தமிழ் செய்தி தொலைக்காட்சி விவாதங்களை ரிப்பளிக்கின் மறுவடிவமாக மாற்றுவதற்கான இரண்டாம் கட்டம் தான் போன வார முக்கியமான செய்தியாளர்களின் மீதான பணிக்குறைப்பும், பெரு விவாதங்களும். இதன் முதற்கட்டம் விவாதங்களில் வார்டு கவுன்சிலராக ஆக கூட வக்கில்லாத பாஜக ஆட்களையும், அவர்களின் மறைமுக ஜால்ராக்களையும் அமர வைத்தது. தங்களுடைய சுயகருத்து திணிப்பினை மட்டுமே "கருத்து சுதந்திரம்" என்று கருதும் கூட்டம் கமலாலயத்தில் நிறைய உண்டு. என்றைக்கு மதுவந்திக்கு எல்லாம் போஸ்டிங் கொடுத்தார்களோ, அப்போதே அதன் தரமென்ன என்று தெரிந்துவிட்டது. We are paying the price for our "management pressure" in free, fair and fearless journalism.
தமிழில் இயங்கும் நான்கு முக்கியமான செய்தி தொலைக்காட்சிகளுக்கும் வெவ்வேறு வடிவில் செக் இருக்கிறது.
தந்தி டிவி - ஆதித்தனாரின் வாரிசுகள் இன்னும் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரியில் போய் பிராம்ணார்த்தமும், அபிவாதையும் கற்று கொள்வது மட்டுமே பாக்கி. அதை தவிர முழுமையான உயர்சாதி இந்துக்களாகவே தங்களை மாற்றிக் கொண்டு, நவபார்ப்பனீயத்தின் உச்சத்தில் அய்யர்லயே நான் ஆச்சாரமான நாடாரய்யராக்கும் என்கிற ரேஞ்சுக்கு உலவுகிறார்கள். அந்த சமூகமும் பாஜகவின் பின்னால் போய் விட்டதும், உழைப்பால் உயர்ந்தெழுந்த ஒரு சமூகத்தின் வீழ்ச்சி.
நியுஸ் 18 தமிழ்நாடு - முகேஷ் அம்பானியின் நியுஸ் 18-இன் கீழ் இயங்கும் நிறுவனம். குணாவை எல்லாம் எப்படி இத்தனை நாட்கள் விட்டு வைத்தார்கள் என்பதே எனக்கு ஆச்சர்யம் தான். ஜீவசகாப்தன், முத்துகுமார் என திராவிட இயக்க தெளிவும், தெரிவும் தெரிந்த ஆட்கள் அங்கே உண்டு. ஆனால் அம்பானி கம்பெனியில் அதன் ப்ராண்ட் அம்பாசிடரான மோடியின் கருத்தியல் வராமல் வேறு என்ன வரும் ?
புதிய தலைமுறை - கார்த்திகை செல்வனுக்கான செக்கும், ஆப்பும் தயாராகி எனக்கு தெரிந்து 18 மாதங்கள் ஆகிறது. நடுவில் பாண்டே தலைமை என்றெல்லாம் பேச்சு வார்த்தை ஓடியதாக செய்தி வந்தது. எஸ்.ஆர்.எம் குழுமமும், அதன் இந்தியா முழுக்க இருக்க இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கும் டெல்லியின் ஆசிர்வாதம் தேவை. அந்த ஒரு செக் போதும்.
நியுஸ் 7 - யார் நடத்துகிறார்கள், அவரின் பின்புலம் என்ன, அவருடைய அடிப்படை தொழிலுக்கு கடந்த சில வருடங்களாக செக் எப்படி வைக்கப்பட்டது என்பது ஊரறிந்த ரகசியம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, சாடிலைட் டிவி ஒளிபரப்பின் உரிமம் என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது. தங்களுக்கு எதிராக பேசினார்கள் என்பதற்காக ஒரு நாள் முழுக்க என்.டி.டி.வியை ப்ளாக் அவுட் செய்த பெருமை காவி கும்பலை தான் சாரும்.
இதனால் இந்த 4 சானல்களாலும் நகர முடியாது. இதில் "திராவிட இயக்க தாக்கம்" அதிகரித்து விட்டது என்று "பெரும்புள்ளிகளால்" அழுத்தம் கொடுக்கப்பட்டு "விவாதம்" என்பதை பாஜக கொள்கை பரப்பு விளக்க கூட்டமாக மாற்றியது தான் தமிழ் சங்கீகளின் சாதனை.
நியாயமாய் பார்த்தால், திராவிட இயக்க சேனல்களான சன் நியுஸ், கலைஞர் டிவி, ஜெயா நியுஸ் மூன்றும் திறமையாளர்களை பயன்படுத்தி கொண்டு திராவிட, தமிழ் தேசிய, இடது சாரி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பார்வைகளை முன் வைக்க வேண்டும். ஆனால், மூன்றுமே தூங்கி வழிந்து கொண்டு, நிலைய வித்வான்களை கொண்டு கச்சேரி செய்து இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களும் இவற்றை சட்டை செய்வதில்லை. அதிலும் இந்த சேனல்களில் நடக்கும் உள்ளரசியல்கள், பவர் சென்டர் பிரதிநிதித்துவம், படு திராபையான கருதுகோள்கள் - கொட்டாவி வர வைக்கின்றன. These are walking dead channels.
இதுவுமே கூட ஒரு மாதிரியான திராவிட அரசியல் கட்சிகளின் வீழ்ச்சி தான். இனம், மொழி அடையாளங்களை முன் வைக்காமல், அதற்காக போராடாமல், இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் பதறி அடித்து கொண்டு நாங்கள் இந்து விரோதி அல்ல என்று சுய தன்னிலை விளக்கம் கொடுக்கிறார் என்றால், Narrativeனினை யார் செட் செய்கிறார்கள் என்பது கண்கூடு. கலைஞர் இருந்தவரை கலைஞர் மீது வைக்கப்படாத "இந்து எதிரி" கோஷங்களா? எப்போது நாம் நம்முடைய மூலத்தையும், அடிப்படையையும் மறக்கிறோமோ, அப்போது எதிரி நம் மீது ஏறி மிதித்து போய் கொண்டே இருப்பான்.
ஒரே ஆறுதல், ஊடகங்கள் தாண்டி சமூக வலைத்தளங்களும், யூ ட்யூப்பும் பாஜக எதிர்ப்பு மனநிலையை தமிழ்நாடு முழுக்க கொண்டு சேர்த்து விட்டது. இப்போதைக்கு தாமரை, அடாவடி செய்து பிடுங்கிய காரில், பானெட்டின் மீது தான் வளரும். தமிழ்நாட்டில் வளர தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் முடியாது. திராவிட அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை பேஸ்புக்கும், ட்விட்டரும், யூ ட்யூப்பும் தமிழ்நாட்டில் செய்து கொண்டு இருக்கிறது. ஒரு காலம் கூடிய சீக்கிரத்தில் வரும், திருப்பி அடிப்போம். அடி வாங்கும் போது, அடி கொடுத்த வலியின் உக்கிரம் என்ன என்று தே.ப-க்களுக்கு தெரிய வரும். Get ready, the youngsters in tamilnadu will crush you mercilessly.
- Narain Rajagopalan
#MediaSaffronization
#BastardizationofMedia
No comments:
Post a Comment