Tuesday, 8 October 2013

கலிகாலமும் அப்துல் கலீமுகளின் அவலமும்

Posted: 16 Jan 2011 08:03 AM PST
கலிகாலமப்பா! இது என நம்ம ஊர்களில் பெரியோர்கள் கூறுவது வழக்கம். தீமைகள் பல்கி பெருகிடும்போது, இயற்கைக்கு முரணானவைகளெல்லாம் நடக்கும்பொழுது, தீயசக்திகள் நாட்டை ஆளும்பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். 'சத்தியம் கம்ப்யூட்டர்ஸ்' என்ற பெயரிட்டே ஒருவர் நாட்டு மக்களின் பணத்தையெல்லாம் வாரிசுருட்டியதும் தற்போது சிறையில் அவர் ஓய்வெடுப்பதும் நமக்கு தெரிந்த சேதிதான்.
பிரேமானந்தா, நித்யானந்தா கூடவே சங்கரமடத்து ஜெயேந்திரனும் காமக்களியாட்டம் போட்டு உள்ளே போனபொழுது காவிகளிலும் பாவிகள் இருக்கின்றனரா? என மக்கள் வியந்து போயினர்.
சன் தொலைக்காட்சி நித்யானாந்தாவின் லீலைகளை தொடர்ந்து ஒளிபரப்பிய பொழுது 'கர்மம் கர்மம்' என காரி உமிழ்ந்தவர்களும் உண்டு. 'புத்தம் சரணம் கச்சாமி' என்ற சுலோகத்தை கேட்டிருப்பீர்கள். இப்போதெல்லாம் 'யுத்தம் மரணம் கச்சாமிதான்' சாமியார்களின் வேலையோ என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பிரக்யாசிங் தாக்கூரும், அஸிமானந்தாவும் குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதான பொழுது எழுந்த சந்தேகம் இது!
இவ்வளவு காலமும் இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்களின் பழி பாவங்களையெல்லாம் சுமந்தது முஸ்லிம் சமுதாயமாகும். முஸ்லிம் சமுதாயத்திற்குள்ளேயும் பாசிசத்தின் வாடையை முகர்ந்துபோன சில புல்லுருவிகளும், அறிஞர்களின் போர்வையில் நாவண்மையை வெளிப்படுத்தும் சகலகலா வல்லுநர்களும் தமது சொந்த சமூக மக்களையே தீவிரவாதிகள் எனக்கூறி தங்களுக்கு ஏற்பட்ட அரிப்பை தீர்த்துக்கொண்டனர்.
ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறைக்குள்ளே வாடும்பொழுது முஸ்லிம் சமுதாயம் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற அதிகார-ஊடக வர்க்கத்தின் சாட்டையடிகளை நெஞ்சில் சுமக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.
ரிக்ஷாவை இழுத்தும், மூடைகளை சுமந்தும் வாழ்க்கையை ஓட்டியவர்கள் கல்வியறிவை பெற்றவுடன் முஸ்லிம் சமுதாயத்தின் படித்த இளைஞர்களும் தீவிரவாதிகளாக்கப்பட்டனர்.
வகுப்புவாத வெறியிலும், மேல்தட்டு மேதாவித்தனத்திலும் ஊறிப்போன போலீசும், உளவுத்துறையும், ஊடகங்களும் ஒரே ரீதியிலான பொய்க் கதைகளை பரப்பிவந்தனர்.
கடந்த காலங்களில் மேல்ஜாதி வர்க்கத்தினருக்கும், மேல்தட்டு தரகு முதலாளிகளுக்கும் அடிமை சேவகம் புரிந்தவர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பொழுது இவர்களுக்கெல்லாம் சமூகத்தில் அந்தஸ்தையும், கண்ணியத்தையும் அளித்தால் நமது நிலை என்னவாகும்? என சிந்தித்த தீய எண்ணங்கொண்ட ஹெட்கோவரும், கோல்வால்கரும் போன்ற மேல்ஜாதி திமிர்பிடித்த மேதாவிகள் ஆர்.எஸ்.எஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கி கலவரங்கள், இனப்படுகொலைகள், குண்டுவெடிப்புகள் வாயிலாக முஸ்லிம் சமூகத்தை பூண்டோடு அழிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தத் துவங்கினர்.
கொடூரமாக கொல்லப்படும் முஸ்லிம்கள் மீது எவருக்கும் பரிதாபம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களையே பலிகடாவாக்கி தீவிரவாத முத்திரைக்குத்தி சிறைக் கொட்டகைகளில் அடைத்தனர். அதிகார வர்க்கத்திலும், ஊடகத்திலும், இன்னும் பிற துறைகளிலும் ஊடுருவிய பாசிச வெறி இதற்கு பெரிதும் துணைபுரிந்தது.
முந்தைய காலங்களில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பாவத்தை முஸ்லிம்கள் மீது சுமத்தினர். பலதார மணம், தலாக் போன்றவையெல்லாம் பெருங்குற்றங்கள் எனக்கூறி சமூக விரோதிகளாக முஸ்லிம்கள் சித்தரிக்கப்பட்டனர்.
இந்தியாவின் அதிகார மையங்களிலும், வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரே ஆறுதலாக மாறியது வளைகுடா நாடுகளே. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காகவும், பெற்றோரின் கடன் சுமையை அடைப்பதற்காகவும், சகோதரிகளின் திருமணங்களை நடத்துவதற்காகவும் வளைகுடா நாடுகளின் பாலைவன மண்ணில் இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து அனுப்பிய காசுகளால் முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு சிலரின் வாழ்க்கை மேம்படத் துவங்கியது. இதனைக் கண்ணுற்ற பாசிச சக்திகள் சும்மா இருப்பார்களா? உடனே ஹவாலா, வெளிநாட்டில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்ற கட்டுக் கதைகளை கிளப்பி விட்டார்கள்.
தாடி வைப்பதும், ஹிஜாப் அணிவதும் கூட தீவிரவாதமாக சித்தரித்தது இந்தியாவின் உச்சநீதிமன்றம். ஆதாரமில்லாவிட்டாலும் பொதுமனசாட்சி எனக்கூறி முஸ்லிம் அதுவும் கஷ்மீரி முஸ்லிம் என்பதற்காக பாராளுமன்றத் தாக்குதலில் சிக்கவைக்கப்பட்ட அப்ஸல் குருவுக்கு தூக்குத் தண்டனையை உறுதிச்செய்தது அதே உச்சநீதிமன்றத்தின் ஹிந்துத்துவ மனசாட்சிதான்.
நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவ்விடங்களில் குர்ஆன் வசனங்கள், அரபு அல்லது உருது மொழியிலான கவிதைகள் என எழுதப்பட்ட காகிதங்களை விட்டெறிந்துவிட்டு பழியை லாவகாமாக முஸ்லிம்கள் மீதே சுமத்திவந்தனர்.
சொந்த சமுதாய முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்லும் மஸ்ஜிதுகளிலும் குண்டுவைக்கும் மா பாதகர்கள் என்ற பெரும்பழியும் முஸ்லிம்கள் சுமக்க வேண்டியிருந்தது. முஸ்லிம் சமூகத்தில் நிலவும் கருத்து வேறுபாட்டை பயன்படுத்திக்கொண்டு அஜ்மீரில் குண்டுவைத்தவர்கள் தர்காவை விரும்பாதவர்கள் எனக் கட்டுக்கதையை பரப்பிவிட்டனர். அரவை இயந்திரத்தின் வயர்களும், பேட்டரிகளும் சி.டிக்களும் பெரும் ஆயுதங்கள் என அறிமுகப்படுத்தப்பட்டன.
மொபைல் ஃபோனில் அரபு மொழியைப் பார்த்துவிட்டு அல்காயிதா தீவிரவாதிகள் என தொழில்நுட்பம் தெரியாமல் கதையளந்தனர். வீட்டிலிருந்த பெண்களையும் தீவிரவாதிகள் என சித்தரித்தனர். பர்தாவுக்குள் குண்டுவைத்துக் கொண்டு தற்கொலைப் படையாக திரிவதாக பொய்க் கதைகளை பரப்பினர். இதையெல்லாம் இந்தியாவில் பெரும்பாலோர் நம்பவும் செய்தனர்.

'
அரசன் அன்றே கொல்வான் கடவுள் நின்றுக் கொல்வார்' என்ற பழமொழிக்கேற்ப உண்மை ஒரு நாள் வெளிப்பட்டது. ஹேமந்த் கர்காரே என்ற நடுநிலையான அதிகாரியின் மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது.
கர்காரேயால் தங்களது திட்டங்கள் தவிடுபொடியாகிவிடும் எனக் கருதிய பாசிச கும்பல் அவருக்கு மிரட்டல் விடுத்தது. கடைசியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் கர்காரே. அவரது கொலைக்கு யார் காரணம் என்பது நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவானதாகும். இடையில் தொய்வடைந்த விசாரணை ராஜஸ்தான் ஏ.டி.எஸ், என்.ஐ.ஏ, சி.பி.ஐ ஆகிய புலனாய்வு ஏஜன்சிகளால் சூடு பிடித்தது. ஏற்கனவே கைதுச் செய்யப்பட்ட காவி உடை தரித்த பிரக்யாசிங் என்ற சுவாமினியுடன் அஸிமானந்தா என்ற ஒரு சுவாமிஜியும் தற்பொழுது மாட்டிக்கொண்டார்.
சிறைக் கம்பிகளை எண்ணுவதற்கு தகுதியுடைய இவர்களுக்கு சிறைச்சாலைகளில் வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டன. கொலை வழக்கில் உள்ளே சென்ற காமக்கோடிக்கு காலைக் கடன்களை நிறைவேற்ற வாழை இலையை தேடி காவல்துறை அலைந்ததை பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். சுவாமிகள் என்ற பெயரில் மக்களை அண்டிப் பிழைத்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு சிறை வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள் கசக்க ஆரம்பித்தன. இதனால், அதிகாரிகளுடன் தங்களுக்கு வசதி வாய்ப்புகளைக்கோரி மோதலில் ஈடுபட்டனர்.
ஹைதராபாத் சஞ்சல்குண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸிமானந்தாவுக்கு சேவகம் புரிவதற்கு சிறை அதிகாரிகளால் அப்துல் கலீம் என்ற முஸ்லிம் சிறைவாசி நியமிக்கப்பட்டார். சுவாமிஜிக்கு பைப்பிலிருந்து தண்ணீர் பிடித்துக் கொடுத்தல், காவி ஆடைகளை துவைத்துக் கொடுத்தல் என அவருக்கு தேவையான வேலைகளை செய்துக்கொடுக்க அப்துல் கலீமுக்கு எவ்வித தயக்கமும் ஏற்படவில்லை. சாதாரணமாக கைதிகள் அனைவரும் வரிசையில் நின்று உணவைப் பெற்று செல்லும்போது அப்துல் கலீம் அஸிமானந்தாவுக்காக வரிசையில் நின்று உணவைப் பெற்றுக் கொடுத்தார். தான் ஏற்றுக்கொண்ட மார்க்கம் எந்த மதத்தைச் சார்ந்த மனிதர்களுக்கும் சேவை புரிவதை தடுக்கவில்லை என்பதில் நம்பிக்கைக் கொண்ட அப்துல் கலீம் அஸிமானந்தாவுக்கு தொடர்ந்து சேவை புரிந்துவந்தார்.
இந்திய சமூகம் குண்டுவெடிப்புகளின் உண்மை நிலையை அறிவதற்குரிய வாய்ப்பாக அஸிமானந்தாவையும், அப்துல் கலீமையும் இறைவன் உரையாட வைத்தான். தான் நடத்திய குண்டுவெடிப்புகளில் ஒன்றான மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் குற்றத்தை சுமந்துக்கொண்டு சிறைக் கொட்டகையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் அப்துல் கலீம் என்பதை அஸிமானந்தா புரிந்துக்கொண்டார்.
இந்தியாவில் பாசிச சக்திகளை உரமூட்டி வளர்ப்பதில் மன மகிழ்ச்சியடையும் இந்தியக் கலாச்சாரத்தின் பாதுகாவலர்களுக்கும் அவர்களுக்கு துதிபாடும் சமுதாய துரோகிகளுக்கும் ஏற்படாத மனமாற்றத்தை இறைவன் அஸிமான்ந்தாவுக்கு அளித்தான் என்றே கூறலாம்.
இந்திய ஆட்சியாளர்களுக்கோ, அதிகார வர்க்கத்தினருக்கோ, போலீசுக்கோ, ஊடகங்களுக்கோ இத்தகைய மனமாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. குண்டுவெடிப்புகளை நடத்தி ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கு காரணம் அஸிமானந்தா என்பதை அறிந்த பிறகும் அப்துல் கலீம் அவரிடம் எவ்வித கோபமும் கொள்ளவில்லை. அவருக்கு தொடர்ந்து சேவை புரிந்தே வந்தார் (இதனை இதுவரை உலகம் காணாத மிகப்பெரிய மத நல்லிணக்கம் எனக்கூறி முஸ்லிம் சமுதாயத்தில் மிதவாதிகள் என்று கூறிக் கொள்ளும் சிலர் புளங்காகிதம் அடையலாம்).
ஒன்றரை வருடங்களாக சிறையில் வாடும் அப்துல் கலீமுக்கு வயதான பெற்றோர்களும், இளம் வயது மனைவியும், சிறு குழந்தையும் உண்டு. அப்துல் கலீம் சிறையில் வாடும்பொழுது வெளியே அவருடைய குடும்பம் கவனிப்பாரின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அப்துல் கலீமைப் போலவே மலேகான் குண்டுவெடிப்பில் கைதுச் செய்யப்பட்ட 32 அப்பாவி முஸ்லிம்களும் பல ஆண்டுகளாக சிறைக் கொட்டகையில் தங்கள் வாழ்க்கையை கழித்துவரும் அவலமும் நீடிக்கத்தான் செய்கிறது.
இன்று அப்துல் கலீமைப் போல் 1500க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பொய்யாக தங்கள் மீது சுமத்தப்பட்ட தீவிரவாத வழக்குகளின் காரணமாக சிறைச்சாலைகளில் அநியாயமாக அடைக்கப்பட்டுள்ளனர்.
மொபைல் வியாபாரியான அப்துல் கலீம் 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ஒன்றரை ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்தபிறகும் மீண்டும் இதேக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
சஞ்சல்குடா சிறையிலிருந்த பொழுதுதான் அச்சிறையில் அடைக்கப்பட்ட அஸிமானந்தாவுக்கு சேவை புரிய பணிக்கப்பட்டார் அப்துல் கலீம். 21 வயதான அப்துல் கலீமின் உயர்ந்த நற்குணம் அஸிமானந்தாவின் உள்ளத்தை உருகச் செய்தது என twocircles.net என்ற இணையதள பத்திரிகை கூறுகிறது.
தன்னுடன் வாழ்ந்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் ஒழுக்க வாழ்வுடன் அப்துல் கலீமை ஒப்பீடுச்செய்த அஸிமானந்தாவுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.
கடந்த 2010 டிசம்பர் 18-ஆம் தேதி அஸிமானந்தா புதுடெல்லி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் பொழுது அதனை தடுக்கத்தான நீதிபதி முயன்றார். குற்றத்தை ஒப்புக்கொண்டால் மரணத்தண்டனை கிடைக்கும் என்பதையும் அஸிமானந்தாவுக்கு நினைவூட்ட நீதிபதி தயங்கவில்லை.
சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைதுச் செய்யப்பட்டபோதும் அஸிமானந்தா கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி ஹரித்துவாரில் தலைமறைவாகயிருந்த பொழுது சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டார்.
சுவாமி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டாரே என்ற கவலையில் ஆழ்ந்துள்ள நீதிமன்றங்களும், போலீசும், ஊடகங்களும் அப்துல் கலீம் போன்ற அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளைக் குறித்து தொடர்ந்து மெளன விரதத்தையே கடைபிடித்து வருகின்றன.
அப்துல் கலீமைப் போன்ற அப்பாவிகளும், களங்கமில்லா உள்ளத்திற்கு சொந்தக்காரர்களும், நிரபராதிகளும்தான் இந்திய முஸ்லிம்களில் 95 சதவீதம் பேரும்.
அப்துல் கலீமைப் போன்ற மார்க்கப் பற்றுடைய, சேவை மனப்பான்மைக் கொண்ட, தேசத்தை மிக அதிகமாக நேசிக்கும், ஒருபோதும் தான் வாழும் தேசத்தை காட்டிக்கொடுக்க முயலாத இந்திய முஸ்லிம்களுக்கு பரிசாக இந்தியாவில் சிறைக் கொட்டகைகளை தயாராக்கி வைத்திருக்கிறோம் என்பதை இனிமேலாவது சிந்திப்பார்களா அரசும் அதிகாரவர்க்கங்களும்?
உண்மையான ஐ.எஸ்.ஐ ஏஜண்டுகளும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்று வரும் சுவாமிஜி, சுவாமியாரினிகளும் சுய விருப்பப்படி ஆட்டம் போடும்பொழுது அப்பாவி முஸ்லிம்களின் தலையில் ஐ.எஸ்.ஐ தொப்பியை அணிவிக்கின்றார்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கத்தினரும்.
மேற்குவங்காளத்தைச் சார்ந்த நபாகுமார் சர்க்கார் என்ற 59 வயது அஸிமானந்தாவின் 42 பக்கங்களைக் கொண்ட நீண்ட எவ்வித தூண்டுதலும் இல்லாமல் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவில் ஹிந்துக்களிலும், ஹிந்து புரோகிதர்களின் கூட்டத்திலும் பக்தியின் பெயரால் பயங்கரவாத செயல்களின் பாரம்பரியம் மறைந்திருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டு காட்டிய பிறகும் இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதத்திற்கு எதிரான எதிர்ப்புகளின் சலனங்கள் கூட தென்படாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஆனால், தற்பொழுதும் போலீசும், ஊடகங்களும், என்.ஐ.ஏ போன்ற மத்திய புலனாய்வு ஏஜன்சிகளும் இருட்டில்தான் துளாவிக் கொண்டிருக்கின்றார்கள். கேரளாவில் நடந்த சில சம்பவங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அம்மாநிலத்தில் நடந்த கோழிக்கோடு குண்டுவெடிப்பு, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு, களமசேரி பஸ் எரிப்பு, வாகமன் முகாம் போன்ற அரைத்த மாவையே திரும்பவும் அரைத்துக்கொண்டு சங்க்பரிவார பயங்கரவாதத்தை மூடிமறைக்க முயற்சிகள் நடக்கின்றன.
ஆனால், அம்மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் நாயர் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாதியைக் குறித்து ஊடகங்கள் மெளனம் சாதிக்கின்றன. 115 நபர்களின் உயிரைப் பறித்த வெடிக்குண்டு சம்பவங்கள் வெளிவரும்பொழுது எவரும் மரணிக்காத, எவருக்கும் காயத்தை ஏற்படுத்தாத சம்பவங்களில் ஊகங்களை பரப்பி பொதுமக்களை பீதிவயப்படுத்தும் தந்திரத்தை மேற்கொண்டுள்ளார்கள் அரசு-அதிகார-ஊடகத்துறை பாசிஸ்டுகள்.
ஒருவேளை, நாளை அஸிமானந்தா அப்ரூவராக மாறி விடுதலையாகலாம். இல்லையெனில், பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பைப்போல் நம்பிக்கையை காரணங்காட்டியோ அல்லது அப்ஸல் குருவைப்போல் ஹிந்து மனசாட்சியை பொது மனசாட்சியாக மாற்றியோ அஸிமானந்தாவை நீதிமன்றமே விடுவிக்கலாம். ஆனால், அப்பொழுதும் அப்துல் கலீம் உள்பட 1500க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வாடுவதைத்தான் இந்தியாவின் நீதிபீடங்கள் விரும்புகின்றனவா?
விமர்சகன்

Stunning images of a fully transparent Airbus

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,





Come 2050, and you can fly in a fully transparent plane enjoying the panoramic views of the sky.
Airbus has unveiled the concept design of a futuristic plane, which will making flying an unforgettable experience.

A see-through cabin with a bone-like structure will offer spectacular views of the sky and the land below. The takeoffs and landings will be a chilling experience for the passengers.

The plane will not have first, business, or economy seats. Instead, passengers can choose to travel in the interactive zone, with a bar and electronic games or the relaxation zone.

The interactive zone will entertain travellers with virtual holographic golf courses or virtual clothes shopping.
The aircraft's walls are designed to change according to light conditions. The size of the seats can be changed according to individual needs.
The futuristic plane will have in-flight entertainment powered by the heat from passengers' bodies.

உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ் கூறுகின்றான்:
“(நம்   தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள்   உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான்   நன்கு அறிபவன்’ (23:51)
அல்லாஹ்   அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு   திரியாதீர்கள்” (2;60)
ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூற   மறந்துவிட்டால்!
بسمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ
உங்களில்   ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை (பிஸ்மில்லாஹிஎன்று) கூறி (ஆரம்பம்   செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு   வந்து)விட்டால்
பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வஆகிரஹூ
எனக் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி.
பொருள்: இதன்   ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)
பிஸ்மில்லாஹ் கூறாமல் சாப்பிட்டால்   அவ்வுணவு ஷைத்தானுக்கு போய் சேருகிறது!
நபி   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், ‘பிஸ்மில்லாஹ்கூறாத உணவை   ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.”  அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹு)-   ஆதாரம்: முஸ்லிம.;
நின்றுகொண்டு நீர் அருந்துவது கூடாது!
நின்றுக்   கொண்டு நீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்அறிவிப்பவர்: அபூ   ஸயீத் அல்-குத்ரி, ஆதாரம்: முஸ்லிம்.
உங்களில்   எவரும் நின்றுக்கொண்டு நீர் குடிக்க வேண்டாம். மறந்து குடித்திருந்தால் வாந்தி   எடுக்கட்டும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி);   ஆதாரம்: முஸ்லிம்.
  நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்!
நபி (ஸல்) அவர்கள ஸம் ஸம்தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: புகாரி
அலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: மக்களில்   சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு   குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான்   பார்த்திருக்கின்றேன்”  நூல்: புகாரி
குடிக்கும் பாத்திரத்தில் ஊதி   குடிக்கலாகாது!
குடிக்கும்   பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் (ஊதி குடிப்பதையும்) நபி (ஸல்) அவர்கள் தடை   செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத்,   இப்னுமாஜா
“(குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்என்று இறைத்தூதர்(ஸல்)   அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.
உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப்   பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி),   ஆதாரம்: புகாரி
இடது கையால் குடிப்பதோ சாப்பிடுவதோ கூடாது!
உங்களில் எவரும் இடது கையால் குடிக்கவோ,   சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் குடிக்கிறான்;   சாப்பிடுகிறான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; இப்னு உமர் (ரலி);   ஆதாரம்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவுத், திர்மிதி.
தங்கம், வெள்ளியிலான பாத்திரத்தில்   குடிப்பது கூடாது!
எவர் தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் குடிப்பாரோ   அவர் தன் வயிற்றில் நரகத்தின் நெருப்பையே விழுங்குகிறார்என நபி (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.
வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில்   அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான்.”   அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), ஆதாரம்: புகாரி நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களுடன்   புறப்பட்டோம். அவர்கள், ‘தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள்.   (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை   இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்யாளர்களான)   உங்களுக்கும் உரியனவாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக்   கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா (ரஹ்), புகாரி.
வீண் விரயம் செய்வது கூடாது!
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம்   செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை   நேசிப்பதில்லை.” (7:31)
ஒரே மூச்சில் நீர் அருந்தாமல் மூன்று முறை   மூச்சுவிட்டு அருந்த வேண்டும்!
(என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும்   போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்)   அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள். அறிவிப்பவர்:   ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் (ரஹ்), ஆதாரம்: புகாரி
உணவா? தொழுகையா? எது முதலில்?
இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக   இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.என இறைத்தூதர்   (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); ஆதாரம்: புகாரி.
உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர்   மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாதுஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்:   முஸ்லிம்
குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே)   முக்கட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில் அதன் இரு   இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி
உணவில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்ய   வேண்டும்?
நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்)   அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும்   எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்என்று இறைத்தூதர் (ஸல்)   அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: மைமூனா (ரலி), ஆதாரம்: புகாரி.
தட்டின் நடுப்பகுதியிலிருந்து சாப்பிடக்   கூடாது! ஓரத்திலிருந்து சாப்பிட வேண்டும்!
பரக்கத் உணவின் நடுப்பகுதியில் இருக்கிறது. எனவே   ஓரங்களில் சாப்பிடுங்கள்; உணவின் நடுப்பகுதியில் இருந்து சாப்பிடாதீர்கள்என நபி   (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: அபூதாவுத்,   திர்மிதி, இப்னுமாஜா
உணவுத் தட்டில் வலது கரத்தால் அருகில்   இருப்பதை எடுத்துச் சாப்பிட வேண்டும்!
(நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர்   இப்னு அபீ ஸலமா (ரலி) கூறினார்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில்   வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும்   அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம்,   ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு   அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!என்று கூறினார்கள். அதன்   பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. ஆதாரம்: புகாரி.
உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதை   சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்!
(சாப்பிடும் போது) உங்களிடமுள்ள (உணவு) ஒரு துண்டு   கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தமான பொருள் ஒட்டியிருந்தால் அதை நீக்கிவிட்டு   சாப்பிடவும். அதை ஷைத்தானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி);   ஆதாரம்: முஸ்லிம்.
விரல்களை சூப்பி சாப்பிட வேண்டும்!   கைக்குட்டையால் துடைக்க வேண்டாம்!
தனது விரல்களை சப்பாமல் கைக்குட்டையால் கையை   துடைக்க வேண்டாம். ஏனெனில் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்று அவன் அறிய முடியாது!”   அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.
இருக்கின்ற உணவை பங்கிட்டுச் சாப்பிட   வேண்டும்!
இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும்.   மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.என இறைத்தூதர் (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
வயிறு முட்ட சாப்பிடுவது உண்மையான   முஃமினுக்கு அழகல்ல!
“(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார்.   இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.என இறைத்தூதர் (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும்   அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட   ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி)   ‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள்   ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில்   சாப்பிடுவான்எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்என்று கூறினார்கள். அறிவிப்பவர்:   நாஃபிஉ (ரஹ்), ஆதாரம்: புகாரி.
சாய்ந்தவாறு அல்லது வயிற்றில் படுத்தவாறு   சாப்பிடுவது கூடாது!
நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்.என   இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்:   புகாரி.
உணவில் குறை கூறாதீர்கள்!
நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை   சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)   விட்டுவிடுவார்கள்அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.
பால் அருந்திய பிறகு வாய்கொப்பளித்தல்:
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால்   அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, ‘இதில் (பாலில்) கொழுப்பு   இருக்கிறதுஎன்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்: புகாரி.
ஒரு சபையில் பானங்களை வலது   புறத்திலிருந்து கொடுத்து வரவேண்டும்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்   வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர்   ஆட்டிலிருந்து பால் கறந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கிணற்றிலிருந்து (நீர்   எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின்   இடப் பக்கத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் கிராமவாசி ஒருவரும்   அமர்திருந்தனர். (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக்   கொடுத்துவிட்டு, ‘வலப்பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்   பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்   இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.
இறைத்தூதர்   (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள்.   அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும்   அமர்ந்திருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘(இந்தப் பானத்தை   முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?’ என்று கேட்டார்கள்.   அதற்கு அச்சிறுவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து   எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான் விட்டுத் தரமாட்டேன்’   என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில்   வைத்துவிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம்: புகாரி.
பானங்களை பரிமாறுபவர் இறுதியில் தான்   பருக வேண்டும்!
‘….(பானங்களை)   ஊற்றுபவர் தான் இறுதியில் பருக வேண்டும்’ (முஸ்லிமில் இடம்பெறும் நீண்ட ஹதீஸில்   இடம் பெறும் வாசகம்.) அறிவிப்பவர்; அபூ கதாதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.
சமைப்பவருக்கும் உணவு வழங்க வேண்டும்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர்   அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக்   கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம்   அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் (அதை சமைத்த போது) அதன்   வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்”      அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: புகாரி
உணவுப் பாத்திரங்களை மூடி வைக்கவேண்டும்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்து   விடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு   மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்என்று கூறினார்கள். அதன் மீது   ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள்   சொன்னதாக எண்ணுகிறேன். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி.
தோல் பையின் வாயிலிருந்து நீர்   அருந்துவது கூடாது!
நபி (ஸல்)   அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர் அருந்த வேண்டாமெனத்   தடை விதித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.
உண்ணும் போதும் பருகும் போதும்   அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்!
ஒரு அடியான் உணவைச் சாப்பிடும் போது அந்த   உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும் போது அந்த நீருக்காக அவனைப்   புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்:   முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அஹ்மத்
சாப்பிட்டபிறகு கூற வேண்டிய துஆ!  
    اَلْـحَمْدِ للهِ الَّذِيْ     أَطْعَمَنِـيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْـرِ حَوْلٍ مِنِّـيْ وَلاَ قُوَّةٍ.
அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி   மின்கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்என யாரேனும் கூறினால் அவரின் முன்   பாவங்கள் மன்னிக்கப்படும். ஆதாரம்: அபூதாவூது, திர்மிதி   பொருள்: எனது எவ்வித   சக்தியும் ஆற்றலும் இன்றி எனக்கு இவ்வுணவை வழங்கி உண்ணச் செய்த அல்லாஹ்வுக்கே   எல்லாப்புகழும்
اَلْـحَمْدِ للهِ كَثِيْـرًا   طَـيِّـبًا مُبَارَكًا فِيْهِ غَيْـرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ   مُسْتَغْنىً عَنْهُ رَبُّـنَا
நபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்து சாப்பாட்டுத் தட்டு   எடுக்கப்படுமானால் அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி   கைர முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹூ ரப்புனா’  என்று கூறுவார்கள்.
பொருள்:   துய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா! நீ உணவின் பால்   தேவையுடையவன் அல்லன்! உன்னை யாரும் விட்டுவிட முடியாது!

நன்றி ---- ரீட் இஸ்லாம்.நெட்

திருமணம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
எங்களுக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஓதும் தஷஹ்ஹுதை ஓதிக் காட்டியபின், “இது திருமணத்தின்போது ஓதக்கூடிய தஷஹ்ஹுதுஎனச் சொல்லி அதனையும் ஓதிக்காட்டினார்கள். அதன் பொருள்:
நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானவை. நாங்கள் அவனிடமே உதவி தேடுகின்றோம். அவனிடத்திலேயே மன்னிப்புக் கோருகின்றோம். எங்கள் மனத்தின் தீமைகளுக்கெதிராக எங்களை நாங்களே அல்லாஹ்விடம் தஞ்சம்தேடி ஒப்படைத்து விடுகின்றோம். எவருக்கு அல்லாஹ் நேர்வழி அளிக்கின்றானோ அவரை எவரும் வழிகெடுக்க முடியாது. அவன் எவனை வழி தவறச்செய்து விடுகின்றானோ அவனுக்கு யாரும் நேர்வழி அளிக்க முடியாது. மேலும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இலர் என நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடைய திருத்தூதர் என்றும் சான்று பகருகின்றேன்.
பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மூன்று இறைவசனங்களை ஓதிக் காண்பித்தார்கள்.
1. இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3:102)
2. மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)
3. இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் இருங்கள். மேலும் சொல்வதைத் தெளிவாக, நேரடியாகச் சொல்லுங்கள். இப்படிச் செய்தால் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீர்திருத்துவான். பாவங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடிபணிந்து நடப்பவர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள். (33:70-71) (திர்மிதி)

நன்றி ---- ரீட் இஸ்லாம்.நெட்

விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்
இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களில் ஆண்களைப் போன்று பெண்களும் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.  அவர்களில் சிலரது குறிப்புகள் மட்டும் இங்கே.

பேகம் சாஹிபா
 திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. ஐதர் அலி அவர்களின் தங்கை பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். அவர மனைவியும் ஐதர் அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13 ஆம் தேதி (கி.பி.1772) குழந்தை பிறந்து ஏழாம் நாள் காலமானார்.  போர்க்களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போராடியவர். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னபள்ளபட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது பேரையும் நியமித்துள்ளார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.
  
இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசல்களையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021,ஆர் 8275 ஆகும்.
ஹஸன் மஹ்பர் பேகம்
ஜான்சிராணியுடன் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியவர்களில் மஹ்பர் பேகமும் ஒருவர். 1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தியதி குவாலியர் யுத்தத்தில் ஜான்சியுடன் வீரமரணம் அடைந்தார்.
அமாதுல் ஸலாம்
1938 ஆம் ஆண்டு இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்திஜியும் முஹம்மதலியும் சந்தித்துப் பேசும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஜின்னாவை சந்திக்க காந்திஜியுடன் ஒரு பெண்ணும் வந்திருந்தார். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது பத்திரிக்கை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் காந்தி கூறியதாவது, என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண் ஒருத்தி இருக்கிறாள். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் உயிரையும் இன்முகத்தோடு கொடுப்பாள் என்றார். அந்தப் பெண் தான் அமாதுல் ஸலாம்.
கதர் என்ற பெயருக்கு காரணமான ஆலாஜிபானு
அலி சகோதர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற பீபியம்மாள் தன்னுடைய கையால் கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடையை காந்திஜிக்கு அளித்தார். அப்போது இந்த ஆடையை கதராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். கதர் என்றால் கௌரவம் என்று  பொருள்படும். அன்றிலிருந்து கதர் ஆடை என்ற பெயர் வந்தது. சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு "கதர்" என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் பெண்மணி ஆவார். கதர் என்பது சாதாரண துணி போல இரண்டு இழைகளால் நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இவ்வாறாக நெய்வது அரிதானதாகும்.
இளையான்குடியில் பீபியம்மாள்
என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன் என்று வீரசபதம் பூண்டவர் தாயார் பீபியம்மாள்.
1922 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்டவும் இளையான்குடியில் உள்ள அலங்காரத்தோப்பிற்கு அருகே தென்புறம் பேரூராட்சியில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கே குடிநீர் தொட்டி ஒன்றும் இருந்தது. அந்த குடிநீர் தொட்டி அருகாமையில் ஏ.எஸ்.டி.இப்ராகிம் ஷாவுடைய பங்களா இருந்தது. அந்த பங்களாவில் சுதந்திர போராட்டம் குறித்த நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெருவரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
இதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப்  மொழி பெயர்த்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது பூதவுடல் கதர்துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.
கண்ணனூர் ராணி பீபி
கேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளராக இவர்,  பிரிட்டீஷ் படை வீரர்கள் கண்ணனூர் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர். 1783 ஆம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். அந்த திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கியேலர்கள் கைது செய்து சிறையில்  அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன்  ராணியின் எல்லைப்பகுதியை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்பந்தம் வாங்கி ஆங்கிலேயர் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக்கொண்டனர். அதன் பின்னர் ராணி விடுதலை செய்யப்பட்டார். 1784 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கியேலயரின் முகாம் செயல்படத்தொடங்கியது.     மீண்டும் 1790 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து  கைnழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் ராணி பீபி மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதராவாக செயல்பட போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார்.
உமர்பீபி
 இவர் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்.இ.ஹெச்.டயர் என்பவன் தலைமையில் துப்பாக்கி சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரம் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் எனவும் அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் உமர்பீபியும் பலியானார். இவர் 1864 ஆம் ஆண்டு அமிர்தசரவில் பிறந்தவர். இவரின் கணவர் பெயர் இமாமுதீன் ஆகும்.
மரியம் பீவி
திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம்.     பெண் என்றும் பாராமல் ஆங்கில ஆட்சி மரியம் பீவிக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.
பேகம் அயிஜாஸ் ரசூல்
உத்திரப் பிரதேசத்தில் சாண்டிலா என்ற ஊரில் 1909 ஆம் ஆண்டு நவார் சர்ஜூல்பிகாரின்  மகளாகப் பிறந்தவர். நவாப் அயிஜாஸ் ரசூல் என்பவரைத்; திருமணம் செய்து கொண்டார்.  இவர் 1937 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்டலேவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்ட இவர். 1969 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேச அமைச்சராக பதவி வகித்தார்.
பியாரி பீவி
கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சிறை சென்றார்.
ஆதார நூல்கள்:
1.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்...மறைக்கப்படும் உண்மைகளும், சென்னை
2.விடுதலை போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை
3.மறுக்கப்பட்ட உண்மைகளும்..மறைக்கப்பட்ட நியாயங்களும், அனிஸ்தீன், அகமதுநிஸ்மா பதிப்பகம், சென்னை
கட்டுரையாளர் : வைகை அனிஷ் அவர்களுக்கு நன்றி. 

சிறுமியை சீரழித்துக் கைதான அறவழிச் சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறுமியை சீரழித்துக் கைதான அறவழிச் சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலைசென்னை: சென்னையைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் அச்சிறுமியை விபச்சாரக் கும்பலிடம் அனுப்பி கொடூரமான நிலைக்கு ஆளாக்க காரணமாகி கைதான வியாசர்பாடி அறவழிச்சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். 
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த எண்கணித சோதிடர் அறவழி சித்தர். 42 வயதாகும் இவரது மனைவி பெயர் தனலட்சுமி. இரவு நேர பூஜை, குளி சொல்வது என இருந்து வந்தார் அறவழி சித்தர். இரவு நேர பூஜையில் அவர் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் திருப்பதி அருகே ஒரு சிறுமி போலீஸாரிடம் சிக்கினார். அந்த சிறுமி கொடுத்த தகவல் போலீஸாரை அதிர வைத்தது. வியாசர்பாடியைச் சேர்ந்த அந்த சிறுமி, அறவழிச் சித்தரால், சிறுமியின் தாயாரின் ஒத்துழைப்புடன் சீரழிக்கப்பட்டார். பின்னர் சுரேஷ் என்ற நபரிடம் சிறுமி விற்கப்பட்டுள்ளார். சுரேஷ், ஒரு விபச்சாரக் கும்பலிடம் சிறுமியை அனுப்பியுள்ளான். அங்கு பலரிடம் அந்த சிறுமி அனுப்பப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். இதையடுத்து சென்னை போலீஸாரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அறவழி சித்தர், சுரேஷ் உள்ட 5 பெண்கள், 2 ஆண்களைக் கைது செய்தனர். 
இந்த நிலையில் அறவழிச் சித்தரின் மனைவி தனலட்சுமி தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து விட்டார். வீட்டு பாத்ரூமில் அவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. உடல் முழுவதும் எரிந்து போய் விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 Posted by: Sudha Published: Monday, October 7, 2013, 13:38 [IST] Ads by Google 

Monday, 7 October 2013

வியக்கவைக்கும் 12 ரக்அத் உபரியான தொழுகைகளின் சிறப்புகள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அன்புடன்
இஸ்லாமிய அழைப்பாளன்
அஸ்ஹர் ஸீலானி