Sunday, 2 February 2020

எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி பற்றிய காணொளி...புரியாதோர் கண்டு தெளிவடையவும்😜

எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி பற்றிய காணொளி...புரியாதோர் கண்டு தெளிவடையவும்😜😜

*2020 பட்ஜெட்: வரவேற்பும் எதிர்ப்பும்!*



2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு பலத் தரப்பினரும் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டை வரவேற்கிறேன்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றச்சம்பவங்களைக் குறைப்பதிலும் நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழகத்தில் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய காவல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஒன்றை அமைக்க வேண்டும்.

புதியதாக நூறு விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, நெய்வேலி, ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கவும், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிய நிதி ஒதுக்கவும் கேட்டுக்கொள்கிறேன். ஆதிச்சநல்லூர் போன்று கீழடியிலும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

மேலும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் இந்த பட்ஜெட் திறம்பட தயாரிக்கப்பட்டுள்ளது என்று வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்

"மத்திய பா.ஜ.க. அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ""பொருளாதார தேக்க நிலைமை", "கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி", "கிராமப்புற மக்களின் வருவாய்", "வேலைவாய்ப்பின்மை" உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல் - பா.ஜ.க. விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் ஒரு நிதி நிலை அறிக்கையாக இருக்கிறது.

மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை; திட்டங்களும் கிடைக்கவில்லை! "ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி" தவிர வேறு எந்த ஒரு உருப்படியான அறிவிப்பும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை.

ஏழை மக்களுக்கானதாக இல்லாமல் இந்த பட்ஜெட் கார்ப்பரேட்களின் மீதான அக்கறையை நேரடி ஒலிபரப்பு செய்திருக்கிறது. எங்கும் எதிலும் இந்துத்துவா திணிப்பு" என்பதில் தீவிரம் காட்டி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்த நிதிநிலை அறிக்கையில் சிந்து சமவெளி நாகரீகத்தை "சரஸ்வதி சிந்து நாகரீகம்" என்று பெயர் சூட்டி- கீழடியில் கிடைத்த தமிழர் நாகரீகம் உள்ளிட்ட பல ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றைத் திருத்தவும் திரிக்கவும் முயலுவதை தமிழகம் சிறிதும் பொறுத்துக் கொள்ளாது.

ஆத்திச் சூடியை மேற்கோள் காட்டியிருக்கும் நிதி அமைச்சர், " சித்திரம் பேசேல்" (அதாவது உண்மை அல்லாததை மெய்யானது போலப் பேசாதே) என்ற ஆத்திச் சூடியையும் நிச்சயம் படித்திருப்பார். தமிழ், சமஸ்கிருதம், உருது மொழிகளின் இலக்கியங்களிலிருந்து, திட்டமிட்டு மேற்கோள்களைக் கையாண்டு, நாட்டைத் திசை திருப்பிவிட முடியாது. கிராமப் புறப் பொருளாதாரத்தை - வளர்ச்சியை- ஏன் தமிழகத்தை அடியோடு புறக்கணித்து - சமூக நீதிக்கு எதிரான "புதிய கல்விக் கொள்கையை விரைந்து செயல்படுத்துவோம்" என்ற அறிவிப்புடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதி நிலை அறிக்கைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மன நிறைவின்மையைத் தெரிவித்துக் கொள்கிறேன்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

வரலாற்றிலேயே நீண்ட நேரமாக வாசிக்கப்பட்ட பட்ஜெட்டாக இருந்தாலும், அதில் ஒன்றும் இல்லை. இது ஒரு வெற்று பட்ஜெட். நாட்டின் மிகப் பெரிய சவாலாக இருக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பு இல்லை. எந்த ஒரு கொள்கை ரீதியான திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தந்திரம் மிக்கவையாக உள்ளதே தவிர நாட்டுக்கு பயனளிக்கும் எந்த திட்டமும் இல்லை.

உள் துறை அமைச்சர் அமித் ஷா

இந்த பட்ஜெட்டில், வரி முறையை பகுத்தறிவு செய்வதற்கும், அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வங்கி முறையை வலுப்படுத்துவதற்கும், முதலீட்டை ஊக்குவிப்பதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் மோடி அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இது இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான மோடி அரசின் தீர்மானத்தை மேலும் அதிகரிக்கும் .

டெல்லி முதல்வர்

இந்த பட்ஜெட்டுக்காக டெல்லி மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால், மீண்டுமொருமுறை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டுள்ளோம். தேர்தலுக்கு முன்பு ஏமாற்றும் பாஜக, தேர்தலுக்கு பிறகு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்ன?

புதுச்சேரி முதல்வர்- நாராயணசாமி

பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான எந்த அம்சங்களும் இல்லை. ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது. இது பெரு முதலாளிகளுக்கான பட்ஜெட். ஏற்கனவே மத்திய அரசின் உதான் திட்டத்தில் 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்து 30 விமான நிலையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் புதிய விமான நிலையங்கள் அமைப்பது எப்படி சாத்தியமாகும். இந்த பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம்- கமல்ஹாசன்

அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.

அமமுக – தினகரன்

விவசாயத்திற்கான 16 அம்ச திட்டம் உள்ளிட்ட ஒன்றிரண்டு வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இருந்தாலும்,பொருளாதாரத்தை மீட்டெடுத்தல்,வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது,எல்.ஐ.சியைத் தனியார்மயமாக்குதல் உள்ளிட்ட மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் கவலையளிக்கின்றன.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி

சிந்துவெளி நாகரிகத்தை பற்றி குறிப்பிடும்போது சரஸ்வதி பெயரை இணைத்து குறிப்பிட்டது அப்பட்டமான இந்துத்துவா கொள்கையின் வெளிப்பாடாகும். ஒட்டுமொத்தமாக வளர்ச்சியை நோக்கமாக இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட். பொருளாதார வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு இல்லாத இந்த பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் – வைகோ

2020-21 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் 4.8 விழுக்காடாக பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை.

வேளாண்துறை வளர்ச்சிக்காக 15 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான கடன் சுமைக்கு நிரந்தரத் தீர்வோ, வேளாண் கடன்கள் தள்ளுபடி அறிவிப்போ இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக(LIC)த்தின் பங்குகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது என்ற முடிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

அதைப் போல லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டு 2.1 லட்சம் கோடி திரட்டப்படும் என்ற அறிவிப்பு பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்துவிடும்.

மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வரும் பொது சுகாதாரத் துறையை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிப்பது மாநில உரிமைகளை நசுக்குவது ஆகும்.

தனிநபர் வருமான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதும், ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதைத் தவிர மத்திய வரவு செலவுத் திட்டத்தில் வரவேற்கத்தக்கக் கூறுகள் எதுவும் இல்லை.

பாமக நிறுவனர் ராமதாஸ்

2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண் வருமானத்தைப் பெருக்க 16 அம்ச திட்டம் அறிவிக்கப் பட்டிருப்பதும், நிபந்தனைகளுடன் வருமானவரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கின்றன. வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கம் கொண்ட இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.

கல்விக்கான ஒதுக்கீடு ரூ.99,300 கோடியாகவும், சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.69,000 கோடியாகவும் உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை & பெங்களூர் அதிவிரைவுச் சாலை அமைக்கும் பணிகள் நடப்பாண்டில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, 27,000 கி.மீ நீளத்திற்குத் தொடர்வண்டிப் பாதைகள் மின் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு, பெண்கள்& குழந்தைகள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். முதலீட்டை ஈர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு புதிய தளவாடக் கொள்கை, ரூ.5 கோடி வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்குத் தணிக்கைத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது, உட்கட்டமைப்பு வசதிகளை 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும் என்ற அறிவிப்பு ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புப் பெருக்கத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

அதேநேரத்தில் எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளைப் பங்கு சந்தைகள் மூலம் தனியாருக்கு விற்கும் முடிவு மிகவும் ஆபத்தானது ஆகும். எல்ஐசி மூலம் மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் ஈவுத்தொகை கிடைத்து வருகிறது. பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டால் அந்தத்தொகை குறைந்து விடும். பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாகத் தனியாருக்கு விற்பனை செய்வது மத்திய அரசின் வரி இல்லாத வருவாயைக் குறைத்து விடும். இது நல்ல விஷயமல்ல என்று தெரிவித்துள்ளார்.

RSS - Ghandi and Kamarajar

பாசிச ஆட்சியில் மக்களின் நிலை அநியாய ஆட்சியாளர்கள் மண்ணோடு போகட்டும் 😠 அநீதி இழைக்கப்பட்டவனுக்கும் இறைவனுக்குமிடையில் எந்த திரையும் இல்லை 😭

*ஆர்ப்பாட்டத்துக்கு எல்லாம் போனா பொழப்ப யார் பாக்குறது..?*

*ஆர்ப்பாட்டத்துக்கு எல்லாம் போனா பொழப்ப யார் பாக்குறது..?*

குடியை கெடுக்க வந்த குடியுரிமை மசோதாவை எதிர்த்து முழுநாடும் போராடிக் கொண்டிருக்கிறது..

குறிப்பாக பெண்களின் பங்கு இதில் மிக முக்கியமானது. முதியவர்கள் கூட முன்வரிசையில் நின்று போராடுகின்றனர்.

அதிலும் ஷாஹின் தோட்டத்தின் கடும் குளிரில் குழந்தைகளுடன் தங்கி, இரவு பகலாக குடும்பத்துடன் போராடி வருகின்றனர் டெல்லி மக்கள்.

அங்கேயே தொழுகையை நிறைவேற்றி, முறையான போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
"தொழுகையுடன் கூடிய போராட்டம் தான் தீர்வை தேடித்தரும்.!

போலிஸ் அடித்தபோதும் போராட்டத்தை விடாமல் நிற்கின்றனர் நம் பெண்கள்..
ஆர்எஸ்எஸ் குண்டர்கள் அடித்து உதைத்த போதும் அசராமல் நிற்கின்றனர் மாணவ செல்வங்கள்..

நமது உரிமைக்காக இவ்வளவு தியாகங்கள் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் இன்னமும் சில சுயநல மனிதர்கள்..

# ஆர்ப்பாட்டத்துக்கு எல்லாம் போனா பொழப்ப யாருங்க பாக்குறது..?

# நான் ஒரு ஆள் போகாமல் இருப்பதால், ஆர்ப்பாட்டம் நடைபெறாமலா போய்விடும்..?

# ஆர்ப்பாட்டத்தில் கைது செய்தால், மாலை வரை போலிஸ் ஸ்டேஷனில் இருக்கனும், அதெல்லாம் நம்மால் முடியாதுப்பா..?

இவ்வாறெல்லாம் கோழைத்தனமாக பேசும் மக்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஷாஹின் தோட்டத்தில், பிறந்த குழந்தையுடன் போராட்டத்தில் நிற்கும் அப்பெண் கூறிய வார்த்தை தான் இவர்களுக்கான பதில்..

இன்று நான் போராடவில்லை என்றால், நாளை எனது மகன் வளர்ந்து..
"இவ்வளவு பெரிய அநியாய சட்டத்திற்கு எதிராக நீங்கள் என்ன செய்தீர்கள் என்றால், அவனிடம் நான் என்ன பதில் சொல்வேன்! அதனால்தான் இவ்வளவு குளிரிலும் இப்பிள்ளையுடன் இங்கு நிற்கிறேன் என்றார்.!

* ஆர்ப்பாட்டத்திற்கு போனா பொழப்பு எதுவும் போய்விடாது. நம் ஊரில் ஒரு ஆர்ப்பாட்டம் அதிகபட்சம் 3மணி நேரம் தான்.

* நான் ஒரு ஆள் போகாமல் இருப்பதால் என்ன ஆகிவிடும் என ஒவ்வொருவரும் நினைத்தால் பிறகு யார்தான் போராடுவது.?

* ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களே கைது செய்வதற்கு ஆட்களை நியமித்து இருப்பார்கள். அவ்வளவு பயப்பட தேவையில்லை.

இந்த சிறிதுநேர கைதுக்கே பயப்படுகிறீர்களே! நாளை நம்மை இந்தியன் இல்லை என முகாமில் அடைத்தால் என்ன செய்வீர்கள்..?
சோற்றுக்கு கூட வழியில்லாத அந்த நேரத்தில் யாரிடம் வியாபாரம் செய்வீர்கள்..?

நமது உரிமைக்காக இன்று நாம் போராடாவிட்டால், நாளை
நாம் இருந்த தடம் கூட இங்கிருக்காது.

இனியும் வியாபாரம் தான் முக்கியம் என்றிருப்பீர்கள் என்றால்..
விரைவில் வியாபார பொருட்களுடன் தயாராக இருங்கள்..

*பங்களாதேஷ், பாகிஸ்தானுக்கு சென்று பானிபூரி கடை வைத்துக் கொள்ளலாம்..!*


உங்கள் நன்பனான AS

நாகை #சட்டமன்ற #உறுப்பினர் #சகோ. #எம்.#தமிமுன் #அன்சாரி #MLA #அவர்களுக்கு #சிறந்த #சட்டமன்ற #உறுப்பினர் #விருது..

#நாகை #சட்டமன்ற #உறுப்பினர்
#சகோ. #எம்.#தமிமுன் #அன்சாரி #MLA #அவர்களுக்கு #சிறந்த #சட்டமன்ற #உறுப்பினர் #விருது..

#புகழ்பெற்ற #பூனே #உலக #அமைதி #பல்கலைக்கழகம் #வழங்குகிறது..

பூனேயில் உள்ள உலக அமைதி பல்கலைககழகத்தின் சார்பாக சமீபத்தில் இந்திய அளவில் நடத்தப்பட்ட இணையவழிக் கருத்துக் கணிப்புகளின் வழியாக, மக்கள் பிரச்சினைகளில் ஈடுபாடு, சட்டமன்ற செயல்பாடுகள், மனுக்களின் மீதான விரைந்து நடவடிக்கை என பலதரப்பட்ட கேள்விகளின் அடிப்படையில், இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடுகளை தொகுத்து ,அதில் முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராக நமது நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் எம். தமிமுன்அன்சாரி அவர்களை தேர்வு செய்து முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினருக்கான விருது, இவ்வருடம் தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 22 ஆம் தேதி வழங்க உள்ளார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மொத்தமாக இந்தியாவை வித்து நாசமாக்கிய பின் ஆர் எஸ் எஸும் பிஜேபியும்

மொத்தமாக இந்தியாவை வித்து நாசமாக்கிய பின் ஆர் எஸ் எஸும் பிஜேபியும் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிடும், மோடி எங்கள் ஆலோசனைகளை கேட்காமல் நாட்டை சூறையாடி விட்டார், அதனால் அவரை அப்போதே எங்கள் இயக்கங்களில் இருந்து வெளியேற்றி விட்டோம்ன்னு..!

காந்தியை சுட்டதும், கோட்சேவையும் இப்படித்தான் காட்டிக் கொடுத்து தெருவில் விட்டானுக...!

வரலாறு முக்கியம்...!பபி

எவ்வளவு திமிரான பார்பன பேச்சு

எவ்வளவு திமிரான பார்பன பேச்சு இதற்கு முன்பு இவ்வளவு தைரியமாக இவர்கள் பேசமுடிந்ததா. இதையும் சரி என்று வியாக்கியானம் செய்பவர்கள் உள்ளார்கள் ஏதோ அவர்களுக்கு சலுகை கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ அவர்கள் பார்வையில் பார்பனர் நம்பூதிரி பண்டிட் போன்ற உயர்சாதியினரை தவிர எல்லோரும் அடிமைகள் தான்.
சரி அவரவர் குலத்தொழிலை செய்ய சொல்லும் இவர்கள் ஏன் மணியாட்டி மந்திரம் மட்டும் ஓதுவதோடு நிறுத்தி கொள்ளலாமே ஏன் அனைத்து உயர்பதவிகளையும் உயர்கல்வியையும் தனி உரிமை கொண்டாடுகிறார்கள். இல்லை கல்வி வேலை என்று மட்டும் இருந்து கொண்டு பூஜை புனஸ்காரம் எல்லாம் மற்றவர்களிடம் விட்டு விடலாமே. இரண்டும் இருந்தால் தான் ஒருபக்கம் கடவுள்பெயரை சொல்லி பொய் புராண கதைகளை சொல்லி மக்களை பயமுறுத்தி வைப்பது. மறுபக்கம்கல்வியை அபகரித்து உயர்பதவிகளில்அமர்ந்து கொண்டு அதிகாரம் செய்வது. படித்தால் தானே ஏன் எதற்காக என்று கேள்வி கேட்பாய் என்று கல்விக்கு படிப்படியாக தடை. பார்பனர் கடல்தான்டகூடாது என்று மனுதர்மம் சொல்கிறது ஆனால் எத்தனை வசதியான பார்பனர் வீட்டு பிள்ளைகள் கடல் தாண்டி கல்வி வேலை என்று போகாமல் இருக்கிறார்கள்.அவர்களுக்கு என்று மட்டும் தனி நீதி மனுதர்மத்தை அவர்கள் மீறினால் தப்பில்லை.
எல்லாம் தெரிந்தும் சிலர் இதுபோன்ற திமிராக பேசுகின்ற காவிகளுக்கு துணை போகிறார்கள். இவர்கள் யதார்த்தம் புரிந்து இவர்கள் விழிக்கும் போது உயர்சாதி சர்வாதிகாரி கையில் அதிகாரம் இருக்கும். மக்கள் ஆட்சி காணாமல் போய் இருக்கும் படிப்படியாக அதற்கான சட்டங்கள் அடுத்து வரும் ஆதரிப்பவர்கள் தங்களுக்கு மட்டும் அல்ல அவர்கள் சந்ததியினருக்கு மற்றும் அனைவருக்கும் குழி தோண்டி கொண்டு இருக்கிறார்கள்.

Saturday, 1 February 2020

இந்திய சமூகங்களுக்கும் எதிரானது. மனுதர்மம்தான் அதன் சித்தாந்தம்.

1980 களில் பாஜக ஒரு கவனிக்கப்படாத கட்சி.
1990 களில் அத்வானி என்ற மிகப்பெரும் எதிரியை இந்த நாடு எதிர் கொண்டிருந்தது.
2001 ல், குஜராத் படுகொலைகளின் பின்னணியில் நரேந்திர மோடி என்ற முகத்தை இனம் கண்டோம்.
2011 வரை, அத்வானி, நரேந்திர மோடி என நாம் தெரியலானோம்.
2014 முதல் நரேந்திர மோடி என்பரின் பொல்லாத்தனங்களை கண்டு வந்தோம்.
2019 தேர்தலுக்குப் பின் மோடியை விட மோசமான அமித்சாவைக் கண்டு வருகிறோம்.

மேற்காணும் பட்டியலில் நமது எதிரி யார்? இதைத்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆர்எஸ்௭ஸ் பயிற்றுவித்து தயார் படுத்தியுள்ள மோசமான கிரிமினல் எண்ணம் கொண்டவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அதன் முழு தயாரிப்புமே ஆபத்தானவைகள் தான்.
எனவே நமது எதிர்ப்பு வெறும் மோடி, அமித்சா என்பதல்ல.
ஆர்எஸ்௭ஸ் சின் சித்தாந்தம்தான் நமது எதிரி.
அதுதான் அழிக்கப்பட வேண்டும்.
அந்த சித்தாந்தம் முஸ்லிம்கள் மட்டுமல்ல. ஒரு சாதியைத் தவிர மற்ற அனைத்து இந்திய சமூகங்களுக்கும் எதிரானது. மனுதர்மம்தான் அதன் சித்தாந்தம்.
எனவே நமது போராட்டத்தின் குரல் ஆர்எஸ்௭ஸ் சித்தாந்தத்தை குறிவைத்து இருக்க வேண்டும்.
மவ்லவி எம்ஒய் முஹம்மது அன்சாரி மன்பயீ.

உங்கள் நன்பனான AS

Judges Ari Baranthaman against CAA NRC NRP

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது

*குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. எனினும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறதே என்று நிராசை அடையக் கூடியவர்களுக்கான ஒரு சிறிய பதிவு...*

அல்லாஹ் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.

மத்திய அரசு இப்படி பிடிவாதமாக இருப்பதால்...

1. நம்மிடையே ஒற்றுமை மேலும் வலுப்படும்.

2.அனைத்து சமூக மக்களின் ஆதரவும் பெருகுகிறது.

3. உலக நாடுகளின் நிலைப்பாட்டையும் ஆதரவையும் அறிந்து கொள்ள முடிகிறது.

4. இஸ்லாத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் திரும்புகிறது.

5. இந்துத்துவா என்பதை பற்றியும் அவர்களின் திட்டங்கள் பற்றியும் உலகமே அறிந்து கொள்கிறது.

6. இந்துத்துவா இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி கோரமாக நடந்து கொள்வார்கள் என்பதையும் அல்லாஹ் வெளிக்கொண்டு வந்து அவர்களின் சுய ரூபத்தை உலக மக்களுக்கு காட்டிக் கொடுக்கிறான்.

7. முஸ்லிம்களின் சகிப்புத்தன்மையை உலகமே புரிந்து கொண்டு நமக்கு ஆதரவாக ஒன்று சேர்வதை காணமுடிகிறது.

8. இந்துத்துவா கொள்கைக்கு இந்தியாவில் எவ்வளவு எதிர்ப்பு என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது.

9. இந்தியா மதசார்பற்ற நாடாக தொடர்வதையே உலக நாடுகள் அங்கீகரிக்கின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்கின்றனர்.

10. ஆளும் மத்திய பா.ஜ.க. மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எந்த அளவு விரோதமானது என்பதை அவர்களது தற்கால செயல்பாடுகளின் மூலம் அவர்களே நிரூபிக்க இதுவே ஒரு சந்தர்ப்பம் ஆகி விட்டது.

இப்படி எத்தனை எத்தனையோ பலன்கள் ஆளும் வர்க்கத்தின் இந்த பிடிவாத்தின் காரணமாக வெளிப்பட்டு கொண்டுள்ளது...

சிந்தியுங்கள். இனி பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இறைவன் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.


உங்கள் நன்பனான AS