Tuesday, 4 March 2014

தொகுதி உடன்பாடு - MMK

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தொகுதி உடன்பாடு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்த தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தலைமையில் நானும், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பி. அப்துல் சமது ஆகியோரும் மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் சென்றோம்.

திமுக தரப்பில் அக்கட்சியின் பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

நமது தரப்பில் இரண்டு தொகுதிகள் வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக முன் வைக்கப்பட்டது. அப்போது நமது கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்ட திமுக குழு, முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதியும் திமுக சார்பில் இரண்டு முஸ்லிம்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இத்தகைய வாய்ப்புகளை கவனத்தில் கொண்டு மமக இம்முறை ஒரு தொகுதி ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுத்தனர். விரிவான பேச்சுவார்த்தைக்கு பிறகு, மீண்டும் திமுக ஆட்சி அமையும்போது எங்களுக்கு ஒரு ராஜ்யசபா கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உறுதியாக எடுத்து வைத்தோம்.

அடுத்து கலைஞருடன் ஒப்பந்தம் போடும்போதும் இக்கோரிக்கையை திரு.ஸ்டாலின் அவர்கள் கலைஞரிடம் நமது இக்கோரிக்கையை எடுத்து கூறினார்.

இறைவன் அருளால் தலைமை கேட்ட அதே தொகுதியான மயிலாடுதுறையை இருதரப்பும் ஏற்றுக்கொண்டது.

அப்போது பேராசிரியர் திரு அன்பழகன் அவர்களும் உடன் இருந்தார்கள். இது தவிர திமுகவின் தேர்தல் அறிக்கையில் சச்சார் கமிட்டி பரிந்துரைகள் தொடர்பாகவும், ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரைகளையும் வலியுறுத்தி விட்டு அவை திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்துரைத்தோம்.

திமுக கூட்டணியில் நிறைய முஸ்லிம்கள் போட்டியிட கூடிய வாய்ப்புகள் உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை படும் சூழலும் உருவாகி வருகிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே.

இஸ்லாம் உலகை ஆளும் என்பதற்கு அன்று அது உதாரணம். இன்று - இது உதாரணம் .

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வரலாறு திரும்புகிறது ...குஜராத்தில், 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரமான இனப்படுகொலையில் கையில் இரும்புத் தடியுடன் வெறிபிடித்துக் கத்திய, பஜ்ரங் தள் என்ற இந்து மத வெறி அமைப்பைச் சேர்ந்த அஷோக் மோச்சி என்பவரும்,
” எங்களை விட்டுவிடுங்கள் “ என்று கெஞ்சிக் கதறும் குதுபுதின் அன்சாரியும்,
கேரளாவில் நேற்றுச் சந்தித்துக் கைகுலுக்கிக் கொண்டார்கள் !

இதுபோன்ற சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம் உண்டு. தாயிப் மலைவாசிகள் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அண்ணல் நபிகளாரை படு பயங்கரமாக துன்புறுத்தினார்கள். நபிகள் பிரார்த்தனை செய்திருந்தால் இறைவன் தாயிப் மலையை புரட்டி இருப்பான். அந்த மக்கள் அழிந்து போயிருப்பார்கள். ஆனால் நபிகளோ ... இன்றில்லாவிட்டால் நாளை.. இவர்களில்லாவிட்டால் இவர்களின் பிள்ளைகள் நேர்வழி பெறுவார்கள் என்றார்கள். அண்ணலாரின் கூற்றுப்படியே அந்த மக்கள் திருந்தி தங்கள் தவறுக்கு வருந்தினார்கள்.
அண்ணலாரின் கரம பிடித்து முஸ்லிம்களானார்கள் !
அதுபோல் இஸ்லாத்தின் பரம எதிரியான அபுசுப்யானின் மனைவி ஹிந்தா , உஹதுப் போர்க் களத்தில் அண்ணலாரின் சிறிய தந்தை ஹம்சாவைக் கொல்வதற்குக் காரணமாக இருந்தார். பின்னாளில் அபுசுப்யானின் குடும்பமே இஸ்லாத்தில் இணைந்தது.
இஸ்லாம் உலகை ஆளும் என்பதற்கு அன்று அது உதாரணம்.
இன்று - இது உதாரணம் .

துபாயில் இன்று ஹதீஸ் கலை ஆய்வு தொடர் வகுப்பு நடைபெறும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.
இன்ஷாஅல்லாஹ் துபாயில் இன்று  04.03.2014  இரவு 8.30 மணியளவில் ஹதீஸ் கலை ஆய்வு தொடர் வகுப்பு நடைபெறும். ஆர்வமுள்ள சகோதரர்கள் கட்டாயம் முன் அனுமதி பெற்று வரவும். 

தயவு செய்து அனுமதி இல்லாமல் வர வேண்டாம்.
இர்ஷாத்  050-2426380

நியாயவிலை கடைகள் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
நியாயவிலை கடைகள் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

ஆம்பூர் நகரத்தின் 11 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு 
நிதியில், ரூ.10 இலட்சம் செலவில் கட்டப்பட்ட நியாயவிலை கடைகள், மற்றும் ரூ.3.95 இலட்சம் செலவில் 11வது வார்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகிய கட்டிடங்கள் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மமகவின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் 
அ.அஸ்லம் பாஷா கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கட்டிடங்களை திறந்து வைத்தார்

Saturday, 1 March 2014

துபாயில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபாயில் 27.02.2014 இரவு 8.30 மணியளவில் அளவில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது . இஸ்லாமிய அழைப்பாளர்  சகோ. A.S. இபுராஹிம் தலைமையில் எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில்  ஹதீஸ் கலை  பயிற்சி நடைபெற்றது.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 

3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) 

4. ளயீப் (பலவீனமானது) 

இதில் 3 தலைப்புக்கள் பார்க்க பட்டது, கடைசி 4th தலைப்பு இன்ஷாஅல்லாஹ்  வரும் வாரங்களில் நடைபெறும் என்று அறிவிக்க பட்டது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

மமக அமைப்புச் செயலாளருடன் கலந்தாய்வு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மமக அமைப்புச் செயலாளருடன் கலந்தாய்வு

மூன்று நாள் பயணமாக அமீரகம் வருகைப் புரிந்த மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான அண்ணன் மௌலா நாசர் அவர்கள் 26:2:2014 அன்று துபாய் தமுமுகவின் தேரா மர்கசிற்கு வருகை தந்தார்கள்அப்போது துபாய் தமுமுக நிர்வாகிகள் அண்ணன் மௌலா நாசருடன் சமூக விசயமாக கலந்துரையாடல் செய்தார்கள்.

Inline images 1

Inline images 2

Inline images 3

Inline images 4

Inline images 5

Thursday, 27 February 2014

துபாயில் ஹதீஸ் கலை ஆய்வு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

இதில் 
துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 2 1/2 மதமாக நடைபெற்று வருகிறது.

இன்ஷா அல்லாஹ் இன்று
துபாயில் இரவு 8.30 மணியளவில் அளவில் ஹதீஸ் கலை ஆய்வு நடைபெறும். ஆர்வமுள்ள சகோதரர்கள் கட்டாயம் முன் அனுமதி பெற்று வரவும் தயவு செய்து அனுமதி இல்லாமல் வர வேண்டாம்.
இர்ஷாத்  050-2426380

Wednesday, 26 February 2014

ST courier In Bada Zayed - UAE

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Saturday, 22 February 2014

Choithrams Recruitment : Cashier

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Choithrams Recruitment : Cashier

Company Name: T. Choithram & Sons L.L.C
Employment Type: Full Time
Monthly Salary: Unspecified
Job Role: Cashier
Minimum Work Experience: 1-2 Years
Minimum Education Level: High-School / Secondary
Listed By: Employer
Company Size: 1001-5000 Employees
Career Level: Junior

Description:

At Choithrams, customers always get more. To create a better environment for our customers, we are recruiting:

Cashier:
• Excellent Customer Service Skills
• Good Communication Skills (English)
• Knowledge of operation POS system preferred
• Minimum Qualification – Passed Higher Secondary Education or 10+2 or A Level
• Male and female candidates can apply
• Similar experience in retail outlets in UAE preferred

Walk in for an interview with your resume, valid passport copy (minimum validity of six months) and photograph (colour in white back ground) on 25th February' 2014, between 9:30 am - 5:30 pm, at:

HR Department,
Choithram Supermarket,
Mezzanine Floor,
Al Rais, Bur Dubai,
Opp. Ramada Hotel.
Telephone: 04-3599223.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் - உத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகர் மற்றும் சாம்லி மாவட்டங்களில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டு அவர்கள் துயரைத் துடைப்பதற்கு சரியான வழிமுறைகளைக் காண தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குழு ஒன்று கலவரத்தால் பாதிக்கப்ட்ட மக்களை நேரில் காண்பதற்காக 3 நாட்கள் கள ஆய்வு செய்தது. இக்குழுவில் என்னுடன் தமுமுகவின் மூத்தத் தலைவர் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ் தலைமை நிர்வாக்க் குழு உறுப்பினர் மவ்லவி ஷம்சுதீன் நாஸர் உமரி ஆகியோர் இடம் பெற்றனர்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்ட பல பகுதிகளை பிப்ரவரி 18 முதல் 20 வரை நாங்கள் ஆய்வுச் செய்தோம். இங்கே படக்காட்சிகளை முதல் கட்டமாக அளிக்கின்றோம். 

இப்படிக்கு 
மூத்த தலைவர்கள் & பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ,