Tuesday 18 February 2020

இப்படி ஒரு மக்கள் திரள் வாழும் இந்த நாட்டிலா மதத்தின் பெயரால் மக்களைத் துண்டாட முயல்கிறீர்கள்.

*கண்ணூரில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி பூண்டு நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட சுவாமி அக்னிவேஷ்....* *தன்னுடன் பேரணியில் கலந்து கொண்ட வி. கே. அப்துல் காதர் மௌலவி சாஹிப் அவர்களின் குல்லாவை தான் வாங்கி அணிந்து கொண்டு... தனது தலைப்பாகையை மௌலவி அவர்களை அணியச் சொல்லி பரஸ்பர அன்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள்...*

இப்படி ஒரு மக்கள் திரள் வாழும் இந்த நாட்டிலா மதத்தின் பெயரால் மக்களைத் துண்டாட முயல்கிறீர்கள்...

Monday 17 February 2020

தமிழக முதல்வருக்கு சவால் விடுகிறேன்.

*தமிழக முதல்வருக்கு சவால் விடுகிறேன்.* சட்டமன்ற அவையில் கொஞ்சமும் தயங்காமல், கூசாமல் பொய்களை கட்டவிழ்த்துள்ளீர்கள். நீங்கள் பேசியதில் உண்மையிருந்தால் எங்களுக்குப் பதில் சொல்லுங்கள்

1. பேருந்தில் கல் எறிந்ததற்கான ஆதாரம் என்ன? காவல்துறையினரின் தடியடியை மக்கள் பதிவிட்டதுபோல் நீங்கள் வீடியோ பதிவுகளை வெளியிடத் தயாரா?

2. பெண்கள் மீது கைவைக்க, ஆபாசமாய்ப் பேச ஆண்காவலர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

3. காவலர்களின் சட்டையில் அடையாளப் பெயர் இல்லையே ஏன்?

4. போராட்டக்காரர்கள் மக்களுக்குக் கொடுத்த இடடையூறுகள் என்ன?

5. சில சக்திகள் தூண்டிவிடுகின்றன என்று சொல்லும் நீங்கள் அந்த சக்திகளின் பெயர்களை அறிவிக்க என்ன தயக்கம்?

6. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த முழு விவரம் உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?
- *திருமங்கலம் கூட்டத்தில் வி.எஸ்.முஹம்மத் அமீன் ஆற்றிய உரையிலிருந்து....*
https://m.facebook.com/story.php?story_fbid=2941371695919987&id=100001415570956


உங்கள் நன்பனான AS

ஐந்து_படியில்_அகதி_சிறை!

#ஐந்து_படியில்_அகதி_சிறை!

1⃣ NPR - National Population Register மக்கள் தொகை கணக்கெடுப்பு

▶️ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் துவங்கும்

▶️கணக்கெடுப்பவர் சில எளிய கேள்விகளை கேட்பார்

▶️உங்கள் பெயர்? குடும்ப உறுப்பினர்கள் விவரம்? எண்ணிக்கை? நீங்கள் பிறந்த ஊர்? உங்கள் பெற்றோர் பிறந்த ஊர்? ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை விவரம் போன்ற எளிய கேள்விகள் மட்டும்.

2⃣ NPR முடிவுல் "D"என்ற குறியீடு

NPRல் சேகரிக்கப்பட்ட விவரங்களில் ஏதேனும் ஆவண பிழையோ அல்லது சரியான விவரம் அளிக்க முடியாத குடும்ப நபர்களின் பெயருக்கு பின்னால் D அதாவது doubt full (சந்தேகத்திற்கு உரியவர்) என்ற அடையாளம் இடப்படும் (ஆதாரில் எழுத்துப்பிழை ஓட்டர் ஐடியில் பிழை பெற்றோர் பிறந்த ஊர் தகவல் தெரிவிக்க முடியாதவர்கள் இதுபோன்ற காரணங்களால்)
D யாருக்கு குறிக்கப்படுகிறது என்பது நமக்கு தெரியப்படுத்தப்படாது. தகப்பனை விடுத்து மகனுக்கோ மகனை விடுத்து தகப்பனுக்கோ அல்லது தாய் மகளுக்கோ D குறிக்ககப்படலாம்.
குறிப்பு - இந்து முஸ்லிம் கிருஸ்தவர் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த D குறியீடு செய்யப்படலாம்

அடுத்து வருவது NRC

3⃣ NRC - National Register of Citizens (தேசிய மக்கள் தொகை பதிவேடு)

▶️NPR முடிவில் யாருக்கெல்லாம் D குறியிடப்பட்டதோ அவர்களுக்கு சில மாதங்களில் ஒரு கடிதம் வரும்.

▶️அதில் நீங்கள் இந்திய குடிமகன் என்பதை நிருபிக்க ஆவணத்துடன் வரவும் என்றிருக்கும்.

▶️இங்கே உங்கள் ஆதார் அட்டையோ, ஓட்டர் ஐடியோ, ரேசன் அட்டையோ எதுவும் செல்லவே செல்லது!

▶️இங்கே நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியது உங்கள் பிறப்புச் சான்றிதல் அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் வாக்களிக்க பயன்படுத்திய வாக்காளர் அடையாள அட்டை அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வரும் சொத்து பத்திரம் அதுவும் சம்பந்தப்பட்ட நபர் பெயரில் இருத்தல் வேண்டும்

▶️இதிலும் தங்கள் குடியுரிமையை நிருபிக்க முடியாதவர்கள் அடுத்த நிலைக்கு தள்ளப்படுவார்கள்

4⃣ Foreigners tribunal வெளிநாட்டவர் தீர்ப்பாயம்

▶️ இங்கே இறுதி வாய்ப்பு தரப்படுகிறது

▶️நீங்கள் அயல்நாட்டை சேர்ந்தவரா இல்லையா என்பதை நிருபிக்க வேண்டும், (அதாவது இந்திய குடியுரிமை இழந்துவிட்ட நிலை ஏற்பட்டுவிட்டது)

▶️CAA Citizenship (Amendment) Act, 2019 (இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019)

▶️அதாவது பரம்பரை பரம்பரையாக இந்தியாவிலேயே பிறந்து வாழ்ந்து வந்தவரானாலும் மேலே சொன்ன படிகளின் படி தங்கள் குடியுரிமையை நிருபிக்க முடியாத (முஸ்லிம்களை தவிற) பிற மதத்தினர் தாங்கள் இந்தியர் என்று நிருபிக்க முடியாததால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற ஏதேனும் ஒரு நாட்டில் இருந்து அகிதியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக அறிவிக்க வேண்டும் அதற்கான சான்றை இந்த தீர்ப்பாயத்திடம் பெற வேண்டும் (ஒரு இந்திய குடிமகனின் நிலை)

5⃣ detention camp அகதிகள் சிறைச்சாலை

🛑 மேலே சொன்ன எந்த விதத்திலும் (இந்தியனாக இருந்தும்) இந்தியன்தான் என்று நிருபிக்க முடியாத பலகோடி மக்கள் இந்த சிறையில் தள்ளப்படுவார்கள்.

🛑 NPR NRC CAA சட்டங்கள் ஏதோ முஸ்லிம் மக்களுக்கான சட்டம் என்று கருதிவிடாதீர்கள். இந்த சட்டங்கள் மூலம் அசாம் மாநிலத்தில் மட்டும் 15 லட்சம் இந்து மக்கள் தங்கள் குடியுரிமையை இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்திய தேசத்தின் ஒற்றுமையை சீர்குழைக்க சதி செய்பவர்களின் சூழ்ச்சியை ஒன்றிணைந்து முறியடிப்போம்

#முதல்_படியிலேயே_கிள்ளி_எறிவோம்

அன்புடன்
வழக்கறிஞர். அ.ஜமாலூதீன் வழக்கறிஞர் .மதுரை உயர் நீதி மன்றம்
மதுரை


உங்கள் நன்பனான AS

Sunday 16 February 2020

Mr. Tushar Gandh @ vannarapet chennai

சென்னை ஷாகின் பாஃக் கிற்கு குஜராத்திலிருந்து வருகை தந்து போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரன் அவர்கள்

Yes, it is Mr. Tushar Gandhi

குறிப்பிடத்தக்க தீர்ப்பு # தீர்ப்பின் முக்கிய வரிகள்:

# குறிப்பிடத்தக்க தீர்ப்பு #
தீர்ப்பின் முக்கிய வரிகள்:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்ய, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் (அவுரங்காபாத் பெஞ்ச்) ரத்து செய்துள்ளது.

CAA குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் நபர்களை துரோகிகள் அல்லது தேசவிரோதிகள் என்று சொல்ல முடியாது என்றும், அமைதியான போராட்டங்களுக்கான அவர்களின் உரிமையை கருத்தில் கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களால், இந்திய சுதந்திரம் பெறப்பட்டது என்று நீதிபதிகள் நினைவு கூர்ந்தனர். "துரதிர்ஷ்டவசமாக மக்கள் இப்போது தங்கள் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடுகிறார்கள் என்ற அடிப்படையில் மட்டுமே போராட்டத்தை அடக்க முடியாது".

கிளர்ச்சி செய்யும் நபர்கள், 14 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சமத்துவத்திற்கு இந்த சட்டம் எதிரானது என்று நம்பினால், இந்திய அரசியலமைப்பின் 19 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"நாம் ஒரு ஜனநாயக குடியரசு நாடு, நமது அரசியலமைப்பு நமக்கு சட்டத்தின் ஆட்சியைக் கொடுத்தது, பெரும்பான்மை ஆட்சி அல்ல. இதுபோன்ற சட்டம் இயற்றப்படும் போது, சிலர் முஸ்லிம்களைப் போன்ற ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அது அவர்களின் நலனுக்கு எதிரானது என்றும், அத்தகைய சட்டத்தை அவசியம் எதிர்க்க வேண்டும் என்றும் உணரலாம்."

இது அரசால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிரான மக்களின் கருத்து வேறுபாடு. சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது அதிகாரத்துவம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரம் பெற்றபின்னர் அகற்றப்பட வேண்டிய பல சட்டங்கள் தொடர்கின்றன, அதிகாரத்துவம் அந்தச் சட்டங்களை வைத்து இப்போது சுதந்திர இந்தியாவின் குடிமக்களுக்கு எதிராக செயல்படுகிறது. அந்த குறிப்பிட்ட சட்டத்தால், குடிமக்கள் சுதந்திரப் போராட்டம் மூலம் அடையப்பட்ட தங்கள் உரிமைகள் மீதான தாக்குதல் ஏற்படும்போது, அது விதிகளுக்கு எதிராக இருக்கும்போது, மக்கள் தங்களுக்கு வழங்கிய அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை அதிகாரத்துவம் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய மக்கள் அனுமதிக்கப்படாவிட்டால், பலத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியம் எப்போதும் இருக்கும், இதன் விளைவாக வன்முறை, குழப்பம், சீர்கேடு. #இறுதியில் இந்த நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து#

"அனைத்து சமூகங்கள் மற்றும் நம்பிக்கைகளைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருமனதாக தங்கள் உரிமைகளை மீறுவதாக நம்பி, எதிராக குரல் எழுப்பினர் என்பதையும் நீதிமன்றம் பாராட்டியது. அனைத்து மதங்களையும், அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பலரும் மேற்கூறிய சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியலமைப்பு முன்னுரையில் சகோதரத்துவம் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. பிற சமூக மதத்தவர்கள், சிறுபான்மை சமூகத்தை ஆதரிக்கும் சூழ்நிலை, நாம் சகோதரத்துவத்தை அடைந்துவிட்டோம் என்பதைக் காட்டுகிறது. இதற்கு எதிராக ஏதாவது செய்வது சகோதரத்துவத்தை புண்படுத்தும் மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை உருவாக்கும்." 🙏🙏🙏

"இந்த அருமையான உத்தரவுக்காக மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்விற்கு வாழ்த்துக்கள். உயர்நீதிமன்றங்கள் குடிமக்களின் உரிமைகளின் பாதுகாவலர்களாக தங்கள் பங்கிற்கு உயிருடன் இருப்பதைக் காட்டுகிறது. இது உயர்நீதிமன்றத்திற்கு ஒரு மெழுகுவர்த்தியைக் காட்டுகிறது."


உங்கள் நன்பனான AS

https://m.facebook.com/groups/468721519970403?view=permalink&id=1549068918602319&sfnsn=scwspwa&extid=d1cTzERq87l5n5NH

https://m.facebook.com/groups/468721519970403?view=permalink&id=1549068918602319&sfnsn=scwspwa&extid=d1cTzERq87l5n5NH

https://m.facebook.com/groups/468721519970403?view=permalink&id=1549068918602319&sfnsn=scwspwa&extid=d1cTzERq87l5n5NH

உங்கள் நன்பனான AS

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் அரசை சுப்ரீம் கோர்ட் கோபத்துடன் எச்சரிக்கை செய்தது.

14-02-2020 அன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் அரசை சுப்ரீம் கோர்ட் கோபத்துடன் எச்சரிக்கை செய்தது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை பார்த்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா கடுங் கோபத்துடன் உதிர்த்த வார்த்தைகள் "அப்படியென்றால் நாம் சுப்ரீம் கோர்ட்டை வேண்டுமானால் இழுத்து மூடி விடலாம். இந்த நாட்டில் எந்த சட்டமும் இல்லை. நாங்கள் மிகவும் வருத்தம் அடைகிறோம். இந்த அமைப்பில் நான் வேலை செய்ய கூடாது என்று உணர்கிறேன். இந்த உலகில் யாரிடமும் இருந்தும் நாங்கள் மரியாதை எதிர்பார்க்க வில்லை. நான் என்னைப் பற்றி கவலைப் படவில்லை. உள்ளபடியே சொல்கிறேன். இந்த நாட்டில் வாழாமல் இருப்பதே நல்லது. இந்த நாட்டின் நீதி அமைப்பே எடுத்து கொள்ள பட்டு விட்டது."
பாருங்கள் எவ்வளவு விரக்தியும் கோபமும், வெறுப்பும் கலந்த வார்த்தைகள்? இந்த அரசின் செயல்பாடுகளால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே எந்த அளவுக்கு விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள் பாருங்கள். தங்களது எண்ணங்களை முழுமையாக சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர்கள் நொந்து போய் இருக்கிறார்கள் என்பதை தானே இது காட்டுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அசாதாரணமான நெருக்கடியான சூழ்நிலை நீதித்துறையில் நிலவுவது பேராபத்து. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே இந்த ஆட்சியின் கீழ் வாழ்வதை வெறுக்கிறார்கள் என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? வழக்கமாக இதையெல்லாம் மூடி மறைத்து விடும் அல்லது முக்கியத்துவம் தராமல் அமுக்கி விடும் 'தினத்தந்தி' போன்ற பத்திரிகைகள் கூட இதை செய்தியாக வெளியிட்டு இருப்பது, எல்லா தரப்பிலும், எல்லா மட்டங்களிலும் இந்த ஆட்சியைப் பற்றி கடுமையான அதிருப்தி நிலவுவதை தான் காட்டுகிறது. இந்த அபாயகரமான சூழ்நிலையிலிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் இருக்கிறது. "ஜெய் ஹிந்த்!"


உங்கள் நன்பனான AS

Saturday 15 February 2020

மக்களை கொல்லும் Police அதிகாரி

#வடசென்னை_சட்டம்ஒழுங்கு இணை ஆணையர் #கபில்குமார்சரத்கரை உடனே பணி நீக்கம் செய்க .. #கனிமொழி.

#வடசென்னை_சட்டம்ஒழுங்கு இணை ஆணையர் #கபில்குமார்சரத்கரை உடனே பணி நீக்கம் செய்க ..
#கனிமொழி.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று #CAA_NRCக்கு_எதிராக நடந்த #போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான #வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர், ஐபிஎஸ், நிலைமையை தவறாக கையாண்டதாலேயே, அங்கு வன்முறை வெடித்தது. தூத்துக்குடியில், #ஸ்டர்லைட்_எதிர்ப்பு_போராட்டத்தின்போது நடந்த #துப்பாக்கிச்_சூட்டில் #13உயிர்கள்_பலியானபோது, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியாக இருந்தவர் #கபில்குமார்.

#தூத்துக்குடி_துப்பாக்கிச்சூடு தொடர்பாக கபில்குமார் மீது சிபிஐ மற்றும் ஒரு நபர் நீதி ஆணைய விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை முடியும் வரை அவர் சட்டம் ஒழுங்கு பணியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவருக்கு சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பதவி என்ற பரிசை வழங்கியுள்ளது அதிமுக அரசு. #வண்ணாரப்_பேட்டையில் நேற்று நடந்த வன்முறைக்குக் காரணமான, #கபில்குமார்சரத்கர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.. #கனிமொழி.

Friday 14 February 2020

பனையூர் ecr ரோடு போராட்டம்

பனையூர் ecr ரோடு போராட்டம்

தடியடி நடத்தி ஒருவர் பலியாக காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடு !

உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கு !!

கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டது போன்று CAA NRC NPR எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று !!!

தமிழகம் தழுவிய தொடர்போராட்டம்