Sunday 27 February 2011

முன்மாதிரி ஜமாஅத்.. பின்பற்றுமா நமதூர் ஜமாஅத்?


வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தால் சட்டி தரமாட்டோம், தப்தர் தரமாட்டோம் என்று மிரட்டும் ஊர் ஜமாதினர்களுக்கு மத்தியில், அழகான அதிரடி முடிவை அறிவித்திருக்கும் இந்த ஜாமத்தை பின்பற்றுமா? நமதூர் ஜமாஅத்.





கோவை மாவட்டத்தின் இதயம் என்று கூறப்படும் நவாப்ஹக்கீம் சாலையில் (என்.எச்.ரோடு) 125 ஆண்டுகள் பழமைவாய்ந்த நாகமொஹல்லா தக்னி அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத் மகாசபை கூட்டம் கடந்த 6 ம்தேதி நடைபெற்றதும்.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை நகரங்களில் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியது.
கடந்த 30 ஆண்டுகளாக ஏகத்துவவாதிகளின் உழைப்பிற்கு இறைவன் தந்த பரிசு என்று சொன்னால் அது மிகையாகாது, பெண்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் கொடுமை வரதட்சனை என்பதை ஒப்புக்கொண்டு வரதட்சனை வாங்கும் மணமகனுக்கு என்.ஓ.சி தரமாட்டோம், அத் திருமணங்களை நடத்தமாட்டோம், அதில் கலந்துகொள்ளமாட்டோம் என்று தீர்மானமாக நிறைவேற்றி அதை போஸ்டர் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தியும், கடிதம் மூலம் அதை உறுதி செய்துள்ளது தக்னி அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத் மகாசபை .
அல்ஹம்துலில்லாஹ் புகழ்அனைத்தும் இறைவனுக்கே.
பள்ளியின் தலைவர் அக்பர் அவர்கள் கூறும்போது 1000 த்திற்கும் மேற்பட்டோர் அடங்கிய மகாசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் பல ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment