=========================================
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
'தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்துகொள்கின்றேன்' என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)
எனவே, ஒருவர் நல்லவர் எனச் சாட்சி பகர வேண்டுமென்றால் அவர் அவரது மனைவியிடம் நல்லவர் என்ற பெயர் எடுத்திருக்க வேண்டும்.
'அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக்கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.' (4:19)
மேற்படி வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு பணிக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூடத் தமது இறுதி ஹஜ் உரையில்;
'பெண்கள் விடயத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்!' என உபதேசித்துள்ளார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
No comments:
Post a Comment