அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
ரமலானுக்கு முந்தைய தயாரிப்புகள்:
(நினைவுபடுத்தும் சிறுகுறிப்புகள்)
01. அனைத்து பள்ளிவாசல் மதரஸாக்களிலும் ஆண்டு விழா நடந்து முடிந்தது மற்றும் இன்னும் சில இடங்களில் நடைபெற இருக்கிறது.
02. புனித ரமலான் மாதம் ஆரம்பம் ஆக இன்னும் 6 நாட்களே உள்ளன.
03. முதலில் வீட்டில் தேவையில்லாத பழைய துணிகள் குழந்தைகளின் ஆடைகள் எல்லாவற்றையும் எடுத்து துவைத்து அயன் செய்து தனி கவராக எடுத்து வைக்கவும். ரமலான் நாட்களில் யாசகம் கேட்டு வரும் நபருக்கு அல்லது அனாதை அசரமங்களுக்கு கொடுக்கலாம்.
04. இது போல் வீட்டில் பயன்படாமல் இருக்கும் பாத்திரங்கள், பொருட்களையும் இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம் .
05. ஜகாத் (தர்மம்) கொடுப்பவர்கள் லிஸ்ட் முன்பே எடுத்து தனி தனியாக பெயர் எழுதி நோன்பு ஆரம்பத்திலே உரியவர்களிடம் கொடுத்துவிடலாம்.
06. யாசகம் கேட்டு வருபவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் சில்லறை காசுகளை மாற்றி தனியாக எடுத்து வைத்துவிடவும்.
07. இரவு நேர தொழுகைக்கு செல்பவர்கள் முஸ்ஸல்லா, தொழுகை துணிகளை இப்போதே வாங்கி வைத்து கொள்ளலாம்.
08. பெருநாள் புது துணி எடுக்க சிலர் நோன்பின் கடைசி பத்தில் தான் செல்வார்கள். அந்த வேலையை முடிந்த வரை தவிர்த்துவிட்டு நோன்பு தொடங்கும் முன்பே வாங்கி வைத்துவிடவும்.
09. புதுத்துணி தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, நம்மிடம் உள்ள உடையில் சிறந்த உடை ஒன்றை பெரு நாளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
10. முதலில் நோன்பின் சஹர் , இப்தார் நேரங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை லிஸ்ட் எடுத்து முன்னதாக வாங்கி அடுக்கி விடவும்.
11. நோன்பு நேரங்களில் பழங்கள், பழச்சாறு, தண்ணீர் முதற்கொண்டு உணவுகளை பிரிட்ஜில் வைப்பதால், பிரிட்ஜை சுத்தம் செய்து தேவையில்லாத பொருட்களை எடுத்துவிடலாம்.
12. பேரீச்சம்பழம், ட்ரை ஃப்ருட்ஸ்களை எறும்புகள் புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளலாம்.
13. நோன்பு நேரங்களில் அதிகம் சமையலில் பயன்படுத்துவதும் வெங்காயத்தினை தரையில் சாக்குபை அல்லது பேப்பர் போட்டு பரப்பி வைத்தால் நீண்ட நாள் அழுகாமல் இருக்கும். கொத்தமல்லி, புதினா , பச்சைமிளகாய் நுணிகளை நீக்கி சுத்தம் செய்து தனி தனியாக பேப்பரில் சுற்றி ப்ரிஜில் வைத்தால் அதிக நாள் வாடாமல் இருக்கும்.
14. இப்தார் நேரங்களில் சாப்பிடும் உளுந்த வடை, பருப்பு வடைக்கு அரைக்கும் மாவு, கட்லெட், சமோசா, முர்தபா, ஹல்வா, ரோல் வகைகளை அஸருக்கு முன்பே தேவைக்கு ரெடி செய்து வைக்கவும். இதற்காக மஃரிப் வரை யூடியூபில் சமையல் வீடியோக்களை பார்த்து இபாஃதத்தை விட்டு விட வேண்டாம்.
15. இப்தாருக்கு முன் ஒரு நோன்பின் கடைசி நேரம் தான்: துஆக்கள் ஏற்றுக்கொள்ளபட உகந்த நேரம்
16. சில இடங்களில் இப்தாருக்கு சுண்டல் வகைகளை சாப்பிடுவார்கள். அதுபோல, இயன்றவரை எண்ணெயில் பொறித்த உணவுகளை விட்டு விட்டு, தானிய உணவுகளை சாப்பிடலாம்.
17. பொறித்த எண்ணெயினை ஓரிரு நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அந்த எண்ணெயை முடிந்த வரை அன்றே சமையலில் பயன்படுத்திவிடவும்.
18. வெட்டிய பழங்கள், பாலுடா & கலர் கலராக கடல்பாசி இவற்றை உறைய வைக்க அதிக நேரம் ப்ரிஜ்ஜில் வைக்கவேண்டாம். முடிந்தளவு குளிரூட்டப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
19. கடல் பாசியினை ஒரே மாதிரி பாலில் செய்யாமல் தினமும் சற்று வித்தியாசமாக இளநீர், எலுமிச்சை என்று வித்தியாசமாக செய்து சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
20. சிலருக்கு நோன்பின் ஆரம்பத்தில் தலைவலி அதிகம் வரும். அப்படி முதல் நாள் தலைவலி வருபவர்கள் முடிந்தவரை சஹர் உணவில் தயிர் சேர்த்து சாப்பிடவும். லஸ்ஸி அல்லது தண்ணீர் நிறைய குடிக்கவும். இஞ்சி ஏலக்காய் போட்ட பால் டீ அல்லது ப்ளேன் டீ குடிக்கலாம்.
21. நோன்பு திறக்கும் பொழுதும் தண்ணீர், ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் தலைவலி தலைபாரம் குறையும்.
22. சஹர் நேர உணவுகளை மசாலா, எண்ணெய், நெய், காரம், புளிப்பு போன்றவை அதிகம் சேர்க்காமல் இருப்பதும், முடிந்தவரை சஹர் நேர உணவினை குறைவாகவும் சாப்பிடுவதும். ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
23. நோன்பு திறந்த பின்பு சிறுது நேரம் ஒய்வு எடுத்து, பின்பு இரவு நேர தொழுகையில் ஈடுபடவும் நேரத்தை ஒதுக்கி கொள்ளவும்.
24. என்ன தான் நாம் முன்பே வேலைகளை முடித்தாலும் அன்றாடம் செய்யும் வேலைகள் நம்மை பின்தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு வேலை செய்யும் பொழுது நாவில் திக்ரூ , கலிமா ஓதிக்கொண்டே இருக்க கிடைத்த இந்த ஷபான் மாதத்தில் பயிற்சி எடுக்கவும்.
25. அதிகமாக வீண் பேச்சுகளை தவிர்த்து, திருக்குர்ஆன் ஓதலாம். பயான், கிராத் கேட்கலாம். இறைவனிடம் அதிக பிராத்தனை செய்யலாம்.
26. இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் அழகான முறையில் ரமலான் நோன்புகளை நோற்கவும், அதிகமதிகமான நல்ல அமல்களை செய்து மறுமையில் அதன் முழு பலனை அடையவும் நல்லருள் புரியட்டும்...
#ramadan2024