*✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி*
*பாதையின் ஒழுக்கங்கள்*
*பாதையில் ஒரு முஸ்லி்ம் மற்றொரு முஸ்லிமை சந்தித்தால் சலாம் கூற வேண்டும்.*
*வாகனத்தில் இருப்பவர் நடந்துசெல்பவருக்கும், நடந்துசெல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், குறைவானவர் அதிகமானவருக்கும் சலாம் சொல்ல வேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.* (புகாரி)
*வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்யக் கூடாது:*
*நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:*
*உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்கோ,கடைவீதிக்கோ சென்றால் அவருடைய வாகனத்தை மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அதற்குரிய இடத்தில் நிறுத்தவும்.*
(புகாரி,முஸ்லிம்)
*பாதையில் இடையூரை ஏற்படுத்தும் பொருட்களை அகற்றுதல்:*
*அபூபர்ஜா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் எனக்கு பயனுள்ள விஷயத்தை கற்றுத்தாருங்கள் எனக் கேட்கும் பொழுது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:*
*மக்களுக்கு இடையூரை உண்டாக்கும் பொருட்களை பாதையிலிருந்து நீ அகற்றி விடு*.(முஸ்லிம்,இப்னுமாஜா)
*பாதையிலிருந்து மக்களுக்கு இடையூரை உண்டாக்கும் பொருட்களை நீக்குவது தர்மமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.*
*பாதையை தூய்மையாக வைக்குதல்:*
*அபூமூஸல் அஸ்அரி ரலி அவர்கள் பஸராவிற்கு வந்த சமயத்தில் உமர் ரலி அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.அதில் நீங்கள் குர்ஆனையும்,ஹதீஸையும் மக்களுக்கு கற்றுக் கொடுங்கள்.அத்துடன் பாதைகளை தூய்மையாக வைக்கும்படியும் கற்றுக் கொடுங்கள் என அக்கடிதத்தில் எழுதியிருந்தார்கள்.*(தாரமீ)
*வழிகாட்டுவது தர்மம்:*
*வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்கு சரியான பாதையை அறிவித்து தருவது தர்மமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.*(புகாரி)
*நடைபாதையில் வீடுகளை கட்ட வேண்டாம்:*
*நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக)விட்டுவிட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.* (புகாரி)
*பாதையில் கண்டெடுத்த பொருளுக்கு என்ன சட்டம்?*
*ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும் அறிந்து (பாதுகாத்து) வைத்துக் கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து (அதை அடையாளம் சொல்லக் கேட்டு)விட்டால் (அவரிடம் கொடுத்து விடு.) இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்' என்று கூறினார்கள்.*
(ஸஹீஹ் புகாரி)
*வழிபோக்கர்களுக்கு தண்ணீரை ஏற்பாடு செய்ய வேண்டும்;தடுக்கக் கூடாது:*
*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*
*மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.*
*ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.*
(ஸஹீஹ் புகாரி)
Sent from my iPhone
No comments:
Post a Comment