முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Monday, 18 July 2016
Sunday, 14 February 2016
சிறந்த காண்காட்சியாக நாக்கு - இராண்டாவது பரிசாக தேர்ந்தெடுக்கபட்டு எனக்கு சான்றிதழ்
எல்லாப்புகழும் இறைவனுக்கே! Regards A.S.Ibrahim Dubai
பெரும்பாலானோருக்கு பொழுது போக்கே
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.."மற்றவர்களின் குறைகளை ஆராயாதீர்கள், யார் மற்றவர்களுடைய குறையை தேடி திரிகிறார்களோ, அவர்களுடைய குறையை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான், பின்னர் அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளை பகிரங்கமாக்கி அவர்களை இழிவுப்படுத்திவிடுவான் -நூல்:அஹ்மத்.
கோவையில் நடந்த வெளியீட்டு விழாவில் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இக்குறும்படக்குழுவினருக்கும், தயாரிக்க உதவிய AS Ibrahim Mbaஅவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...
புறம் என்ற குறும்படம்
Monday, 25 January 2016
சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:
மத்திய அரசு, மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.621லிருந்து ரூ.671.50ஆக 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. சமையல் எரிவாயு மானியம் உட்பட அனைத்து மானியத்தையும் முழுவதுமாக ஒழிப்பதுதான் மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டமாக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
பத்து இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 37 டாலர் அளவுக்குப் குறைந்துள்ளபோதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்க முன்வராமல், மேலும் மேலும் விலையை உயர்த்திக் கொண்டே போவதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உலக வங்கியும், உலக வர்த்தக நிறுவனத்தின் ஆலோசனைப் படி மானியங்கள் குறைப்பு, பொது விநியோகக் குறைப்பு என அதிரடியாக இரட்டைத் தாக்குதல் களை ஏழை, எளிய மக்கள் மீது மோடி அரசு தொடுத்து வருகிறது.
மேலும், சமையல் எரிவாயு போன்று மண்ணெண்ணெய் மானியத்தையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தைச் செயற்படுத்த மோடி அரசு தீவிரமாக இருக்கிறது. இதனால் பொதுப்பங்கீட்டுக் கடைகளில் மண்ணெண்ணெய் பெற்றுவந்த அனைவரும், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அடித்தட்டு ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் வகையில் மண்ணெண்ணெய் மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தையும், சமையல் எரிவாயு விலை உயர்வையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்
தலைவர், ம.ம.க.
பேய்க்கரும்பு கலாம் நினைவிடம் அருகே ரேசன்கடை கட்ட ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. 10 லட்சம்...
Monday, 14 December 2015
2016-ம் ஆண்டிலும் புதிய ரேஷன் அட்டை இல்லை!
தமிழகத்தில் இந்த மாதத்துடன் ரேஷன் அட்டைகள் காலாவதியாக உள்ள நிலையில், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் 7-வது ஆண்டாக 2016-ம் ஆண்டுக் கும் உள்தாள்தான் இணைக்கப்பட வுள்ளது.
சமூக பொறுப்புணர்வு தேவை வைரமுத்து!
நடிகர் சிம்பு-அனிருத் ஜோடியின் பீப் சாங் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர்களுக்கு சமூக பொறுப்புணர்வு தேவை என்று கூறியுள்ளார்.
பெண்களை இழிவுப்படுத்தியும்,ஆபாச வார்த்தைகளைக் கொண்டும் பாடல் பாடி அதை இணையதளங்களில் பரப்பியதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது புகார் எழுந்துள்ளது. இது சமூக வலைத் தளங்களிலும்,ஊடங்களிலும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில்,இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த பாடலின் வரிகளை கண்டித்து இருவர் மீது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சிம்பு-அனிருத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரம் பெரிதாகி பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்தப் பாடல் எழுப்பியுள்ள சர்ச்சை குறித்து கோவையில் கவிஞர் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ’நான் அந்த பாடலை இதுவரை கேட்கவில்லை. பாடலை கேட்காத நிலையில் என்னால் எந்தவொரு விமர்சனமும் செய்யமுடியாது.’ என்றார்.
இருப்பினும் எழுத்தாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு நிச்சயம் சமூக பொறுப்புணர்வு தேவை என்று வலியுறுத்திய வைரமுத்து, அவர்கள் தங்களுக்கென்று சில எல்லைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், தமிழ் சினிமாவில் கருத்தாழமுள்ள பாடல்கள் காலப்போக்கில் குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
கால்பந்து மைதானத்தில் வன்முறை 11 பேருக்கு மரண தண்டனை! – கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பு!
எகிப்தில் சையத் துறைமுக நகரில் உள்ள மைதானமங ஒன்றில் கடந்த 2012-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 1-ந்தேதி கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது.
அப்போது பந்தயத்தில் பங்கேற்ற இரு அணிகளின் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 72 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, கெய்ரோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனை விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.