Saturday, 8 August 2020

இலவச உயர்கல்வித் திட்டம்

தமுமுக - விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்

பொருளாதாரத்தில் பின்னடைந்த மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக மாறுவதற்கு இலவச உயர்கல்வித் திட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவான "விழி அமைப்பு" அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற மாணவர்கள் 
▪️B.E. Electronics & Communication Engineering,
▪️B.E. Computer Science Engineering,
▪️B.E. Mechanical Engineering,
▪️B.E. Civil Engineering
போன்ற படிப்புகளை எந்தவித கட்டணமுமின்றி படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

விருப்பமுள்ள மாணவர்கள் முதற்கட்ட தகவலை  http://application.vizhi.org/ என்ற இணையதள விண்ணப்பத்தின் வாயிலாக 09.08.2020-க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். 

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிற்கான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்திவரும் தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவான விழி அமைப்பின் இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பயனடைய அதிகம் Share செய்யங்கள். 

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்: 9944877673.

📚விழி அமைப்பு📚
தமுமுக

#FreeEducation #higherstudies #vizhi #tmmk
--
Thanks & Regards

Friday, 7 August 2020

Babar Majid - UP sunnah central awqaf board

பாபர் மசூதி இடத்துக்கு மாற்றாக அயோத்தியில் 5 ஏக்கர் இடத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி உத்திர பிரதேச அரசு வழங்கியுள்ளது.

இதற்காக  15 பேர் கொண்ட குழுவை உத்திர பிரதேச வக்ப் வாரியம்  அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க.

அந்த குழுவின் பெயர் இந்தோ இஸ்லாமிக் பவுண்டேசன். அந்த குழுவின் உறுப்பினர்கள் ஏகோபித்த முடிவின் படி அந்த ஐந்து ஏக்கர் இடத்தில் ஒரு மசூதி ,ஒரு மருத்துவமனை, ஒரு பொது நூலகம் மற்றும் ஒரு மியூசியம் அமைப்பதாக முடிவெடுத்துள்ளார்கள்.

இதன் பணிகள் கொரனா காலம் முடிந்த பிறகு தொடங்கப்படும் என்று அந்த அமைப்பு முடிவெடுத்துள்ளது.


உ.பி.யில் பைசாபாத் மாவட்டத்தில் பள்ளிவாசல் கட்ட வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் பாபர் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த மருத்துவமனைக்கு மருத்துவர் கபில் கான் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு செய்தி நேற்று மாலை முதல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. இதனை உண்மை என்று நம்பி பலரும் பரப்பி வருகின்றார்கள். 
இது முற்றிலும் பொய்யான செய்தி. இந்த 5 ஏக்கர் நிலம் பாஜகவின் அடிமைகளாகச் செயல்படும் உ.பி. வக்ப் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இப்படிப் பட்ட திட்டமில்லை என்று அவர்கள் தெளிவாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
#BabriMasjidAwaitsJustice


பாபர் மசூதி வழக்கை இண்டர்நேஷ்னல் கிரிமினல் கோர்ட்டுக்கு கொண்டு செல்லும்


அனுப்புநர்

முஜ்பில் அல் சுரேகா
வழக்கறிஞர்
குவைத்

பெறுநர்

தலைவர்
அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்
ஜாமியா நகர்
புது டெல்லி

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

அரபுலக முஸ்லிம்களின் சார்பாக நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். 
இரண்டு விஷயங்கள் எங்கள் மனதை காயப்படுத்தியுள்ளன.
ஒன்று அப்போதைய நரசிம்மாராவ் அரசு கண்டும் காணாமல் சட்டத்துக்குப் புறம்பாக பட்டப்பகலிலேயே இந்துத்துவ மதவெறியர்களால் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சோகமான சம்பவம்.

இரண்டாவது இந்திய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு எதிராக,
அகில இந்திய முஸ்லிம் தனி நபர் வாரியமும் ,பாபர் மஸ்ஜித் நடவடிக்கை குழுவின் தீவிரமில்லாத மிதமான அரை மனதுடன் கூடிய சட்ட நடவடிக்கை (defence)களும் 
வெற்றி பெற வேண்டிய சட்டப் போராட்டத்தில் தோல்வியை ஏற்படுத்தியதும்

இந்த பிரச்சனை இந்திய முஸ்லிம் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல உலகலாவிய மத மற்றும் மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்டது.

ஆகையினால் உங்கள் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற  முக்கிய உறுப்பினர்கள் அவசரக் கூட்டம் நடத்தி,

பாபர் மசூதி வழக்கை இண்டர்நேஷ்னல் கிரிமினல் கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் பொறுப்பை எங்களிடம் வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

உங்களிடமிருந்து விரைவில் பதிலை எதிர்நோக்கியவனாக

வாழ்த்துக்கள்

Mujbil Al Shureka
Lawler
State of Kuwait

Saturday, 1 August 2020

பரமக்குடி அன்னை ஆயிசா ட்ரஸ்ட் சார்பாக குர்பானி இறைச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்

பரமக்குடி அன்னை ஆயிசா ட்ரஸ்ட் சார்பாக குர்பானி இறைச்சி 100 க்கு மேற்ப்பட்ட ஏழைகளுக்கு இன்று விநியோகம் செய்யபட்டது

சகோதரகள் கேட்டு கொன்டதற்க்கு இனங்க போட்டோகள் தவிர்க்க பட்டுள்ளது. போட்டோ தேவைபடுபவர்கள் டிரஸ்டை தொடர்பு கொன்டால் அனுப்பிவைக்கபடும்

இதற்காக உழைத்த சகோதர சகோதிரிகளுக்கு துவா செய்யவும்.

அல்ஹம்துலில்லாஹ்

அப்துல் கபூர்
தலைவர் -அன்னை ஆயிசா ட்ரஸ்ட்
பரமக்குடி.

Friday, 31 July 2020

தமிழ் செய்தி தொலைக்காட்சி



தமிழ் செய்தி தொலைக்காட்சி விவாதங்களை ரிப்பளிக்கின் மறுவடிவமாக மாற்றுவதற்கான இரண்டாம் கட்டம் தான் போன வார முக்கியமான செய்தியாளர்களின் மீதான பணிக்குறைப்பும், பெரு விவாதங்களும். இதன் முதற்கட்டம் விவாதங்களில் வார்டு கவுன்சிலராக ஆக கூட வக்கில்லாத பாஜக ஆட்களையும், அவர்களின் மறைமுக ஜால்ராக்களையும் அமர வைத்தது. தங்களுடைய சுயகருத்து திணிப்பினை மட்டுமே "கருத்து சுதந்திரம்" என்று கருதும் கூட்டம் கமலாலயத்தில் நிறைய உண்டு. என்றைக்கு மதுவந்திக்கு எல்லாம் போஸ்டிங் கொடுத்தார்களோ, அப்போதே அதன் தரமென்ன என்று தெரிந்துவிட்டது. We are paying the price for our "management pressure" in free, fair and fearless journalism.

தமிழில் இயங்கும் நான்கு முக்கியமான செய்தி தொலைக்காட்சிகளுக்கும் வெவ்வேறு வடிவில் செக் இருக்கிறது. 

தந்தி டிவி - ஆதித்தனாரின் வாரிசுகள் இன்னும் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரியில் போய் பிராம்ணார்த்தமும், அபிவாதையும் கற்று கொள்வது மட்டுமே பாக்கி. அதை தவிர முழுமையான உயர்சாதி இந்துக்களாகவே தங்களை மாற்றிக் கொண்டு, நவபார்ப்பனீயத்தின் உச்சத்தில் அய்யர்லயே நான் ஆச்சாரமான நாடாரய்யராக்கும் என்கிற ரேஞ்சுக்கு உலவுகிறார்கள். அந்த சமூகமும் பாஜகவின் பின்னால் போய் விட்டதும், உழைப்பால் உயர்ந்தெழுந்த ஒரு சமூகத்தின் வீழ்ச்சி.

நியுஸ் 18 தமிழ்நாடு - முகேஷ் அம்பானியின் நியுஸ் 18-இன் கீழ் இயங்கும் நிறுவனம். குணாவை எல்லாம் எப்படி இத்தனை நாட்கள் விட்டு வைத்தார்கள் என்பதே எனக்கு ஆச்சர்யம் தான். ஜீவசகாப்தன், முத்துகுமார் என திராவிட இயக்க தெளிவும், தெரிவும் தெரிந்த ஆட்கள் அங்கே உண்டு. ஆனால் அம்பானி கம்பெனியில் அதன் ப்ராண்ட் அம்பாசிடரான மோடியின் கருத்தியல் வராமல் வேறு என்ன வரும் ?

புதிய தலைமுறை - கார்த்திகை செல்வனுக்கான செக்கும், ஆப்பும் தயாராகி எனக்கு தெரிந்து 18 மாதங்கள் ஆகிறது. நடுவில் பாண்டே தலைமை என்றெல்லாம் பேச்சு வார்த்தை ஓடியதாக செய்தி வந்தது. எஸ்.ஆர்.எம் குழுமமும், அதன் இந்தியா முழுக்க இருக்க இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கும் டெல்லியின் ஆசிர்வாதம் தேவை. அந்த ஒரு செக் போதும்.

நியுஸ் 7 - யார் நடத்துகிறார்கள், அவரின் பின்புலம் என்ன, அவருடைய அடிப்படை தொழிலுக்கு கடந்த சில வருடங்களாக செக் எப்படி வைக்கப்பட்டது என்பது ஊரறிந்த ரகசியம். 

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, சாடிலைட் டிவி ஒளிபரப்பின் உரிமம் என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது. தங்களுக்கு எதிராக பேசினார்கள் என்பதற்காக ஒரு நாள் முழுக்க என்.டி.டி.வியை ப்ளாக் அவுட் செய்த பெருமை காவி கும்பலை தான் சாரும். 

இதனால் இந்த 4 சானல்களாலும் நகர முடியாது. இதில் "திராவிட இயக்க தாக்கம்" அதிகரித்து விட்டது என்று "பெரும்புள்ளிகளால்" அழுத்தம் கொடுக்கப்பட்டு "விவாதம்" என்பதை பாஜக கொள்கை பரப்பு விளக்க கூட்டமாக மாற்றியது தான் தமிழ் சங்கீகளின் சாதனை. 

நியாயமாய் பார்த்தால், திராவிட இயக்க சேனல்களான சன் நியுஸ், கலைஞர் டிவி, ஜெயா நியுஸ் மூன்றும் திறமையாளர்களை பயன்படுத்தி கொண்டு திராவிட, தமிழ் தேசிய, இடது சாரி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பார்வைகளை முன் வைக்க வேண்டும். ஆனால், மூன்றுமே தூங்கி வழிந்து கொண்டு, நிலைய வித்வான்களை கொண்டு கச்சேரி செய்து இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களும் இவற்றை சட்டை செய்வதில்லை. அதிலும் இந்த சேனல்களில் நடக்கும் உள்ளரசியல்கள், பவர் சென்டர் பிரதிநிதித்துவம், படு திராபையான கருதுகோள்கள் - கொட்டாவி வர வைக்கின்றன.  These are walking dead channels. 

இதுவுமே கூட ஒரு மாதிரியான திராவிட அரசியல் கட்சிகளின் வீழ்ச்சி தான். இனம், மொழி அடையாளங்களை முன் வைக்காமல், அதற்காக போராடாமல், இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் பதறி அடித்து கொண்டு நாங்கள் இந்து விரோதி அல்ல என்று சுய தன்னிலை விளக்கம் கொடுக்கிறார் என்றால், Narrativeனினை யார் செட் செய்கிறார்கள் என்பது கண்கூடு. கலைஞர் இருந்தவரை கலைஞர் மீது வைக்கப்படாத "இந்து எதிரி" கோஷங்களா? எப்போது நாம் நம்முடைய மூலத்தையும், அடிப்படையையும் மறக்கிறோமோ, அப்போது எதிரி நம் மீது ஏறி மிதித்து போய் கொண்டே இருப்பான். 

ஒரே ஆறுதல், ஊடகங்கள் தாண்டி சமூக வலைத்தளங்களும், யூ ட்யூப்பும் பாஜக எதிர்ப்பு மனநிலையை தமிழ்நாடு முழுக்க கொண்டு சேர்த்து விட்டது. இப்போதைக்கு தாமரை, அடாவடி செய்து பிடுங்கிய காரில், பானெட்டின் மீது தான் வளரும். தமிழ்நாட்டில் வளர தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் முடியாது. திராவிட அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை பேஸ்புக்கும், ட்விட்டரும், யூ ட்யூப்பும் தமிழ்நாட்டில் செய்து கொண்டு இருக்கிறது. ஒரு காலம் கூடிய சீக்கிரத்தில் வரும், திருப்பி அடிப்போம். அடி வாங்கும் போது, அடி கொடுத்த வலியின் உக்கிரம் என்ன என்று தே.ப-க்களுக்கு தெரிய வரும். Get ready, the youngsters in tamilnadu will crush you mercilessly. 

- Narain Rajagopalan

#MediaSaffronization
#BastardizationofMedia





Thursday, 30 July 2020

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு...

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு...

ஆம் நீ என் தம்பிதான்

எனக்குப் பிந்திப் பிறந்தவன்
நாம் பிறந்த இடம் வேறாக இருக்கலாம்

நம் அப்பாக்கள் ஒன்றுதான்
நம் அம்மாக்கள் ஒன்றுதான்

என் அப்பா படித்தது மூன்றாம் வகுப்பு
உன் அப்பாவும்  கூடக் குறைய படித்திருக்கலாம்

நம்முடைய தலைமுறைதான்
கல்வியைப் பற்றிக் கொண்ட 
முதல் தலைமுறை.

நம் வீடுகள் தெருக்கள்
இப்போதும் ஊருக்கு முதலில்தான் இருக்கின்றன
அவர்கள் கடைசியில் இருப்பதாக 
நினைத்துக் கொண்டிருக்கிறர்கள்

அந்த நினைப்பு அறமற்றது
அதை மாற்றத்தான் நம் அப்பாக்கள் நம்மை படிக்க வைத்தார்கள்

பறையடிப்பதும் மாட்டுத்தோல் உரிப்பதும்
செருப்பு தைப்பதும் வேண்டாம் என்றுதான்
நான் டீச்சருக்குப் படித்தேன்
நீ வக்கீலுக்குப் படித்தாய்

படித்து முடிப்பதற்குள் 
நாம் எவ்வளவு பாடுபட்டிருப்போம்

எவ்வளவு புறக்கணிப்புகள்
எவ்வளவு அவமானங்கள்
எவ்வளவு வலிகள் கண்டிருப்போம்
எல்லாம் இந்தச் சாதியினால்தான் 
என்பதை நீயும் அறிவாய்தானே?

வகுப்பறையில் நாம் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டோம்தானே? 

அந்த இளம் பருவத்தில்
நம்மோடு யாரும் பேசவில்லை
நம்மோடு யாரும் விளையாடவில்லை
நம்மோடு யாரும் உணவருந்தவில்லை
நம்மோடு யாரும் பழகவில்லை
நம்மை யாரும் தொட்டதுகூட இல்லை

நம் இளமைக் காலங்கள்
எவ்வளவு துயர் நிரம்பியவை
நாம் குழந்தைகளாகவே பிறந்தோம்
ஆனால் இந்தச் சமூகம் 
நம்மைத் தலித்துகளாகப் பார்க்கிறது

பிறப்பு சாதியைத் தீர்மானிப்பதுபோல
சாதியும் பிறப்பைத் தீர்மானிக்கிறதுபோல..

நினைவிருக்கிறதா உனக்கு?

சத்துணவு வாங்க
வரிசையில் நிற்கும்போது
பிற மாணவர்கள் 
முன்னால் முன்னால் 
வந்து நிற்பார்கள்
நம்மைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே இருப்பார்கள்.
நிறைய நாள் சோறு கிடைக்காது

இலவசப் புத்தகம் நமக்குக் கொடுக்கும்போதெல்லாம்
பின்னாலிருந்து ஓஸி புக் என்று 
குரல்கள் கேட்கும்
உனக்கும் கேட்டதா அந்தக் குரல்கள்?

பள்ளி ஆண்டு விழாவில் ஒரு நாடகத்திலோ ஒரு நடனத்திலோ நம்மை யாரும் 
சேர்த்துக் கொண்டதே இல்லை
தூர நின்று கண்ணீர் உகுத்திருக்கிறேன் 

பள்ளி இடைவெளியில்
யார் வீட்டிலாவது  தண்ணீர் கேட்கும்போது
பறநாயே என்று விளிப்பார்கள்
உன்னையும் விளித்திருப்பதை மறுதலிக்க மாட்டாய்

சிறு வயதில் ஒருநாள்
பிள்ளைகளோடு சேர்ந்து சிவன் கோவிலுக்குச் சென்றேன்
விளவங்காய் பொறுக்க
அந்த அர்ச்சகர் என்னை
மட்டும் வெளியே நிற்க வைத்துவிட்டார்

அப்போதிலிருந்துதான்
எனக்கு விளவம்பழம் 
பிடிக்காமல் போயிற்று

ஊரில் ஒருநாள் சித்திரைத் திருவிழா
இரவு நடந்த கூத்தில்
ஒருவர் அம்பேத்கர் பாடலைப்பாட
மேடையிலேயே அவருக்கு அடி உதை

அப்பாவிடம் கேட்டேன்
யாரப்பா அது அம்பேத்கர்
அவரைப் பாடினால் ஏன் அடிக்கிறார்கள்
அம்பேத்கர் பற்றியும்
தாத்தா ரெட்டைமைலை சீனிவாசன் பற்றியும்
அப்பா தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்

புரிந்து கொள்ளும் வயதல்ல எனக்கு
உனக்கும் உன் அப்பா 
நிச்சயம் சொல்லியிருப்பார்

என்றாலும் வளர வளர
வலி கிடைக்க கிடைக்க
புரிய ஆரம்பித்தது எனக்கு

கற்பி ஒன்றுசேர் புரட்சி செய் 
ஆம் கல்வி நமக்கு ஆயுதம்
நான் படித்து ஆசிரியர் ஆனேன்
நீ அண்ணலின் சட்டம் படித்து 
வழக்குரைஞர் ஆனாய்

சாதி ஒரு நஞ்சுக்கொடி
அதில்தான் சமூகம்  தன்னைப்
பிணைத்து வைத்துக் கொண்டிருக்கிறது

நஞ்சுக்கொடி உதிர்ந்தால்தான்
சமூகம் ஆரோக்கியமாக இருக்கும்

சாதியின் வேர் மதம்
மதத்தின் வெளிப்பாடே சாதி
தீட்டு தீண்டாமை தாழ்ந்தவன் எல்லாம் இந்துமதத்தின் வெளிமூச்சே

கற்பு, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் எல்லாம் 
இந்துத்துவத்தின் மேல்தோல்
இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிப்பது பார்ப்பனியம்

கோவிலுக்குள் நம்மை 
நுழைய விட்டிருக்கிறார்களா?
தேர்வடத்தைத் தொட நம்மை விட்டிருக்கிறார்களா?

சேரிக்குள் ஊர்ச்சாமி வந்திருக்கிறதா?
பொதுச் சுடுகாடு இருக்கிறதா?
பொதுக்குளம் இருக்கிறதா?
பொதுச்சாமி இருக்கிறதா?
ஆணவக் கொலை நடக்காமல் இருக்கிறதா?

நீயும் நானும் விடுதலை பெற வேண்டுமென்றால்
சாதி ஒழிய வேண்டும்

சாதி ஒழிப்பே மானுட விடுதலை
சாதி ஒழிய இந்துத்துவம் 
ஒழிய வேண்டும்
இந்துத்துவம் ஒழிய
பார்ப்பனியம் ஒழிய வேண்டும்

நம்முடைய பணி எளிதானதன்று

கற்பிக்க வேண்டும்
ஒன்று சேர்க்க வேண்டும்
புரட்சி செய்ய வேண்டும்

நாம் கற்ற கல்வி தலித் மக்களுக்குமான கல்வியாக விளங்க வேண்டும்
நம்முடைய குரல் தலித்துகளுக்கான  குரலாக ஒலிக்க வேண்டும்.

நான் சுதந்தரத்திற்காகக் 
குரல் கொடுக்கிறேன்
சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்கிறேன்
சகோதரத்திற்காகக் குரல் கொடுக்கிறேன்

நம் சுதந்தரம் பறிக்கப்படும்போது 
நீ கற்ற சட்டத்தைப் பயன்படுத்து
சமத்துவம் நிலவாதபோது நீதியை நிலைநாட்டு

விடுதலைக்கான என் குரல் நசுக்கப்படும்போது சட்டத்தின்மூலம் என்னைக் காப்பாற்று

சாதி நம்மை தாழ்த்தியது 
கல்வி நம்மை உயர்த்தியது

கல்வி கற்ற நீ ஏன்
இந்துத்துவத்திடம் மண்டியிடுகிறாய்?

நம்மைத் தீட்டு என்று சொன்ன பார்ப்பனியத்திற்கு 
நீ ஏன் கூர் தீட்டுகிறாய்?

நம்மைத் தாழ்ந்த சாதி என்று சொன்ன சனாதனத்திற்கு ஏன்  
காவல் காக்கிறாய்?

நம்மை வன்கொடுமை செய்து 
கொலை செய்யும் கூட்டத்திற்கு ஏன் தலைமை ஏற்கிறாய்?

அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்
படித்த மாணவன் அல்லவா நீ?

எப்படி நன்றி மறக்கிறாய்?
சட்டத்தைப் படித்தாயா
மனுவைப் படித்தாயா?

நான் இங்கேதான் நிற்கிறேன்
மக்களோடு நிற்கிறேன்
நீலமும் சிவப்பும் கருப்பும் 
என் நிறங்கள்
சாதி ஒழிப்பே மானுட விடுதலை 
மனு ஒழிப்பே மக்கள் விடுதலை

நீதான் வெகுதூரம் சென்று விட்டாய்
காவியைக் கைக்கொண்டு விட்டாய்

வரலாறு உன்னை மன்னிப்பது இருக்கட்டும்

உன் தெரு உன்னை மன்னிக்காது 
உன் அப்பா அம்மா மன்னிக்க மாட்டார்கள்

மனம் திரும்பு
நீ வழி தவறிய ஆடு
உனக்காகக் காத்திருக்கிறோம்.
ஏனெனில் 
நாம் பலியாடுகள் அல்ல
சாதி ஒழிப்பில் 
களமாடுபவர்கள்.

கவிஞர் Sukirtha Rani அக்கா 👌

Saturday, 25 July 2020

அரபி-பேச-கற்றுக்கொள்ளுங்கள்

மளிகை பொருட்களின் பெயர்களை நண்பர் Rajesh Bala கேட்டிருந்தார். அவருக்காக

பக்காளா-மளிகை கடை
புதா,மகாதி-பொருட்கள்
குபுஸ்-ரொட்டி
ஹலீப்- பால்
Zசபாதி-கட்டி தயிர்
லபன்-தயிர்
ருஸ்-அரிசி
லஹம்-கறி
திஜாஜ்-கோழி
அசீர்-ஜூஸ்
குதார்-காய்கறி
தகீக்-மைதா மாவு,மாவு
பேத்- முட்டை
ஃபூல்,அதஸ்-பருப்பு
ஷாய்-தேயிலை
ஃபில்ஃபில்-மிளகாய்
ஃபில்ஃபில் அஸ்வத்-மிளகு
கம்மூன்-சீரகம்
கஸ்பரா-மல்லி
பவ்டர்-பவ்தரா
சோளம்-தொரா
சுக்கர்-சீனி
மோயா-தண்ணீர்
கஃவா-காப்பி
ஹேல்-ஏலக்காய்
புர்-கோதுமை
பஹராத்-மசாலா
ஹல்பா-வெந்தாயம்
ஹர்தல்-கடுகு
குர்கும்-மஞ்சள் 
சமன்-நெய்
ஸெய்த்-எண்ணை
ஸய்த்தூன்-ஆலிவ்
தமர்,தமூர்-ஈச்சம்பழம்
பசல்-வெங்காயம்
பத்தாதஸ்-உருளை கிழங்கு
தமாத்தம்-தக்காளி
ஜிபுன்-வெண்ணை

#Admin_nwz
--
Thanks & Regards

ஹாஜி. சம்சு அலியார் மரணம்

பரமக்குடி மேலப்பள்ளிவாசல்
நெசவு.சாந்துபட்டறைஜமாத்தலைவர்
ஹாஜி. சம்சு அலியார் மரணம்.
முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் இரங்கல்.

இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது.

பரமக்குடி மேலப்பள்ளிவாசல் நெசவு மற்றும் சாந்து பட்டரை ஜமாஅத் தலைவரும். பரமக்குடி தாலுகா முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் கௌவுரவ ஆலோசகருமான ஹாஜி. D.சம்சு அலியார் அவர்கள் 25.07.2020 இரவு 8.30. மணி அளவில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஓய்வு பெற்ற ஆசிரியரான ஹாஜி. சம்சு அலியார் அவர்கள் நீண்ட நெடுங்காலமாக சமுதாய சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். பரமக்குடி முஸ்லீம் நெசவு மற்றும் சாந்து பட்டரை ஜமாத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணி செய்து பரமக்குடி மேல பள்ளிவாசல் மற்றும் ஹைராத்துல் அலியா உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றின் வளர்ச்சிப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். அன்னாரின் மறைவு முஸ்லிம் சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

பரமக்குடி சுற்றுவட்டார முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களில் அக்கறை கொண்டு செயல்பட்டு வந்தவர். அனைத்து சமுதாய மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என்றும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் இறைவனிடம் துவா செய்யுமாறு மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Saturday, 18 July 2020

இஸ்லாமியர்களின் மனிதநேயம்


முஸ்லிம்களை கொச்சை படுத்தி, இழிவு படுத்தி வரும் பாசிச சக்திகள்.பாஜக மாவட்ட தலைவர் மாமா உடலை அடக்கம் செய்து மனித நேயத்தை பறைசாற்றிய தமுமுக..

தஞ்சையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பட்டுக்கோட்டை பண்ணவயலை சேர்ந்த "சாமியப்பா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளரும் தஞ்சை மாவட்ட பிஜேபி மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ" அவர்களின் மாமாவும் ஆகிய திரு.கருணாநிதி அவர்கள் கொரனோ வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இச்செய்தியை மருத்துவமனையின் நிர்வாகமும் குடும்பத்தினரும் தமுமுக அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷாவிடம் எடுத்துக் கூறியதோடு அவருடைய இறுதி சடங்கை நடத்தி தருமாறும் அவருடைய சொந்த ஊராக இருக்கக்கூடிய பட்டுக்கோட்டை அடுத்து இருக்கும் பண்ணவயலில் நல்லடக்கம் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.  

அதன் அடிப்படையில் தஞ்சை மாநகர ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு தமுமுக சகோதரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர் இறந்த கருணாநிதி அவர்களின் உடலை முறையாக பேக் செய்து தமுமுக வின் அவசர கால ஊர்தி மூலமாக அவருடைய சொந்த ஊராக இருக்கக்கூடிய பண்ணவயலுக்கு எடுத்துச் செல்ல முயற்ச்சி எடுக்கப்பட்டது. கொரோனா காரணமாக அச்சத்தில் இருந்த உறவுகள் ஊர்சொந்தங்கள் நல்லடக்கத்தையும் செய்து கொடுக்குமாறு கேட்டு கொண்டனர் அதனை அடுத்து தமுமுக நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர்..

இந்த நிகழ்வை பார்த்த தஞ்சை மக்கள் முஸ்லிம்கள் மனித நேய பணிகளை குறித்து  கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். 

ஒரு பக்கம் "இந்துத்துவா பாஜக ஆதரவாளர்கள் முஸ்லிம்கள் குறித்தும்,முஸ்லிம்கள் உயிருக்கு மேலாக நேசிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) குறித்தும்,கொச்சையாக பேசி முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் நான் சாவதற்கு முன்னால் நூறு முஸ்லிம்களை வெட்டுவேன் எனவும், முஸ்லிம்கள் மீது கொரோனா பரப்பும் கொடூரமானவர்கள் என அவதூறுகளை அள்ளி வீசி கொண்டு இருக்கும் போது..

இன்னொரு பக்கம் பாஜக மாவட்ட தலைவர் மாமா உடலை வாங்கி முஸ்லிம்கள் மனிதநேயத்தை விதைப்பவர்கள்,மனிதத்தை மட்டும் போற்றுபவர்கள்,மனிதனை மனிதனாக மதிப்பவர்கள், நாங்கள் எங்களை கொச்சையாக பேசினாலும் சட்ட நடவடிக்கை எடுத்து விட்டு மனித நேய பணியில் அர்பணிப்பு செய்து இறைவன் இடத்தில் கிடைக்கும் நன்மையை நாடி எங்களை கொலை செய்வேன் சொல்லும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் மரணம் வந்தாலும் நாங்கள் எங்கள் பணிகளை செய்வோம் முஸ்லிம்கள் மத நல்லிணக்கத்தை விரும்பி தமிழகத்தில் அமைதியை விரும்புவர்கள், என இந்த மனித நேய பணி பறைசாற்றி உள்ளது தமிழகத்தில்...

தமுமுக நிர்வாகிகளுக்கு அல்லாஹ் கிருபை செய்வானக..

"புதைந்தது திரு கருணாநிதியின் உடல் மட்டும் அல்ல மதத்தால் மக்களை பிளவு படுத்தும் மத வெறியும் தான்."

தொகுப்பு: A.யாசர் அராபத். 
THOWHEEDISM மீடியா செய்தி பிரிவு..

நன்றி Yasar Arafath

Arabic அரபிக் கற்றுகொள்ளுங்கள்

மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு நண்பர் அது சம்மந்தமாக கேட்டதற்காக இந்த பதிவு 

முஸ்தஷ்ஃபா-ஹாஸ்பிடல்
சைதலிய்யா-மெடிக்கல்/மருந்துக்கடை
தொக்தர்/தப்பீப்-டாக்டர்
முமர்ரிதா-நர்ஸ்
தாவா-மருந்து
எலாஜ்-மருத்துவம்/டிரீட்மென்ட்
இப்ரா-ஊசி
குர்சி முத்தஹர்ரக்-வீல் சேர்
அமலிய்யா-ஆப்பரேஷன்
இஸ்த்தக்பால்-ரிசப்ஷன்
மலஃப்-ஃபைல்

ஹராரா-காய்ச்சல்
சுதா- தலைவலி 
அலம்/வஜா-வலி
வஜா ராஸ்-தலைவலி
அலம் இஸ்னான்-பல்வலி
அலம் பத்தன்- வயிற்றுவலி
அலம் ரிஜில்-கால்வலி
ஸக்மா-ஜலதோசம்
கஹ்ஹா-இருமல்
தம்-ரத்தம்
கஷஃப் தம்-ரத்தப்பரிசோதனை
ஹல்க்-தொண்டை
அயூன்-கண்
கல்ப்-இதயம்
கீலா-கிட்னி

எனக்கு தலை வலிக்கிறது நான் டாக்டரை பார்க்க வேண்டும்- அன ஃபி சுதா அன அப்கா ஷூஃப் தொக்தோர்

சுதா என்றால் தலைவலி. உங்களுக்கு என்ன பிரச்சினையோ அதற்கு ஏற்ப சுதா என்ற வார்த்தையை எடுத்து விட்டு சேர்த்துக்கொள்ளவும் 

Example காய்ச்சல் என்றால் 

எனக்கு காய்ச்சல் நான் டாக்டரை பார்க்க வேண்டும்- அன ஃபி ஹராரா அன அப்கா ஷூஃப் தொக்தோர்
#admin_nawaz
--
Thanks & Regards