அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்திய உளவுத்துறையும், ஆர்.எஸ்.எஸ்.ஸும்தான் இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் ! ”: முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிப் குற்றச்சாட்டு !
இந்திய நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., ஐ.பி. ஆகிய அமைப்புகள்தான் பெரிய தீவிரவாத அமைப்புகள் என்றும், இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் இவைதான் என்றும் மஹாராஷ்டிரா முன்னாள்
ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிப் அவர்கள் குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் புனேவில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் கூட்டமைப்பின் 26வது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்பொழுது இந்தக் கருத்தைக் கூறினார்.
“மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிக்க வைத்து விட்டனர்.
இப்பொழுது வரை, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற 17 குண்டு வெடிப்பு வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத், மாலேகான் குண்டுவெடிப்பில் இவர்களுடைய தொடர்பு அம்பலப்படுத்தப்பட்டது. இந்த அமைப்புகளால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டார்கள். பல இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்தார்கள். இதற்கு உள்ளூர் காவல்துறையும் அதற்கு துணையாக இருந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
எஸ்.எம். முஷ்ரிப் அவர்கள் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் (Anti Terrorism Squad & ATS) ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதில் மர்மம் இருக்கின்றது என்று அப்போதே கூறி இருந்தார். 26/11 மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலின் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகளின் தொடர்பு இருக்கின்றது என்றார்.
கர்கரேயை கொலை செய்தது யார் ?
இது தொடர்பாக “ Who Killed Karkare? The Real Face of Terrorism ” ( கர்கரேயை கொலை செய்தது யார் ? தீவிரவாதத்தின் உண்மை முகம் ) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகம் ஒன்றை எழுதினார் எஸ்.எம். முஷ்ரிப். இதில், ஐ.பி. மற்றும் இந்துத்துவ சக்திகளின் உண்மை முகத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.
இந்தப் புத்தகத்தில் கர்கரேயின் கொலையில் மூளையாக செயல்பட்டதில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அடிப்படைவாத அமைப்புகளுக்கு பங்கு உண்டு என்பதை அம்பலப்படுத்தினார். மேலும், இந்த அமைப்புகளை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்தப் புத்தகம் “ இலக்கியச்சோலை ” பதிப்பகத்தின் சார்பாக தமிழில் வெளி வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தப் புத்தகம் ஹிந்து, உருது, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
டிசம்பர் 2010 மும்பை நீதிமன்றத்தில், மஹராஷ்டிரா மாநில அரசு இந்தப் புத்தகம் பிரச்னைகளை உருவாக்கும் என்றும், இதை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
இதை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் B.H. மர்லாபல்லே, U.D. சல்வி ஆகியோர் விசாரித்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: “ முஷ்ரிப் இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் அவருடைய கருத்தை சொல்வதற்கு உரிமை உண்டு. ”
முன்னாள் பீகார் எம்.எல்.ஏ. ராதாகண்ட் யாதவ் மற்றும் ஜோதி பெடேகர் ஆகியோர்களின் மனுக்களில், “ தீவிரவாத எதிர்ப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதில் ஐ.பி. மற்றும் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரத் போன்ற அமைப்புகளுக்கு தொடர்பிருக்கும் ” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தூத்தூ / சங்கிலிக் கருப்பு

No comments:
Post a Comment