Friday 25 October 2019

மாணவர்கள்_மத்தியில் #மதத்துவேசத்தை_வளர்க்கும் #செயலை_மறைக்கும்_தமிழக_அரசு

#மாணவர்கள்_மத்தியில் #மதத்துவேசத்தை_வளர்க்கும்
#செயலை_மறைக்கும்_தமிழக_அரசு!
#மனிதநேய_மக்கள்_கட்சி_கண்டனம்!!

#மனிதநேய_மக்கள்_கட்சி_தலைவர்
#பேராசிரியர்_எம்_எச்_ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்து தலைவர்கள், இந்து வரலாறு அதன் கொள்கைகளைப் பரப்பும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்றும் இந்து மாணவர் முன்னணி, இளைஞர் முன்னணி அமைப்புகள் அந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டு¢ வருகின்றனர் என்றும், இதனைத் தடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை இணைச் செயலாளர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கடமையுணர்வுடன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசின் பொதுத் துறை (சட்டம்&ஒழுங்கு) சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இணைச் செயலாளர் அனுப்பியுள்ளதாகக் கூறப்படும் இந்தக் கடிதத்தின் அடிப்படையில் மாணவர்களிடையே மதத்துவேசத்தையும், பாகுபாட்டையும் பரப்பும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசோ அக்கடிதம் குறித்து தவறான தகவல்களை அளித்து வருகிறது.

தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள், பள்ளிக்கல்வித் துறை துணைச் செயலாளர் அதுபோன்ற ஒரு கடிதத்தை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பவில்லை என்றும், அதுமுற்றிலும் தவறான தகவல் என்றும் கூறி பள்ளிகளில் நடைபெறும் மதத்துவேசத்தை கற்பிக்கும் நடவடிக்கையை மூடி மறைத்துள்ளார்.

நாட்டின் எதிர்கால தலைமுறையான மாணவர்களின் மனதில் மதநல்லிணக்கத்தை வளர்க்க வேண்டிய அரசு சாதி மத மோதல் உருவாக்கும் நபர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈட்டுப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது.

எனவே, தமிழக முதலமைச்சர் உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு மாணவர்கள் மத்தியில் வேற்றுமையை உருவாக்கும் குழுக்களை ஒருங்கிணைப்பவர்களைக் கண்டுபிடித்து உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
#எம்_எச்_ஜவாஹிருல்லா
#தலைவர்
#மனிதநேய_மக்கள்_கட்சி

No comments:

Post a Comment