Sunday 27 February 2011

குஜராத்தில் நடந்த இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் ஒரு திட்டமிட்ட நாடகம்

அளவற்ற அருளாலனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் சதீஷ் வர்மா தகவல்

கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி அகமதாபாத் அருகே 19 வயது இஷ்ரத் ஜஹானும், 3 இளைஞர்களும் குஜராத் போலீஸரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்றும், நரேந்திர மோடியைக் கொல்ல திட்டமிட்டிருந்தனர்  என்றும். அவர்களை வழிமறித்தபோது தாக்குதலில் ஈடுபட முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் நான்கு அப்பாவி முஸ்லீம்களை சுட்டு கொன்ற  குற்றப் பிரிவு டிஐஜி வன்சாரா தெரிவித்தார்.
ஆனால் இது அப்பட்டமான போலி என்கவுண்டர் என்பது பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இஷ்ரத்தின் தாயார் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சிபிஐயிடம் இந்த வழக்கை ஒப்படைத்தது உச்சநீதிமன்றம்.

இந்த நிலையில், இஷ்ரத் ஜஹான் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்று அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் சதீஷ் வர்மா கூறியுள்ளார். இதுகுறித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில்  ஒரு அபிடவிட்டைத் தாக்கல் செய்துள்ளார் வர்மா. அதில், இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் ஒரு திட்டமிட்ட சம்பவம்.  முஸ்லீம்களின் மீது வேண்டுமென்றே பழி போடவேண்டும் என திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என கூறி உள்ளார் வர்மா.  எந்த தவறும் செய்யாத நான்கு  அப்பாவிகளை திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது குஜராத் போலீஸ். இந்த வழக்கு தொடர்பான சிபிஐ  விசாரணைக்கு குஜராத்  சிறப்பு புலனாய்வு படை ஒத்துழைப்பு தராமல் தொடர்ந்து இழுத்துஅடித்துகொண்டு இருக்கின்றது. இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சியில் டெல்லியைச் சேர்ந்த ஒரு முக்கிய காவல்துறை அதிகாரியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று வர்மா தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே சொராபுதீன் போலி என்கவுன்டர் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தில் கடும் கண்டனத்திற்க்கு உள்ளான நரமாமிச மோடிக்கு வர்மாவின் வாக்கு மூலம் மேலும் பிரச்சனையை அதிகமாக்கி உள்ளது. திட்டமிட்டே கோத்ரா ரயிலை எரித்து பின்பு திட்டமிட்டே ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொன்று, லட்ச கணக்கான முஸ்லீம்களை ஊனமாக்கி இன்றும் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள நரமாமிச மோடியின் கொலைகுற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க சர்வதேச நாடுகள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். காவிகளில் கைபாவைகளாக உள்ள, அரசு இயந்திரம், நீதி துறை, ஊடகதுறை இருக்கும் போது இவன் போன்ற மனித குலவிரோதிக்கு எப்படி தண்டனை கிடைக்கும்.


S.சித்தீக்.M.Tech


No comments:

Post a Comment