட வேண்டும் என்று கூறியதால் விபரம் தெரியாத சிறு குழந்தைகளின் உள்ளம் உணவை எதிர்பார்த்து ஏங்காமல் இருப்பதற்காக முதலில் அக்குழந்தைகளுக்குக் கொடுப்பதில் குற்றம் இல்லை.

சில ஊர்களில் பெரியவர்கள் முதலில் உண்ட பின்பு தான் குழந்தைகள் உண்ண வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் பசியால் அழுது துடித்தாலும் அவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. இந்த இடத்தில் பெரியவர்களை விட சிறு குழந்தைகள் பலவீனர்களாக இருப்பதால் முதலில் சிறு குழந்தைகளுக்கு உணவைக் கொடுக்க வேண்டும். சிறியவர்களை விட பெரியவர்களை முற்படுத்த வேண்டும் என்ற ஒழுங்கு முறை சிறியவர்கள் குழந்தைப் பருவத்தைத் தாண்டி விபரம் தெரிந்தவர்களாக இருக்கும் போது தான். இன்னும் இந்தச் சட்டம் பெரியவர்களும் சிறியவர்களும் ஒரே நேரத்தில் இருக்கும் போது தான் பொருந்தும். பெரியவர்கள் விருந்திற்கு இன்னும் வரவில்லை என்ற போது சிறியவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

எனவே பெரியவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், மரியாதைகளையும் முறையாகச் செய்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக! அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

மாநகராட்சி மற்றும் நகராட்சியில் சேர நல்ல வாய்ப்பு

05.03.2024 / BE, B.TECH, DIPLOMA போன்ற டெக்னிக்கல் படிப்பு படித்தவர்களுக்கு மாநகராட்சி மற்றும் நகராட்சியில் சேர நல்ல வாய்ப்பு வந்துள்ளது. 16 வகையான பதவிகளுக்கு மொத்தம் 2455 பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 12.3.2024. இதற்கான வெப்சைட் முகவரி:-
https://tnmaws.ucanapply.com

உங்கள் ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளி மற்றும் பள்ளிவாசல்களில் இதற்கான அறிவிப்பினை தகவல் பலகையில் (Notice Board) எழுதி வைக்கவும். மேலும் அதிகமான மாணவ, மாணவியர்களை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஊக்கம் அளிக்கவும். இது நமக்குள்ள சமுதாய கடமை (Social Responsibility) ஆகும். இன்ஷா அல்லாஹ், இது நல்ல பலனை அளிக்கும்.


இப்படிக்கு,
N.S.முஹம்மது அஸ்லம் B.A.,
மாவட்ட வருவாய் அலுவலர்/DRO (ஒய்வு), அபிராமம்-நத்தம் @ சென்னை

தேர்தல் பத்திரமும் உச்சநீதிமன்ற தீர்ப்பும் சிறப்பு கருத்தரங்கத்தில் மமக தலைவர் பங்கேற்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



தேர்தல் பத்திரமும் உச்சநீதிமன்ற தீர்ப்பும் சிறப்பு கருத்தரங்கத்தில் மமக தலைவர் பங்கேற்பு

திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பத்திரமும்..
உச்சநீதிமன்ற தீர்ப்பும் சிறப்பு கருத்தரங்கம் பெரியார் திடலில் திராவிட கழகத் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது..

இதில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் தலைமைநிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி அனீபா தமுமுக மாநிலச் செயலாளர் சிவகாசி முஸ்தபா.தலைமை பிரதிநிதிகள் கே.அப்துல் சலாம்,தைமியா மாநில மீனவர் அணி செயலாளர் முகமது அலி மற்றும் மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் எல்.தாஹாநவீன்  M.C தெற்கு மாவட்ட தலைவர் இ.எம்.ரசூல் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.

https://www.facebook.com/share/p/873rmseeagRBxKg4/?mibextid=Nif5oz

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரை சந்தித்து மருத்துவமனையை பார்வையிட்ட மமக பொதுச்செயலாளர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

05.03.2024 ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரை சந்தித்து மருத்துவமனையை பார்வையிட்ட மமக பொதுச்செயலாளர் 

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் ஹஜ் கமிட்டி தலைவருமான ப.அப்துல் சமத் MLA அவர்கள்  மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் திரு தேரணி ராஜன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து மருத்துவ கட்டமைப்பு மற்றும் ஆய்வு கூடங்களை பார்வையிட்டார்கள்.

இதில் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் கலீல் ரஹ்மான் மருத்துவ சேவை அணி மாவட்ட பகுதி செயலாளர்கள்   உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid027EumxukVvpYBrQDTN8N4a7GsKq4qdTzitrFay8LfHscRTtVd2cx5Yhp1hBPfLykNl&id=100044352853233&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f

Preparation of Before Ramadan / ரமலானுக்கு முந்தைய தயாரிப்புகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ரமலானுக்கு முந்தைய தயாரிப்புகள்:
(நினைவுபடுத்தும் சிறுகுறிப்புகள்)

01. அனைத்து பள்ளிவாசல் மதரஸாக்களிலும் ஆண்டு விழா நடந்து முடிந்தது மற்றும் இன்னும் சில இடங்களில் நடைபெற இருக்கிறது.

02. புனித ரமலான் மாதம் ஆரம்பம் ஆக இன்னும் 6 நாட்களே உள்ளன. 

03. முதலில் வீட்டில் தேவையில்லாத பழைய துணிகள் குழந்தைகளின் ஆடைகள் எல்லாவற்றையும் எடுத்து துவைத்து அயன் செய்து தனி கவராக எடுத்து வைக்கவும். ரமலான் நாட்களில் யாசகம் கேட்டு வரும் நபருக்கு அல்லது அனாதை அசரமங்களுக்கு கொடுக்கலாம்.

04. இது போல் வீட்டில் பயன்படாமல் இருக்கும் பாத்திரங்கள், பொருட்களையும் இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம் .

05. ஜகாத் (தர்மம்) கொடுப்பவர்கள் லிஸ்ட் முன்பே எடுத்து தனி தனியாக பெயர் எழுதி நோன்பு ஆரம்பத்திலே உரியவர்களிடம் கொடுத்துவிடலாம்.

06. யாசகம் கேட்டு வருபவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் சில்லறை காசுகளை மாற்றி தனியாக எடுத்து வைத்துவிடவும்.

07. இரவு நேர தொழுகைக்கு செல்பவர்கள் முஸ்ஸல்லா, தொழுகை துணிகளை இப்போதே வாங்கி வைத்து கொள்ளலாம்.

08. பெருநாள் புது துணி எடுக்க சிலர் நோன்பின் கடைசி பத்தில் தான் செல்வார்கள். அந்த வேலையை முடிந்த வரை தவிர்த்துவிட்டு நோன்பு தொடங்கும் முன்பே வாங்கி வைத்துவிடவும்.

09. புதுத்துணி தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, நம்மிடம் உள்ள உடையில் சிறந்த உடை ஒன்றை பெரு நாளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

10. முதலில் நோன்பின் சஹர் , இப்தார் நேரங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை லிஸ்ட் எடுத்து முன்னதாக வாங்கி அடுக்கி விடவும்.

11. நோன்பு நேரங்களில் பழங்கள், பழச்சாறு, தண்ணீர் முதற்கொண்டு உணவுகளை பிரிட்ஜில் வைப்பதால், பிரிட்ஜை சுத்தம் செய்து தேவையில்லாத பொருட்களை எடுத்துவிடலாம்.

12. பேரீச்சம்பழம், ட்ரை ஃப்ருட்ஸ்களை எறும்புகள் புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளலாம்.

13. நோன்பு நேரங்களில் அதிகம் சமையலில் பயன்படுத்துவதும் வெங்காயத்தினை தரையில் சாக்குபை அல்லது பேப்பர் போட்டு பரப்பி வைத்தால் நீண்ட நாள் அழுகாமல் இருக்கும். கொத்தமல்லி, புதினா , பச்சைமிளகாய் நுணிகளை நீக்கி சுத்தம் செய்து தனி தனியாக பேப்பரில் சுற்றி ப்ரிஜில் வைத்தால் அதிக நாள் வாடாமல் இருக்கும்.

14. இப்தார் நேரங்களில் சாப்பிடும் உளுந்த வடை, பருப்பு வடைக்கு அரைக்கும் மாவு, கட்லெட், சமோசா, முர்தபா, ஹல்வா, ரோல் வகைகளை அஸருக்கு முன்பே தேவைக்கு ரெடி செய்து வைக்கவும். இதற்காக மஃரிப் வரை யூடியூபில் சமையல் வீடியோக்களை பார்த்து இபாஃதத்தை விட்டு விட வேண்டாம்.

15. இப்தாருக்கு முன் ஒரு நோன்பின் கடைசி நேரம் தான்: துஆக்கள் ஏற்றுக்கொள்ளபட உகந்த நேரம்

16. சில இடங்களில் இப்தாருக்கு சுண்டல் வகைகளை சாப்பிடுவார்கள். அதுபோல, இயன்றவரை எண்ணெயில் பொறித்த உணவுகளை விட்டு விட்டு, தானிய உணவுகளை சாப்பிடலாம்.

17. பொறித்த எண்ணெயினை ஓரிரு நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அந்த எண்ணெயை முடிந்த வரை அன்றே சமையலில் பயன்படுத்திவிடவும்.

18. வெட்டிய பழங்கள், பாலுடா & கலர் கலராக கடல்பாசி இவற்றை உறைய வைக்க அதிக நேரம் ப்ரிஜ்ஜில் வைக்கவேண்டாம். முடிந்தளவு குளிரூட்டப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

19. கடல் பாசியினை ஒரே மாதிரி பாலில் செய்யாமல் தினமும் சற்று வித்தியாசமாக இளநீர், எலுமிச்சை என்று வித்தியாசமாக செய்து சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

20. சிலருக்கு நோன்பின் ஆரம்பத்தில் தலைவலி அதிகம் வரும். அப்படி முதல் நாள் தலைவலி வருபவர்கள் முடிந்தவரை சஹர் உணவில் தயிர் சேர்த்து சாப்பிடவும். லஸ்ஸி அல்லது தண்ணீர் நிறைய குடிக்கவும். இஞ்சி ஏலக்காய் போட்ட பால் டீ அல்லது ப்ளேன் டீ குடிக்கலாம்.

21. நோன்பு திறக்கும் பொழுதும் தண்ணீர், ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் தலைவலி தலைபாரம் குறையும்.

22. சஹர் நேர உணவுகளை மசாலா, எண்ணெய், நெய், காரம், புளிப்பு போன்றவை அதிகம் சேர்க்காமல் இருப்பதும், முடிந்தவரை சஹர் நேர உணவினை குறைவாகவும் சாப்பிடுவதும். ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

23. நோன்பு திறந்த பின்பு சிறுது நேரம் ஒய்வு எடுத்து, பின்பு இரவு நேர தொழுகையில் ஈடுபடவும் நேரத்தை ஒதுக்கி கொள்ளவும்.

24. என்ன தான் நாம் முன்பே வேலைகளை முடித்தாலும் அன்றாடம் செய்யும் வேலைகள் நம்மை பின்தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு வேலை செய்யும் பொழுது நாவில் திக்ரூ , கலிமா ஓதிக்கொண்டே இருக்க கிடைத்த இந்த ஷபான் மாதத்தில் பயிற்சி எடுக்கவும்.

25. அதிகமாக வீண் பேச்சுகளை தவிர்த்து, திருக்குர்ஆன் ஓதலாம். பயான், கிராத் கேட்கலாம். இறைவனிடம் அதிக பிராத்தனை செய்யலாம்.

26. இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் அழகான முறையில் ரமலான் நோன்புகளை நோற்கவும், அதிகமதிகமான நல்ல அமல்களை செய்து மறுமையில் அதன் முழு பலனை அடையவும் நல்லருள் புரியட்டும்...

#ramadan2024

Free Water and Laban _ Palladam

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,




Kambam Free Medical camp

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,