நாகர்கோவில் : வீட்டில் இருந்த பெண்ணை கடத்திச் செல்ல முயன்ற மதபோதகரை, பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரபுரம் வேஞ்சத்திப் பகுதியில் வீட்டில் இருந்த பெண்ணை, காரில் வந்த மூன்று பேர்
வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரும், பொது மக்களும் துரத்திச் சென்றதால், பயந்துப் போன அவர்கள் காரை ரோட்டில் நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர். இதில், ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். அவர் அஞ்சுகிராமம் அருகே காப்பகம் நடத்தி வந்த மதபோதகர் ஜஸ்டின் என்பதும், இவர்கள் கடத்திய பெண், அங்கு பணியாற்றிய மேபல் என்பதும் தெரியவந்தது. ஜஸ்டின் நடத்திய காப்பகத்துக்கு உரிய அனுமதி பெறாததால் அது “சீல்’ வைக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், சாட்சியை கலைப்பதற்காக மேபலை கடத்தியது, விசாரணையில் தெரியவந்தது. ஜஸ்டின் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பார்க்க: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=127226

No comments:
Post a Comment